Apr 11, 2005

தமிழ் விக்கிபீடியா வில் உங்கள் பங்களிப்பு!

தமிழ் விக்கிபீடியா என்பது நல்ல என்சைக்ளோபீடியா.ஆனால் தமிழ் இல் 588 கட்டுரைகளே உள்ளன.ஆங்கிலத்தில் கிட்டதட்ட 500000 க்கும் மேற்ப்பட்ட கட்டுரைகளை பெற முடியும்.இது முழுவதும் அந்த மொழி சார்ந்தவர்களின் பங்களிப்பால் மட்டுமே இயல்க்கூடிய காரியம்.

மாலன் அவர்கள் சொன்னது போல்,நாம் திருக்குறள் அனைத்தினயும் இதில் இடப்போவதில்லை.திருக்குறள் குறித்தான ஒரு குறிப்பு இடம்பெறும்.வேண்டுமானால்,திருக்குறளுக்கு ஒரு இணைப்பினை அந்த பக்கத்தில் தரலாம்.

இது மற்றவர்களுக்கான ஒரு விவரம் தரும் பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும்.நமது படைப்புகளையோ,நமது சொந்த அநுபவங்களையோ இதனில் இடும்போது மற்றவருக்கு எவ்வாறு பயன் படும் என்பதனையும் யோசிக்க வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம் தவறான தகவல்களை இடும் போது மற்றவர்களுக்கு அது தீவிரமான பின்விளைவினை எற்படுத்தக்கூடும்.

கட்டுரைகளில் ஒரு நல்ல தரத்தினை பின்பற்றுவதும் மிக முக்கியம்.ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்வதனைக்காட்டிலும்,ஒரு குழு வாக செய்யும் போது நிறைய நல்ல விசயஙளை செய்ய முடியும் என்பது என் கருத்து.

இதில் எற்க்கனவே இடம்பெற்றுள்ள கட்டுரைகளையும் நம்மால் தரம் உயர்த்த இயலும்.

1.முத்லில் www.ta.wikipedia.com என உள் நுழையுங்கள்.
2."புகுபதிகையில்" உங்கள் குறித்தான தகவல்களை பதியுங்கள்.
3."முதற்பக்கத்துக்கு" செல்லுங்கள்.
4.உங்களுக்கு பிடித்த "கட்டுரை பிரிவுகளில்" ஒன்றில் உள் நுழையுங்கள்.
5."தொகு" பொத்தானை அழுத்தி உங்கள் கட்டுரையினை சேர்க்கலாம்.

எனக்கு தெரியாத விஷயங்கள்:
1.நமது பெயரை கட்டுரையினில் சேர்க்க முடியுமா?
2.கட்டுரையை அகர வரிசையில் தொகுப்பது எப்படி?

மற்றபடி கையாளுவது எளிதாகவே இருக்கிறது.

இன்னும் வேறு ஏதெனும் குறிப்பிடத்தக்க விஷயங்கள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.எனக்கும்.மற்றவருக்கும்.

எதிர்கால தமிழ் சமுதாயத்திற்க்கு நம்மால் இயன்ற சிறு உதவி தான் இது.

6 எதிர் சப்தங்கள்:

Santhosh Guru said...

//1.நமது பெயரை கட்டுரையினில் சேர்க்க முடியுமா?//
நீங்கள் கட்டுரையினை தொகுத்தற்காக கட்டுரையில் உள்ளே உங்கள் பெயர் இடம்பெறுமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கு என் விடை.. இல்லை. ஆனால் நீங்கள் தான் அதை எழுதினீர்கள் என்பது அக்கட்டுரையின் எடுவித்த வரலாற்றில் (Edit History) தெரியும்.

//2.கட்டுரையை அகர வரிசையில் தொகுப்பது எப்படி?//
விக்கிபீடியாவே, Categoriesஇல் உள்ள அனைத்து கட்டுரைகளையும் அகர வரிசையில் தொகுத்து விடும் (எடுத்துக்காட்டு : எழுத்தாளர்கள் தொகுப்பு, உங்கள் கட்டுரை எழுத்தாளர் பற்றி என்றால் அக்கடுரையின் இறுதியில் [[Category:எழுத்தாளர்கள்]] என்ற வரியினை சேர்த்துவிட்டால் போதும், விக்கிபீடியாவே அகரவரிசையில் தொகுத்து இவ்வாறு காட்டும் )

Vaa.Manikandan said...

நன்றி சந்தோஷ்

இராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்! முயற்சி தொடரட்டும்.

Sundar said...

தமிழ் மொழி பற்றி மட்டுமல்லாது கட்டிடக்கலை, இயற்பியல், நுண்ணுயிர் தொடர்பானவை உட்பட பலதரப்பட்ட தலைப்புகளிலுமாக மொத்தம் 692 கட்டுரைகள் உள்ளன. சான்றாக இக்கட்டுரை. அண்மையில் உருவாக்கப்பட்ட கட்டுரைகளை இங்கு காணலாம். அனைத்து கட்டுரைகளின் பட்டியல்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

தமிழ் விக்கிபீடியா குறித்து எழுதியதற்கு நன்றி. ஒரு முறை அங்கு நீங்கள் வருகை தந்து கட்டுரை எழுத முயன்றதை கவனித்து இருக்கிறேன். தற்பொழுது 1849 கட்டுரைகள் உள்ளன. பொதுவாக தளத்தின் அமைப்பும் கட்டுரைகளின் தரமும் மேம்பட்டுள்ளன. உங்களைப் போன்ற பல தமிழ் ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பால் நாம் தமிழ் சமூக்கத்துக்கு உலகத்தரத்தில் ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கித் தர இயலும்

HK Arun said...

உங்கள் கருத்துக்கள் ஏற்புடையதாய் இருக்கிறது.

நன்றி