Jan 5, 2009

கிளிநொச்சி

சில்க்கூர் என்ற இடம் ஹைதராபாத்தில் இருக்கிறது.மெகதிப்பட்டணத்தில் இருந்து No:288 பஸ் பிடித்தால் பத்து ரூபாய் டிக்கெட். வெங்கடாசலபதி கோயில் இருக்கிறது. "விசா"பாலாஜி என்ற சிறப்பு பெயர் கொண்ட மகராசன். பாலாஜியிடம் வேண்டிக்கொண்டு பதினோரு சுற்று சுற்றினால் விசா கிடைத்துவிடுமாம். அப்புறமாக வந்து நூற்றியெட்டு சுற்றுப் போட்டு நேர்த்திக் கடனை தீர்த்துக் கொள்ளலாம்.

சனி,ஞாயிற்றுக் கிழமைகளில் ஐ.டி. மக்களின் கூட்டம் அள்ளும். உண்டியல் கிடையாது. தட்டில் காசு போடும் வழக்கமும் கிடையாது. ஐந்து ரூபாய் கொடுத்து கோயிலின் வரலாற்று புத்தகத்தை வாங்குமாறு தமிழ் பார்ப்பனர்கள் தெலுங்கிலும், ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் அறிவிப்பார்கள்.

ஓராண்டுக்கு முன்னதாகச் சென்ற போது திமுக ஆளும் தமிழகத்தில் கோயில்கள் அழிக்கப்பட்டதாகவும், கருணாநிதிதான் இத்தனைக்கும் காரணம் என்றெல்லாம் பரப்புரையில் பின்னியெடுத்தார்கள்.

எதுவுமே தெரியாத கொல்ட்டி மக்கள் பல்லை இளித்துக் கொண்டிருப்பதை பார்த்தால் விஷயம் தெரிந்தவர்களுக்கு எரிந்து கொண்டு வரும். உச்சபட்சமாக தமிழ்நாட்டிலிருந்து வருபவர்கள், இந்தப் புத்தகத்தை தமிழக எல்லை வரை படித்துச் செல்லலாம். எல்லை தாண்டியதும் புத்தகத்தை எடுத்துச் செல்ல பயமாக இருந்தால் ரயிலிலேயே போட்டுவிடலாம் என்று 'அட்வைஸ்' செய்து கொண்டிருந்தார்கள்.

வெளியாட்கள் கேட்டால் நிச்சயமாக தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடப்பதாக நினைத்துக் கொள்வார்கள். எனக்கும் பற்றில் கொண்டு வந்தது. ஒரு ஐயரிடம் சொன்னேன். "உங்கவா ஆட்சிக்கு வர வரைக்கும் நீங்க அந்தப் பக்கம் வந்துடாதீங்கோ!கொளுத்திடுவா. கொலைகாரப்பசங்க!". அதற்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க "டூ யுவர் டூட்டி" என்றார்.

====

மிகச் சமீபத்தில் சென்ற போதும் கலைஞருக்கும், திமுக ஆட்சிக்கும் அதே வர்ணனைகள்தான். ஆனால் எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. தமிழினத் தலைவரின் மீது எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கடந்த ஓராண்டில் அடியோடு கலைந்து போயிருக்கிறது.

====

கிளிநொச்சியில் ஒருவர் கூட இல்லையாம். வீட்டையும், வாழ்ந்த ஊரையும் விட்டு அவர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள்? சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்ட அவர்களுக்கு உலக்த்தமிழ் மக்களின் தலைவரான உங்களின் பதில் என்ன?

முன்னகர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இராணுவம் ஒருவேளை அவர்களை சுற்றி வளைத்தால் அரங்கேறப் போகும் கொடூர, குரூர நிகழ்வுகளுக்கு கவிதை எழுதுவதை தவிர்த்து உங்களின் எதிர் வினை என்னவாக இருக்கும்? 

இந்திய அரசின் மெளனத்திற்கான பொருள் குறித்து தமிழர்கள் எழுப்பும் வினாவிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

=====

இது எல்லாம் பெரிய மனுஷங்க விஷயம். நமக்கு எதுக்கு வம்பு? பேசாமல் "இணைந்த குடும்பம்" வெளியிடும் மசாலா  படங்களை பார்த்துவிட்டு ஈழச் செய்தியே படிக்காமல் இருந்துவிடலாம். மொத்தமாக ஈழத்தை சுத்தம் செய்துவிட்டுச் சொல்லுங்கள். இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவான் என் சுரணையற்ற பயந்தாங்கொள்ளி தமிழன்.

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

மணிகண்டன் சார் உங்களுக்கென்ன லேசா சொல்லிட்டீங்க. உங்க பிளாக் எடதுபுறத்துல இருக்குற எனக்குப் பிடித்த பேச்சாளர்களுல ஒத்தவர் தவிர்த்து மத்தவா அத்தனை பேரும் இந்த டெபினிசன்படி பாத்தாக்க சுரணையற்ற பயந்தாங்கொள்ளி தமிழன்தா.

உங்க கவிதை, கதை, கட்டுரை எதையாச்சியும் வெச்சு கிளிநொச்சி தமிழன கண்டுபுடிக்கலாமான்னு பாருங்க. கண்டு புடிச்சா சொல்லுங்க. அடுத்த பொத்தககண்காட்சில உடமை பதிப்பத்தூடா கொண்ணாந்திடலாம்.

Senthil said...

I think first time in ur blog..
ur random rambling is interesting..

// தமிழினத் தலைவரின் மீது எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கடந்த ஓராண்டில் அடியோடு கலைந்து போயிருக்கிறது.//
I share the same thoughts..

I think தமிழினத் தலைவர் will write a kavithai once the ethnic cleansing of SL tamils is completed by Indian congress govt,Rajapakse and co..

Anonymous said...

கடைசி ஒரு புலி இருக்கும் வரை போராட்டம் தொடரும், கடைசி ஒரு புலம்பெயர் தமிழன் இருக்கும் வரை போராட்டத்திற்கான பங்களிப்பு தொடரும். அந்த கடைசி இருவரின் பின்தான் போராட்டம் நிறைவு பெறும் அது வரை போராட்டம் தொடரும், போராட்டவழிமுறைகள் மாறுமே ஒழிய போராட்டம் என் றும் மாறாது.

தமிழ் said...

/மிகச் சமீபத்தில் சென்ற போதும் கலைஞருக்கும், திமுக ஆட்சிக்கும் அதே வர்ணனைகள்தான். ஆனால் எனக்கு எந்தக் கோபமும் வரவில்லை. தமிழினத் தலைவரின் மீது எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் கடந்த ஓராண்டில் அடியோடு கலைந்து போயிருக்கிறது.

====

கிளிநொச்சியில் ஒருவர் கூட இல்லையாம். வீட்டையும், வாழ்ந்த ஊரையும் விட்டு அவர்கள் எங்கே சென்றிருக்கிறார்கள்? சொந்த நாட்டில் அகதிகள் ஆக்கப்பட்ட அவர்களுக்கு உலக்த்தமிழ் மக்களின் தலைவரான உங்களின் பதில் என்ன?

முன்னகர்ந்து கொண்டிருக்கும் சிங்கள இராணுவம் ஒருவேளை அவர்களை சுற்றி வளைத்தால் அரங்கேறப் போகும் கொடூர, குரூர நிகழ்வுகளுக்கு கவிதை எழுதுவதை தவிர்த்து உங்களின் எதிர் வினை என்னவாக இருக்கும்?

இந்திய அரசின் மெளனத்திற்கான பொருள் குறித்து தமிழர்கள் எழுப்பும் வினாவிற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

=====

இது எல்லாம் பெரிய மனுஷங்க விஷயம். நமக்கு எதுக்கு வம்பு? பேசாமல் "இணைந்த குடும்பம்" வெளியிடும் மசாலா படங்களை பார்த்துவிட்டு ஈழச் செய்தியே படிக்காமல் இருந்துவிடலாம். மொத்தமாக ஈழத்தை சுத்தம் செய்துவிட்டுச் சொல்லுங்கள். இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்துவான் என் சுரணையற்ற பயந்தாங்கொள்ளி தமிழன்./

சரியாகச் சொன்னீர்கள்
நண்பரே

வார்த்தைகளில்லை
வருகின்ற கோபத்தை யாரிடம் காட்டுவது

தறுதலை said...

நானும் ஒரு கொல்ட்டியுடன் மாட்லாடும்போது அவர் சொன்னார். ஜெயலலிதா கட்டுன பாலத்த ஸ்டாலின் இடிச்சி தள்ளிட்டார். அடப்பாவிகளா?
----------------------------------

கிளிநொச்சி: நம்பிக்கையைத் தவிர வேறொன்றும் இல்லை இப்பொழுது சொல்வதற்கு
----------------------------------

கருணாநிதி: நடு சாலையில் அவருடன் போனால் கட்டியிருக்கும் ஒரே கோமணத்தையும் அவிழ்த்து எடுத்துக்கொண்டு அம்மணமாக நடு வீதியில் விட்டு விட்டு போய்விடுவார். ஆனாலும் அவர் பின்னால் போக வேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள். சோமாறிகளும், கொட்டைதாங்கிகளும் கையில் காத்தியுடன் கொலை செய்ய கத்திருக்கிறார்கள்.

இஃது இப்படியிருக்க, கருணாநிதையை முடிந்தளவு கும்ம வேண்டும். அதில் சமரசம் இல்லை. ஆனால் ஓங்கி குரலெழுப்பக்கூட முடியாமல் ஒரு சூழலை உருவாக்கி வைத்திருப்பவர்களை என்ன செய்யலாம்?

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'09)

/I think தமிழினத் தலைவர் will write a kavithai once the ethnic cleansing of SL tamils is completed by Indian congress govt,Rajapakse and co../

What difference do we make? By posting mokkai pathivukal over kummi pathivukal?