Jun 11, 2015

எரிச்சலாக இருக்கிறது

“முதல்ல ஒரு தடவை பணம் கேட்டீங்க அனுப்பி வைச்சோம். பின்னாடி அதுவே உங்களுக்கு வேலையாப் போச்சு. எரிச்சலாக இருக்கிறது. வாசகனுக்காகத் தான் எழுத்தாளனே தவிர எழுத்தாளனுக்காக வாசகன் இல்லை”- சில நாட்களுக்கு முன்பாக இப்படி ஒருவர் பின்னூட்டம் எழுதியிருந்தார். படித்தவுடனேயே சுள்ளென்றிருந்தது. பின்னூட்டத்தை அனுமதிக்கவில்லை செய்யவில்லை. ஒருவேளை அவர் சொல்வதில் நியாயமிருக்கிறதோ என்று இருபது பேரிடமாவது விசாரித்திருப்பேன்.

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட வேண்டும். நிசப்தம் வாசிப்பவர்களால் மட்டும்தான் அறக்கட்டளையின் காரியங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. வேறு எந்த பலமும் அறக்கட்டளைக்கு இல்லை.  ஊடக ஆதரவு, பிரபலங்களின் உதவிகள் என்ற எதையும் எதிர்பார்க்கவில்லை. வாசிப்பதற்காக வந்து போகிற ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு பகுதியினர் வழங்கும் நிதியின் வழியாகத்தான் அடுத்தவர்களுக்கு உதவ முடிகிறது. நிசப்தமும் இந்த எழுத்தும் இல்லையென்றால் இவையெல்லாம் நடந்திருக்காது என்பதை அறிந்து வைத்திருக்கிறேன். இவை எதுவும் என்னுடைய தனிப்பட்ட சாதனை இல்லை என்பதிலும் தெளிவாகவே இருக்கிறேன். எனவே அதே எழுத்து வழியாக வாசிப்பவர்களை எரிச்சல் அடையச் செய்துவிடக் கூடாது என்பதில் முடிந்தவரைக்கும் கண்ணும் கருத்தமாகவே இருக்க முயல்கிறேன். 

வரவு செலவுக் கணக்கையெல்லாம் மாதம் ஒரு முறை வெளியிட்டால் போதும்தான். ஆனால் அறக்கட்டளையின் செயல்பாடுகள் என்னவென்பதை குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறையேனும் எழுதிவிட விரும்புகிறேன். இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நான்கு பேர்களாவது தொடர்பு கொள்கிறார்கள். அதில் ஒருவர் சொல்லக் கூடிய விஷயமாவது படுபயங்கரமானதாக இருக்கிறது. நேற்று பேசிய பெண்மணி விபத்தில் அடிபட்ட தனது உறவுக்கார குடும்பத்தைப் பற்றிச் சொன்னார். அந்தக் குடும்பமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குடும்பத் தலைவர் இறந்துவிட்டார். மகன்களுக்கு முகத்தில் அடி. பெண்மணிக்கு கால் எலும்புகள் நொறுங்கிப் போயிருக்கின்றன. இதற்கு மேல் அதை விலாவாரியாக எழுத விரும்பவில்லை. எழுதவும் முடியாது. அவ்வளவு கொடூரமாக இருக்கிறது. 

இப்படியான செய்திகள் அலைகழிக்கச் செய்கின்றன. இதையெல்லாம் யாரோ ஒருவர் சொல்லி அதைக் கேள்விப்படும்போது பெரிய பாதிப்பு இருப்பதில்லை.  ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய உறவுகளும் நட்புகளும் அவர்கள் உணர்ந்து கொண்டிருக்கும் அதே வலியோடு நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் வீரியம் பன்மடங்காக இருக்கிறது. இந்த உலகில் ஏன் சில குடும்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் குடும்பங்களின் மீது மிகப்பெரும் பாரங்கள் இறக்கி வைக்கப்படுகின்றன? இதே உலகத்தில்தான் அயோக்கியர்களும், துரோகிகளும், இன்னபிற மோசமானவர்களும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் எளியவர்களும் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாதவர்களும் நோய்மையாலும் விபத்தினாலும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். முரண்கள் சூழ்ந்த உலகு இது. பல சமயங்களில் இந்தக் குழப்பங்கள் மனதுக்குள் பேயாட்டம் போடுகின்றன. சில நாட்களில் தூங்கவே முடிவதில்லை. 

இத்தகைய செய்திகளைத் தொடர்ந்து உள்வாங்கிக் கொண்டேயிருந்தால் என்னுடைய நிலைமை என்னவாகிப் போகும் என்று பயம் வருவது இயல்பானதுதானே? ஏற்கனவே சில நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்த விஷயம்தான் - கொஞ்ச காலத்தில் மனிதர்களின் பிரச்சினைகள் பற்றிய எந்தக் கருணையுமில்லாமல் இறுகிப் போய்விடுவேனோ என்று நடுக்கமாக இருக்கிறது. இவ்வளவு குரூரமான செய்திகளையும் மனித வாழ்வோடு விதி நடத்தும் அதிபயங்கரமான விளையாட்டுகளையும் இத்தனை நெருக்கமாகச் சென்று அறிய வேண்டியிருக்கும் என்று எந்தக் காலத்திலும் நினைத்துப் பார்த்ததில்லை. திரும்பத் திரும்ப விபத்துகளையும் நோய்மைகளையும் ஏழ்மையையும் இவ்வளவு அணுக்கத்தில் பார்க்கும் போது சற்று பதற்றமாகவும் இருக்கிறது.

இதையெல்லாம் வீட்டிலும் சொல்ல முடிவதில்லை. சொன்னால் இவற்றை விட்டுவிடச் சொல்வார்கள். அவர்களுடைய அக்கறையின் வெளிப்பாடு அப்படித்தான் இருக்கும். வேறு என்னதான் வடிகால்? தினந்தோறும் எதிர்கொள்கிற, கேள்விப்படுகிற அத்தனை விஷயங்களையும் இங்கு அப்படியே இறக்கி வைக்கப் போவதில்லை என்றாலும் மேம்போக்காகவாவது எழுதிவிட விரும்புகிறேன்- வாரம் ஒரு முறையாவது. அதன் வழியாக எதையோ இறக்கி வைத்த உணர்வு கிடைக்கிறது என்று சொன்னால் அதில் எந்த மிகைப்படுத்துதலும் இல்லை.

பணம் கேட்பதாகச் சொல்லும் வாக்கியம்தான் குத்துகிறது. என்னுடைய தேவைகளுக்காகக் கூட இதுவரை யாரிடமும் பணம் கேட்டதாக ஞாபகம் இல்லை. சுய தேவைகளுக்காக பணத்தை வைத்துக் கொள்கிற மனநிலையும் என்னிடமில்லை. நம்புவீர்களா என்று தெரியாது. ஒவ்வொரு மாதமும் ஐந்தாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு மீதச் சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிடுகிறேன். வீட்டின் வரவு செலவுக் கணக்கு பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியாது. இந்த லட்சணத்தில் நான் எதற்கு பணம் கேட்க வேண்டும்? 

மேலே சொன்னதையெல்லாம் வைத்து இதைப் புலம்பலாகவோ அல்லது பயப்படுவதாகவோ அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். பெரும்பாலானவை எதிர்பார்த்த சமாச்சாரங்கள்தான். இதற்கெல்லாம் ஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் என்று தெரியும். பதில் சொல்கிற அதே சமயத்தில் ‘இந்த சமூகத்துக்காக என்னை எவ்வளவு வருத்திக் கொள்கிறேன் தெரியுமா?’ என்று காட்டிக் கொள்கிற தொனி வந்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கையுணர்வுடனும், சக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிற மனநிலையிலும்தான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இவர் எழுதியிருப்பது போன்ற வாசகர்- எழுத்தாளர் என்கிற படிநிலை மீதெல்லாம் எந்த நம்பிக்கையும் இல்லை. அது அவசியமும் இல்லை. எனக்குத் தெரிந்ததை எளிய மொழியில் சக மனிதர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை. இங்கு யாருக்காகவும் யாரும் இல்லை.

இவருடைய நோக்கம் என்னவென்று தெரியவில்லை. என்னவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். இதே எரிச்சல் வேறு யாருக்காவது கூட வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் மன்னிப்புக் கோரிக் கொள்கிறேன். சிலர் படும் எரிச்சலைக் கடந்துதான் வேறு சிலருக்கு கை நீட்ட முடிகிறது என்பது துரதிர்ஷ்டம்தான். நம் சுற்றம், குடும்பம் என்பதைத் தாண்டி யாரோ சிலருக்கு நம்மால் சிறு உதவியைச் செய்ய முடியும் என்று புரிந்து கொண்ட தருணத்தின் சந்தோஷத்தையும் ஆன்ம திருப்தியையும் விவரிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாழ்வின் அர்த்தம் அதில்தான் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதற்கான பலத்தையும் பணத்தையும் இங்கிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்கிறேன். இதே இடத்தில்தான் என்னுடைய சிக்கல்களின் முடிச்சுகளையும் அவிழ்த்துக் கொள்ள விரும்புகிறேன். புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

இன்று எழுதப்பட்ட மற்றொரு கட்டுரை: கேடிகள்

18 எதிர் சப்தங்கள்:

Mahesh said...

ngalathu nilamai purikirathu sir.
ellaarai polavum office-kudumpamnu paarthukittu iruppathal athula enna sir irukku.

pothuvaaka middle-class makkal thannai sutri iruppavarkalai paarthuvittu ulakam nallaathan irukkunu inaichikkuranga.
aanal athu nijam kidaiyathu.

ningal aavathu ethaarthathai purinthu kondu nalla kaariyangaklai seythu kondu varukurirkal.
nisaptham-valiyaaka. ningale solli irukkurirkal ethuvarai mudiyumo athuvarai thodarungal.

Prakash said...

I dont think you need to worry for such comments, You are not forcing anyone to give money nor you are not asking them to subscribe to read you.. You are writing in a open forum, IMHO nobody even has rights to talk against you on this regard.

pandian said...

கலங்காதீர்கள்! எதிர்மறையாய் பேசுபவர்களை ஜி.எச் எமர்ஜென்சியில் ஒரு நாள் முழுவதும் இருக்கச் சொல்லுங்கள்...தங்கள் வேதனௌப் புரியும்...பிரார்த்தனைகள்!

Anonymous said...

Hello Mani sir, this is my first comment in any such blogs in the last 15 years of Internet life.
My viewpoint is that you are being used as a tool by the almighty to do his deeds. I believe in God but as you have mentioned not sure why he sometimes test or put people more than they can withstand..I have been reading your blog since last 4 months and been contributing to the trust. I strongly feel people should come forward to help,support genuine trusts like nisaptham rather than filling various coffins at different worship places in the name of donations...if every human being start doing like this half of the problems can be resolved among ourselves.
Pls don't stop here,as suggested by one gentlemen we need to see how this blog or your trust can reach scores and scores so that more people can get the possible help and the others like me get the satisfaction of contributing to bring some change in others life.
Again pls continue your good work and May god bless/ give more strength,peace and happiness to you as well as to your family members.

www.rasanai.blogspot.com said...

dear mani

anaithum pogattum antha punniyavangalukke (those charity doing good samaritans). OTOH, just view from that man's view point (in a +ve note i am saying -- suppose, after reading your write up, he would have felt that he was not in a position to do charity/help through nisaptham, so he would have ended up it in showing in a "wrong" way aatramai turns into erichal-- there is a slim chance for this also to happen # human mind complexity)

No need to explain / justify. those who are oppose will never agree with your comments/explanation, those who understand (like me and others) you and nisaptham needs no justification.

Rs.500 may be small and "thinking shame" for a giver to give but Rs.500 itself is a big money for the receiver. explain him this. the ACT of Giving and Doing is what essential than the amount. siruthuli peruvellam.

but definitely once in a while/week DO write your OUTBURST in blog which indirectly cleans up more space in mind and gives more energy to help those needy people. like stomach, human mind can withstand upto a certain level only, so outburst is a good method to make your mind relax, free and gives room for fresh ideas to DO with a +ve note. take care mani.

anbudan
sundar g rasanai chennai

Vinoth Subramanian said...

Ungal vazhkaikku artham kidaithathaga nan eppothum unarvathundu. uthavuvathai latchiyamaga karuthi payanapattukkondirukkireerkal. athai thodarumpothu, athai silar uruthi seyvarkal silar nammai uruthi seyya vaipparkal. thodarnthu sellungal. purithalum pidithalum thanippatta manithan saarnthathu. athai matravarkal meethu irukkivaikkum manopavam ellorkum silanerangalil varum. silarukku ella nerangalilum varum. pinnoottam ittavar thangal mel avar purithalai irukkivittu senruvittar avalavuthan. ungalin intha sevaiyin karanamaga, ethirukaalathil neengal irugi ponalum aacharya paduvatharku onrumillai enruthan ninaikkiren. athu ungalai melum valimayanavarakkum enpathuthan unmai. ennai kettal ezhuthin moolam ithu ponra prachinaikalai pakirnthukolvathuthan seriyana anugumurai ena ninaikkiren. athaithan neengal seykirirkal. seyyungal.

சேக்காளி said...

அறக்கட்டளை ஆரம்பித்த பின்பு நீங்கள் எழுதியுள்ள அனைத்து பதிவுகளையும் படித்திருப்பேன் என நினைக்கிறேன்.ஆனால் இதுவரை ஒரு உதவியும் செய்யவில்லை.
அதனால் இதனை சொல்லலாமா என தெரியவில்லை.ஆனால் பொதுநல விசயங்களில் ஈடுபடும் போது எத்தனை பிரச்னைகளை சந்திக்க வேண்டும் என்பது தெரியும்.
எனவே "கறை நல்லது" ன்னு போய்கிட்டே இருங்க.

ராமுடு said...

Dear Mr.Mani,

Your today's post answered my question.. Two things, came into my mind.

1. How Mani talk to so many people (who are in need) & help them? Because, if I hear a news from a person that he / his family is in need of money, due to accident or somebody in his family is in pathetic medical situation, I wont be able to sleep peacefully for a day or two. But Mani hear so many message and how could he sleep or digest..

2. Don't worry about that person. I believe he posted his comment to wrong place, instead of another writer.. :) . Sometime, we should neglect few comments / shouldn't pay attention to some people.. This is of such case. Nothing else.

You didn't ask money for your family or your welfare. This is out of your way. But still you are doing for your personal satisfaction. You are not going to gain any monetary benefit.. So don't worry and do whatever you think, which is correct to your heart. Take care & Good Luck.

-Sriram.

Anonymous said...

என்னுடைய முழு கமெண்டயும் அப்படியே போட்டு பதிவு எழுதியிருந்தால் அதன் கான்டெக்ஸ்ட் மற்றவர்களுக்குப் புரிந்திருக்கும். உங்களுக்குத் தேவையானதை மட்டும் எடிட் செய்து பதிவிட்டிருக்கிறீர்கள்.

மிக்க நன்றி. நான் சொல்ல வந்தது இது தான்.

உங்களுக்கு என்று சுமார் மூவாயிரம் வாசகர்கள் இருக்கலாம். அவர்களிடமே திரும்பத் திரும்ப உதவி கேட்பது என்பது வாசிப்பவர்களுக்கு எரிச்சலாக இருக்கும்/இருக்கிறது என்பதுதான் கான்டெக்ஸ்ட்.

நான் உங்களை பிறருக்கு உதவ வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே போல் நிதி திரட்ட வேண்டாம் என்றும் சொல்லவில்லை. நான் யாரையும் நிதி கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

அடிக்கடி பதிவு வாயிலாக கேட்பது, எனக்கு படிக்கும் போது எரிச்சலாக இருக்கிறது என்று மட்டுமே சொன்னேன்/சொல்கிறேன்.

நீங்கள் மணிகண்டன் என்ற ஐடென்டியை மறைத்துக் கொண்டு(யாரோ ஒருவர், யாரிடமோ மணிகண்டனைப் பற்றிக் கேட்பது போல) பிறரிடம் இது குறித்துப் பேசிப்பாருங்கள். உங்களுக்குப் புரிய வரலாம்.

பலர் உங்களின் முக தாட்சயண்யத்திற்காக் உண்மை நிலவரத்தைப் பற்றிக் கூறாமல் இருக்கலாம்.

இந்தப் பின்னூட்டத்தை வெளியிடுவீர்கள் என நம்புகிறேன்.

எவன் ஒருவன் தன்னைப் பற்றிய தனி மனிதத் தாக்குதல் இல்லாத பிறருடைய கருத்துக்களை அப்படியே பொது வெளியில் சொல்ல அனுமதிக்கின்றானோ, அவனே சிறந்த எழுத்தாளன், சமூக சித்தாந்தவாதி இன்னும் பல.

தந்தை பெரியார் மீது விழாத சொல்லடிகளா உங்களுக்கு விழுந்து விட்டது?

நான் சுமார் பத்து நிமிடம் செலவழித்துப் பதில் எழுதுவதும் கூட உங்கள் மேல் உள்ள அக்கறை தானே தவிர, உங்களைத் தூற்றுவதற்காக அல்ல.
நான் பெயரை மறைத்து எழுதுவது கூட நான் உங்களுக்கு நெருக்கமானவன் என்பது தானே தவிர வேறொன்றும் இல்லை.

Bala said...

நல்ல காரியம் செய்யும் பொது இந்த மாதிரி கேள்விகளும் பிரச்சனைகளும் வருவது சகஜம் .. அதனால் சோர்ந்து விடாதீர்கள். மேலே செல்லுங்கள்.

Shankar said...

Dear Mr Mani,
Kindly ignore such indecent letters. These are manifestation of frustration and helplessness.
You are doing a great job. You do not have to prove anything to anybody.
Goodness is a abstract thing and cannot be quantified and justified. Gut feeling is important and that is what is guiding the mankind.
Majority of the readers are with you and we will do what little we can. Tiny drops can make mighty ocean. Have we not read this in our early childhood?
Good Luck.
Regards


Shankar

Unknown said...

Hi anna,
intha mathiri commentkku ellam feel pannathinga... ungaloda intha muyarchi vetri adiyum... thuvandu pogathinga ....

hitechramesh said...

expect....such comments...service minded sole....but don't let u down...

Mugilan said...

freeya vidunga'ji... Neenga thelivaathaan irukeenga... just go ahead...

Anonymous said...

Till the time you are truly 'true' to your soul in helping the needy people, by doing all these charitable trust doings, don't feel annoyed by such comments, Mani.
I strongly believe that the prayers of the people who you help and support you get from the readers will take you high and enhance your ability to help more.
All the best and keep us busy. :-)

ilavalhariharan said...

போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே அட விடுங்க மணி
இளவல் ஹரிஹரன்

அனுஷ்யா said...

'மக்களுக்கு சேவை செய்யப்போறதா சொன்ன மானில அளவு ரேன்க் எடுத்த மாணவர்கள் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?' இப்பிடி ஒருத்தர் என்னை டேக் செய்து கமென்ட் எழுதறார். இவர்களுக்கும் சேர்த்துதான் பூமி சுத்துது. ஆக, என்ன செய்கிறோம் சொன்னாலும் குத்தம், சொல்லாவிடினும் குத்தம்.

இவரை மாதிரி ஆளுக்கு நீங்கள் உதவி கேட்பதால் எரிச்சலில்லை. உங்கள் மீதே எரிச்சல்.. ஒன்னும் செய்யமுடியாது.

அதே பூமியில கொஞ்ச நாள் ஒட்டிக்கிட்டு நாமளும் சுத்திட்டு கெளம்ப வேண்டியதுதான்.

Anonymous said...

சார் இந்த மாதிரி இணையத்தை வெறும் கமெண்டுகள் போட்டும்,வெட்டி அரட்டையிலும்,எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்ற மனநிலையில் இருப்பவர்களின் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லி உங்க நேரத்தை வீணாக்கி மனஉளைச்சளுக்கு ஆளாக வேண்டாம் சார்..உங்களால் உதவி கிட்டியவர்களின் முகத்தை ஒருமுறை நேரில் பார்த்தால் இந்த கமெண்ட்டை சொன்னவர் நிச்சயம் மனசாட்சியின் உருத்தலிலேயே நொந்து போவார்..சோ டோன்ட் வொரி சார்..எல்லாவற்றையும் கடக்கும் ஆன்மபலத்தை நீங்கள் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன்