புஞ்சை புளியம்பட்டி அரசுப் பள்ளி மாணவிகளைக் கொண்ட ஹாக்கி அணியை முழுமையாகத் தத்தெடுத்திருக்கிறோம். தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்ட இந்த பத்து கிராமத்து மாணவிகளும் கோபி கலைக்கல்லூரியில் பி.காம் படிக்கவிருக்கிறார்கள். அவர்களுக்கான கல்வி மற்றும் விடுதிக்கான முழு உதவி தொகையை நிசப்தம் நன்கொடை வழியாக நாம் வழங்கவிருக்கிறோம். அவர்களின் பயிற்சி, போட்டிகள் ஆகியவற்றைக் கண்காணிப்பதோடு உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மனோவியல் நிபுணரின் ஆலோசனை என இந்தப் பெண்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான எல்லாவிதமான முன்னெடுப்புகளையும் எடுக்கும் திட்டமும் இருக்கிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 05, 2019) அன்று காலை பத்து மணிக்கு மாணவிகளையும், அவர்தம் பெற்றோரையும், மாணவிகளின் பயிற்சியாளரையும் அழைத்து ஓராண்டுக்கான (2019-2020) உதவித் தொகையான ஐந்து லட்சத்து இருபதாயிரம் ரூபாயை வழங்கி, அவர்களிடம் நமது எதிர்பார்ப்பு என்ன என்பதைச் சொல்லி, அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவ இயலும் என்பதையும் விரிவாகப் பேசவிருக்கிறோம்.
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலேயே எளிமையான நிகழ்ச்சியாக நடைபெறவிருக்கிறது. நிசப்தம் அறக்கட்டளையுடன் எந்த வகையிலாவது தொடர்புள்ளவர்களையெல்லாம் அழைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறேன். கலந்து கொள்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதும் புரிகிறது. ஆனால் வாய்ப்பிருப்பவர்கள், வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடிகிறவர்கள் நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என அன்போடு அழைக்கிறோம்.
கிராமத்திலிருந்து மேலேறி வரும் இந்தப் பெண்களுக்கு உத்வேகமளிக்கும் நிகழ்வாக இது இருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் சந்திப்போம்!
அன்புடன்,
வா.மணிகண்டன்
தொடர்புக்கு: 9842097878
தொடர்புடைய சுட்டிகள்:
இணைப்பு 2: http://www.nisaptham.com/2019/05/10.html
4 எதிர் சப்தங்கள்:
வாழ்த்துக்கள்.
√
will these Gomathi's get quality shoes from our Nisaptham?
Good initiative, all the best for all players!!
Post a Comment