தமிழகத்தில் அரசு உதவி பெறும் பத்து பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். காரணத்தைக் கடைசியில் சொல்கிறேன்.
இங்கிலாந்தில் கோல்செஸ்டர் என்றொரு ஊர். இலண்டனிலிருந்து நாற்பது நிமிடப் பயணம். அங்கே இருக்கும் தமிழ்க் குடும்பத்துப் பெண்கள் ஒரு பணியைச் செய்கிறார்கள். புது மனைப்புகுவிழா, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், தீபாவளி பொங்கல் மாதிரியான பண்டிகைகளுக்கு பலகாரம் செய்து விற்பனை செய்கிறார்கள். நாற்பது ஐம்பது பேர்கள் வரைக்கும் கலந்து கொள்கிற நிகழ்வுகளுக்கு சமையல் கூட செய்கிறார்கள். இதில் வருமானம் வருமல்லவா? வருகிற இலாபத்தை அப்படியே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். கிட்டத்தட்ட பத்து பேர் வரைக்கும் சேர்ந்து இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது அமைப்புக்கு ஜெகத் சேவா என்று பெயர்.
அந்தக் குழுவைச் சேர்ந்த தன்ராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இதற்கு முன்பாக சேலம் ஆதவ் அறக்கட்டளை, சென்னை அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு சர்க்கரை பரிசோதனை உபகரணம், காரைக்குடி அருகே ஒரு பள்ளிக்கு நீர் தொட்டி மற்றும் மின் விசிறிகள், ஈரோட்டுக்கு அருகில் ஒரு பள்ளிக்கு மின் விசிறி என்று கடந்த சில வருடங்களாக உதவியிருக்கிறார்கள். இந்த வருடமும் பணம் இருக்கிறது. பயனாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி விவகாரங்களில் என்னை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக நினைத்துக் கொள்கிறார்கள்.
நான்கு லட்ச ரூபாய். தொகையை எப்படி பயன்படுத்தலாம் என்று சில திட்டங்களை பதிலாக அனுப்பியிருந்தேன். குழுவிடம் பேசிவிட்டு‘எங்களுக்கு முழு சம்மதம்’என்றார். அத்தனை திட்டங்களையும் இப்பொழுதே சொல்ல வேண்டியதில்லை. பணியை ஆரம்பிக்கும் போது சொல்லிக் கொள்ளலாம்.
முதல் திட்டத்திற்கான வேலைகளை இப்பொழுது ஆரம்பித்துவிடலாம். இத்திட்டத்திற்கு ஒரு லட்ச ரூபாய். அதற்குத்தான் பள்ளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். பள்ளிகளுக்கு உதவும் போது அரசு பள்ளிகளுக்கு உதவ வேண்டியதில்லை என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
முதற்காரணம்- அரசுப் பள்ளிகளுக்கு அரசாங்கமே நிதி ஒதுக்கீடு செய்கிறது. தலைமையாசிரியர் சரியானவராக இருக்கும் பட்சத்தில் நிதியை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பல பள்ளிகளில் அத்தியாவசியமான தேவைகளை விட்டுவிட்டு கண்ட செயல்பாட்டுக்கும் நிதியை ஒதுக்கிக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
இரண்டாவது காரணம்- அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் சரியானவராக இருந்து நாம் அவர்களுக்கு உதவினாலும் கூட இரண்டொரு வருடத்தில் பதவி உயர்வு, இடமாற்றம் என்ற காரணங்களைச் சொல்லி வேறு பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் புதியதாக ஒருவர் வருவார். இப்படி வருகிறவர் நல்லவராக இருந்துவிட்டால் பரவாயில்லை. போனாம்போக்கியாக இருந்தால் நாம் செய்த அத்தனை உதவியும் வீண்.
அனுபவப்பூர்வமாக இதை நேரில் பார்த்திருக்கிறேன். முன்பொரு சமயம் புத்தக விற்பனையில் வந்த தொகையைக் கொண்டு சில பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைத்துக் கொடுத்திருந்தோம். இப்பொழுது விசாரித்துப் பார்த்தால் சில பள்ளிகளில் மட்டுமே புத்தகங்கள் இருக்கின்றன. வேறு சில பள்ளிகளில் புத்தகங்கள் என்ன ஆயிற்று என்று கூடத் தெரியவில்லை. ஆசிரியர் மாறி புதியவர் வரும்போது அவர் இதையெல்லாம் கண்டுகொள்வதேயில்லை. அப்பொழுது எனக்கும் அனுபவமில்லை. செய்துவிட்டோம். இப்பொழுதும் அதே பிழையைச் செய்ய வேண்டியதில்லை.
அதே இரண்டு காரணங்களுக்காகத்தான் அரசு உதவி பெறும் (Aided) பள்ளிகளுக்கு உதவலாம். பெரும்பாலான உதவி பெறும் பள்ளிகள் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கப்பட்டவை. அந்தக் காலத்தில் மேலாண்மை நிர்வாகம் வலுவானதாக இருந்திருக்கும். அனுமதி பெற்று பள்ளியைத் தொடங்கியிருப்பார்கள். சமீபகாலமாக பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் நிதி நெருக்கடி, பொருளாதாரச் சிக்கல்கள் போன்றவற்றால் திணறிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் மூடப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்தால் நிச்சயமாக அதிர்ச்சியை உண்டாக்கக் கூடும். உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் சம்பளம் மட்டும் அரசாங்கம் கொடுத்துவிடுகிறது. மற்ற வசதிகளையும் செலவுகளையும் பள்ளிகளே பார்த்துக் கொள்ள வேண்டும். நிர்வாகம் திணறும் போது அப்படிப் பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் எவ்வளவுதான் சிறப்பானவர்களாக இருந்தாலும் அவர்களால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.
கோல்செஸ்டர்காரர்கள் முதற்கட்டமாக வழங்கும் ஒரு லட்சத்தை வைத்து பத்து பள்ளிகளுக்கு உதவலாம்.
ஐந்து பள்ளிகளில் சிறு நூலகம் அமைத்துத் தரலாம். ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் பத்தாயிரம் என்றால் ஐம்பதாயிரம் ரூபாய். இன்னுமொரு ஐந்து பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாமான்கள் வாங்கித் தரலாம். புத்தகங்களைப் போலவே ஒவ்வொரு பள்ளிக்கும் ரூபாய் பத்தாயிரத்துக்கான விளையாட்டுச் சாமான்கள். ஆக மொத்தம் ஒரு லட்ச ரூபாய்.
சிறப்பாகச் செயல்படுகிற தலைமையாசிரியர்களைக் கொண்ட அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளிகள் அல்லது நடுநிலைப்பள்ளிகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள். ஏற்கனவே சிறு நூலகத்தை அமைத்து பராமரித்து வருகிற பள்ளிகளுக்கு கூடுதலாக புத்தகங்களை வழங்கலாம். விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பள்ளியாக இருப்பின் அவர்கள் கேட்கின்ற விளையாட்டுச் சாதனங்களை வாங்கிக் கொடுத்துவிடலாம். தமிழகத்தின் எந்த மாவட்டமாக இருப்பினும் சரி- கிராமப்புறத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கலாம்.
பரிந்துரை செய்கிறவர்தான் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட வேண்டும். ‘இந்த ஸ்கூல் பத்தி வாட்ஸப்பில் வந்துச்சு’ என்கிற ரீதியில் பரிந்துரை செய்வதுவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்பதாக இருப்பின் தயவு செய்து தலையை நீட்ட வேண்டாம்.
பள்ளிகளின் கோரிக்கைகள், பரிந்துரைகள் பெறப்பட்டு மேற்சொன்ன நோக்கங்களை மனதில் வைத்துக் கொண்டு விசாரித்து இறுதியாக பத்துப் பள்ளிகளின் பட்டியலை முடிவு செய்து கொள்வோம். அதன் பிறகு புத்தகங்களின் பட்டியல் விளையாட்டுச் சாமான்களின் பட்டியல் என நிறைய வேலைகள் இருக்கின்றன. பள்ளிகளின் பட்டியல் தயாராகும் வரைக்கும் புத்தகம்/ விளையாட்டுச் சாதனங்களின் பட்டியல்களை யாராவது தயாரிக்க முடியுமென்றால் அவர்களுக்கு ரத்தினக் கம்பளமே விரிக்கலாம். இணைந்து செயல்படுவோம்.
nisapthamtrust@gmail.com

6 எதிர் சப்தங்கள்:
√
Are you so naive Mr Mani?99% of the aided schools'management are absolutely corrupt and they are also mercenaries.They receive a bribe of Rs.10 lakhs for secondary school teachers appointment,a sum of Rs 15 lakhs for high school teachers appointment and Rs 20 lakhs for appointment to the post p g assistants.The amount is slightly lesser for non teaching posts.
Further they receive enormous money for giving promotions.If any one dares to question,the rebel would be kicked out out of the job to fight legal proceedings eternally.To control them Govt enacted Tamil Nadu Private Schools Regulation Act,but it provisions are gleefully violated by them with their money and muscle power.They also receive donations from the students.All the ill gotten money will go to the personal coffers of the management and they never bother about the interests of the students or the school.Please think twice before funding them as it will amount to financing the thieves to improve their efficiency.
நானறிந்தவரை ட்ரஸ்டுகள் மூலமாக இயங்கும் வலுவான நிர்வாகக்குழு கொண்ட நிதி உதவி பெறும்ப ள்ளிகளைத் தவிர மற்ற பெரும்பாலான பள்ளிகளின் செயல் பாடுகள் அரசு பள்ளிகளின் செயல் பாடுகளை மோசமானவை.உதவி பெறும்பள்ளிகளில் பணிக்கு வந்தவர்கள் அனைவருமே பணம் கொடுத்து அந்தவர்களே. தரமான ஆசிரியர்களைக் காண்பதே அரிதாகத் தான் உள்ளது. உபரி ஆசிரியர்கள் ஏராளமாக உள்ள நிலையில் பள்ளிகளை வேண்டா வெறுப்பாகவே நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். நிரந்தர ஆங்கீகாரம் பெற்ற பள்ளிகள் கட்டிட உரிமம் பெற ம்யசிப்பதே இல்லை. மாணவர் நலன் மறறும் ஆசிரியர்களின் பணிப்பாதுகாப்பு கருதி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவதில்லை. ஏரளாமான உபரி ஆசிரியர்களுக்கு அரசாங்கம் சம்பளம் வீனாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. மேற்சொன்னவை தொடக்க நடுநிலைப் பள்ளிகளின் நிலையாகும். உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் நிலை சற்று மேம்பட்டதாக இருக்கக் கூடும்.
Inspirational and good deed by Glousester people.Thank you for bringing this to your site. Kudoos to you too.
அரசு பள்ளிகளைப்பற்றிய தங்கள் கருத்துக்களை அருட்கூர்ந்து மறு பரிசீலனை செய்யவும்.
அரசியலால் அல்லறும் ஆசிரியர்கள், மாணவர்கள். ஐ நா வின் கல்வி கலாச்சாரக் கழக கலைத்திட்டம் பாடதிட்டம் ஆகியவற்றில் மீண்டும் கருத்தைச் செலுத்தி, கல்வி வியாபாரத்தை தடுக்கலாம்
தயவு செய்து அரசு பள்ளிகளுக்கு உதவுங்கள்... நண்பரே...
அரசுஉதவிபெரும் பள்ளிகள் அனைத்தும் பணம் பறிப்பவை...
அந்த நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள் பதவியை விற்பனை செய்பவர்கள்...
பெரும் வணிகர்கள், மத சாதி தலைவர், அரசியல் கட்சி தலைவர்... தான் பள்ளி நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள்
Post a Comment