Jun 4, 2018

அழைப்பு

அடர்வனம் அமைக்கும் பணியானது வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இரண்டாயிரம் செடிகளுக்கான குழிகளைத் தோண்டி செடிகளை அதனதன் குழிகளில் ஒழுங்கு செய்த பிறகு சனிக்கிழமையன்று விழாவாக நடுகிறோம். அநேகமாக நிற்க இடமில்லாமல் கூட்டம் சேர்ந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. அத்தனை பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ். உள்ளூர் இளைஞர்களும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

சந்தோஷம்தான். சரியாக நட்டு பராமரித்து வனமாக்கிவிட வேண்டும். செய்துவிடலாம். 


திருப்பதி மகேஷ் வருவதாக இன்று அழைத்துச் சொன்னார். நிசப்தம் வாசிக்கிறவர்களுக்கு அவரைத் தெரியும். பிறவியிலிருந்து விழித்திறன் இல்லாதவர். ஆனால் கடுமையான உழைப்பாளி. படித்து முடித்து வங்கியில் பணியாற்றுகிறார். தொடர்ந்து நிசப்தம் வாசிக்கிறவர். 

'எப்போ சார் நடக்குது? அழைப்பிதழ் இமேஜா இருந்துச்சு' என்று சொன்னார்.வாசிப்பதற்காக அவர் மென்பொருள் ஒன்றை பயன்படுத்துகிறார். எழுத்துருக்களை அது வாசித்துக் காட்டிவிடும். எப்பொழுதுமே ஒன்றிரண்டு வரிகளில் நடக்கும் தேதி, இடம் போன்றவற்றை எழுதிவிடுவதுண்டு. அரவிந்த், வினோத், மகேஷ் என்று சில வாசகர்களுக்காக அப்படிச் செய்வேன். அடர்வனம் அழைப்பிதழை அப்படிச் செய்யாமல் விட்டுவிட்டேன். நண்பர்கள் மன்னிக்கவும்.

ஜூன் ஒன்பதாம் தேதி, சனிக்கிழமை காலை பத்து மணிக்கு கோட்டு புள்ளாம்பாளையம் கிராமத்தில் நிகழ்ச்சி தொடங்குகிறது.

நன்றி. 

1 எதிர் சப்தங்கள்: