Sep 17, 2009

நான் நாத்திகம் பேசுவதில்லை

"கதவைத் திற.." தொடர் எழுதிய நித்தியானந்தத்தை நான் 2002 அல்லது 2003 ஆம் ஆண்டு சேலத்தில், கல்லூரியில் பேச வந்த போது பார்த்திருக்கிறேன். அவர் அப்பொழுது பிரபலமில்லை. மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் அவரை முன்னிலைப்படுத்துவதாகப் பேசிக்கொண்டார்கள். யார் முன்னிலைப்படுத்தினால் என்ன, இப்பொழுது அவர் தமிழகத்தில் முக்கியமான காவியாளர். அந்த சேலம் கூட்டத்தில் நித்தியானந்தத்தின் பேச்சு அவ்வளவு ஈர்ப்பாக இல்லை. அல்லது குறைந்தபட்சம் எனக்கு ஈர்ப்பாக இல்லை.

மிகச் சிறிய வயதில் வாரியாரின் பேச்சடங்கிய ஒலி நாடாவை கேட்டிருக்கிறேன். சைவத்துக்கும் அசைவத்துக்கும் என்ன வித்தியாசம் என்ற ஒரு கேள்வி எழுகிறது. அதற்கு வாரியார் "முருங்கையை வெட்டினால் மீண்டும் முளைத்து வரும். அது சைவம். ஆட்டின் காலை வெட்டினால் அது மீண்டும் முளைப்பதில்லை. அது அசைவம்". என்றார். இந்த சாராம்சத்திலிருந்த அவரது பேச்சு எனக்கு பல வருடங்களுக்குப் பின்னரும் ஞாபகமிருப்பதால் வாரியாரின் பேச்சு எனக்கு சுவாரசியமானது என்கிறேன்.

இப்படி எதுவும் நித்தியானந்தம் அவர்களின் பேச்சிலிருந்து மனதில் பதியவில்லை.

சாமியார் பேசி முடித்தவுடன் அவரை ஒரு மேடையில் அமர வைத்து பார்வையாளர்களை வரிசையாக அவரிடம் அனுப்பினார்கள். நெஞ்சு வலி என்றால் நெஞ்சு மீது கை வைத்துக் அவரது கண்களை மூடுவார். அது சரியாகிவிடும் என்றார்கள். இந்த வைத்தியத்துக்கு 'டச் ஹீலிங்' என்ற பெயராம். எனக்கு ஒரு வலியும் இல்லாததால் நான் போகவில்லை. கீழே நின்று வேடிக்கை பார்த்தேன்.

நித்தியானந்தம் வரும் பாதையெங்கும் மலர்கள் தூவி மேடைக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவர் பேசி முடித்த பிறகு கடைசியாக கேள்விகள் கேட்கலாம் என்றார்கள். சிலர் இரண்டு மூன்று கேள்வி கேட்டார்கள். நான் இரண்டு கேள்விகள் கேட்டவுடன் வலுக்கட்டாயமாக மைக்கை பறித்துக் கொண்டார்கள். நான் கேட்ட கேள்விகள்.

1. புஷ்பம் புனிதமானது. அது கடவுளுக்கும் கடவுளுக்கு நிகரான சவத்துக்கும் மட்டுமே தூவப்படலாம் என்பது என் கருத்து. உங்கள் பாதங்களில் தூவப்பட்டு மிதிக்கிறீர்களே நீங்கள் என்ன கடவுளா?சவமா?

2. யேசு கிறிஸ்து புவிக்கு வந்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகிறது. கிறிஸ்தவ மதம் உலகம் முழுவதும் பெரும்பான்மையான மனிதர்களால் பின்பற்றப்படுவதாக இருக்கிறது. நபிகள் நாயகம் அவதரித்த கி.பி.633 லிருந்து கணக்கிட்டால், ஆயிரத்து நானூறு ஆண்டுகள் ஆகிறது. உலகின் இரண்டாவது பெரிய மதமாக இருக்கிறது. ஐந்தாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்து மதம் பெரும்பான்மையாக இல்லை. அதற்கு சாமியும் காரணமில்லை. சாமியை கும்பிடும் சாமானியனும் காரணமில்லை. நடுவில் இருக்கும் கேப்மாரி சாமியார்கள்தான் காரணம். என் கூற்று சரியா?

இதற்கு மேலும் மைக்கை கொடுப்பார்களா? என்னிடம் மைக்கை வாங்கிய கடுப்பில் இருந்ததால் வந்த பதில் ஞாபகமில்லை.

நான் நாத்திகம் பேசுவதில்லை. ஆத்திகத்தின் மீதும் வெறுப்பில்லை.

சாமியார்களைப் பின்பற்றுபவர்களின் மீதும் கோபமில்லை. அது அவர்களின் நம்பிக்கை. அடுத்தவனின் வயிற்றில் அடிக்காத வரை சாமியார்களும் இருந்துவிட்டுப் போகட்டும். உலகில் ஒவ்வொருவரும் பிழைக்க ஒரு வேலை இருக்கிறது. சாமியார்களுக்கு ஆன்மிகம் வேலை தருகிறது.


(டைம் பாஸ் ஆர்ட்டிக்கிள்-நம்பினால் நம்புங்கள் யாருக்கும் எதிர்வினையில்லை)

12 எதிர் சப்தங்கள்:

manasu said...

-:((((

நிகழ்காலத்தில்... said...

எல்லா சாமியாரையும் கவனிக்கிறேன்,

அவர்களிடமிருந்து எனக்கு ம்னோரீதியாக என்ன கிடைக்கும் என்பதை மட்டும் நான் பார்க்கிறேன்

பெரிதாக ஆராய்ச்சி செய்வதில்லை :))

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள் நண்பரே

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான கேள்விகள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.
இதை அப்படியே பிரதி பண்ணி

சாருநிவேதிதாவுக்கு அனுப்புகிறேன்

நானும் நாத்திகனல்ல, ஆனால் சாமிமார் நம்மை ஆட்டிப்படைப்பதை
ஏற்பவனல்ல.

வால்பையன் said...

ஹாஹாஹா!

சரியான கேள்விகள் நண்பா!

குழலி / Kuzhali said...

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா பட்டையை கெளப்பியிருக்கிங்க.... இந்த ஆளை பற்றி என்னிடமும் ஒரு விசயம் இருக்கு

Vaa.Manikandan said...

நண்பர்களுக்கு நன்றி. என்னது சாரு நிவேதிதாவுக்கு அனுப்பறீங்களா? எதுக்கு சாமீ பெரிய மனுஷங்க வெவகாரம்? நாம உண்டு நம்ம ப்லாக் உண்டுன்னு இருந்த்துட்டு போலாம்..

Boston Bala said...

கலக்கல் கேள்விகள். பதிவுக்கு நன்றி.

Anonymous said...

A FOR APPLE...

B FOR BABY...
.
.
.
.
:((

யாழினி said...

அருமையான கேள்விகள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்,,,.
வாழ்த்துக்கள்

Marimuthu Murugan said...

இவரின் சீடர் என்று சொல்லிக்கொண்டு ஒருவர் எங்க காலேஜுக்கு வந்தார். அவர் வந்து சுவாமிகள் கை பட்ட குங்குமம், சுவாமிகளின் க்ளோஸ் up கண் போட்டோ எல்லாத்தையும் வித்துட்டு போனார். அந்த எடத்துல நீங்க இருந்திருக்கணும்.....

கார்த்திகேயன் said...

அருமையான கேள்விகள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன்.
பதிவுக்கு நன்றி.