Sep 12, 2017

ஆகஸ்ட் 2017

ஆகஸ்ட் மாதத்திற்கான நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு விவரம் இது.

வழக்கமாக ஏழு அல்லது எட்டாம் தேதிகளில் வங்கியிலிருந்து மின்னஞ்சல் வரும். இந்த மாதம் நான்கு நாட்கள் தாமதமாக வந்திருக்கிறது.

மாத இறுதியில் முப்பத்தியிரண்டு லட்சத்து பத்தாயிரத்து எந்நூற்று நாற்பத்தைந்து ரூபாய் கணக்கில் இருக்கிறது.

நன்கொடைகள் விவரம்: 

ஆகஸ்ட் 02- எம்.ஜி.ஆர் காலனியைச் சார்ந்த மாணவன் தமிழரசுவின் கல்லூரிக் கட்டணம்.

ஆகஸ்ட் 18- துர்கா விளையாட்டுக் கல்வி பயில்கிறார் (Physical Education). கோகோ வீராங்கனை. விளையாட்டு ஆசிரியை ஆகிவிட வேண்டும் என்கிற ஆர்வத்தில் படிக்கிற பெண். தனியார் கல்வி நிறுவனம்தான். பெரும்பாலும் தனியார் கல்வி நிறுவன மாணவர்களுக்கு உதவுவதில்லை. அவளது குடும்பச் சூழல், கூலி வேலை செய்யும் பெற்றோர், அவர்களது தலித் காலனியிலிருந்து மேற்படிப்புக்குச் செல்லும் முதல் பெண் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் உதவப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 18- வனிதா பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு கல்வியியல் பட்டப்படிக்கும் மாணவி. பெற்றோர் இல்லை. அக்காவும் தம்பியும் ஞாயிற்றுக்கிழமைகளில் கறிக்கடை நடத்தி தமக்கான வருமானத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். வனிதாவின் கடந்த இரண்டாண்டு கல்விச் செலவும் அறக்கட்டளையிலிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் 19 - ராஜேந்திரன் பி.எஸ்.சியில் பல்கலைக்கழக ரேங்க் வாங்கிய மாணவன். இப்பொழுது திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி வேதியியல் படித்துக் கொண்டிருக்கிறார். அவரது முழு கல்விச்செலவையும் நிசப்தம் ஏற்றிருக்கிறது. 

ஆகஸ்ட் 21- திவ்யாவும் அவளது அண்ணனும் சதுரங்க விளையாட்டில் சூரப்புலிகள். அண்ணனைக் காட்டிலும் திவ்யா கில்லாடி. அப்பா தையல் தொழில் செய்கிறார். போட்டிகளுக்காக நிறைய வெளியூர் பயணங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அதை அவர்களால் சமாளிக்க முடிவதில்லை. அதனால் பள்ளியின் கணக்கில் பத்தாயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது. ஆண்டு முழுவதும் இவர்கள் இருவரும் கலந்து கொள்ளும் எல்லா போட்டிகளுக்குமான செலவும் அந்தப் பணத்திலிருந்து வழங்கப்படும். சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற மண்டல அளவிலான போட்டியில் திவ்யா முதல் பரிசு வாங்கியிருக்கிறாள். இன்னமும் இரண்டு போட்டிகள் நிறைவடையட்டும். அவளைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். 

ஆகஸ்ட் 21- சாஸ்கன் நிறுவனத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட கணினிகளையும் கேபிஎம்ஜி நிறுவனத்திலிருந்து எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் கொடுத்திருந்தார்கள். போக்குவரத்துச் செலவு நம்முடையது. அதனால் தனியாக ஒரு சரக்குந்து ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. அதற்கான வண்டி வாடகை எட்டாயிரம் ரூபாய். 

சந்தேகங்களுக்கும் மேலதிக விவரங்களுக்கும்..
vaamanikandan@gmail.com

2 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

இங்க ஒருத்த-ம் வந்து பேசக் காணோம்.

அந்த தெனாவட்ல தான துள்ரீரு. ம்ம்

அந்த தெனாவட்டு ஸெம்மையா. keep it

Anonymous said...

Aug'16 -25 L
----------
Feb'17 -28 L
Apr'17 -30 L
Aug'17 -32 L

I know that you have taken a stand that it is not required to spend 70-80% of the amount but only to the right recipients. But the residual amount keeps growing each month -for the fund to be locked down in fixed deposits and paying tax. Why not ask the donors to divert it to other causes until the trust is able to spend at least half of it or to a set threshold of 15 Lakhs?