Nov 20, 2009

அதற்கு மேல் ஒன்றுமில்லை

நீண்ட நாட்களாக இருந்து வந்த வலைப்பதிவின் வடிவத்தை மாற்றியாகிவிட்டது.

மாற்றிவிட்டு பார்க்கும் போது வெயிலில் அலைந்து கசங்கியவன் வெதுவெதுப்பான வெந்நீரில் குளித்துவிட்டு வருவதை போல இதமாக இருக்கிறது.

இது ரசனையும் அழகியலும் சார்ந்த விஷயம். அழகு என்பதன் வரையறை கூடவும் ஆளுக்குத் தகுந்தவாறுதானே?."பொண்ணு வெள்ளையா பளிச்சுன்னு வேணும்" என்று சொல்வதில் கூடவும் அரசியல் இருக்கிறது. மரங்களும், உதிரும் மலர்களும் அழகு என்று நினைத்து வடிவமைத்திருக்கிறேன். கற்பனாவாதம் என்றும் சொல்லலாம்.

அதைப் பற்றி எல்லாம் யோசிக்கவில்லை.

இலவசமாக கிடைத்த வடிவமைப்பில், இதுதான் கண்ணுக்கு பிடித்ததாகவும், எளிமையாகவும், டெக்னிக்கலாக பிரச்சினை செய்யாததாகவும் இருந்தது.
====
ஒரு வலைப்பதிவில் "பின்னூட்டமிட்டால் அதற்கு பதிலிடும் நல்ல பழக்கத்தை பின் பற்றுங்கள்" என்று அந்த வலைப்பதிவாளருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். இது எனக்கான பின்னூட்டம் இல்லை என்றாலும், உறுத்துகிறது.

பெரும்பாலான பின்னூட்டங்களுக்கு பல சமயங்களில் பதிலிடாமல் இருந்திருக்கிறேன். அடிப்படை நாகரிகம் கூட இல்லையோ? பதிலிட வேண்டும். இல்லையென்றால் பின்னூட்ட வசதியை நீக்கிவிடலாம்.

ஒவ்வொருவருக்கும் பதிலிடுவதிலேயே பின்னூட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கி காட்டாமல் இருந்தால் சரி.
===
இந்த வாரம் சென்னையில் வலைப்பதிவர் சந்திப்பு ஏதும் உண்டா?. இந்த சனி,ஞாயிறு சென்னையில்தான் டேரா. (09663303156) யாரேனும் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி.
===
உலகப் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப்பாதையில் திரும்பிவிட்டதாக சொல்கிறார்கள். பெரும்பாலான ஐடி நிறுவனங்களும், இன்ன பிற தனியார் நிறுவனங்களும் இரண்டாண்டு கால மந்தநிலையைக்காட்டி ஊதிய உயர்வை நிறுத்தி வைத்திருக்கின்றன. இந்திய ஐடி நிறுவனங்கள் இந்தச் சூழலை பயன்படுத்தி உறிஞ்சி எடுக்கின்றன. வேலை போய்விடலாம் என்ற பயத்திலேயே வாய் திறவாமல் செக்கு மாடுகளை விடவும் அதிகமாக, செய்த வேலையையே திரும்பச் செய்யும் ஐடி நண்பர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது.

ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள்.

ஐடிக்காரனும் அரசு ஊழியனும் பெறும் வருமானத்தில் எத்தனை சதவீதம் கூலி வேலை செய்பவனுக்கும், தனியார் மில்லில் வேலை செய்பவனுக்கும் கிடைக்கிறது என்று பார்த்தால் சதவீத அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

இந்த வித்தியாசம் தொடருமானால் வாழ்க்கைத்தரத்தில் பெரும் வித்தியாசங்களை உடைய சமூகங்கள் உருவாகும்.

எப்பொழுதுமே பெரும்பாலான பிரச்சினைகளுக்கு சமூகத்தினுள் நிலவும் வேறுபாடுகளே காரணமாக இருந்திருக்கின்றன.
====
மது கோடா நோட்டுக்களை எண்ணுவதற்கு மட்டும் நான்கு மெஷின்களை வைத்திருந்தாராம். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியிலும் குடை பிடிப்பான் என்ற கதைதான் இது. சுயேட்சை எம் எல் ஏவாக இருந்து, அடித்த காற்றில் கோபுரம் ஏறி முதல்வரும் ஆகிவிட்ட குப்பை மது கோடா.

கிடைத்ததே சமயம் என்று வாரிச்சுருட்டியிருக்கிறார். பல அரசியல்வாதிகளின் வருமானத்தில் ஒப்பிடும் போது 2500 கோடி என்பது ஜுஜுபி மேட்டர். மற்றவர்களுக்கு எப்படி சிக்காமல் கை வைக்க வேண்டும் என்று தெரிகிறது. மது கோடாவுக்கு தெரியவில்லை.

ஏதோ அறுபதாயிரம் கோடி ஊழல் என்றார்களே. அது எந்த ஊழல்???

9 எதிர் சப்தங்கள்:

Karthik S said...

The template looks good. Where are you staying?

வரதராஜலு .பூ said...

//கிடைத்ததே சமயம் என்று வாரிச்சுருட்டியிருக்கிறார். பல அரசியல்வாதிகளின் வருமானத்தில் ஒப்பிடும் போது 2500 கோடி என்பது ஜுஜுபி மேட்டர். மற்றவர்களுக்கு எப்படி சிக்காமல் கை வைக்க வேண்டும் என்று தெரிகிறது. மது கோடாவுக்கு தெரியவில்லை.//

I think his case is only "Sharing (the money looted) problem". Nothing else. If he shared satisfactorily to their superiors, INTHA PIRACHANAI VANDIRUKKADHU

ரோஸ்விக் said...

ஊதிய வித்தியாசம் பற்றிய உமது கருத்துக்கள் மிகச் சரியானவை. தொடர்ந்து இது போன்ற சிந்திக்க வேண்டியவற்றை எழுத வாழ்த்துக்கள். :-)

sathishsangkavi.blogspot.com said...

இன்று சிக்கியவர் மதுகோடா! நாளை? ஏன்னா நமது நாட்டில் சுருட்டாத அரசியல் வாதி உண்டா?

Vaa.Manikandan said...

நன்றி கார்த்திக். எம் எம் டி ஏ வில்.

நன்றி வரதராஜூலு,ரோஸ்விக், சங்கவி.

யார் சிக்குவதாலும் எதுவும் மாறி விடப் போவதில்லை அல்லவா?

புருனோ Bruno said...

//ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள்.//
எத்தனை சதவீத அரசு ஊழியர்களுக்கு 40 சதம் உயர்வு என்று தெரியுமா

இங்கு பார்த்து தெரிந்து கொள்ளலாம்

மிக மிக குறைவானவர்களே 40 சதம் உயர்வு பெறுகிறார்கள்

90 சதத்திற்கும் மேலானோர் பெறுவது 20 சதமே

அதிலும் இந்த 20 சதம் என்பது வருடா வருடம் கிடையாது:(

எத்தனை வருடத்திற்கு ஒரு முறை என்று உங்களுக்கு தெரியுமா ??

Vaa.Manikandan said...

டாக்டர், நன்றி.

தகவலுக்கு நன்றி. பொதுவாக மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள், இராணுவம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றில்,குறைந்த அனுபவமுள்ள பொறியியல் பட்டதாரிகளே கூடவும் நாற்பதாயிரம் என்னும் ஊதிய அளவை தொட்டிருக்கிறார்கள்.

சரி. இந்தக் கட்டுரை அரசு ஊழியர்கள் அதிகம் பெறுகிறார்கள் என்னும் பெருமூச்சோடு எழுதப்படவில்லை.

வாழ்க்கையின் தரம் ஊதியங்களின் அடிப்படையில் பெரும் மாறுதல்களையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்கறது என்பது. நன்றி.

Bruno said...

//தகவலுக்கு நன்றி. பொதுவாக மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள், இராணுவம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றில், குறைந்த அனுபவமுள்ள பொறியியல் பட்டதாரிகளே கூடவும் நாற்பதாயிரம் என்னும் ஊதிய அளவை தொட்டிருக்கிறார்கள்.//

மணிகண்டன் சார்

நீங்கள் முதலில் கூறியது ஐடி காரனுகளுக்கு சம்பளம் அதிகம், அவர்களால் விலைவாசி உயர்ந்துவிட்டது என்றெல்லாம் போராடி அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு

அதற்குத்தான் நான் ஆதாரங்களுடன் புள்ளி விபரங்களுடன் பதில் கூறினேன். சில கேள்விகளையும் கேட்டேன்

நீங்கள் இப்பொழுது கூறுவது குறைந்த அனுபவமுள்ள பொறியியல் பட்டதாரிகளே கூடவும் நாற்பதாயிரம்

இதில் குறைந்த அனுபவம் என்றால் என்ன ?
நீங்கள் கூறும் நிறுவனம் எது
40 சதம் உயர்வும், 40,000ம் ஒன்றா

//வாழ்க்கையின் தரம் ஊதியங்களின் அடிப்படையில் பெரும் மாறுதல்களையும், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளையும் சந்திக்கறது என்பது.//
என்பதில் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது

ஆனால் நீங்கள் முதலில் கூறிய அரசு ஊழியர்கள் 40% ஊதிய உயர்வு என்பதெல்லாம் சாதாரணம் என்ற நிலையை அடைந்துவிட்டார்கள். நல்ல ஊதியமும் பெறுகிறார்கள் காழ்ப்புணர்வின் அடிப்படையில் எழுதப்பட்டது என்றே நினைக்கிறேன்

Bruno said...

//ஐடிக்காரனும் அரசு ஊழியனும் பெறும் வருமானத்தில் எத்தனை சதவீதம் கூலி வேலை செய்பவனுக்கும், தனியார் மில்லில் வேலை செய்பவனுக்கும் கிடைக்கிறது என்று பார்த்தால் சதவீத அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.//

பெரும் வித்தியாசம் இருக்கிறது

ஆனால் அரசு ஊழியர்களில் அரசு செயலர்களை தவிர வேறு யாரும் ஐடி காரர்களின் சம்பளம் பெறுவதில்லை

இன்று சென்னையில் பணியில் சேரும் ஐ.ஏ.ஸ் அதிகாரியின் ஊதியம் மாதம் 30,000 (பிடித்தம் இல்லாமல்) மட்டுமே

இத்துடன் ஐ.டி சம்பளத்தை நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்

மற்றபடி நீங்கள் கூறிய //பொதுவாக மத்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்கள், இராணுவம் சார்ந்த அமைப்புகள் போன்றவற்றில்,குறைந்த அனுபவமுள்ள பொறியியல் பட்டதாரிகளே கூடவும் நாற்பதாயிரம் என்னும் ஊதிய அளவை தொட்டிருக்கிறார்கள்// என்பது மிக மிக குறைவானவர்களுக்கே. நீங்களே அது எந்த அமைப்பு, எந்த பணி என்று தெளிவாக தெரிவித்தால் சரி பார்க்க வசதியாக இருக்கும்