Jun 1, 2020

நிசப்தம் அறக்கட்டளை- மே 2020

கடைசியாக ஏப்ரல் 19 ஆம் தேதி நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவுக் கணக்கு பதிவிடப்பட்டிருந்தது. இணைப்பில் அந்த விவரங்களை அறிந்து கொள்ளலாம். அன்றைய தினம் தொடங்கி ஜூன் 1 வரையிலான வங்கி ஸ்டேட்மெண்ட் இது.





பணம் அனுப்பிய நன்கொடையாளர்கள் சில கணங்கள் ஒதுக்கி தாங்கள் அனுப்பிய நிதி விவரங்களைச் சரி பார்த்துக் கொள்ளவும். 

இன்றைய தேதியில் நிசப்தம் அறக்கட்டளையில் ரூ. 28,25,813.18 (இருபத்தெட்டு லட்சத்து இருபத்தைந்தாயிரத்து எந்நூற்று பதின்மூன்று ரூபாய்) பரிமாற்றக் கணக்கில் இருக்கிறது. தவிர, நிரந்தர வைப்புநிதியில் முப்பது லட்ச ரூபாய் இருக்கிறது. 

ஏதேனும் சந்தேகங்கள், வினாக்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

vaamanikandan@gmail.com

1 எதிர் சப்தங்கள்:

Palani vel said...

சில ஐயங்கள்

1. அறக்கட்டளை உபரி நிதி - உபரி நிதி வளர்ந்து கொண்டு செல்கிறது (2017 - 17 லட்சம் , 2018 - 45 லட்சம், 2019 - 47 லட்சம், 2020 - 58 லட்சம் ). உங்களது நிலைப்பாடு - " எழுபது அல்லது எண்பது சதவீதத் தொகையைச் செலவு செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் கிடைக்கிற ஆட்களுக்கு எல்லாம் கொடுக்க வேண்டியதில்லை" என்பது சரி . இந்த தேக்கத்தை சீராக்க ஏதேனும் முயற்சி எடுக்கிறீர்களா - (தன்னார்வலர்களுக்கு அதிக பொறுப்பை வழங்குவது / புது நிதியை கோராமல் இருப்பது (redirect செய்வது ) - இப்படி எதாவது?.

2. ஆண்டு அறிக்கை - Oct 2016 வெளியிட்ட அறிக்கை மிக தெளிவு. ("http://www.nisaptham.com/2016/10/blog-post_5.html"). இதை போல் ஏன் ஆண்டு அறிக்கை வருவதில்லை. Bank Statement இல் இருப்பது data. அது information ஆவது நீங்கள் முன்பு வெளியிட்ட வடிவம் ( இவ்வளவு வந்தது அதை இந்த விகிதத்தில் செலவு செய்தோம்).

3. Follow Up - சில பதிவுகளுக்கு follow up இருப்பதில்லை. (உதாரணம் - கேரளா வெள்ள நிவாரண நிதி. மீதி 4 லட்சம் எப்படி செலவு செய்யப்பட்டது?)

"மெதுவாகச் செலவு செய்வோம். பொறுமையாகவே செய்வோம். நமக்கென்று ஒரு வரையறை இருக்கிறது. அளவும் இருக்கிறது. அள்ளி வீசிவிட முடிவதில்லை என்பதுதான் நிஜம்." - உங்களது எண்ணமும் நேர்மையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அறக்கட்டளை - is it functioning to its full potential ?