கவிதை எழுதுவதற்கான மனநிலையைத் தக்க வைப்பது சிரமமான காரியம். கண்டதையெல்லாம் எழுத ஆரம்பித்த பிறகும் கவிதையை கவிதையாகவே எழுதுவது லேசுப்பட்ட விஷயமில்லை. இப்பொழுதெல்லாம் கவிதையை கவிதையாகவே எழுதிக் கொண்டிருக்கிறவர்களைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது.
கவிதை என்ற வடிவில் எழுதுகிற அத்தனை பேரும் கவிதையை எழுதுவதில்லை. தமிழில் எழுத்துச் சூழலைப் பொறுத்தவரையில் எழுதுகிறவர்களுக்கு ஒரு ‘ப்ராண்ட்’ உருவாகிவிடுகிறது. பிறகு என்னதான் குப்பையை எழுதினாலும் அதைக் கவிதை என்றும் சிறுகதையென்றும் என்று ஒத்துக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கும். ‘இது கவிதையா?’ என்று அவர்களிடம் திரும்பக் கேட்கவும் முடியாது. பிறாண்டிவிடுவார்கள். பிடிக்கவில்லையென்றால் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம்.
கவிதை என்ற வடிவில் எழுதுகிற அத்தனை பேரும் கவிதையை எழுதுவதில்லை. தமிழில் எழுத்துச் சூழலைப் பொறுத்தவரையில் எழுதுகிறவர்களுக்கு ஒரு ‘ப்ராண்ட்’ உருவாகிவிடுகிறது. பிறகு என்னதான் குப்பையை எழுதினாலும் அதைக் கவிதை என்றும் சிறுகதையென்றும் என்று ஒத்துக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கும். ‘இது கவிதையா?’ என்று அவர்களிடம் திரும்பக் கேட்கவும் முடியாது. பிறாண்டிவிடுவார்கள். பிடிக்கவில்லையென்றால் அமைதியாக இருந்துவிடுவது உத்தமம்.
இப்பொழுதெல்லாம் கவிதைக்கான விமர்சனம் என்று ஏதாவது கண்ணில்படுகிறதா? அப்படியெல்லாம் எதுவும் எழுதப்படுவதேயில்லை. எழுதியவன் தமக்கு அறிமுகமானவனாக இருந்தால் சொறிந்துவிடுவார்கள். இல்லையென்றால் கிணற்றில் போட்ட கல் மாதிரி கிடக்கும். அவ்வளவுதான்.
கவிதை குறித்தான விரிவான உரையாடல், கவிதையைப் பரவலாகக் கொண்டு செல்வதற்கான எத்தனங்கள் என்றெல்லாம் எதுவும் இங்கு நடப்பதில்லை. சில 'ஆல் பர்ப்பஸ் அங்கிள்' கவிஞர்கள் இருக்கிறார்கள். கவிதை குறித்துப் பேசுகிறேன் பேர்வழி என்ற பெயரில் பெண் கவிஞர்களை மட்டும் தூக்கிக் கொண்டாடுவார்கள். கொண்டாடிவிட்டுப் போகட்டும். இவர்கள் சொன்னார்களே என்று சில கவிதைத் தொகுப்புகளை வாங்கி மூச்சுத் திண்றல் வந்ததுதான் மிச்சம்.
இதையெல்லாம் நாம் பேசினால் வெட்டி வம்புதான்.
நுட்பமாகக் கவனித்துப் பார்த்தால் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் கவிதை உருமாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஆனால் உருமாறுகிற நுட்பங்கள், எந்த இடத்தில் கவித்துவம் பிடிபடுகிறது, எங்கே தவறிப் போய் வெறும் சொற்கூட்டமாக நிற்கிறது என்பதையெல்லாம் சமீபமாக நாம் விரிவாகப் பேசுவதேயில்லை. அப்படிப் பேசாமலும் விவாதிக்காமலும் கவிதைகளுக்கான வாசகப்பரப்பை அதிகரிக்கவும் முடியாது; ஆழமாக்கவும் முடியாது.
இதைச் சொன்னால் ‘கவிதைக்கான வாசகப்பரப்பை அதிகரிக்க வேண்டியதில்லை; கூட்டம் சேர்த்து அதை நீர்த்துப் போகச் செய்யவும் வேண்டியதில்லை’ என்று கூட சொல்வார்கள். இப்படியே வறட்டுத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தால் ‘நூறு காப்பி கூட விக்கிறதில்லை’ என்றுதான் புலம்ப வேண்டியிருக்கும்.
இதைச் சொன்னால் ‘கவிதைக்கான வாசகப்பரப்பை அதிகரிக்க வேண்டியதில்லை; கூட்டம் சேர்த்து அதை நீர்த்துப் போகச் செய்யவும் வேண்டியதில்லை’ என்று கூட சொல்வார்கள். இப்படியே வறட்டுத்தனமாகப் பேசிக் கொண்டிருந்தால் ‘நூறு காப்பி கூட விக்கிறதில்லை’ என்றுதான் புலம்ப வேண்டியிருக்கும்.
கவிதைத் தொகுப்புகளைப் பொறுத்தவரைக்கும் விற்பனையைப் பொருட்படுத்த வேண்டியதில்லைதான். ஆனால் குறைந்தபட்ச உரையாடலையேனும் சாத்தியப்படுத்துவதற்கான சூழலே இங்கே இல்லை என்பதுதான் உண்மை. இங்கே கவிஞன்தான் வாசகன்; வாசகன்தான் கவிஞன் என்பார்கள். அதாவது ஒரு கவிஞனின் கவிதையை இன்னொரு கவிஞன்தான் வாசிக்க வேண்டும். வாசகன் என்றெல்லாம் வெளியிலிருந்து யாரும் வரமாட்டார்களாம். அப்படியும் பெரிய அளவு ஆறுதல் கொள்ள முடியாது. முக்கால்வாசிக் கவிஞர்கள் சக கவிஞர்களின் தொகுப்புகளை நுகர்ந்து கூட பார்ப்பதில்லை. நம்பிக்கையில்லையென்றால் பதிப்பாளர்களை விசாரித்துப் பார்க்கலாம். ஓசியில் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்கள். அதையும் வாசிக்க மாட்டார்கள். காசு கொடுத்தெல்லாம் புத்தகம் வாங்கி....ம்ஹூம். வாய்ப்பேயில்லை.
கவிதையின் சூழலைப் பற்றிப் பேசுவது கச்சடாவைப் பற்றி பேசுவது மாதிரி. நாற்றமெடுத்துக் கிடக்கிறது. கவிதையைப் பற்றிப் பேசுவது கச்சடாவுக்குள் முளைத்த தாமரை குறித்துப் பேசுவது மாதிரி. நல்ல கவிதைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நல்ல கவிதைகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. நாம்தான் அதிகக் கவனம் கொடுத்துக் கவனிப்பதில்லையோ எனத் தோன்றுகிறது.
சித்த மருத்துவர்களிடம் பேசும் போது ஒரு தத்துவத்தைச் சொல்வார்கள். தினம் இரண்டு; வாரம் இரண்டு; மாதம் இரண்டு; வருடம் இரண்டு என்று. இரண்டு என்பது எதைக் குறிக்கிறது என கூகிளிடம் விசாரித்துப் பார்க்கவும். கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் மட்டும் நானே பதிலைச் சொல்கிறேன். இந்த இரண்டு சமாச்சாரங்களுடன் கவிதையையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் மனச்சோர்வு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.
சித்த மருத்துவர்களிடம் பேசும் போது ஒரு தத்துவத்தைச் சொல்வார்கள். தினம் இரண்டு; வாரம் இரண்டு; மாதம் இரண்டு; வருடம் இரண்டு என்று. இரண்டு என்பது எதைக் குறிக்கிறது என கூகிளிடம் விசாரித்துப் பார்க்கவும். கண்டுபிடிக்கமுடியவில்லையென்றால் மட்டும் நானே பதிலைச் சொல்கிறேன். இந்த இரண்டு சமாச்சாரங்களுடன் கவிதையையும் சேர்த்துக் கொள்ளலாம். எப்பொழுதெல்லாம் மனச்சோர்வு வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஒரு கவிதையை வாசித்துப் பார்க்கலாம்.
முழுத் தொகுப்பையும் வாசிப்பதைவிடவும் ஏதாவதொரு தொகுப்பை அவ்வப்பொழுது எடுத்து ஒரு கவிதையை வாசித்துவிட்டு மூடி வைத்துவிட வேண்டும். கவிதை வாசிப்பதில் இந்த நுட்பம் நிச்சயம் பலனளிக்கும். ஒரு கவிதையை வாசிக்க ஆரம்பித்து அது பெரிய அளவில் ஈர்க்கவில்லையென்றால் அடுத்த கவிதைக்குச் சென்றுவிடலாம். அதுவும் பிடிக்கவில்லையென்றால் மற்றொரு கவிதை. இப்படி நமக்கு எந்தக் கவிதை பிடிக்கிறதோ அதை மட்டும் வாசித்துவிட்டு மூடி வைத்துவிடலாம். வேறொரு நாள் அதே தொகுப்பை வாசிக்கும் போது தொகுப்பில் முன்பு பிடிக்காத அதே கவிதைகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கக் கூடும். இதுதான் கவிதையின் பலமும் அதேசமயம் பலவீனமும். வாசிக்கிறவனின் மனநிலைக்கு ஏற்ப ஒரு கவிதை அவனுடன் நெருங்கும். இன்னொரு கவிதை அவனிலிருந்து விலகும்.
விலகியது வேறோரு நாள் நெருங்குவதும் நெருங்கியது பிறிதொரு நாள் விலகுவதும் கவிதை வாசிப்பில் இயல்பானது.
சொற்களோடு விளையாடுவது என்றால் அது கவிதைதான். மொழியின் வடிவத்தில் கவிதைதான் உச்சம் என்று முன்னவர்கள் சொல்லியதைத் தயங்காமல் ஏற்றுக் கொள்ளலாம். வழவழவென்று எழுதுவது வேறு. கத்தி வைத்து வெட்டுவது மாதிரி செதுக்குவது வேறு. சொற்களைப் பற்றி லா.ச.ரா சொல்வது கச்சிதமாகப் பொருந்தும்- ‘சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்திய பிரஷர் ஏற்படும்’. கவிதைகளில் இது சூட்சமம். நறுக்குத் தெறித்த மாதிரியான கவிதைகளில் அபாரமான சுவாரசியமுண்டு.
பாலைநிலவனின் கவிதையொன்று கண்ணில்பட்டது.
இல்லத்திற்கு துறவி வந்திருந்தார்
வாழ்வின் புதிர் பற்றிக் கேட்டேன்
பவ்யமான நகைப்போடு
நாயின் மண்டையோட்டை
அறையில் வைத்துவிட்டுப் போய்விட்டார்
அதை சாம்பல் கிண்ணமாக்கியபின் சொல்கிறேன்
வாழ்வு நாயின் மண்டையோடாக இருக்கிறது
நிரப்புவதுதான்
வேட்கையாகயிருக்கிறது.
ஒரு துறவி வருகிறார். வாழ்க்கையைப் பற்றி இவர் கேட்கிறார். துறவி எதுவும் சொல்லாமல் நாயின் மண்டையோட்டை வைத்துவிட்டுப் போய்விடுகிறார். வாழ்க்கை என்பது அந்த மண்டையோடு. அதில் எதையாவது நிரப்பிவிட வேண்டும் என்பதுதான் ஆசை. பணம், புகழ் என்று எதையாவது நிரப்பிக் கொள்வதற்காகத்தானே வெறியெடுத்து அலைகிறோம்? என்னதான் சேர்த்து நிரப்பினாலும் அத்தனையும் வெறும் சாம்பல்தான். அதைப் புரிந்து கொள்ளாமல்தான் இத்தனை அலைச்சலும், வேகமும், ஓட்டமும். இல்லையா?
வெகு நேரம் யோசிக்க வைக்கக் கூடிய கவிதை.
5 எதிர் சப்தங்கள்:
நானும் ஒரு கவிதை எழுதி என் BLOG ல அரங்கேற்றியிருந்தேன்.
அதுக்கு வந்த பின்னூட்டம் தான் அதுக்கு "திலகம்"
http://sekkaali.blogspot.com/2014/06/blog-post.html
நாள் இரண்டு = தினமும் இருமுறை மலம் கழித்தல்.
வாரம் இரண்டு = வாரத்திற்கு இருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளித்தல்.
மாதம் இரண்டு = மாதத்திற்கு இருமுறை மனைவியுடன் ( மட்டும் )
கலவியில் ஈடுபடுதல்.
வருடம் இரண்டு = வருடத்திற்கு இருமுறை வயிற்றினை சுத்தம் செய்தல்.
பின்குறிப்பு: தகவல்கள் அனைத்தும் சுடச்சுட இந்த வலைப்பூவில் இருந்து சுடப்பட்டது. தகவல்கள் சரியானதா அல்லது பிழையேதும் உள்ளதா என்பது குறித்து யாம் அறியோம்.
http://kumarakuruparan1960.blogspot.in/2011/11/1.html
//‘சொல்லைக் குறுக்கக் குறுக்க, அதுக்கு ஒரு அசாத்திய பிரஷர் ஏற்படும்’. கவிதைகளில் இது சூட்சமம். நறுக்குத் தெறித்த மாதிரியான கவிதைகளில் அபாரமான சுவாரசியமுண்டு// I very much like these words sir. I want to write poems, till now i haven't tried to read or write, but i want to. Can you please suggest me sir any book to start with and i want to read more poems first, then i want to give it a try.
// நாயின் மண்டையோட்டை //
எதற்கு நாயின் மண்டையோடு ? அதுவும் ஒரு புதிர் :)
நெய்தல் மதி- சரி :)
திரு.சோமேஸ்வரன் - எழுத விரும்புவதும் வாசிக்க விரும்புவதும் நல்ல விஷயம். பழத்தை உரித்துத் தர வேண்டும் என்று எதிர்பார்க்காமல் சற்றே உழைப்பைத் தாருங்கள். நிசப்தம் தளத்திலேயே கூட ‘கவிதை’ என்று தேடிப்பாருங்கள். குறைந்தது ஐம்பது பதிவுகளாவது இருக்கும். வெவ்வேறு கவிஞர்களின் கவிதைகள், கவிதை பற்றிய கட்டுரைகள். அப்படியும் உங்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை எனில் கேளுங்கள்.
நன்றி.
Post a Comment