May 31, 2018

ஹன்ஷிகா மோத்வானி மாதிரி..

திரைப்படங்களில் பணியாற்றுவது ஒரு வித்தியாசமான அனுபவம்தான். நமக்கும் இயக்குனருக்கும் அலைவரிசை ஒத்துப் போக வேண்டும். சதுரங்க வேட்டையின் இரண்டாம் பாகம் படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை முதல் பாகத்தின் இயக்குனர் வினோத்திடமிருந்து தயாரிப்பாளர் வாங்கி வைத்திருந்தார். மனோபாலாதான் தயாரிப்பாளர். சலீம் படத்தின் இயக்குனர் நிர்மல்குமாரிடம் இயக்கும் பொறுப்பைக் கொடுத்திருந்தார்கள். நிர்மல்குமாரிடம் சில வருடங்களாகத் தொடர்பு உண்டு. அவரது சில ஸ்க்ரிப்ட்களில் வேலை செய்திருக்கிறேன். திரைக்கதையின் வடிவம் குறித்தான அனுபவம் அவர் வழியாகத்தான் கிடைத்தது. 

சதுரங்க வேட்டை-2  'வசனத்தில் வேலை செய்ய முடியுமா?' என்று கேட்டார். ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறேன்? கற்றுக் கொள்ள வேண்டியதுதானே. இயக்குனரும் நானுமாக நிறைய மாறுதல்களைச் செய்தோம் . படத்தின் வேலைகள் முடிந்துவிட்டன. எப்பொழுது வெளியிடுகிறார்கள் என்று தயாரிப்பாளருக்குத்தான் தெரியும். நிர்மல் அடுத்தடுத்த படங்களின் வேலைகளைத் தொடங்கிவிட்டார். 

இயக்குனர் சசியுடன் அவரது அடுத்த படத்துக்கான கதை விவாதங்களில் கலந்து கொண்டேன். பிச்சைக்காரனுக்கு பிறகு அவர் இயக்கும் அடுத்த படம். அதில் எழுதுகிற வேலை இல்லை. விவாதங்கள் மட்டும்தான். சில மாதங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் அமர்ந்து ஒற்றை வரியை மட்டும் சொன்னார். 'இதை எப்படி டெவலப் செய்யலாம்ன்னு யோசிங்க' என்றார். அந்த ஒற்றை வரி முழுநீள திரைக்கதையாக மாறுவதை பார்ப்பது இன்னோர் அனுபவம். ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். 

இப்படி கதை சார்ந்து, எழுத்து சார்ந்து சினிமாவில் பணியாற்றுவது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. வருமானம் பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைப்பதில்லை. பெயர் வாங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பில்லை. சினிமாவில் வேலை செய்கிறேன் என்று சொன்னால்தான் வாயைத் திறக்கிறார்கள்.

மனத்துக்கு நெருக்கமான வேலையாக இருந்தால் சரி.  சில உதவி இயக்குனர்கள் பேசியிருக்கிறார்கள். கதையே கையில் இருக்காது. கிறுக்கி வைத்திருப்பார்கள். 'இதை எழுதுங்க' என்று சொன்னால் 'எப்படிடா தப்பிக்கிறது' என்று ஆகிவிடும். அப்படியான ஆட்களுடன் வேலை செய்வது கடுமையான அழுத்தத்தை உருவாக்கிவிடும். டெட் லைன் வைத்துக் கொண்டு கேட்பார்கள். அலுவலகத்தில்தான் அப்படி கொள்கிறார்கள் என்றால் நீங்களுமா என்று நினைத்துக் கொண்டு தப்பித்துவிடுவேன். அப்படித் தப்பியிருக்கிறேன்.

கதை சொல்வதற்காக இந்தப் பதிவை ஆரம்பிக்கவில்லை. 

இப்பொழுது அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கியிருக்கிறேன். இதில் வசனம் எழுதுகிற வேலை. இயக்குநரைச் சந்தித்து பேசிவிட்டு பிற விவரங்களை எழுதுகிறேன். கடந்த வாரம் தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அழைத்துச் சொன்னார். அவருடைய உதவி இயக்குனர் எனக்கு நல்ல நண்பர். நமக்கு முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது.  

'ஹீரோயின் யாருங்க?' என்றேன்.

'தேடிட்டு இருக்கோம்..உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லுங்க' என்றார். என்னைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. கடலை போட ஆள் தேடுகிறான் என்று தப்புக் கணக்கு போடுவீர்கள் என்று தெரியும். அப்படியில்லை. நாம் உதவி செய்து ஒரு பெண் ஹீரோயின் ஆகி அவள் எதிர்காலத்தில் நயன்தாரா மாதிரி ஆகிவிட்டால் 'அவளுக்கே நான் தான் சான்ஸ் வாங்கி கொடுத்தேன் தெரியுமா?' என்று பந்தாவாக நிசப்தத்தில் ஒரு கட்டுரை எழுதலாம் அல்லவா? அப்பொழுதும் கட்டுரைதான் எழுதுவியா என்றெல்லாம் கேட்கக் கூடாது. அதுதான் நமக்கு மதி. 

தெரிந்த சில பெண்களை அழைத்து 'இந்த மாதிரி ஒரு ஹீரோயின் தேடுறாங்க..யாராச்சும் இருக்காங்களா?' என்று கேட்டால் 'ஏன் நாங்க நடிக்க மாட்டோமா?' என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள். அதே பெண்களிடம்  நான்தான் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சொன்னால் எப்படி இருக்கும்? ஆண்கள் மட்டும் இனாவானாக்களா? நீங்கள் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவர்களை எல்லாம் கேட்பது வேலை கெட்ட வேலை. சுய முயற்சிதான் வெற்றியைக் கொடுக்கும். 

எப்படியோ கடைசியில் ஒரு பெண்ணைப் பிடித்துவிட்டேன். மாடலிங் செய்து கொண்டிருக்கிறாள். இதெல்லாம் வேணிக்குத் தெரிந்தால் 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை' என்று கடிக்கக் கூடும். அழகான ஆண்களை கணவனாகக் கொண்ட பெண்களுக்கு இருக்கும் இயல்பான பயம்தான். அந்த மாடலிங் பெண்ணிடம் நிழற்படங்களை- நல்ல மாதிரியான படங்கள்தான்- வாங்கி அதை உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்தேன்.

உள்ளுக்குள் ஒரே குறுகுறுப்பு. 'பொண்ணு நல்லா இருக்காளா' என்றேன். 

'ஹன்சிகா மோத்வானி மாதிரி தேடிட்டு இருக்கோம்' என்றார். 

'என்னது ஹன்சிகாவா? அதுக்கு நான் எங்கே போவது?'

சில நண்பர்களிடம் சொன்னேன். 'பெங்களூரில் இல்லாத பெண்களா? தேடிப்பாருங்கள்' என்று சொன்னார்கள்.

'பொண்ணுங்க இருப்பாங்க...ஆனா எப்படி கேட்பது' என்றேன். 

'நடிக்க இண்டெரெஸ்ட் இருக்கா..யோசிச்சுட்டு எனக்கு மெயில் அனுப்புங்கன்னு சொல்லி ஈமெயில் ஐடியை கொடுத்துடு' என்று ஐடியாவும் கொடுத்தார்கள்.

'ஏம்ப்பா இதெல்லாம் பெரிய மனுஷன் செய்யுற வேலையா' என்றேன்.

'நீயா உன்னை பெரிய மனுஷன்னு நினைச்சுக்குவியா' என்று கவுண்ட்டர் கொடுத்தார்கள். அதுவும் சரிதான். 

ஹன்ஷிகாவை மனதில் வைத்துக் கொண்டு தேடினால் பெங்களூர் மொக்கையாகத் தெரிகிறது. 'பெண்களூர்' என்று இதற்கு இன்னொரு பெயரும் உண்டாம்.பெருமையாகச் சொல்லிக் கொண்டால் மட்டும் போதுமா? பேரு பெத்த பேரு தாக நீலு லேது. 

சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் ஆகாத ஒரு பையன் 'இந்த ஊர்ல எல்லா பொண்ணுங்களும் அழகாக இருக்கங்கண்ணா' என்றான். 

'சீக்கிரம் கல்யாண செஞ்சுக்க தம்பி..' என்றேன். 

'அப்புறம் அசிங்கமா தெரிவாங்களா?' - இதற்கு என்ன பதிலைச் சொன்னாலும் வம்பாகிவிடும் என்பதால் பொதுவில் எழுத முடியாது.

சாலையில் அழகாகத் தெரிந்த ஒன்றிரண்டு பேரிடமும் பேசுகிற தைரியமில்லை. வார்த்தைகள் வாய் வரைக்கும் வந்துவிடும். எசகுபிசகாகிப் போனால் கன்னட காரர்களிடம் குத்து வாங்க முடியாது என்று அடங்கிக் கொள்கிறேன். ஆனால் ஒன்று - முன்னெல்லாம் பெண்களை பார்த்தால் 'அழகா இருக்கா' என்று மட்டும்தான் தோன்றும். இப்பொழுது 'ஹீரோயின் ஆக தகுதி இருக்கா' என்று மனம் யோசிக்கிறது. எவ்வளவு பெரிய முன்னேற்றம்?. 

இப்படி கண்டதையும் செய்து கொண்டிருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் எங்கே விடுகிறார்கள்? இதை எழுதினால் பாருங்கள்.  'உங்க கிட்ட இப்படி எதிர்பார்க்கலை...' 'நீங்களா இப்படி' என்று தட்டி தட்டியே சந்நியாசி ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. சைட் அடிப்பதை பற்றி பேசினாலும் கூட பாய்கிறார்கள். சுற்றிலும் இவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நாம்தான் தம் கட்டி நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்று பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறேன்.   

நேற்றிரவு உதவி இயக்குனர் அழைத்தார். 'எழுதி அனுப்பிடீங்களா?' என்றார். 

'ஹீரோயின் தேடிட்டு இருக்கேன்' என்றேன். 

'சொன்ன வேலையை மட்டும் பாருங்க சார்...' என்றார். ஒருவன் சந்தோஷமாக இருந்தால் இந்த உலகத்துக்கு பிடிக்காதல்லவா? அதுதான்.

20 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மணி, அப்படியே இரண்டாவது கதாநாயகன் அல்லது குணசித்திர வேடம் நடிக்கலாமே?
-சரவணகுமார்

Anonymous said...

சில மாதங்களுக்கு முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் அமர்ந்து ஒற்றை வரியை மட்டும் சொன்னார். மணி அண்ணா இந்த வரி ரொம்ப நாளைக்கு முன் படித்ததாக ஞாபகம்.

Anonymous said...

இது போன்ற அனுபவங்களைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.ஜமாய்ங்க....சந்தானம் இடம் காலியாக இருக்கும் என நினைக்கிறேன்.வேறு மாதிரி எழுத வினவு இருக்கிறது என்பது

Mugilan said...

repeat post'a?

Anonymous said...

தலை பங்களாதேஷ் பொண்ணுனா ஓகேவா?! ரொம்ப அழகா இருக்கா.
தேவா

சேக்காளி said...

// மணி அண்ணா இந்த வரி ரொம்ப நாளைக்கு முன் படித்ததாக ஞாபகம்.//
கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து மானே தேனே சேர்த்து குடுத்துருக்கார்.
அதுக்காக போராட்டமெல்லாம் ஆரம்பிச்சிராதீங்க Anonymous ஐயா அல்லது அம்மா மற்றும் முகிலன்.
அப்பிடி ஆச்சுன்னா தமிழ்நாடு சுடுகாடா ஆயிரும் ஆமா

சேக்காளி said...

//மனோபாலாதான்//
பழைய(தியானம் இருந்த) பன்னீர் செல்வத்தை பா(ர்)க்க கூட்டிட்டு போனாரே அவரு தானே.

சேக்காளி said...

//தெரிந்த சில பெண்களை அழைத்து 'இந்த மாதிரி ஒரு ஹீரோயின் தேடுறாங்க..யாராச்சும் இருக்காங்களா?' என்று கேட்டால் 'ஏன் நாங்க நடிக்க மாட்டோமா?' என்று மனசாட்சியே இல்லாமல் கேட்கிறார்கள்//
நீரு பரட்டையக்கா டுமீலிசை கிட்ட போயி கேட்டா அப்படித்தான் கேப்பாங்க.

சேக்காளி said...

// வேணிக்குத் தெரிந்தால் 'உங்களுக்கு எதுக்கு இந்த வேலை' என்று கடிக்கக் கூடும்.//
எம்மோவ் வேணி!!! சரியா சங்குல கடிச்சிரு.

சேக்காளி said...

//நேற்றிரவு உதவி இயக்குனர் அழைத்தார். 'எழுதி அனுப்பிடீங்களா?' என்றார்.//
"ஆமா மா எழுதிட்டேன்" ன்னு இந்த பதிவோட லிங்க் ஐ அனுப்பி வைங்க சின்னையா.

சேக்காளி said...

//என்னது ஹன்சிகாவா? அதுக்கு நான் எங்கே போவது?'//
ஹன்சிகா வீட்டுக்கு தான் போணும்.

சேக்காளி said...

//கன்னட காரர்களிடம் குத்து வாங்க முடியாது என்று அடங்கிக் கொள்கிறேன்.//


"அதுல ஒரு குண்டச்சி கராத்தே பழகியிருப்பாபோலிருக்கு. அவ அடி மட்டும் தனியா தெரியுது. இவ்வளவு பெரிய மூட்ட வெச்சுக்கிட்டு ஒரு ஏத்து ஏத்தினா பாரு... சர்ர்னு இங்கே வந்திடுச்சு"

சேக்காளி said...

//இப்படி கண்டதையும் செய்து கொண்டிருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக ஓடிக் கொண்டிருக்கிறது//
ஆமா சின்னையா

Anonymous said...

தமிழ்/தமிழ் கலாச்சாரம் மீது அக்கறை கொண்ட நீங்கள் தமிழ் பெண்ணை ஏன் மாதிரியாக கருதவில்லை? இதுவும் ஒருவகை வடநாட்டு திணி்ப்புதானே?

அன்பே சிவம் said...

அன்பு கொ.ப.செ. 3×90 = ?
2×80 = ?
____
ஆக மொத்தம் ____ எவ்LOVE இதுக்கும் செக்குதான் குடுப்பேன்னு சொல்லுற ஆளுங்களோடயெல்லாம் எனக்கு சோடி சேத்தாம் பாரும். அவம் மட்டும் என் கண்ணுக்கெதிர வந்தான்!!! வேறென்ன
'நன்றிடா நண்பா'ன்னு சொல்லுவேன்.

அன்பே சிவம் said...

அன்பு கொ.ப.செ. 3×90 = ?
2×80 = ?
____
ஆக மொத்தம் ____ எவ்LOVE இதுக்கும் செக்குதான் குடுப்பேன்னு சொல்லுற ஆளுங்களோடயெல்லாம் எனக்கு சோடி சேத்தாம் பாரும். அவம் மட்டும் என் கண்ணுக்கெதிர வந்தான்!!! வேறென்ன
'நன்றிடா நண்பா'ன்னு சொல்லுவேன்.

அன்பே சிவம் said...

அனானி அவுகளே, இந்த கேள்வியக் கூட நேரடியா கேக்கலாமே.
சரி இந்ந ரசகுல்லா, குலோப் ஜாமூன், ஜாங்கிரி, இது மாதிரி துன்னுற itemகளும் காந்தி, பட்டேல், நேரு, சுபாஷ் சந்ர போஸ், தாகூர் இவங்கெல்லாம்கூட தமிழங்க இல்ல. அதுக்காக அவங்கள புறக்கணிச்சிலாமா

Anonymous said...

Definitely imagine that that you said. Your favorite reason appeared to be on the internet the simplest thing to have
in mind of. I say to you, I certainly get annoyed even as people consider concerns that they plainly don't realize about.
You controlled to hit the nail upon the top and also outlined
out the whole thing with no need side-effects , other folks
could take a signal. Will probably be again to get
more. Thanks

Anonymous said...

/அனானி அவுகளே, இந்த கேள்வியக் கூட நேரடியா கேக்கலாமே.
சரி இந்ந ரசகுல்லா, குலோப் ஜாமூன், ஜாங்கிரி, இது மாதிரி துன்னுற itemகளும் காந்தி, பட்டேல், நேரு, சுபாஷ் சந்ர போஸ், தாகூர் இவங்கெல்லாம்கூட தமிழங்க இல்ல. அதுக்காக அவங்கள புறக்கணிச்சிலாமா/
ஆப்பம் பணியாரம் வராமல் ரசகுல்லா மட்டும் நினைவு வருவதேன்?

சேக்காளி said...

//அன்பு கொ.ப.செ. 3×90 = ?
2×80 = ?
____
ஆக மொத்தம் ____ எவ்LOVE//
இமய மலைக்கு போய்ட்டு வந்து இந்த இLove விசயத்த பற்றி பேசுதேன்
அவைத்தலைவரே