Jun 4, 2018

தொடர்புக்கு..

நிசப்தம் தளத்தில் வாட்ஸாப்புக்காக ஒரு எண் இணைத்திருந்தேன். அந்த எண்ணுக்குரிய சிம் உபயோகத்தில் இல்லை என்பதால் யாரும் அழைத்து பேச சாத்தியமில்லை. வாட்ஸாப்பில் மட்டும் தகவல் அனுப்பலாம். தேவையற்ற அழைப்புகள் இருக்காது என்பதற்காக இப்படியொரு ஏற்பாடு. அந்த எண் இப்பொழுது வேறு யாருக்கோ வழங்கப்பட்டிருக்கிறது போலிருக்கிறது. எக்கச்சக்கமான செய்திகள் வருகின்றன. அரபி, உருதுகளில் இருக்கும் செய்திகள், சாட் இணையதளங்களில் இருந்து அனுப்பப்படும் செய்திகள் என இப்பொழுது அது பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. 

சம்பந்தமில்லாத செய்திகள் வரத் தொடங்கிய போதே இந்த எண்ணைப் பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்திருந்தேன். ஆனால் ஏப்ரல், மே,  ஜூன்  மாதங்களில் சேர்க்கை சமயத்தில் மாற்ற வேண்டாம் என யோசனையாக இருந்தது. ஆனால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை. இதையெல்லாம் யார் எப்படி பயன்படுத்துவார்கள் என்று தெரியாது. மாற்றிவிடலாம். 

ஏதேனும் வாட்சாப் தகவலாக இருப்பின் 9663303156 என்ற எண்ணுக்கு அனுப்பவும். பொதுவாக, அறிமுகமில்லாத  தெரியாத எண்களாக இருந்தால் அழைப்பை எடுப்பதில்லை. அலுவலக நேரம், எழுதுகிற நேரங்களில் அவை தொந்தரவாக இருக்கின்றன. 'பெரிய இவன்...பேச மாட்டானாம்' என்று நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. மேலாளர் எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வார். 'ஆன்னா ஊன்னா ஃபோனை எடுத்துட்டு போயிடுறான்' என்று நினைக்க வாய்ப்புகள் அதிகம். 

அத்தியாவசியமாக இருப்பின் இருவருக்கும் தோதான நேரத்தை முடிவு செய்து கொண்டு பேசலாம். அதில் பிரச்சினையில்லை. 

மின்னஞ்சல் எப்பொழுதும் சிறப்பு: vaamanikandan@gmail.com

நன்றி. 

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

ஒரு நாளைக்கு நான் யாரு ன்னே சொல்லாம பேசணும் ன்னு நெனைச்சிருக்கேன்.

v.mraman said...

Please confirm,donations are exempted under 80G act?