Sep 12, 2017

கொந்தளிக்கும் சமூகம்

வெறுமனே உணர்ச்சிவசப்பட்ட குரல் எழுப்புதல். அவ்வளவுதானே?

நீட் தேர்வுக்கான போராட்டம் மட்டுமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே அத்தனை போராட்டங்களும் நான்கைந்து நாட்களுக்கு நம்முடைய உணர்ச்சிப்படையலுக்குப் பிறகு வலுவிழந்து போகின்றன. இதற்கு முன்பாக ஜிஎஸ்டிக்கு எதிராகக் குரல்கள் உயர்ந்தன. உண்மையிலேயே சாமானியனை வெகுவாக பாதிக்கிற வரி விதிப்பு அது. நம்முடைய சட்டைப்பைகளில் பெரும் பொத்தல் விழுந்திருக்கிறது. முதல் சில நாட்களுக்கு ஆளாளுக்கு ஹோட்டல் பில்லை படம் எடுத்து ‘விலை ஏற்றப்பட்டுவிட்டது’ என்று கதறினார்கள். அதோடு சரி. சட்டப்பூர்வமாகவோ அல்லது அரசியல்ரீதியாகவோ அல்லது களத்திலோ சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டார்களா?

வரிசையாகச் சொல்லலாம். ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டம், அதற்கும் முன்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கை என எல்லாமுமே அப்படித்தான். உணர்ச்சிவசப்படுதலைத் தாண்டி எதுவுமில்லை. அனைத்திலும் அரசியல் பூச்சு. இருதுருவங்களில் ஏதேனும் ஒரு பக்கம் ஒதுங்கி நின்று இன்னொரு பக்கம் இருப்பவர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்துவிட்டு அடுத்ததாக என்ன பிரச்சினை வரும் என்று காத்திருக்கத் தொடங்குகிறோம். 

நம்முடைய கோபத்தையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்துவதற்கு இப்படியான நிகழ்வுகள் அவசியமாகின்றன. எல்லாக் காலத்திலும் ப்ரேக்கிங் நியூஸாகவே ஓடிக் கொண்டிருந்தாலும் சந்தோஷம்தான் நமக்கு. அவ்வப்பொழுது உணர்ச்சிமயமாக நம் கருத்துக்களைச் சொல்லிவிடுவதுடன் நம்முடைய சமூகக்கடமை நிறைவடைகிறது. இல்லையா?

ஒவ்வொரு சம்பவம் நிகழும் போதும் ஒவ்வொருவரும் கருத்துக்களைச் சொல்ல வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ‘ஒண்ணா நீ என் பக்கம் நில்லு. இல்லைன்னா அந்தப் பக்கம் நில்லு..நான் அடிக்கிறேன்’ என்கிற மனநிலை. உணர்ச்சிவசப்பட்டிருக்கும் தருணத்தில் ‘நான் கொலைவெறியில் இருக்கிறேன்’ என்று எழுதினால் கூட ஃபேஸ்புக்கில் ஐநூறு லைக் வரும். அதன் பிறகு? ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது எதைப் பேசினாலும் கூட்டம் சேர்ந்தது. இன்றைக்கு A1 பால் பற்றியும் A2 பால் பற்றியும் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது? 

ஸ்வாதி கொலை வழக்கும் சரி. வெள்ளப் பிரச்சினையும் சரி. நீட் தேர்வும் சரி- கோஷம் எழுப்பு; அரசியலாக்கு; விட்டுவிடு. அவ்வளவுதான். வெள்ளப் பிரச்சினையைத் திசை திருப்ப பீப் சாங்கும், நீட் பிரச்சினையோடு மல்லுக்கட்ட ஜிமிக்கி கம்மலும் போதுமானதாக இருக்கிறது. அனிதாவுக்கு முன்பிருந்து முத்துக்குமார், செங்கொடி, தர்மபுரி இளவரசன் என வரிசையாக யாரேனும் உயிரை இழந்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த நீதியை வழங்கியிருக்கிறோம்? அல்லது தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்?

நாம் நம்முடைய சமூகப் போராளி முகமூடியை அணிந்து கொள்ள பிரச்சினைகள் அவசியமாக இருக்கின்றன. தீர்வுகளைப் பற்றிய கவலையில்லாத அந்த முகமூடிகள் நமக்கு பொருத்தமாகவே இருக்கின்றன. நம் சக மனிதர்களிடம் வன்மத்தைக் காட்டவும், கோபத்தைத் தெறிக்கவும், குரூரத்தின் எல்லையை விஸ்தரிக்கவும் இந்த முகமூடி போதுமானவையாக இருக்கின்றன. தம்மை மட்டுமே இந்தச் சமூகத்தை ரட்சிக்க வந்தவனாகக் கருதிக் கொண்டு எதிரில் நிற்பவனையெல்லாம் வெறி கொண்டு தாக்குகிற குணம் என்ன பலனைத் தரப் போகிறது?

சலனமற்ற தருணங்களில் நிதானமாகவும் அதே சமயம் ஆழமானதுமான உரையாடலை நிகழ்த்துவதும், சாதக பாதகங்களை அலசுவதும்தான் சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய செயல். பொது விவாதங்களில் கூட தனிமனித ஸ்கோர் அடிப்பதிலேயே குறியாக இருக்கிறவர்களாக நம்மை இந்தச் சமூக ஊடகங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் நிதர்சனம்.

நாம் தாண்டி வரும் ஒவ்வொரு சமூக அநீதிகளைப் பற்றியும் நீண்ட உரையாடல் அவசியமாகிறது. தீர்வுகளுக்கான முன்வைப்புகள் தேவையாக இருக்கின்றன. ஒரு சதவீதம் பேராவது களம் காண வேண்டியிருக்கிறது. சூழல் அப்படியா இருக்கிறது? ஜல்லிக்கட்டுப் பிரச்சினையைப் பற்றி இனி பொங்கல் சமயத்தில்தான் பேசுவோம். தேர்வுகள் பற்றிப் பேச அடுத்த ஜுன் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இல்லையா? 

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 

24x7 கொந்தளிப்பான மனநிலையிலேயே இருக்க விரும்புகிற சமூகத்தின் அங்கமாகிக் கொண்டிருக்கிறோம்.  ஒரு வகையில் வெர்ச்சுவல் கொந்தளிப்பு. சமூக ஊடகங்களில் ‘டேய்..நான் யாரு தெர்மா?’ என்று எழுதிவிட்டு சன் மியூஸிக்கில் பாடல் ஒன்றைப் பார்க்கிற போலியானதும் பாவனை மிகுந்ததுமான கொந்தளிப்பு இது. ஊடகங்கள் நம்மைச் சுற்றிலும் போலியான பரபரப்பை உண்டாக்கினால் நாமும் அதை அப்படியே பின்பற்றுகிறோம்.  

நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தருணமிது. ஊடகங்கள் பரபரப்பை உருவாக்குகின்றன என்றால் வியாபாரம் பின்ணனியில் இருக்கிறது. அவர்கள் அப்படித்தான் செயல்படுவார்கள். தனிமனிதர்களுக்கு அப்படியில்லை. பரபரப்பு அவசியமில்லை. நம்முடைய பிரச்சினையெல்லாம் நம்முடைய புரிதல்கள்தான். சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம். தெளிவை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான் அவசியம். எதிரில் வருகிறவனையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு ஓடுவது விவாதமில்லை. அவனையும் நம்மை நோக்கி ஈர்ப்பதோ அல்லது அவன் சொல்வது சரி என்று கருதும்பட்சத்தில் அவனை நோக்கி நகர்வதும்தான் விவாதம்.

யார் மீதும் குறையில்லை. ஒவ்வொருவருக்கும் இந்தச் சமூகத்திற்கு ஏதேனும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதுதான். ஆனால் அதை வெளிப்படுத்துகிற பாங்கிலும் ஆக்கப்பூர்வமாக மாற்றுகிற வழிமுறைகளிலும்தான் திணறுகிறோம். கருத்துச் சொல்லிவிட்டு தூசி தட்டுவது போல தட்டிவிட்டு நகர்ந்து கொண்டேயிருப்பது எந்தவிதத்திலும் நல்லதுமில்லை பலனளிப்பதுமில்லை. பரஸ்பர புரிதலுக்கும் விவாதத்திற்குமான சூழல்தான் இன்றைய தேவை. ஆனால் தேவையிலிருந்து வெகு தூரமாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.

15 எதிர் சப்தங்கள்:

வெங்கி said...

உண்மைதான் மணி. என்னையே சுய பரிசோதனை செய்துகொள்கிறேன்.

Unknown said...

//முதல் சில நாட்களுக்கு ஆளாளுக்கு ஹோட்டல் பில்லை படம் எடுத்து ‘விலை ஏற்றப்பட்டுவிட்டது’ என்று கதறினார்கள். அதோடு சரி. சட்டப்பூர்வமாகவோ அல்லது அரசியல்ரீதியாகவோ அல்லது களத்திலோ சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டார்களா?//

//அனிதாவுக்கு முன்பிருந்து முத்துக்குமார், செங்கொடி, தர்மபுரி இளவரசன் என வரிசையாக யாரேனும் உயிரை இழந்து கொண்டேயிருக்கிறார்கள். எந்த நீதியை வழங்கியிருக்கிறோம்? அல்லது தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்?//

முதலில் தன்மையில் பேசுகிறீர்களா அல்லது முன்னிலை/படர்கை-யில் பேசுகிறீற்களா என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்.

ஏழை மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி எடுக்க வசதியில்லாத மாணவர்களுக்கு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் கேள்வி கேள்வி கேட்கும் நீட் வஞ்சகம் செய்கிறது எனவே நீட் வேண்டாம் எனும் தீர்வை முன்வைத்துதான் போராடுகிறார்கள். மாநில அரசு மத்திய அரசு சொல்வதை கேள்விகேட்காமல் அப்படியே செய்கிறது. தீர்வுக்காக வேறு எப்படி எத்தனிக்க வேண்டும் சொல்லுங்கள்?

//தமிழகத்தில் கடந்த எட்டாண்டுகளில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் (நுழைவுத் தேர்வு இல்லாமல்) நிரப்பப்பட்ட 28225 இடங்களில் வெறும் 278 இடங்களில் மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். மீதமுள்ள அத்தனை இடங்களும் தனியார் பள்ளி மாணவர்களால் நிரப்பட்டவை.//
திரும்பத் திரும்ப கடந்த எட்டாண்டுகளில் 278 அரசுப்பள்ளி மாணவர்கள் தான் சேர்ந்துருக்கிறார்கள் என்கிறீர்கள். 2006ல் இருத்தே நுழைவுத்தேர்வு இல்லை, அப்படியென்றால் கடந்த பத்தாண்டுகளைப் பற்றியல்லவா பேச வேண்டும் ஏன் குறிப்பாக 2 ஆண்டுகளைத் தவிர்கிறீர்கள்.

ஏன் அரசுப்பள்ளி மாணவர்களைப் பற்றி மட்டும் பேசுகிறீர்கள். அரசு உதவு பெறும் தமிழ்வழி பயிற்றுவுக்கும் மிகக் குறைந்த ஆண்டுக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவத்தில் சேர்ந்தார்கள் என ஏன் பேச மறுக்கிறீர்கள். தரவுகள் இல்லை எனில் அதைப்பெற எத்தனித்தீர்களா? தங்களுக்குத்தான் பள்ளிக் கல்வி செயலர் வரை தெரியுமே?

//கடந்த ஆண்டு வரையிலும் மேனேஜ்மெண்ட், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்களில் சேர்வதற்கு பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சியடைந்திருந்தால் போதுமானதாக இருந்தது. பணக்கார மாணவர்களிடம் பல லட்ச ரூபாய்களுக்கு விற்கப்பட்ட இந்தக் கோட்டாக்களில் சேர்வதற்கும் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்க வேண்டும்//
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், பணக்கார மாணவர்கள் தான் உங்களுக்குப் பிரச்சனை எனில், நீட் கொண்டு வருவதற்கு காரணமெனில் அவர்களுக்கு மட்டும் தகுதித் தேர்வு வைக்க வேண்டியது தானே. ஏன் ஏழை மாணவர்களின் கனவோடு உயிரோடு விளையாடுகிறீர்கள்?

//நீட் தேர்வு அரசுப்பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்று பேசுகிறவர்கள் கடந்த எட்டாண்டுகளில் 278 மட்டும் மாணவர்கள் மட்டுமே சேர்ந்தது ஏன் என்ற கேள்விக்கான பதிலைத் தேட வேண்டியதும், நீட் தேர்வு அவசியம் என்று பேசுகிறவர்கள் பல்லாயிரக்கணக்கான ரூபாயைச் செலவு செய்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளில் கிராமப்புற மாணவர்களால் சேர முடியுமா, இந்த ஆண்டு பாதிக்கப்படும் மாணவர்களுக்கான மாற்று வழிகள் என்ன என்பதற்கான பதில்களைத் தேடுவதும் முக்கியமாகிறது. //
நுழைவுத்தேர்வு இருந்த போது 278 அரசுப்பள்ளி மாணவர்கள் கூட மருத்துவதுதில் சேர்ந்திருக்க மாட்டாருகள் என்பதே என் வாதம். இல்லை என்கிறீர்களா? தரவுக்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆர்டிஐயை விட்டால் எனக்கு வேறு வழியில்லை. ஆனால் தங்களுக்கு அப்படியா? தாங்கள் அதற்காக முயற்சித்ததுண்டா? பாதி உண்மையை மட்டும் பேசிக்கொண்டிருக்காதீர்கள்.

நீட் விசயத்தில் நீங்கள் பாதி உண்மையை மட்டும் வைத்துக்கொண்டு வாதாடுகிறீர்கள். அது பாதி உண்மை தான் என உங்களுக்கும் தெரியும். இருந்தும் அது உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மீதி உண்மையை கண்டறிய எத்தனிக்க மறுக்கிறீர்கள்

செ. அன்புச்செல்வன் said...

ஜிமிக்கி கம்மல் பாடலை இவ்வளவு பிரபலாமாகாததற்கு இரண்டொருநாளுக்கு முன்னமே ஏதேச்சையாகக் காண நேரிட்டது. பாடல்வரிகள் புரியாவிட்டாலும் இசைக்கோர்வை அழகாக இருந்தது. ஆயினும் அந்தப்பாடல்கள் குழுவாகப் பெண்கள் நடனத்தைக்கண்டபோது பொத்தாம்பொதுவாக, அதுவும் கல்லூரி மேடைகளில் கூட்டத்தோடு கூட்டமாக இரண்டுமூன்று முறைகள் முன்பயிற்சி செய்துவிட்டு ஆடுவதைப்போலத்தான் எனக்கு இருந்தது. ஆனால் அந்த ஆடல் நிகழ்வை ஏதோ உலகில் காணற்கரிய நிகழ்வுபோலவும், அங்கே ஆடுகின்றப் பெண்களின் ஆடலசைவுகள் இதுவரை காணாதவை என்பதைப்போலவும் கட்டமைக்கப் படுவதைப்பார்க்கும்போது, என் உள்ளுணர்வு நீங்கள் சொல்வதைப்போன்று இது வேறு ஏதோ ஒன்றை நீர்க்கச்செய்யும் முயற்சி என்று சொல்லியது. இளவல்களின் அறச்சீற்றங்கள் ஜிமிக்கி கம்மலில் கரைந்துபோவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

Vaa.Manikandan said...

முருகன்,

ஏழை மாணவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். வித்யவிகாஸிலும் பாரதிய வித்யா பவனிலும் படிக்கிற ஏழை மாணவர்களைப் பற்றி மட்டுமே பேசுகிறீர்கள். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றபிறகு தனியார் பள்ளிகளில் சேர்ந்தவர்களைக் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். சந்தோஷம். ஆனால் அரசு மேநிலைப்பள்ளிகளில் படித்த மாணவர்களைப் பற்றி ஏன் யாருமே பேசவில்லை என்று நான் கேட்கிறேன். அரசுப் பள்ளிகள் அத்தனையையும் மூடிவிடலாமா? பத்தாம் வகுப்பு வரைக்கும் அரசுப்பள்ளிகளில் படிக்கட்டும். அதன் பிறகு அத்தனை பேரும் தனியார் பள்ளிகளுக்குச் செல்லட்டும் என்று சொல்லிவிடலாமா?

நீட் தேர்வை நான் இதே வடிவத்தில் ஏற்கவில்லை. அது அநீதியானது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து ஏதுமில்லை. ஆனால் ஒரு தகுதியான நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும். அது மாநில அளவிலான தேர்வாகவாவது இருக்கலாம் என்பது என் நிலைப்பாடு. எப்படியிருப்பினும் நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எப்படியும் அவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதில்லைதானே! இதைப் பற்றி நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். தொடர்ந்தும் எழுதுவேன். அப்பொழுது விவாதிக்கலாம்.

மற்றபடி, கட்டுரையை நீட் தேர்வுடன் மட்டும் முடிச்சுப் போட வேண்டியதில்லை என் நினைக்கிறேன். இது பொதுவாக நம்முடைய மனநிலை பற்றியது. பத்து நாட்களுக்கு மட்டும் ஒன்றை உணர்ச்சிகரமாக விவாதித்துவிட்டு தீர்வு எதுவுமேயில்லாமல் நகர்ந்துவிடுகிற நம்முடைய தன்மை குறித்தானது.

ஹோட்டல் பில்லை நான் பதிவிடவில்லை. அதனால் அந்த வரியை அப்படி எழுதினேன். சமூக நீதி சார்ந்த ஒவ்வொரு சாவிலும் நம் அத்தனை பேருக்கும் பங்கிருக்கிறது. அதனால் அந்த வரி பொதுவாக எல்லோரையும் சுட்டுவது. உள்ளர்த்தத்தங்கள் இருக்கின்றன. அதைப் புரிந்து கொண்டும் கடக்கலாம். புரியாமலும் கேட்கலாம்.

நன்றி.

அன்பே சிவம் said...

எதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்தோமா!. குடும்பம் நடத்தினோமா?. சொத்து சேர்த்தோமா,?
என்று இல்லாமல்...

ஊரை பற்றி கவலைப்படும்.,
அப்பாடக்கர்களுக்கு
இனியாவது
நல்ல புத்தி!? கொடு கருப்பராயா!

சேக்காளி said...

மிக அருமையான பதிவு மணி.
எனது எண்ணமும் இதுதான்.எனவே இந்த கட்டுரையை பொறுத்தவரை "முன்னிலை" யில் பேசியிருக்கிறீர்கள் என சொல்லலாம்.கடந்த 2016ம் வருடம் முதல் நீட் தேர்வு,மருத்துவ சேர்க்கை பற்றிய கட்டுரைகள் நிசப்தத்தில் இருக்கின்றன.
தீ ஏன் பிடித்தது?.அது பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?. ஒருவேளை மறுபடியும் பிடித்தால் சேதாரத்தை குறைக்க என்ன செய்யலாம் என ஏன் யோசிக்க வேண்டும்?.நானும் தீயை அணைக்க ஒத்துழைத்தேன் என்பதற்கு சாட்சியாக "யாராவது 101 என்ற எண்ணுக்கு போன் பண்ணுங்க" என்று சொன்னால் மட்டும் போதும். 101 என்ற எண்ணுக்கு நாம் போன் பண்ணினால் விவரங்களை நாம் தான் சொல்ல வேண்டும். அதற்கு நேரமேது?.தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் மகாதொடர் முடிந்து விட்டால் அதில், எவள் அல்லது எவன் யாரின் துணையோடு ஓடினார்கள் என்ற அரிய தகவல் தெரியாமல் போய் விடும்.
1.ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்த 10 நாட்களில் அவர் இறந்து விட்டார் என அப்போதே தமிழச்சி என்பவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதனால் தமிழச்சிக்கு தமிழ்நாட்டிற்குள் வரவே தடை விதிக்கப்பட்டது. தமிழச்சி சொன்னது போலவே ஜெயலலிதாவை உயிரோடு பார்க்க முடியவில்லை.அதைப் பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும்?.
ஆகையால் கனம் சிட்டுக்குருவி மூளைக்காரரே , நம் அன்பே பார்வதி புருசன் சொன்னது போல மகியை மருத்துவர் ஆக்கும் முயற்சியை தொடங்கவும்.

Anonymous said...

யார் மீதும் குறையில்லை. But everything is happening in the wrong way. Where is the problem then? Unless the society does not change the way it operates, what you are doing to rectify things is like a drop in the ocean. We may need 1000s of you. Is it practical? Never. This society has to learn from its mistakes. I wish you could do something for that. Whatever you do is not addressing the root cause at all. I hope you realize that. Its just a self satisfaction and it will bring changes only when we have a person like you in every village of India.

சேக்காளி said...


Blogger Muru gan அவர்களுக்கு,
"மேயுற மாட்டை நக்குற மாடு கெடுத்த கதை" யாய் நினைக்காமல் எனக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க உதவவும்.
நீங்கள் பல மேற்கோள்களை மணியின் பழைய பதிவுகளிலிருந்து வெளியிட்டுள்ளீர்கள். அவற்றை அந்தந்த பதிவுகளுக்கு பின்னூட்டமாக இட்டிருந்தால் வாசிப்பவர்களுக்கும் அதன் வீரியம் எளிதாக புரிந்திருக்கும்.
ஆனால் நீங்கள் இந்த பதிவில் அவற்றை குறிப்பிட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது,மணி சொல்லியிருப்பது போல் எதையும் உணர்ச்சி பெருக்கில் சொல்லி விட்டு அடுத்த வேலையை நோக்கி நகர்பவன் அல்ல என்பதற்கான குறியீடாக இருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.
அடுத்து நீங்கள் சட்டப்பூர்வமாக , அரசியல்ரீதியாக அல்லது களத்தில் எடுத்துப்போட்டுள்ள சிறு துரும்புகளை பற்றி தெரிந்து கொள்ள உங்கள் GOOGLE+ ற்கு வந்தேன். கட்டுரைகள் ஒன்றையும் படிக்கமுடியவில்லை. வேறு ஏதாவது இணைய தள, பேஸ்புக் முகவரி இருந்தால் தெரியப்படுத்துங்கள்.படித்து விட்டு மணியை கட்டி வைத்து அடித்து நானும் ரவுடி தான் என நிரூபிக்க வாய்ப்பாக அமையும்.
நன்றி.

Anonymous said...

கருத்துச் சொல்லிவிட்டு தூசி தட்டுவது போல தட்டிவிட்டு நகர்ந்து கொண்டேயிருப்பது எந்தவிதத்திலும் நல்லதுமில்லை பலனளிப்பதுமில்லை. பரஸ்பர புரிதலுக்கும் விவாதத்திற்குமான சூழல்தான் இன்றைய தேவை. ஆனால் தேவையிலிருந்து வெகு தூரமாக விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பதுதான் நிதர்சனம்.
100 PER CENT TRUE .ALL OF US ARE ONLY SHOUTING EMOTIONALLY,உணர்ச்சிVASAPATTU PESUGIROM. WHRE IS THE ACTION.
தீர்வுகளுக்கான என்ன எத்தனிப்புகளைச் செய்திருக்கிறோம்? THAT IS WHAT IS WANTED. BHARATHIYAR SONNATHU POL

வாய்ச் சொல்லில் வீர ரடீ. FACE BOOK வீர ர MARI VITTOM.
LET US MARCH TOWARDS ACTION. NO POLITICIAN WILL HELP SINCE THEY ONLY CREATED THESE PROBLEMS.நெஞ்சில் உரமு மின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ!- POLITICIANS WILL GIVE ONLY SUGGESTIONS THAT WILL BENEFIT THEM.
சிறு துரும்பை எடுத்துப் PODUVOM.
FIRST LET US TAKE 'NEET'
IDEAL/PERMANENT SOLUTION WILL BE BRINGING 'EDUCATION' TO STATE LIST. THIS WILL REQUIRE A CONSTITUTIONAL AMENDMENT.
BJP/ CONGRESS WILL NOT AGREE.LOCAL CONGRESS IS DIFFERENT. IT WAS INDRA GANDHI IN 1974 WHO BROUGHT 'EDUCATION' TO CONCURRENT LIST.
FIGHT IN THE SUPREME COURT FOR EXEMPTION. THIS IS POSSIBLE SINCE SUPREME COURT ONLY RULED AGAINST 'NEET' INITIALLY RULING.NEET WAS ILLEGAL AND UNCONSTITUTIONAL .
OUR LAWYERS AND STUDENTS CAN RETRY THIS . WE HAVE TIME TILL JAN 2018.
WE CAN HAVE A RURAL QUOTA.
SO LONG THIS IS UNIFORM FOR ALL BOARDS NO COURT WILL INTERFERE.
LIKE 'CBSC' WE CAN DO AWAY WITH LANGUAGE PAPER. THIS WILL HELP STUDENTS TO CONCENTRATE ON BIOLOGY,PHYSICS AND CHEMISTRY.
ALL THE STEPS CAN BE TAKEN TOGETHER.
MAY CONSUME TIME ALSO.
MEAN WHILE WE HAVE TO PREPARE OUR CHILDREN TO FACE NEET.
THIS YEAR 'NEET' TOPPER IS FROM STATE BOARD AND A ENGG. DROPOUT.
'NEET' IS ONLY A TECHNIQUE. 180 QUESTIONS IN180 MTS, ONE MINUTE FOR EACH QUESTION.
AMPLE TIME IN MULTIPLE CHIOCE WITH 4 ANSWERS. RIGHT ANSWERS WILL NOT TAKE MORE THAN 15/20 SECS. TIME SAVED 45/40 SECS CAN BE USED FOR DIFFICULT QUESTIONS.
THEN THERE IS 'NEGATIVE' MARKS FOR WRONG ANSWERS WHICH IS NOT THERE IN TANILNADU EXAMS.
SO NO GUESSING/GAMBLING. IT WILL BE HIGHLY TEMPTING. THIS YEAR MANY STUDENTS HAVE LOST RANKS BECAUSE OF NEGATIVE MARKS. TEACHERS MUST TEACH 11 TH PORTION ALSO SINCE NEARLY 50/60 % QUESTIONS COME FROM 11TH PORTION. THIS YEAR 23 QUESTIONS OUT OF 45 IN PHYSICS WAS FROM 11TH.
TEACHERS PARENTS/STUDENTS MUST CHANGE "NOT POSSIBLE" ATTITUDE." TILL WE WIN IN OTHER AREAS.
"MUANDRAL MUDIYATHATHU ILLAI.
LET US CONVERT 'NEET' IN TO A BLESSING.

சொந்தச் சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்,
சிந்தை இரங்கா THORUDU FIGHT PANNI KONDU IRRUKIROM.
FARMERS, KAVERY. WITHDRAWAL OF SUSIDIES, BANK LOANS RECOVERY FROM POOR .LIKE THIS SO MANY ISSUES ARE THERE. NO EMOTIONAL CRYING.
AS 'NISAPTHAM ' SAYS LET US FIGHT LEGALLY/LOGICALLY.விவாதி POM. AAKKA POORVAMAI SEYAL PADUVOM
ANBUDAN,
M.NAGESWARAN.


1

Asok said...

Now, we are getting addicted to the machine, whatever coming from social medias. Government and People do not believe each other, they believe social medias, it provides the news how we want/like. The same news is publishedin many dimensions, we will take it the way we want/like. Here our emotional is the key, which dimension of the news creates more happy or anger, our reactions are depending on that. Previously, the news is one way and only one dimension, we can hear from Radio/TV, we cannot record our view anywhere. Now, it is bidirectional, we can add our view in social medias and there is an option someone can acknowledge our view. After sometime, if we realize that we may be wrong. But we cannot go back and put in Social medias because someone point out our previous reviews.
Back to NEET, it is just an Exam, if we provide enough training classes or courses, Government school students would get more scores. Now, the problem is the student who passed out this year. They can wait for a year and they can choose other courses and helping next year students. They believe that if they cannot get the medical seat now, they never get it and they are the loser. There is many ways to achieve our goal. Now, we need to change the society, that should start from each one of us.
Mani, we can try to provide more NEET Exam training courses and more awareness about the changes for next year Government school students, you will see the big difference.

Vinoth Subramanian said...

உண்மை மணி சார்.

Unknown said...

///அரசுப்பள்ளி மாணவர்கள் தான் கேடயமா
கடந்த எட்டு வருடங்களாக சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். அடுத்த சில வருடங்களுக்கு அந்த எண்ணிக்கை பத்து அல்லது இருபது என்கிற அளவுக்கு குறைந்தாலும் கூட ஒன்றும் குடி மூழ்கிப் போய்விடாது.///

நீட்டால் இந்த வருடம் 34 என்கிற சராசரியிலிருந்து பத்து அல்லது இருபது அல்ல 5 ஆகக்குறைந்துள்ளது.
2006க்கு முன் தமிழக அரசு நுழைவுத்தேர்வு இருந்த போதும் சராசரி 34 என்பதை வடக் குறைவாகத்தான் இருந்திருக்கும். நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேரமுடியாத ஏழைகளைப்பற்றி நமக்கென்ன கவலை நம்மிடம் சிறப்புப் பயிற்சி பெற பணமிருக்கிறது

//‘நீட்’ மாதிரியான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதும் மருத்துவப் படிப்புக்குச் சேரவிருக்கும் மாணவர்களை கடுமையாக வடிகட்டுவது அவசியம் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.//
அரசு எத்தனை நுழைவுத் தேர்வு வேண்டுமானலும் வைக்கட்டும்; அதற்கு முன் அனைவருக்கும் ஒரே மாதிரி கல்வி, பயிற்சி கொடுக்க வேண்டாமா? அதைக்கொடுக்கமாட்டோம். அது கிடைக்காத ஏழை மாணவன் மனப்பாடமாவது செய்து உயர்கல்வி பெற முயன்றுகொண்டிருந்தான் அதற்கும் நீட் வந்து (நாம் அதை ஆதரித்து) அவன் கனவையும் கருவறுத்தவிட்டோம்(இனிமே நீ மருத்துவக்கனவே காணக்கூடாதுடானா அதுக்கு இதுதான அர்த்தம்).


தமிழ்நாட்டுக்கு அரசாங்க கோட்டால MBBS சீட் எத்தன இருக்கு?
2172 சீட்
தமிழ்நாட்டிலிருந்து நீட் எழுதினவங்க எத்தன பேரு?
88,431 பேர்
அதுல சிபிஎஸி பாடத்திட்டத்தில் படிச்சவங்க எத்தன பேரு?
4675 (5.2%) பேர்
தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் படிச்சவங்க எத்தன பேரு?
83756 (94.8%) பேர்

தமிழ்நாட்டு பாடத்திட்டத்தில் ஆங்கில வழியில் படிச்சவங்க எத்தன பேரு?
68550 (22%) பேர்
தமிழ்நாட்டு பாடத்திட்டத்திலேயே தமிழ்ல படிச்சவங்க எத்தன பேரு?
15,206 (18%)பேர்
நீட் தேர்வு எந்த பாடத்திட்டத்தில வைக்கிறான்?
சிபிஎஸி பாடத்திட்டத்துல
அப்ப சிபிஎஸில படிச்சவனே 2172 சீட்டயும் எடுத்துட்டுப் போயிற மாட்டானா?

//2) கடந்த வருடம் வரை மொத்தமுள்ள மருத்துவப்படிப்புக்கான இடங்களில் 85% தமிழக மாணவர்களுக்கானது. பதினைந்து சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. (All India Quota- AIQ). நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகும் 85%-15% என்கிற விகிதாச்சாரத்தில் மாற்றம் எதுவும் இருக்காது. எண்பத்தைந்து சதவீத இடங்களில் சேர்வதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.//

அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் மட்டும் போதாது அந்த மதிப்பெண் படி மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

//‘சி.பி.எஸ்.ஈதான் பெரிய படிப்பா’ ‘ஸ்டேட் போர்டு வேஸ்ட்’ என்றெல்லாம் பெருமொத்தமாக சண்டையிடுவதையும் விட கைவசமிருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பேசுவதுதான் சரியானதாக இருக்கும். அதேசமயம் ஒரேயொரு ஆண்டின் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொள்வதைவிடவும் கடந்த சில ஆண்டுகளின் சராசரியான புள்ளிவிவரம்தான் சரியான விடையைக் கொடுக்கும்.//
அப்படி என்ன புள்ளி விவரம் வச்சிருக்கீங்க. பகிர்ந்து கொள்ளுக்கள் தெரிஞ்சுக்குவோம். 'சராசரியாக வருடத்திற்கு 34 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே' தனியார் பள்ளி மாணவர்கள் மொழிப்பாடங்களைப் படிப்பதில்லை என்பதைத்தவிர.

Unknown said...

கிராமப்புறத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பில் 50% கோட்டா. இதில் என்ன பிரச்சனை உங்களுக்கு? we lost that too because of NEET
Tamil Nadu Professional Courses Entrance Exam was scrapped in 2006 and replaced by solely based on +2 board marks. Though Tamil Nadu state board biology syllabus of 12th standard is about 70% different from that of the CBSE, Tamil Nadu stays ahead in primary health among indian states.The city of Chennai has been termed India's health capital.

Infant Mortality Rate (IMR) (per 1000 live births) deals with everything from prenatal to postnatal care. India (average) - 40 [data as per indian GOVT as of 2013] lowest rate Kerala - 12, second lowest rate Tamil Nadu - 21, Delhi-24, Maharashtra-24, Punjab-26, Karnataka-31, West Bengal-31, Himachal Pradesh-35, Gujarat-36, Jammu & Kashmir-37, Jharkhand-37, United Andhra-39 ...

24-05-2014
ஜெயலலிதா மோடிக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
=======================================================

இந்த நடவடிக்கை சமநிலையை ஏற்றடுத்தும் நோக்கோடு முக்கியமாக கிராமப்புறங்களைவும் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களையும்
மாணவரின் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது. தமிழக அரசின் நியாயமான மற்றும் வெளிப்படையான தற்போது நடைமுறையில் சிறப்பாக செயல்படுகின்ற மாணவர் சேர்க்கை கொள்கைக்குட்பட்ட
தமிழக மாணவர்களுக்கு பேரநீதியைதும் மாநில அரசின் உரிமையை நேரடியாக பாதிக்கும் விதத்திலும் இந்து நீட் தேர்வு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

நகர்ப்பறங்களில் வாழும் மேற்தட்டடு மக்களுக்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வுகளில் நகர்ப்புறங்களில் வாழும் மேலடுக்கு மாணவர்களோடு கிராமப்புற மற்றும் சமூகப்பொருளாதாரத்தில் வறுமையடைந்த மாணவர்கள் போட்டியிட முடியாது என்பதை கருத்தில் கொண்டே எனது அரசு உறுதியான இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. நகர்ப்புறங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய நூல்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் சேர்வதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை இழந்த கிராமப்புற மாணவர்களுக்கு இந்த நீட் பாதகமாக அமையும். பொது நுளைவுத்தேர்வை ரத்து செய்யும் தமிழக அரசின் முடிவினால் மிகப்பெரிய எண்ணிக்கையில் தகுதியுள்ள மற்றும் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு நீட் தேர்வை எதிர்க்கிறது.

சேக்காளி, இத்தளத்திலுள்ள நீட் குறித்த பிற பதிவுகளில் என்றுடைய கமெண்ட் உள்ளது.

அன்பே சிவம் said...

சேக்காளி உ'மக்கு' கொஞ்சமாவது
---
இருக்கா அறிவார்ந்த அறிஞர்களிடம் எப்படி
'ப்' ஏசு வது என்று வீட்டில் (நீட்டில் அல்ல) சொல்லி தர வில்லையா.

முக்கிய மாண Pinகுறிப்பு
'யோவ்' என ஆரம்பிக்க

சேக்காளி said...

இந்த லிங்க் ஐ பார்த்து விட்டு அடிக்க வரவும்
https://www.facebook.com/dravidavaasippu/videos/316985575439577/