Apr 8, 2005

அவ அழுதுட்டு போயிட்டா!

Image hosted by Photobucket.com
//நான் சும்மா feel பண்ணிக்கின்னு குந்தினேன்.....அந்த துளி மனச பேஜார் பண்ணிடுச்சு பா!

வீட்ல யாரும் பார்க்காம(படிக்காம) இருந்த சரி தான் :) //


சிதறிக்கிடக்கும்
உன்
உள்ளீடற்ற
கண்ணீர்த்துளியொன்றில்
புதைந்து கிடக்கிறது.

என்
பிரக்ஞையற்றமுகம்.

நன்றி:திண்ணை.காம்

வா.மணிகண்டன்

3 எதிர் சப்தங்கள்:

Ganesh Gopalasubramanian said...

மணிகண்டன் சார்

பாத்தீங்களா !! காதல் கண்ணீரிலும் தேட வைக்கும்.
ரொமப பொல்லாதது. அழவும் வைக்கும் அழுவதை ரசிக்கவும் வைக்கும்

காதலியின் கண்ணீர்த்துளிகள் கண்டிப்பாக காதலனின் கைரேகைகளின்
வழியாகத் தான் கீழே உதிரும் என்பது என் கருத்து. ஆதலால்
அவற்றை சிதறிக் கிடப்பவையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

கொஞ்சம் அதிகமாகவே impress ஆயிட்டேன்.. அதனால....

கோலங்கள்

சிதறிச் விழும் உன் கண்ணீர்த்துளி ஒவ்வொன்றும்
என்னை வசை பாடுகின்றன
அவற்றைத் தவற விடுவதற்காக

நான் மட்டும் மெளனமாய் ரசித்துக்
கொண்டிருக்கிறேன் உன் கண்
வரையும் அந்த ஈரக் கோலங்களை

முதலில் புள்ளி வைக்கிறாய்
நான் அதனை ரசிப்பதனால்
அதனையே கோலமாக்குகிறாய்

அழுகையிலும் உனக்கு என் நினைவு தானோ?

இப்னு ஹம்துன் said...

Nice. சின்ன புள்ளி. அழகிய கோலங்கள். கனேஷுடையதும் தான்

Vaa.Manikandan said...

இருவரின் பின்னூட்டங்களுக்கும் நன்றி.கணேஷ் அவ அழுதுட்டு நிற்காம போயிட்டா அதான் பார்த்துட்டு இருந்தேன்.