மருத்துவப்படிப்புகளில் இதர-பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் சுமார் பதினோராயிரம் இடங்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு இது அவசியமான விவாதம். உரிமைகள் கைவிட்டுப் போகும் போதுதான் சிலரேனும் விழிக்கத் தொடங்குகிறார்கள். அப்படி விழிப்பதற்கான வாய்ப்பாகவே இதைக் கருதிக் கொள்ளலாம்.
இது வெறுமனே இதரப் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான பாதிப்பு என்று சொல்லாமல் கவுண்டர், வன்னியர், முக்குலத்தோர், யாதவர், நாடார் உள்ளிட்ட இடைநிலைச் சாதிகள் அனைத்துக்குமான பாதிப்பு என்று உடைத்துப் பேசலாம். அப்படி பேச வேண்டிய கட்டாயமும் உருவாகியிருக்கிறது.
காலங்காலமாக ஒவ்வொரு சாதியையும் சார்ந்த முன்னோர்களும், முன்னோடிகளும் போராடி, பல சமயங்களில் உயிர்த்தியாகமும் செய்து தமக்குப் பின்னால் வரும் சந்ததிகளுக்காகப் பெற்றுத் தந்த உரிமைதான் இட ஒதுக்கீடு என்பது. நீங்கள் எந்தச் சாதிக்காரராக இருந்தாலும் உங்களுடைய சாதியைச் சார்ந்தவர்களுக்காக போராடியவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால் அந்தப் போராளிகள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை இடஒதுக்கீடு சார்ந்துதான் இருக்கும்.
இட ஒதுக்கீடு என்று பேச ஆரம்பித்தால் சில கேள்விகளை எதிர்கொள்ள நேரிடும். ‘சாதி வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஏன் இடஒதுக்கீடு கேட்கிறீர்கள்’ என்பதுதான் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் கேட்கும் முதல் கேள்வி- ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதியின் பெயரால் தாறுமாறான ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஓரளவுக்கேனும் சமநிலையைக் கொண்டு வர வேண்டுமானால் அது இட ஒதுக்கீட்டின் வழியே சாத்தியம் என்பது மிக எளிமையான பதில். அதை அறுபதாண்டுகளில் செயல்படுத்த முடியுமா? எழுபத்தைந்தாண்டுகள் தேவைப்படுமா அல்லது நூறாண்டுகள் கடக்குமா என்பது பதில் தெரியாத கேள்வி.
அதே போல, இட ஒதுக்கீட்டால் ஆதிதிராவிடரும், அருந்ததியரும் தங்களுடைய உரிமையைப் பறித்துக் கொள்கிறார்கள் என்று இன்னொரு விஷமும் மண்டையில் ஏற்றப்பட்டவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் இட ஒதுக்கீடு என்பது ஆதிதிராவிடர்களுக்கும் அருந்ததியருக்கும் மட்டும் பலனளிப்பதில்லை. அவர்களைவிடவும் அதிகமாக இடைநிலைச் சாதிகளுக்கும் அவர்தம் சந்ததியினருக்கும் பலனளிப்பது. உங்களுக்கான இடம் உங்களுக்கானவை. அவற்றை ஆதிதிராவிடர்கள் பறிக்கிறார்கள்; அருந்ததியர்கள் பறிக்கிறார்கள் என்று இடைநிலைச் சாதியினரை உசுப்பேற்றிவிட்டு அந்த இடங்களை முன்னேறிய பிரிவினர் பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு கருத்தாக்கம்- இட ஒதுக்கீடு என்பது சலுகை; இட ஒதுக்கீடு என்பது பிச்சை என்று சொல்லிச் சொல்லி மூளையைக் கழுவி வைத்திருக்கிறார்கள். சமூக, அரசியல், பொருளாதாரம் ஓரளவுக்கேனும் புரிந்து கொண்டவர்கள் கூட இட ஒதுக்கீட்டை சலுகை என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இன்னமும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால் இட ஒதுக்கீடு என்பது சலுகை இல்லை. நசுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு சுதந்திர இந்தியா வழங்கும் உரிமை.
இந்தியாவில் இட ஒதுக்கீட்டை மத்திய அரசு ஒரு வகையிலும் மாநில அரசுகள் வெவ்வேறு வகையிலும் ஒதுக்கியிருக்கின்றன. மத்திய அரசைப் பொறுத்தவரையில் தம்மிடம் உள்ள பணியிடங்களை அல்லது கல்வியிடங்களை நிரப்பும் போது 27% இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி) ஒதுக்க வேண்டும். 22.5% இடங்களை எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும். சமீபத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் முன்னேறிய வகுப்பினரில் ஏழைகள் என்று சொல்லி ஒதுக்கப்படும் 10% இட ஒதுக்கீடும் இருக்கிறது.
அதுவே, தமிழகத்தைப் பொறுத்தவரையில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு- முக்குலத்தோர், கொங்குவேளாளர், நாயக்கர் உள்ளிட்ட பிரிவினர்- 30% (அதில் 3.5% இசுலாமியர்களுக்கு), மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (MBC)- வன்னியர், போயர் உள்ளிட்ட பிரிவினர்- 20%, எஸ்.சி பிரிவினருக்கு -18% (அதில் 3% அருந்ததியருக்கு), எஸ்.டி பிரிவினருக்கு-1% என்பது அமல்படுத்தப்பட்டிருக்கும் சட்டம்.
இட ஒதுக்கீடு சதவீதங்களைப் பார்க்கும் போது இன்னொன்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு என்பது ஒரே நாளில், யாரோ சிலர் அள்ளியெடுத்து ஒரு பிரிவினருக்குக் கொடுத்துவிடவில்லை. அதற்கான கருத்துருவாக்கங்கள், விவாதங்கள் உருவாகி, பல ஆண்டுகளாக, பல்வேறு அறிஞர்கள் ஆலோசித்து அவற்றைச் சட்டமாக்கி- கடந்த அறுபதாண்டுகாலமாக பல்வேறு மாறுதல்களுக்குட்பட்டு இன்றைய வடிவத்தை அடைந்திருக்கிறது.
ஒவ்வோர் இடைநிலைச் சாதியைச் சார்ந்த முன்னோர்களும் போராடிப் பெற்ற உரிமையை, சுதந்திர இந்தியா அளித்திருக்கும் உரிமையை போகிற போக்கில் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். மனித மனத்தின் மேல் அடுக்கில் இருக்கும் உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, கவனம் திசை மாற்றப்பட்டு உரிமைகளை பறி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதை மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்.
இடைநிலைச் சாதிகள் இழந்திருக்கும் பதினோராயிரம் சீட் விவகாரத்திலேயே இதைப் புரிந்து கொள்ள முடியும்- நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாநிலமும் தம் மாநிலத்தில் உள்ள மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்களை மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும். அதாவது தமிழகத்தில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன என்றால் அதில் 85 இடங்களை தமிழகமே நிரப்பிக் கொள்ளும் மீதமிருக்கும் 15 இடங்களை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இந்த பதினைந்து இடங்களுக்கு ‘All India Quota' என்று பெயர்.
All India Quota அடிப்படையில் கடந்த நான்காண்டுகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளிலிருந்து மத்திய அரசு எடுத்துக் கொண்ட இடங்களின் எண்ணிக்கை மட்டும் 40842. இந்த இடங்களை மத்திய அரசே நிரப்பும். அது தவறில்லை. ஆனால் அப்படி நிரப்பும் போது இட ஒதுக்கீட்டின்படி 27% இடங்களை இதரப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தக் கணக்கின்படி- 40842 இடங்களில் 11027 இடங்கள் OBC பிரிவினருக்கு உரியவை- அதாவது இடைநிலைச் சாதிகளுக்கு. ஆனால் இந்த 11,000 இடங்களையும் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கிவிட்டார்கள். இங்கு நாம் நுணுக்கமாக கவனிக்க வேண்டியது - பொதுப்பிரிவினரில் (OC) ஏழைகள் என்று சொல்லி வழங்கப்பட்டிருக்கும் 10% இட ஒதுக்கீடு அப்படியே வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த நான்காண்டுகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்கவே இல்லை என்பது அவர்களுக்கான உரிமையை மறுப்பதுதானே? அல்லது உங்களுக்கு உரிய தட்டில் இருப்பதை வலுவுள்ள இன்னொருவன் தட்டில் போட்டுவிட்டு ‘அதிலிருந்து நீயும் எடுத்துக்கலாம்’ என்று சொல்வது எந்தவிதத்தில் நியாயம் ஆகும்? அவனுக்கு வசதி இருக்கிறது. நகர்ப்புறத்தில் வசிக்கிறான். தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் கட்டி அவனால் படிக்க முடியும். பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள ரங்கசாமி படையாட்சியின் மகனுக்கும், கிணத்துக்கடவில் உள்ள கருப்பண கவுண்டரின் மகளுக்கும், நாங்குநேரியில் உள்ள சுடலை நாடார் மகனுக்கும், கம்பத்தில் உள்ள மூக்கையத் தேவரின் மகளுக்கும் இதெல்லாம் சாத்தியமா? நகர்ப்புறத்தில், தனியார் பயிற்சி மையங்களில் படித்தவனோடு போட்டியிடுவது என்பது எப்படி இயலும்? பொதுவான தட்டுகளில் இடப்பட்ட இடங்களை முன்னேறிய வகுப்பினர் மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். அதுதான் நடக்கும். அதுதான் சாத்தியமும்.
டிக்டாக்கில் நாம் மீசை முறுக்கி முஷ்டியை மடக்கினால் லைக் வரலாம், கைதட்டு கேட்கலாம் ஆனால் நமக்குப் பின்னால் வரும் சந்ததிக்கு நாம் மிகப்பெரிய குழியைப் பறிக்கிறோம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். உசுப்பேற்றுவது கூட ஒருவகையிலான குழிபறிப்புதான். இன்றைக்கு மறுப்புக் குரலையும், கண்டனக்குரலையும் எழுப்பவில்லையென்றால் - இடைநிலைச்சாதிகள் எல்லாவற்றிலும் உரிமையை இழக்க நேரிடும். மதத்தின் பெயரால் ஒன்று திரள அழைப்பு விடுக்கிறவர்கள் சாதியின் பெயரால் முதுகில் கத்தியைச் செருகுவார்கள். அதைத்தான் இந்த மருத்துவப்படிப்புகளுக்கான விவகாரத்தில் பார்க்கிறோம்.
8 எதிர் சப்தங்கள்:
All India Quota - 15% - I understand this is even before NEET exam. Students would appear for a all-india entrance exam called CBSE+ to get these seats. I wrote this exam in 1998.
1998 - Tamilnadu Govt had a entrance exam for medical and engineering seats. Central Govt conducted all-india entrance exam for the 15% seats in all state medical and dental colleges.
So, நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாநிலமும் தம் மாநிலத்தில் உள்ள மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்களை மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும்
- Is it correct statement?
கிடைக்கோ இல்லியோ நிறைய பேர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
//நீட் தேர்வு அமலுக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாநிலமும் தம் மாநிலத்தில் உள்ள மருத்துவப்படிப்புகளுக்கான இடங்களில் 15% இடங்களை மத்திய அரசிடம் கொடுத்துவிட வேண்டும்//
நீட் தேர்வுக்கு முன்பும் 15% ALL INDIA QUOTA இருந்தது. நீட் தேர்வு முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி.எஸ்.டி.யை விட ஓ.பி.சி.யே . நீட் தேர்வுக்கு முன் ஓ.பி.சி., பொதுப்பிரிவில் அதிக எண்ணிக்கையில் தேர்வானர்கள். இடஒதுக்கீடு என்றால் எஸ்.சி.எஸ்.டி. தான் என்கிற தவறான தோற்றம் இருக்கிறது.
Dear Mani, One other point which is being missed out is the Post graduation and super specialty seats - Earlier, 50% of the seats were reserved for all India Quota which itself was unfair. The government spends state's money to build necessary infrastructure (building, professors, hospital beds etc for every seat) in state's tax revenue. TN has the highest seats in higher education. For example, TN creates around 15 nephrology seats for 7 cr population and UP produces less than 5 for 22 cr. By the rule, TN gives 7 seats to All India quota and UP gives 2. 50% looks fair as a overall rule - but 50% is unfair if u look the numbers lost. Now, NEET has made it 100% all India. Earlier, TN used to reserve 50% of its PG seats for doctors who work in Govt hospitals - It has got one of the finest rules - there are marks for every location - district hospital gets a lower weightage while, a PHC gets a higher weightage and a tribal PHC gets the highest weightage which incentivized doctors to remain in the govt system as it helps them acquire PG qualification and at the same time, government gets the doctors to remain in govt hospital. This might look very simple - but this was one of the biggest problems in Public Healthcare in India. Now, this have been removed. Now, there is no incentive for doctors to work for government hospitals. The NEET exam, which demands 2-3 years of focused preparation in addition to school education is against poor and marginalized (we have enough experiments including yours that it is a big wall against students who study in government schools and from rural/tribal areas). So, look at combination, NEET supports Urban middle/upper middle class children and there is no compulsion to work in government hospitals - in the next decade, we would have seen TN's famed Public Healthcare system which took 50 years to build, would have collapsed in 10 years. I have spoken to many a public education doyens like Anil Sadgopal (https://en.wikipedia.org/wiki/Anil_Sadgopal), SS Rajagoplan (a well known educationist in TN school education system) and Dr.Amalaorpavanathan (Retired Director, Cardio Vascular Surgery Department, Madras Medical College and founder secretary of Transplantation Organisation of Tamilnadu) and am convinced that this NEET system is travelling in the direction of IIT entrance exam - in the name of quality (which is to be contested), they are building a big wall against the inclusive culture which was the hall mark of Tamilnadu from 1924 is being lost. I have prepared a booklet - "why TN is against NEET" -http://bit.ly/2NArvRH - please go through and share with people if this makes sense.
// I have prepared a booklet - "why TN is against NEET" -http://bit.ly/2NArvRH - please go through and share with people if this makes sense.// from Bala.
I have gone through that book int the above link, It is good collection and great effort.. We need to spread this news further to raise awareness among common people. If our public heath care system collapse in the next decade, how can we deal with problems like COVID-19 in the future?
Its really stupid that our TN govt is not fighting against this ridiculous plan of Central govt. Writing letters will not yield good results in this matter.
Intha NEET ah ban pannave aatchi maatram varanum..
அற்புதம். தல கலக்கிட்டீங்க.
இடஒதுக்கீடு குறித்து நீங்கள் இதுவரை எழுதிய கட்டுரைகளில் முத்தாய்ப்பான கட்டுரை இது.
We may use the conventional strategies to save lots of|to keep away from wasting} the bucks and for small amount initiatives. If want to|you should|you have to} go for larger quantities, CNC machining is greatest choice|the solely option|your finest option}. The conventional machines need totally different instruments which are be} additionally utilized in CNC machines. We have a well-established community of local distributors CNC machining of CNC machines throughout the US, as well as|in addition to} in choose regions worldwide. For over forty years, Kent Industrial USA, has been delivering high quality, worth and repair to its prospects – with greater than 22,000 machines bought worldwide. Shibaura Machine controllers support OPC-UA communication requirements.
Post a Comment