Dec 30, 2008

தேவதச்சன் கவிதை ஒன்று

கவிதை, வாசிக்கிற ஒவ்வொரு வாசகனுக்கும் ஒவ்வொரு விதமான‌ அனுபவத்தை கொடுக்கும் போது அந்த கவிதானுபவம் மிக சுவாரசியமானதாகிறது.

தேவதச்சன் தனது பெரும்பான்மையான கவிதைகளில் இந்த வித்தையை மிக இலாவகமாக கையாண்டிருப்பார்.

இந்தக் கவிதை சட்டென்று எனது மனக்கூட்டின் படிகட்டு ஒன்றில் அமர்ந்து கொண்டது.

துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.


தொகுப்பு: கடைசி டைனோசர்

5 எதிர் சப்தங்கள்:

அருண்மொழிவர்மன் said...

//அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்//

நல்ல வரிகள்.

எப்போதும் இசையே கேட்பவனுக்கு மௌனம் தான் பிடித்த இசையாக இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம்

மாதவராஜ் said...

மணிகண்டன்!

இந்தக் கவிதையும் அப்படித்தான்.
படித்து முடித்த பிறகும் அசைபோட வைக்கிறது.

anujanya said...

ஆதர்ச கவிஞரின் ஒரு அழகான கவிதை. முன்பே படித்தது என்றாலும் ... என்ன சொல்ல. மிக அழகிய கவிதை.

மணி, சமீபத்தில் நீங்கள் நிறைய கவிதைகள் எழுதுவதில்லையா?

அனுஜன்யா

Karthikeyan G said...

விமர்சனம் தேவை!!!
http://vedikai.blogspot.com/2008/12/blog-post_09.html

M.Rishan Shareef said...

எதுவும் இல்லாதபோது அதன் இருப்பு தெரிவதில்லை. இருந்துவிட்டு, இல்லாமல் போகும்போதுதான் அதன் இருப்பு தெரிகிறது. இயல்பான வரிகளில் கவிதை எவ்வளவு அருமையாக அதை உணர்த்துகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றி.