Jan 23, 2019

சம்பளம்தான் பிரச்சினையா?

கிட்டத்தட்ட எட்டு லட்சம் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஆசிரியர்கள் போராட்டம் என்று கிளம்பினாலே ‘இவங்களுக்குக் கொடுக்குற சம்பளம் போதாதா?’ என்று சர்வசாதாரணமாகக் கேட்டுவிடுகிறார்கள். சம்பள உயர்வு மட்டும்தான் பிரச்சினையா என்ன? 

மாணாக்கர் சேருவதில்லை என்று சொல்லி மூன்றாயிரத்து ஐநூறு தொடக்கப்பள்ளிகளை இணைக்கிறார்கள். ‘இணைப்பு’ என்பது நாசூக்கான சொல். ‘மூடுதல்’ என்பதுதான் புதைந்திருக்கும் அர்த்தம். இது தமிழகத்தில் அரசு ஆரம்பக்கல்வியைக் குழி தோண்டிப் புதைப்பதற்கான முதல்படி. ஆனால் இதே அரசுதான் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்து அந்தப் பள்ளிகளுக்கு கட்டணத்தை அரசே செலுத்தும் என்று சொல்லி பல கோடி ரூபாய்களை ஒதுக்கிறது. யாரேனும் மறுக்க முடியுமா? இதில் ஆளும் வர்க்கத்துக்கு கோடிகளில் கமிஷன் புரள்கிறது. ஆனால் ஆரம்பப்பள்ளிகளால் இவர்களுக்கு என்ன பலன்? தயவு தாட்சண்யமே இல்லாமல் மூடுகிறார்கள். மூடுவதற்கு சாக்குப் போக்கு வேண்டுமல்லவா? ‘மாணவர்கள் சேர்க்கையில்லை’ என்கிறார்கள்.

அரசுத் தொடக்கப்பள்ளிகளை இணைத்து எண்ணிக்கையைக் குறைக்க வேண்டாம் என்ற கோரிக்கையை ஆசிரியர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் மூன்றாயிரத்து ஐநூறு சத்துணவு மையங்களை மூடப் போகிறது இந்த அரசு. என்ன பிரச்சினை? இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இலவச உணவு வழங்கப்படுகிறது என்பதற்காகவே பள்ளிக் கூடங்களுக்கு வருகிறார்கள். யாரேனும் மறுப்பதாக இருந்தால் சொல்லுங்கள். அழைத்துச் சென்று குழந்தைகளைக் காட்ட முடியும். மக்கள் நலன் பேணுகிற அரசு, சத்துணவு மையங்கள் இல்லாத ஊர்களில் எல்லாம் புதிய மையங்களைத் தொடங்க வேண்டுமே தவிர போக்கற்ற காரணங்களைச் சொல்லி சத்துணவு மையங்களை மூடக் கூடாது.

சத்துணவு மையங்களை மூடக் கூடாது என்ற கோரிக்கையும் இந்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

Contributory Pension Scheme என்பதுதான் இன்றைக்கு ஓய்வூதியத்திற்கான திட்டம். மாதாமாதம் ஊழியர்கள் கொடுக்கும் பணத்தை ஓய்வுக்குப் பிறகு ஓய்வூதியமாகத் தருவார்கள்.  இதுவரை பிடித்தமாக இருபத்தேழாயிரம் கோடி ரூபாய்களைப் பிடித்திருக்கிறார்களாம். அதற்கான கணக்கு வழக்கு விவரங்களைச் சொல்லுங்கள் என்று ஊழியர்கள் கேட்கிறார்கள்.  பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டு வாருங்கள் என்று கேட்கிறார்கள். என்ன தவறு இருக்கிறது? 

உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களை நடுநிலைப்பள்ளிகளுக்கும், ஆரம்பப்பள்ளிகளுக்கும் பணியிறக்கம் செய்து பந்தாடுகிறார்கள். தவறில்லையா? எந்தப் பணியிலாவது நாம் இதனை ஏற்றுக் கொள்வோமா? அவர்கள் கோரிக்கையாக முன்வைப்பதில் என்ன தவறு இருக்கிறது?

இவை எதுவுமே நம் பொதுச் சமூகத்தின் கண்களில் படாதா என்ன? அப்படி மடை மாற்றப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ‘சம்பளமாகத்தான் எல்லாப் பணமும் போகிறது’ என்று சொல்வதை ஊடகங்களும் திரும்பத் திரும்பக் காட்டுகின்றன. ஊழலாக எந்தப் பணமும் போவதில்லை. கமிஷனாக பைசா கூட அரசு கஜானாவிலிருந்து காலியாவதில்லை. சம்பளம் மட்டும்தான் பிரச்சினை. இல்லையா?

ஒவ்வொரு முறையும் போராட்டம் நடக்கும் போதெல்லாம் ‘சம்பளம் கிடையாது, விடுமுறை கிடையாது’ என்று மிரட்டுகிறார்கள். ‘மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்’ என்று அறிக்கையை வெளியிட்டு மக்களிடம் ‘ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மனசாட்சியில்லாத ஜடங்கள்’ என்ற வெறுப்பை உண்டாக்குகிறார்கள். பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்து உருட்டி மிரட்டி, வழக்குகள் கைது என்றெல்லாம் எதையாவது செய்து, கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு பிரச்சினையை வாபஸ் செய்ய வைத்துவிடுகிறார்கள். ஆனால் எந்தவிதமான முன்னேற்றமுமில்லை. ஒவ்வொரு மாதமும் நிலைமை மோசமாகிக் கொண்டேயிருக்கிறது.

‘ஆசிரியர்கள் எப்பொழுதாவது மாணவர்களின் நலனுக்காகப் போராடியிருக்கிறார்களா?’ என்று அதிமேதாவித்தனமாகக் கேட்கிறவர்களும் இங்குண்டு. இந்தச் சமூகமே Corrupted Societyதான். அடுத்தவர்களைக் கேள்வி கேட்டு தன்னை யோக்கியமாகக் காட்டிக் கொள்ளும் மனோபாவம் அது. மாணவர்களின் நலன்பேணுகிற ஆசிரியர்கள்  மிகப்பரவலாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் அத்தனை பேரும் மோசமானவர்கள், சோம்பேறிகள் என்று பேச வேண்டியதில்லை.  அது அபத்தம். பிச்சையெடுக்கும் அளவுக்கு இறங்கி நன்கொடை கேட்டு, வசூல் செய்து தம் பள்ளிகளை மேம்படுத்தும் ஆசிரியர்கள் எத்தனை பேர்களைக் காட்ட வேண்டும்?

இந்தப் போராட்டத்தில் சுயநலமே இல்லையா என்றால் இருக்கிறதுதான். எந்தவொரு பொதுக்காரியத்திலும் சுயநலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதையும் தாண்டி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நியாய அநியாயங்களும் இருக்கின்றன.

உண்மையிலேயே தமிழகக் கல்வித்துறைதான் உள்ளுக்குள் அரித்துப் போனதாக மாறியிருக்கிறது. வெளியில் மேக்கப் போட்டு ‘ஆஹா பிரமாதம்’ என்று ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயெல்லாம் கமிஷன் அடிக்க முடியுமோ அந்தக் காரியங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கவனித்து, இந்தப் போராட்டம் எதற்கானது என்று காது கொடுத்துக் கேட்டால் கல்வித்துறையின் அவலம், தமிழக அரசுத்துறைகளின் சிக்கல்கள் எல்லாம் வெளியில் தெரியும். எல்லாவற்றையும் மூடி மறைத்து ‘சம்பளத்துக்கான போராட்டம்’ என்று தயவு செய்து பூசணிக்காயை சோற்றில் புதைக்க வேண்டாம். இன்றைக்கு தமிழகத்தின் கடன் எத்தனை லட்சம் கோடிகள்? கடந்த ஆகஸ்ட் மாதமே பத்து லட்சம் கோடிகளைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு வட்டிக் கொண்டிருக்கிறது இந்த அரசாங்கம் என்ற புள்ளிவிவரம் யாருக்காவது தெரியுமா? உண்மையிலேயே அரசாங்கம் திண்டாடிக் கொண்டிருக்கிறது. தமிழத்தின் நிதி ஆதாரத்தை மீட்டெடுக்க இன்னமும் எவ்வளவு வருடங்கள் தேவைப்படும் என்று தெரியாது. 

கடன் மேல் கடனாக வாங்கி, தேவையற்ற திட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோடிகளைப் புதைத்து கமிஷன்களில் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் தமிழகத்தின் கஜானா என்னவாகப் போகிறது என்று எந்தக் கணிப்புமில்லை. Flying Blind என்பார்களே- குருட்டுவாக்கில் பறந்து கொண்டிருக்கிறது தமிழகத்தின் நிதி நிலைமை. இந்தப் போராட்டத்தின் வழியாக இதையெல்லாம் பற்றிக் கொஞ்சமேனும் புரிந்து கொள்ள முயற்சிப்போம். திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழகம் பற்றி நமக்கு மேம்போக்காகவேனும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத் தருணம் இது. 

35 எதிர் சப்தங்கள்:

Unknown said...

திரு ., மணிகண்டன் அவர்களுக்கு . ஒரு பிரச்சனையின் ஒரு தரப்பை மட்டும் நீங்கள் கூறுகிறீர்கள் .,

ஓய்வூதிய திட்டம் : பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது ., வேளையில் சேரும் போதே அது இல்லை புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தான் என்று தெரிந்து தான் சேர்க்கிறார்கள் .. இன்று பலம் இருக்கிறது / மிரட்ட முடியும் என்ற காரணத்திற்காக போராட்டம் செய்கிறார்கள் என்பது தான் உண்மை .. PF details எல்லாம் இன்று online மூலம் பெறலாம் .. நீங்களும் வேலையில் இருப்பவர் தானே offer letter என்றால் தெரியாத , terms & conditions தெரிந்ததுதானே .. அப்பறம் எதற்கு .. சரி உங்களால் இந்த terms & conditions வேலை செய்ய முடியாதா .. வேலையை விட்டு நின்றுவிடுங்கள் அவர்களை யார் அவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்ய சொன்னது .. மிரட்டி பெற முடியும் என்ற காரணத்துக்காகவே நடக்கும் போராட்டம் இது ... இவர்களை ஒடுக்க அரசு வன்முறையை கையாண்டாலும் தவறில்லை

பள்ளி கூடங்களை மூடுதல் : இங்கு பல பள்ளி கூடங்களை மூட காரணமே ஆசிரியர்கள் தான் ., நீங்கள் சொன்னது போல் மது உணவிற்காக மட்டும் பள்ளிக்கு வரும் பிள்ளைகள் உண்டு நீங்களும் காட்டலாம் . ஆனால் ஏன் பெற்றோர்கள் அரசு பள்ளியை விட்டு தனியார் பள்ளியை தேர்ந்து எடுக்கிறார்கள் தெரியுமா ??? எந்தவகையான ஊக்கமும் ஆசிரியர்கள் கொடுப்பதில்லை பலர் பாடம் நடத்துவதே இல்லை , அரசு வேலை சம்பளம் வருகிறது தான் தினமும் வர விடும் அவ்வளவு தான் அவர்களது எண்ணம் .. 5 தாவது மாணவனை அழைத்து ஆங்கில எழுத்துகளை சொல்ல சொன்னால் லட்சணம் தெரிந்து விடும் ..

பள்ளிகளை மூட காரணமே இவர்கள் தான் , நீங்கள் நிறைய தரவுகள் சொன்னீர்கள் , ஒரு தரவு எடுங்கள் அரசு பள்ளியில் படித்த / படிக்கிற எத்தனை பேர் 10 வது முடிக்கிறார்கள் / 12 வது முடிக்கிறார்கள் / எதனை பேர் கல்லூரி தண்டு கிறார்கள் என்று .. ஆசிரியர்களின் அலட்சியத்தால் / ஒழுங்காக பாடம் நடந்ததால் / முறையான பயிற்சி அளிக்காததால் ... எதனை எத்தனை பேர் கல்வியை துறக்கின்றனர் .. இதில் மூடிமறைக்கப்படும் பாலியல் மீறல்களை பற்றி கொஞ்சம் நேர்மையான ஆசிரியர்களிடம் கேளுங்கள்

அரசாங்கம் செய்வது தவரே இல்லை ., இவர்களை வைத்து கொண்டு எந்த முன்னேற்றமும் செய்ய முடியாது ..இவர்கள் மேல் எந்த துர்கை ரீதியான நடவடிக்கையும் எடுக்கா முடியாது சங்கங்கள் காப்பாற்றும் எந்த வகையான தவறு செய்தாலும் தொழிற்சங்கம் காப்பாற்றும் .. வேறு வலி இல்லை அரசாங்கம் பள்ளிகளை மூடுகிறது , அதன் வருவாயை தனியாருக்கு அளித்தவது கல்வி அளிக்க முயற்சிக்கிறது , உண்மையில் இது சரியே .., இன்று தனியார் பள்ளி / கல்லூரிகள் நிறைய வந்து விட்டன , அரசாங்கம் கொடுக்கும் இந்த பனத்திரக்காகவே மாணவர்களை சேர்க்க தயாராக உள்ளன .. பொய் இல்லை உண்மை அரசாங்கம் கொடுக்கும் கல்வி கட்டணத்திற்காக மட்டுமே பல தனியார் கல்லூரிகள் இருப்பதாய் காட்ட முடியும் . ஏன் பள்ளி யிலும் இதைமுயற்சிக்க கூடாது ..

கண்டிப்பாக சோம்பேறி அரசாங்க பள்ளி ஆசிரியர்கள் கொடுக்கும் கல்வியை விட தனியார் கொடுப்பது மேலான கல்வியே .. இதை முயற்சித்து 10 வருடம் களைத்து பாருங்கள் உயர் கல்வி கற்கும் / கல்லூரி முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ..

மன்னிக்கவும் ., என்னை பொறுத்தவரை இந்த அரசாங்க அதிகாரிகள் " மானுட பொறுக்கிகள் " .. இவர்களுக்கு எந்த வகையான அறம் சார்ந்த உணர்வுகளும் கிடையாது ... பல மாணவர்களின் இருட்டில் தள்ளுபவர்கள் இவர்களே .

இப்படிக்கு .,
பிரபு.

சேக்காளி said...

இப்படி வீண் வேலையில் இறங்காமல் உருப்படியாக தாமரையை மலரச் செய்யும் முயற்சியில் ஈடுபடவும்.

Ganesh said...

நண்பரே உங்கள் பதிவு தவறானது. உங்கள் புரிதலும் தவறானது.பலம் இருப்பதால் எதையும் சாதித்துவிட முடியும் என்று நினைக்காதீர் நண்பரே.. இதுவரை வழங்கப்பட்டுவந்த , ஓய்வூதியத்தைக் கேட்கிறோமே தவிர , புதிதாக ஓய்வூதியம் வேண்டும் என்று கேட்கவில்லை..

பணிக்குவரும்போது தெரிந்துதான் வருகிறீர்கள் என்ற வாதம் சரியாகத்தான் உள்ளது. ஆனால் நீங்கள் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராக உள்ளீர்களா ?

Cps வேண்டாம் என்று எதிர்க்கவில்லை. ஆனால்

1) CPS இல் பிடித்தம் செய்யப்பட்ட பணம் எங்கே என்று இதுவரை அரசு சொல்லாதது ஏன் ?

2) CPS இல் பிடித்தம் செய்த பணம் பங்கு சந்தையில் முதலீடு செய்ய யார் அரசுக்கு அதிகாரம் கொடுத்தது ?
3) ஊழியரின் அனுமதி இல்லாமலே அந்த பணத்தை அரசு எப்படி பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம் ?
4) ஏன் இதுவரை ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மத்திய அர்சின் PFDRA விடம் செழுத்தாதது ஏன் ?
5) எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பிக்ககளுக்கும் மட்டும் இந்தத்திட்டம் பொருந்தாதது ஏன் ?

6) அமுல்படுத்தினால் அனைவருக்கும் தானே அமுல்படுத்தியிருக்கவேண்டும். ஆசிரியர்க்அளுக்கும் ஊழியர்களுக்கும் மட்டும் ஏன் இந்த பாரபட்சம் ?

இதற்கெல்லாம் அரசிடமிருந்து பதில் இல்லாததால்தான் இந்த போராட்டம் ..
உங்களிடம் பதிலிருந்தால் தெரிவிக்கவும்..

Unknown said...

ஒரு ஆசிரியையாக உங்கள் கட்டுரைக்குத் தலைவணங்குகிறேன்.


Anonymous said...

** Not claiming they are good or bad. **

It is just my personal experience from govt school 2 decades back: In my 12th standard 7 students failed in maths, all the 7 students failed because they did not go to private tuition center.

My maths teacher knew what was taught in tuition and he did not concentrate on teaching at the school. The students who could not afford a private coaching failed in 12th std. Now couple of them are working in local area for less salary. Their family living standard could have been better if they were considered by our teacher.

This was the case 20years back when private schools started booming. There are chances that it still gone worst nowadays.

No second thought on their significant role to motivate students.

Anonymous said...

They must be dismissed and arrested.

அன்புடன் அருண் said...

தங்களுடைய கருத்துக்களில் அரசாங்கம் பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போக முடிகிற அளவுக்கு "அரசு ஊழியர்கள்" பற்றிய கருத்துக்களுடன் ஒத்துப் போக முடியவில்லை.

மக்கள் தொகையில் 2% மட்டுமே உள்ள இவர்களுக்கு, வரி வருவாயில் 65% அளவு செலவிடப்படுவதாக தெரிகிறது.

இவர்களில் வாங்குகிற சம்பளத்துக்கு மனசாட்சியுடன் வேலை செய்பவர்கள் 5% க்கும் குறைவு தான் என்பது என் கருத்து.

இவர்கள் சரியாக இருந்தால், ஏன் ஒரு அரசு ஊழியர் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதில்லை? ஏன் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை எடுப்பதில்லை?

தனியார் துறைகளில் இல்லாத ஒரு மிகப் பெரிய பலம் ஒன்று இவர்களிடம் இருக்கிறது..."பணிப் பாதுகாப்பு". இடை நிறுத்தம் செய்யப்படும் போது கூட "பாதி" சம்பளம் கிடைக்கும். போதாக்குறைக்கு வருடத்தில் 220 நாட்கள் மட்டுமே வேலை, சங்கங்கள், ஓய்வூதியம்..மற்றும் பல. இன்னும் வர வேண்டிய ஒரே ஒன்று - "வாரிசு வேலை". அவ்வளவு தான். வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழலாம்.மற்றவர்கள் (கூலி வேலை ஆட்கள், சிறு வியாபாரிகள், தனியார் வேலையாட்கள், நன்கு படித்து வேலை கிடைக்காதவர்கள்) வயிறெரிந்து சாகலாம்.

இவர்களுக்கு "பணம்" தான் முதல் கோரிக்கை. மற்றதெல்லாம் உப கோரிக்கைகள் (just for formality) தான். முதல் கோரிக்கை நிறைவேறினால் மற்றதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். முதல் கோரிக்கையை விட்டு விட்டு மற்றதெல்லாம் நிறைவேற்றுகிறோம் என்று கூறிப் பாருங்கள். இவர்கள் "நல்லெண்ணம்" புரியும்.

எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்ற மனநிலையில், போராட்டத்தை நடத்துகிறார்கள். இது வெற்றி பெறக்கூடாது என்பது தான் என் கருத்து.

Anonymous said...

சூப்பர் கட்டுரை சார், நீங்க கோயம்புத்தூர்லே தானே இருக்கீங்க? உங்க பிள்ளையை பக்கத்தில் இருக்கும் ஏதாச்சும் அரசு பள்ளியில் சேர்த்துட்டு இன்னும் எழுதலாமே! அவ்வளவு ஏன்! முதலில் உங்க வீட்டுல அதுக்கு அனுமதி வாங்கிட்டு அப்புறம் இந்த கட்டுரையை எழுதுங்க!

Jaikumar said...

பிரபு குமாரசாமி அவர்களே...

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு நான், நீங்கள், மணிகண்டன் உட்பட தமிழகத்தின் இன்றைய பெற்றோர்களே குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள் ஏனென்றால் படித்தவர்களான (கற்றவர்களான அல்ல) நாம் நம் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திருந்தால் நாம் பள்ளிக்கு சென்று கல்வித்தரத்தை கேள்வி கேட்டு இருக்கலாம். நாம் தான் நமது குழந்தை(கள்) மற்ற குழந்தைகளை விட நன்றாக படிக்க (கற்க அல்ல) வேண்டும் என்று தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறோமே...

வருங்கால வைப்பு நிதி (PF) பற்றிய விவரங்களை இணையத்தில் பார்க்கலாம் என்கிறீர்கள். அது EPF க்கு பொறுந்தும். 2002ம் ஆண்டுக்கு பின்னர் அரசு வேலையில் சேர்ந்தோர் அனைவரும் Contributory Pension Scheme (CPS) திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர், PFல் அல்ல. CPSல் வரவு வைத்த பணத்தின் தற்போதைய மதிப்பு என்ன என்று எந்த அரசு ஊழியர்க்கு தெரியாது. உங்களுக்கு இணையத்தில் எப்படி தகவலைப் பெறுவது என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

Thirumalai Kandasami said...

CPS விவரங்களை கீழ்க்கண்ட இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்
http://cps.tn.gov.in/public/

kailash said...

@ Prabhu : PF Site is down for lot of days and moreover you can view the PF Data only if the funds deducted by your employer and company are paid into PF Systems . Hope you remember the status of Tamilnadu Transport Employees their PF and other retirement funds were not paid into relevant authorities . Even after 2 or 3 years their retirement benefits were settled , even after multiple judgements by court state govt has settled partially only . This is not govt money its the money contributed by employees .

Anonymous said...

இன்று பெரும்பாலான ஆசிரியர்களின் பகுதிநேர தொழில் கந்து வட்டி. ஏன் இப்படி? ஒன்று அதிக சம்பளம். மற்றொன்று குறைந்த வேலை மற்றும் வேலை பளு. இவர்களுக்கு இருக்கும் அந்த குறைந்த வேலையையும் யாரும் ஒழுங்காக செய்வதில்லை. எல்லா துறையை போல சில நல்லவர்கள் உண்டு.
இவர்கள் வேலை செய்யும் 8 மணிநேரத்தில் பாடம் எடுப்பது 3-4 மணி நேரம் மட்டுமே. மீதம் இருக்கும் நேரத்தில் ரியல் எஸ்டேட், எல் ஐ சி, எம் எல் எம், பங்கு சந்தை இது தான் தொழில். ஜியோ வந்ததும் போதும் இப்போ மிகுதி நேரம் வாட்ஸாப்.
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் வீட்டில் டியூஷன். இவர்கள் வாங்கும் சம்பளம் பத்தாது என்றா இந்த பிச்சை. பேராசை. அந்த வாத்தியார் வீடு வாங்கிவிட்டார், நான் வாங்க வேண்டாமா?
இன்றைய ஆசிரியர்களில் யார் ஏழையாக இருக்கிறார்கள்? அவர்களின் உண்மையான தகுதி அவர்களுக்கு தெரியுமா?

Thirumalai Kandasami said...

அரசு ஆசிரியர்களுக்கான PF யினை(employer + employee contribution ) GPF(Government PF) ல் முறையாக செலுத்தி வருகிறது . இதன் விவரங்களை எப்பொழுது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம்.

http://www.agae.tn.nic.in/onlinegpf/

Anonymous said...

The pension scheme was changed to contributory pension scheme because of the huge payout from the government exchequer YoY. Since the life expectancy has gone up on the average it was estimated that in a decade the pension payout percentage will higher than the salary for working individuals. Teachers or people who contribute to CPS has got every right to question about the CPS funds but going back to Old pension scheme will be a non-starter. Old pension scheme should be never implemented, question the government on CPS and the way its handled. In my home town the top money lenders are the government teachers - its a fact.

நந்தன் said...

அரசு ஊழியரின் பிள்ளை நீங்கள். இப்படித்தான் எழுதுவீர்கள். வேறு என்ன உங்களிடம் எதிர்ப்பார்க்க முடியும்! "ஊழலாக பணம் போகிறது, கமிஷனாக பணம் போகிறது. சம்பளமாக பணம் போனால் என்ன" என்று கேக்கும் மனோபாவத்தை என்ன சொல்வது.

இதற்கும் "அவன் அடிக்கிறான், அதிலே கொஞ்சம் நான் ஓட்டுக்கு பணம் வாங்கினால் என்ன தப்பு" என்று கேக்கும், நியாயப்படுத்தும் பொதுஜனத்திற்கும் என்ன வித்தியாசம்!

நந்தன் said...

பழைய ஓய்வூதியம் அன்றைய சராசரி இறப்பு வயதை கொண்டு கணக்கிட பட்டது. இன்றைய சராசரி இறப்பு வயது மிக அதிகமாக ஆகி விட்டது.

பழைய ஓய்வூதியபடி சராசரியாக ஒரு பேராசிரியர் ரூ 45,000 ஓய்வூதியமாக மாதம் பெறுகிறார். அவரது இறப்பு வயது 80 என வைத்து கொள்வோம். 58 வயதில் ஓய்வு பெற்றால் 22 வருடங்கள் ரூ 45,000 வெறும் ஓய்வூதியமாக பெறுகிறார். இது இப்போது சாத்தியமா என்று யோசியுங்கள்.

Asok said...

I would like to add my school experience, the school is government aided in the village. First of all, I agree there is many good teachers in our school,they are very punctual, give more attention to each students. Some teachers are not good because they are not coming to classes regularly, some of them expecting the students should go his home for tuition, they hit the students when the teachers get a chance. I know few teachers drink (alcohol) and take classes. Another worst thing is they are divided by communities (Sathi), if one community get headmaster position, the other community wont cooperate to that headmaster. Teachers should be example to the students, the good teachers or headmaster should have courage to talk to bad teachers but they never did. even though we students complained to good teachers, they cannot do anything. The school 12th grade results are not even 50% in 90s.
Again, I just pointed out why government schools quality gone down because some percent of teachers especailly good teachers did not even do anything. Now, the school does not even have 150 students from 6 to 12 standards.

Gowri said...

ஆசிரியர் போராட்டம் மக்களுக்கு புரிய வில்லை என சிலர் புலம்புகிறார்கள்.
எங்கள் புரிதல் கீழே... சரிதானா என போராளிகள் விளக்க வேண்டும்..:
...
1) உங்கள் வேலைக்கு மீறிய சம்பளம் பெற்று கொண்டு, உங்கள் கடமையை சரியாக செய்யாமல் நீங்கள் இருக்கும் போது , உங்கள் cpf epf பற்றி எல்லாம் யார் கவலை பட போகிறார்கள்..
2) இத்தனை கால பணியில் அரசு பள்ளிகள் மேம்பட என்ன செய்து இருக்கிறீர்கள்...?
3) அரசு பணியில் இருக்கும் யாராவது ஒருவரின் மனைவி / கணவர் கள்தான் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணிகளில் இருக்கிறீர்கள்.
இதன் மூலம் இரண்டாவது மற்றும் உபரி வருமானமாக தான் ஆசிரியர் பணி சம்பளம் உங்களுக்கு கொட்டுகிறது.
4) இவ்வளவு சம்பளம் வாங்கும் நீங்கள் கேவலம் உங்கள் குழந்தைகளை கூட அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை
5) ஊரில் வட்டிக்கு விடுவது , ரியல் எஸ்டேட் வியாபாரம் இவைகளில் பெரும்பாலும் ஈடுபடுவது நீங்களே.
6) உங்களிடம் 10 m வகுப்பு படிக்கும் மாணவன் தனியார் பள்ளிகள் 6 m வகுப்பு படிக்கும் மாணவனுக்கு ஈடாக கூட அறிவை பெற முடியவில்லையே..
அது எப்படி...?
7) அதே சமயம் தனியார் கல்லூரிகளில் வேலை செய்யும் பிராஃபெசர் சம்பளம் அரசு பள்ளியில் 5 m வகுப்பு ஆசிரியரை விட குறைவு.. இது நியாயமா...?
8 ) உங்கள் அலுவலக பையில் ஆனந்த விகடன் , குமுதம் , குங்குமம் என அறிவு சார்ந்த புத்தகங்களை தவிர கல்வி சார்ந்த புத்தகங்களை ஒரு நாளும் நாங்கள் பார்த்தது இல்லயே ஏன்...?
.....
உங்கள் பதிலை அன்புடன் எதிர் பார்க்கிறோம்..

Bhaskar said...

//இந்தச் சமூகமே Corrupted Societyதான் //
Entire society is not corrupted. Few people have clean hand.
Live example - nisaptham trust.

Anonymous said...

பெரும்பாலும் ஆசிரியர்கள் tuition ,பணம் வட்டிக்கு விடுதல் ,ரியல் எஸ்டேட்
ஆகியவற்றில் நன்கு காசு பார்த்து விடுகிறார்கள். NPS (நேஷனல் பென்ஷன் ஸ்கீம்
எல்லா துறைகளிலும் 2012 ஆண்டிலிருந்து துவங்கப்பட்டுவிட்டது. புதிதாக அரசு
வேலைகளில் சேருபவர்கள் இது தெரிந்துதான் பணியில் சேருகிறார்கள்.
ரயில்வே துறையில் 52000 பணியிடங்களுக்கு 19 கோடி பேர் விண்ணப்பித்து
இருக்கிறார்கள் . இந்த அளவுக்கு வேலை இல்லாதவர்கள் இருக்கும்போது
இவர்கள் கோரிக்கைகள் அநியாயாமானவை . UNORGANAISED SECTOR பணிகள்
எவ்வளவு கடினமானவை என்பது அனைவருக்கும் தெரியும். THE ENTIRE AGITATION IS
POLITICALLY MOTIVATED TAKING ADVANTAGE OF THE ABSENCE OF A MASS POLITICAL LEADER IN TAMILNADU.

Anonymous said...

இதே போராட்டத்தை ஜூன் ஜூலை பண்ண மாணவர்களுக்கு அதிக பாதிப்பு இல்லை, ஏன் தேர்வு பக்குத்தல இருக்குற இந்த ஜனவரி பிப்ரவரி மாசத்துலதான் பண்ணனும்.

ஆனா அப்ப எலெக்ஷன் இல்லையே

selvaraj said...

அரசுப்பள்ளி ஏழைமாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக நிசப்தம் அறக்கட்டளை வழியாக பல்வேறு உதவிகளை செய்வதின்மூலம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் நெருக்கமான தொடர்பில் இருக்கும் நீங்கள் இப்படித்தான் கட்டுரை எழுத முடியும். அதை புரிந்துகொள்கிறேன். மார்ச் மாதத்தில் ஆண்டிறுதி தேர்வு (பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு) வருகிறது இந்தநேரத்தில் போராட்டம் நடத்துவது பொதுநலம் கொஞ்சமும் இல்லாத அப்பட்டமான சுயநலம்தான். உண்மைதான் பிற துறையை சார்ந்த அனைவருக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களின் மீது பொறாமைதான், ஏன்? இப்போது இருக்கும் அரசுவேலைகளில் மிக குறைந்த நேர பணியும், (அதிக விடுமுறையும்) அதிகமான ஊதியமும் வழங்கப்படுவது ஆசிரியர்களுக்குத்தான். என் வீட்டில் யாராவது அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக இருந்திருந்தால் நானும் போராட்டம் சரியானது என்றுதான் பசப்பியிருப்பேன். காசுகொடுத்தாவது அரசாங்கத்தில் தற்காலிக பணியாளராக கூட ஏன் சேருகிறார்கள் ஒரு இரண்டுமூன்று வருடம் தாண்டியபின்பு போராட்டம்நடத்தி நிரந்தரமாகலாம் என்ற ஆசைதான்.
தேர்தல் நேரத்தில் வாக்கு பதிவு மையத்தில் ஆசிரியர்கள் உதவுவார்கள் என்றுதான் ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும்போது தி மு க ஆட்சியாளர்கள் இவர்களின் ஊதியத்தை உயர்த்தி வழங்க தொடங்கினர், இப்போது மின்னணு வாக்குப்பதிவு என்பதால் இவர்களின் தேவை முன்பைப்போன்று இல்லை. வாக்குசீட்டு முறையில்வாக்குப்பதிவு நடந்தால் இப்போதும் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி தேர்தல் அலுவலர்களாக பணியாற்றும் அரசு ஆசிரியர்கள்தான். இதனால்தான் முன்பு அனைத்து ஆட்சியாளர்களும் அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்தனர்.சமீபத்தில் நடந்தபோக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தின்போது பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தபோதும் போராட்டத்திற்கு ஆதரவான மனநிலையில்தான் இருந்தனர், ஏனென்றால் போக்குவரத்துக்கு ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது.
இப்போது கூட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் பணி செய்யும் பள்ளிக்கூடத்தில் மாணவரின் சேர்க்கையை அதிகரிக்க எடுக்கும் எந்த முயற்சியும் ‘மாணவரின் சேர்க்கை குறைந்தால் தங்களுக்கு வேறு பள்ளிக்கூடத்தில் பணி செய்ய உத்தரவு வருமென்றுதானே ‘தவிர ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு இல்லை (இதை கூட பொதுநலத்தில் சுயநலமாக ஏற்றுக்கொள்ளலாம் தவறில்லை ). பொதுவாக கேட்கலாம், அப்படியென்றால் அரசு ஆசிரியர்களில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்யும் ஆசிரியர்களே இல்லையா என்று - இருக்கிறார்கள்தான் ஆசிரியர் திரு. அரசு தாமஸ் போன்று ஆத்மார்த்தமாக கல்வி பணி செய்யும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மிக சொற்பம். (இரண்டு நாட்களாக அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன். பெரும்பாலான பின்னூட்டங்கள் மக்களின் மனநிலையை இங்கே பதிவு செய்துள்ளன )

selvaraj said...

@சேக்காளி உங்களின் பின்னூட்டத்தை படித்தவுடன் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. இரண்டே வரி. நச்...

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

எனக்கு 1961-ல் தற்போதைய ஈரோடு மாவட்டம் ஞானிபாளையம் என்ற ஊரில் ESLC என்ற பொதுத்தேர்வுக்கான ஆயத்தங்கள் செய்து ஆங்கில இலக்கணம் நன்கு கற்பித்த-அதையே நான் பட்டவகுப்பு வந்தபோது கல்லூரியில் நடத்தினர். அந்த அளவிற்கு அப்போதே கற்று கொடுத்த என் அருமை ஆசான் இறைநிலை.S.D.SUBRAMANAM அவர்களை இன்றும் கும்பிட்டு வருகிறேன்.வாழ்க வளமுடன்.பேராசிரியர்.கோபாலகிருட்டிணன்
9994240629 9344053440

Anonymous said...

Whoa! This blog looks exactly like my old one! It's on a entirely different subject but it has pretty much the same
page layout and design. Wonderful choice of colors!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கௌரி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான பதில்கள்
நான் போராளி அல்ல
உங்கள் பதிலை அன்புடன் எதிர் பார்க்கிறோம்..
1. தகுதிக்கு மீறிய சம்பளம் என்று எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். உரிய தகுதியுடன் தேர்வு எழுதி வேலைக்கு வந்த்தவர்கள் தான் அனைவரும். இன்னொருவர் ப்ரச்சனையை உங்களால் உணர முடியாது.
2.அரசு பள்ளி மேம்பட ஆசிரியர்கள் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது. அரசு பொதுமக்கள் அனைவருக்கும் இதில் பங்கு உண்டு. சரியாக பாடம் நனத்துவது மட்டுமே ஆசிரியர்கள் பொறுப்பு.
3. பொறாமையில் வைக்கும் குற்றசாட்டாக இருக்கிறது.எல்லா ஆசிரியரின் மனைன்வி/ கணவன் இருவரும் ஆசிர்யர்கள் அல்ல. அப்படி இருப்பினும் அவர்கள் தகுதியில் அவர்களாசிரியர் பணிக்கு வந்திருக்கிறார்கள். அதில் உஙளுக்கு ஏன் காழ்ப்புணர்வு. கணவன் மனைவி இருவரும் ஆசிரியராக இருந்தால் ஒருவர் சம்பளம் குறைவாக வாங்க வேண்டுமா என்ன? .அவர்வர் படித்து முன்னேறி தேர்வு எழுதி வேலையில் சேர்கிறார்கள்.
4. இது பொதுவானது மக்களின் மனநிலை ஆங்கில மீடியத்தில் படிக்க வைப்பது. அதில் அனைவருமே குற்றவாளி நீங்களூம்தான் அந்தப் பொதுமக்கள் இவர்களும் சேர்ந்ததுதானே. அரசு பள்ளிகளில் ஆங்கில வழி குறைவு அதனால் தனியார் பள்ளிகளில் ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள்.
5. தவறான பார்வை.அப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள்? ஒரு வேளை உங்கள் உறவினர் யாரேனும் இருக்கலாம். ரியல் எஸ்டேட் பிசினஸ் எனறால் அரசு வேலையே தேவை இல்லை. முப்பது ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டியதை சில ஆண்டுகளிலேயே சம்பாதித்து விடலாம்.
6. தவறான ஒப்பீடு தனியார் பள்ளிகளில் பெற்றோரின் கல்வை அறிவைப் பார்ப்பது மட்டுமின்றி மாணவர்களுக்கு டெஸ்ட் வைத்து ஏடுக்கிறார்கள். சேர்த்த பின் மார்க் கொஞ்சம் குறைந்தாலும் டிசி கொடுத்து அனுப்பி விடுவார்கள். அரசு பள்ளி வேறு எந்தப் பள்ளிகளிலும் இடம் கிடைக்காதவர்கள், குழந்தைகளின் கல்வியில் அக்கறை செலுத்தாத பெற்றோரின் கவனிப்பின்றி இருக்கும் குழந்தைகள், பள்ளியைத் தவிர வீட்டில் புத்தகத்தை எடுக்காத குழந்தைகள்தான் படிக்கிறார்கள். ஏன் மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளிகளை அரசு பள்லிகளில்தான் எந்த வித நிபந்தனையுமின்றி சேர்க்கிறார்கள். எங்கே ஏதாவது ஒரு தனியார் பள்ளியை சொல்லுங்கள் மெண்டலி ரிடார்டு குழந்தைகளை சேர்த்திருக்கிறார்க்ள் என்று. அவர்களுடன் படித்த ஆசிரியரை விட அதிகமாக சொல்லிக் கொடுக்கும் பெற்றஓரைக் கொண்ட மாணவர்களூடன் ஒப்பிடுவது முட்டாள்தனம். அரசு பள்ளிகளில் படிக்கும் பலர் தனியார் பள்ளியால் மக்குகள் என்று நிராகரிக்கப் பட்டவர்கள் என்று உங்களுக்கு தெரியுமா?
7.ஆஹா தனியார் கல்லூரிகளின் ப்ர்பொசர் லட்சணம் உங்களுக்குத் தெரியாதா? அவர்கள் சொல்லிக் கொடுக்கும் லட்சணம்தான் பல பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் மேல் அரியர்ஸ் வைக்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படிப்பவராக இருந்தால் அவர்களிடம் கேட்டுப் பாருங்கல் ப்ரொபசரின் தரத்தைப் பற்றி.
8. நீங்கள் எப்போது ஆய்வு செய்தீர்கள் அவர்களின் பைகளை. வகுப்பறையில் தான் அந்தப் புத்தகங்கள் படிக்கக் கூடாதே தவிர பேருந்து ரயிலில் செல்லும்போது படிப்பதில் தவறென்ன இருக்கிறத், மேலும் குமுதம் ஆன்ந்த விகடன் படிக்கும் தலைமுறை எல்லாம் 15 ஆண்டுகளுக்கு முன்பே போய்விட்டது. உங்கள் உறவினர் யாரோ அப்படி இருந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக ஒன்று புரிகிறது ஆசிரியர்கள் மீதான பொறாமையில் இந்த சமுதாயம் இருக்கிறது என்பது. ஒருவர் சரியாக பணி செய்யவில்லை என்றால் அதை கண்கானிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. நீங்கள் சரியாக பணி செய்யவில்லை . அப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனால் உரிய சம்பளம் கேட்காதீர்கள். சம்பளம் கேட்காதவரை நீங்கள் எப்படி பணி செய்தாலும் பரவாயில்லை என்ப்துபோல் உள்ளது. ஊதியம் என்பது ஏதோ எணொ தானோ என்று கொடுப்பது அல்ல. அத்ற்கென்று வல்லுந்ர் குழுவைத்துதான் நிர்ணயிக்கப் படுகிறது. இதை அதிகம் என்று சொல்வர்கள் அரசு வேலை கொடுத்தால் குறைவான சம்பளம் கொடுத்தால் ஏற்பார்களா. அப்படி தற்காலிகமாக குறைவாக பணியில் சேர்பப்வர்க்ளும் எப்படியாவது நிரந்தரமாக முழு சம்பளம் பெற்று விடலாம் என்று நம்பிக்கியில்தான் பணியில் சேர்வார்கள். இப்போது போராடிக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் 3000 மற்றும் 4000 போதும் என்று வந்தவர்கள்தான்.ஆசிரியர்கள்தான் ரேஷன் அட்டை கண்க்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆண்டு முழுவ்தும் அவ்வப்போது வாக்காளார் சேர்ப்பு கணக்கெடுப்பு,ப்ள்ளி வயது பிள்ளைகள் கணக்கெடுப்பு என பல்வேறு பணிகளில் விடுமுறை நாட்களில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். மானவர்களுக்கு எதிர்பாராவிதமாக ஏதாவது நடந்து விட்டால் முதல் பலி ஆசிரியர்தான். தனியார் பள்ளிகளில் என்ன நடந்தாலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இருப்பார்கள்.

இரா. பாலா said...

1)நான் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்து சரியான் ஆசிரியர்கள் இல்லாமல் கிட்டத்தட்ட 80 மாணவர்களுடன் 2001 ம் ஆண்டில் இயங்கிங்கொண்டிருந்தது. புரட்சி புண்ணாக்கு எனப் பேசித்திரிந்த நான் அப்பள்ளியில் சம்பளம் வாங்காத தன்னார்வ ஆசிரியராக வேலை செய்தேன். காலை 10-1 மற்றும் 2-4 வரை மட்டுமே இயங்கும் அரசுப் பள்ளி அது. இதில் 20 நிமிடம் ஓய்வு. ஆக அவர்கள் பணிபுரிவது வெறும் 4 மணி 40 நிமிடங்கள் மட்டுமே. இதில் அவர்களுக்கான வராட்திர விடுமுறை நாட்கள் அரசு விடுமுறை நாட்கள் எல்லாம் சேர்த்துக் கணக்கிட்டால் அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளம் விழலுக்கு இறைந்த நீர் எனப் புரியும். மாணவர்களை மரியாதைக் குறைவாக நடத்துவது, தேனீர் வாங்க கடைகளுக்கு அனுப்புவது. வீட்டுப்பாடம் திருத்தும் போது நோட்டினை எடுத்துக் கொடுக்க எடுபிடி மாணவன் ஒருவனை டெஸ்கின் அருகில் நிறுத்துவது. மாணவர்களின் கல்வித்தரம் அதலபாதாளம். விருப்பமில்லாத வேலையில் தொடருவதைவிட வேலையை விட்டுவிட்டுச் செல்வதே மேல். தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இப்போது இதே போல வேலை நிறுத்தம் செய்தால் இதே பள்ளி ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்வார்கள என்ன? ஆசிரியர்களின் குழந்தைகள் ஏன் அரசுப் பள்ளியில் படிக்க வைப்பதில்லை என ஏதாவ்து ஒரு ஆசிரியர் விளக்குவாறா என்ன?
2) சமீபத்தில் சில நூறு ஆசிரியர்களுக்கு கணினி பயிற்சி அளிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெக்கக்கேடு கணினியின் அடிப்படை இயக்கமுறை கூட தெரியாமல் விழித்தவர் 50% அதிகம். ஆசிரியர்களின் தரம் இதுவே.
3) சமீபத்தில் ஒரு ஆசிரியை தரம் கெட்ட முறையில் மை முன்னால் முழங்கியிருந்தார். வேலையில் சேருவத்ற்கும் பயிற்சி வைக்கிறார்கள் என தகுதி இருந்தால் எத்தனை பரிட்சை வைத்தாலும் தேர்வு பெறலாமே? ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்து அரசு தனியார் வேலைகளுக்கும் தேர்வு வைக்கிறார்கள்.
4) ஆசிரியர்களின் உப தொழிலாக; வட்டிக்கு விடுதல், புரோக்கர் வேலை, சிறுசிறு வியாபாரம் (ஆம் வே போல), இன்சூரன்ஸ் முகவர் (குடும்பத்தில் உள்ள மனைவியோ வேறு எவரோ ஏஜெண்டாக இருப்பர்) ஆகிய வேலைகளைப் பணி நேரத்தில் செய்யும் ஆசிரியர்களை தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும்.

Ramesh L said...

இந்த அதிகார பிச்சை கேட்கும் ஜாக்டோ ஜோ ரௌடிகலை எளிதாக வழிக்கு கொண்டு வந்து விடலாம். வெரி சிம்பிள். தனியார் பள்ளிகளில் ஆசிரியர் வேளைகளில் இருப்பவர்களை நேர்முக தேர்வு வைத்து இந்த இடங்களை நிரப்புவோம் என்று அறிவிக்க வேண்டும். அப்படி அறிவித்தால் மூடி கொண்டு வேளைக்கு திரும்பிவர். தனியார் பள்ளியிலிருந்து வருபவர்களை அதே தரமுடம் பாடம் எடுக்க ஒரு மாடல் ரெடி செய்ய வேண்டும் .

ஜெயா போன முறை இவர்களை அடித்த அடியில், அடுத்த எலெக்ஷனில் காட்டினார்கள். இந்த முறை EVM இருப்பதால் , இவர்கள் பாச்ச பலிக்காது.

கண்ணன் கரிகாலன் said...

அரசு ஊழியர்கள் தவிர மற்ற பொது மக்களின் மனநிலை இந்த போராட்டத்துக்கு எதிராக உள்ளது. அது இந்தத் தளத்திலும் வெளிப்படை.
குரு... தெய்வம் என்ற வழிபாட்டு மனநிலை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இன்றும் அவர்களை நினைவு கூர்ந்து போற்றுகிறோம்.
கைமாறு கருதாமல் பணியாற்றினார்​கள் அன்றைய ஆசான்கள். ஆசிரியர்களின் வசதி வருமானம் ஊரின் பெரும்பான்மையை விடக் குறைவு.
ஊர் மக்கள் ஆசிரியர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தனர்.

இன்று நிலை மாறிவிட்டது. 10 ஏக்கர் விவசாயம் செய்கிற ஒரு விவசாயி ,சிறு தொழில் முனைவோர், தனியார்துறை பொறிஞர் மருத்துவர், சிறு வியாபாரிகளை விட அரசுப் பணியாளரின் ஆண்டு வருமானம் அதிகம். மற்ற பணிகளில் பணி நேரம் பணிப்பளுவுடன் ஒப்பிட அரசு அதிகாரி, ஆசிரியர் வேலை குறைவு வருமானம்​ அதிகம்.
லஞ்சம் வாங்காத கேட்காத அரசு அதிகாரி மிகக் குறைவு. சாமானியர்களிடமும் கை நீட்டக் கூசுவதில்லை.

செய்யும் பணிக்கு அவர்களுக்கு இன்னும் சம்பளம் கூடுதல்தரலாம் என்று​ பொதுவாக யாரும் கருதும் நிலை இல்லை. லஞ்சம் வாங்காத நிலை வரப்போவதுமில்லை.
தேர்வுகள் அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், தேர்தல் வரும் நேரத்தில்
இவர்கள் வேலை நிறுத்தம் கண்டிக்க/ தண்டிக்கத் தக்கது. உள் நோக்கம் கொண்டது.
சேக்காளி said...

//selvaraj said...
@சேக்காளி உங்களின் பின்னூட்டத்தை படித்தவுடன் குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது. இரண்டே வரி. நச்...//
நன்றி
இப்ப திரும்ப வாசிச்சா எனக்கும் குபீர்

சேக்காளி said...

//அரசு பள்ளி மேம்பட ஆசிரியர்கள் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.//
டி. என் முரளிதரன்.
இந்த மனுசன் வா.மணிகண்டன் ஆசிரியர் இல்ல. அவரு இழுத்து போட்டு இவ்வளவு செய்யும் போது ஆசிரியர்களாலும் கொஞ்சமாவது முடியும் யுவர் ஆனர்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//சேக்காளி //
எல்லோரும் வா.ம ஆக முடியாது. அவர் ஒரு உந்துதலாக இருப்பார் என்பதில் ஐயமில்லை
/அரசு பள்ளி மேம்பட ஆசிரியர்கள் மட்டும் முழுவதும் செய்ய முடியாது./ என்று இருக்க வேண்டும். ஃபேஸ் புக் போல கம்மெண்ட் திருத்த முடிவதில்லை) நிறைய ஆசிரியர்கள் சிறப்பான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள் எல்லா வகை மனிதர்களிலும் (மாணவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள்,அரசியல் வாதிகள்,அரசு பணியாளர்கள், ஐ.ஏ.எஸ் கலைஞர்கள்) சராசரி சராசரிக்கு மேல், சராசரிக்கு கீழ் : என்று மூன்று வகை உண்டு. இதில் சராசரிகளே அதிகம் இருப்பார்கள். இது ஆசிரியருக்கும் இருக்கும்.பொது மக்களில் சராசரி எப்படி இருக்கிறதோ அப்படித்தான் ஆசிரியர்களின் சராசரியும் இருக்கும். எதையும் மற்றவர்களுக்கு சொல்வது எளிது. அதைக் கடைபிடிப்ப்து மணிகண்டன் போன்ற ஒரு சிலரால் மட்டுமே முடியும். ஆசிரியப் பணிக்கு புனித பிம்பத்தை இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்துள்ளது. அது சரியல்ல.மருத்துவர் பணி உட்பட எந்தப் பணியும் புனிதமானதும் அல்ல தாழ்வானதும் அல்ல. அவரவர் பணியை கடமையை மனசாட்சியுடன் சரியாக செய்தால் போதுமானது. அப்படி செயலாற்றுபவர்கள் மேற்சொன்ன மூன்று வகைகளுள் அடங்குவர். உண்மையில் யாரும் சேவை செய்ய(சில விதிவிலக்குகள் இருக்கலாம்) பணியை தேர்ந்தெடுப்பதில்லை. வேலை வாய்ப்புக்காகவும் ஊதியத்துக்காகவும் எந்தப் பணியும் செய்யப்படுகிறது. இராணுவத்தில் சேர்பவர்களும் நாட்டுப் பற்று காரணமாக சேர்வதில்லை. அதுவும் வேலை வாய்ப்பாகவே கருதப்படுகிறது. வேலையில் சேர்ந்தவுடன் தங்களின் நாட்டுப் பற்றை வெளிப்படுத்த தயங்குவதும் இல்லை.

Anonymous said...

After reading the post and the feedback as comments, it appears the people are carefully brainwashed to think all their evils in life are created and done by govt servants. The politicians are very good people image, specially in central politico image is enhanced by blaming everyone in the implementation part of govt , specially middle and lower middle income. These people are made villain to project their inability to curb the Mafia behind corruption. So, the common man is made to think their poverty or problems in livelihood are created by those who earn regular wages from govt.Tteachers hence are no exception. This vicious cycle of blaming his neighbourhood spread to caste, religion and finally govt servants. A clever way to handle elected representatives inefficiency. Hope, this is brought out in bigger way before elections.

Anonymous said...

It’s appropriate time to make some plans for the future and it is time to be happy.
I’ve read this post and if I could I wish to suggest you some interesting things or suggestions.
Maybe you could write next articles referring to this article.
I desire to read more things about it! Wow! This blog looks just
like my old one! It's on a completely different subject
but it has pretty much the same page layout and design. Great
choice of colors! I am sure this paragraph has touched all the internet people, its really really good article on building up
new webpage. http://cspan.org

Anonymous said...

Your payments change as your revenue changes.