Jan 7, 2012

நம் மழைக்காலம்

உள்துறை இலாகவை என் அமைச்சரவையில் சேர்ப்பதற்கான அழைப்பிதழில் எழுதப்பட்டிருந்த கவிதை. Irreversible dent :-)




உன் ப்ரியம்
படர்ந்த
நாட்களின் நடனத்தில்
கரைகிறது
தீராத் தனிமை

சாரலில்
நிறமழியாமல் பறக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வாழ்த்துகளில் தொடங்கும்
நம்
மழைக்காலத்தில்
உன் கரங்களை
பற்றிக் கொள்கிறேன் -

ஆயிரம் ஆண்டுகளுக்கான
தீரா
ப்ரியங்களுடன்.

4 எதிர் சப்தங்கள்:

பொன். வாசுதேவன் said...

கல்யாணக் கவிதை :o)

Unknown said...

ஆஹா :)

Ganesh Gopalasubramanian said...

03-டிச-2008 கவிதை. திடீர்னு என்ன மீள்பதிப்பு... உள்துறை மசோதா தாக்கலா?

Anonymous said...

Nice kavithai