Nov 19, 2018

டெல்டா மக்களுக்காக

சென்னை ட்ரெக்கிங் க்ளப் குழுவினர் ஏற்கனவே டெல்டா பகுதிகளுக்குச் சென்றுவிட்டார்கள். குழுவின் பிற உறுப்பினர்கள் சென்னை முழுவதும் பரவலாக பொருட்களை சேகரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட பொருட்களுடன் முதல் வாகனம் இன்று சென்னையிலிருந்து கிளம்புகிறது. தொடர்ச்சியாக பொருட்களைச் சேகரித்து அனுப்பி வைப்பதாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். 



‘நிறையப் பேர் பணம் அனுப்புவதாகச் சொல்கிறார்கள். நிசப்தம் வழியாகப் பெற்றுத் தர முடியுமா?’ என்று குழுமத்தினர் வினவினார்கள். அதுவொன்றும் பிரச்சினையில்லை. தனிப்பட்ட நபர்களுக்கு அறக்கட்டளையிலிருந்து பணம் வழங்குவது சரியாக இருக்காது; நிறுவனங்களின் பெயர்களுக்கு நேரடியாகக் கொடுத்துவிடலாம் என்று சொல்லியிருக்கிறேன். பணம் சேர்ந்த பிறகு, எந்தப் பொருட்கள், எந்தக் கடை என்று முடிவு செய்தால் கடைகளின் பெயர்களுக்கு அறக்கட்டளையிலிருந்து நேரடியாகப் பணத்தைக் கொடுத்துவிடலாம். கடைக்காரர்களிடமிருந்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம்.

பேரிடர் நிவாரணப்பணிகளில் ‘இப்படித்தான்’ என்று எல்லாவற்றையும் முழுமையாகத் திட்டமிட்டு களத்தில் இறங்குவது சாத்தியமில்லை. போகிற போக்கில் சில முடிவுகளை எடுக்க வேண்டும். சென்னை ட்ரெக்கிங் குழுமம் மிக வெளிப்படைத்தன்மையானவர்கள். அர்ப்பணிப்புணர்வு கொண்டவர்கள். அவர்களுடன் எந்தவித தயக்கமுமில்லாமல் துணிந்து வேலை செய்யலாம். 

சென்னை ட்ரெக்கிங் குழுமத்தினர் நிசப்தம் கணக்கு விவரங்களை தமது குழுவில் அவர்கள் பகிரத் தொடங்கியவுடன் பணம் வரத் தொடங்கியிருக்கிறது.  

நேற்றைய தினம் நிசப்தம் அறக்கட்டளையின் வரவு செலவு கணக்கு விவரங்கள் வெளியிடப்பட்டது. பதினைந்து லட்சத்து எழுபத்தாறாயிரத்து அறுநூற்று முப்பத்தொன்பது ரூபாய் இருந்தது. (ரூ. 15,76,639.18) இன்றைய தினம் (19 நவம்பர் 2018) முதல் அறக்கட்டளையின் கணக்குக்கு வரக் கூடிய தொகையானது முழுமையாக டெல்டா பகுதிகளின் வெள்ள நிவாரணப்பணிகளுக்கு வழங்கப்பட்டுவிடும். சேரும் தொகைக்கு ஏற்ப அவ்வப்பொழுது வங்கியின் கணக்கு விவரங்களை நிசப்தம் தளத்தில் வெளியிட்டுவிடலாம். பணம் கொடுத்தவர்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இன்றைக்கு டெல்டா நிவாரணப்பணிகளுக்காக அறக்கட்டளைக்கு வந்திருக்கும் ஒரு லட்சத்து பதின்மூன்றாயிரத்து இருநூறு ரூபாய் (ரூ.1,13,200.00) வங்கி ஸ்டேட்மெண்ட் இது-


குழுவினர் சேகரிக்கும் பொருட்கள்:

1. போர்வை
2. டார்ச் (அல்லது) சோலார் விளக்கு
3. வேஷ்டி,சேலை (புதியன மட்டும்)
4. லுங்க், துண்டு, நைட்டி(புதியன மட்டும்)
5. ஓடோமாஸ்
6. தார்பாலின்
7. அடிப்படையான சமையல் பொருட்கள்
8. மெழுகுவர்த்தி, தீப்பெட்டி.

பொருட்களைச் சேகரிக்கும் இடங்கள்:

சோழிங்க நல்லூர்: வேலம்மாள் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, ராஜீவ்காந்தி சாலை, சோழிங்கநல்லூர் (எண்: 9442744640/9597119618)
திருவான்மியூர்: நேச்சுரல்ஸ், 25/3, கிழக்கு மாதா தெரு, திருவான்மியூர் (எண்: 9840130464/48590310)
தாம்பரம்: G5, ரூபி வொயிட் ஹவுஸ், காந்தி பூங்கா அருகில், பரத்வாஜர் தெரு, கிழக்கு தாம்பரம் (9003259872/7845780996)
வேளச்சேரி: F3, ப்ளாட் எண்: 333, சபையர் நெஸ்ட், வள்ளல்கரி தெரு, மடிப்பாக்கம், சென்னை 91 (98438011043)
தி.நகர்: காபி சாஸ்த்ரா, 45, கே.சி.என்களேவ், பஸுல்லா சாலை, தி.நகர் (பார்பி க்யூ நேஷன் அருகில்)
வளசரவாக்கம்: #73, காமராஜர் தெரு, இந்திரா நகர், சிவன் கோவில் குளம் பின்புறம், வளசரவாக்கம் (எண்: 9841166554)
திருநெல்வேலி : வேதிக் வித்யாஸ்ரமம் பள்ளி, மதுரை சாலை, தச்சநல்லூர், திருநெல்வேலி (95850 12345, 0462-2325101,102)
மதுரை: வேலம்மாள் நினைவு மெட்ரி மேல்நிலைப்பள்ளி, பேச்சிகுளம் திருப்பாலை, மதுரை (04522683101 / 103)
காரைக்குடி: தி லீடர்ஸ் ஜூனியர் பள்ளி, சேக்களை இரண்டாம் தெரு, பி.கே.என் மருத்துவமனை அருகில், காரைக்குடி(9944164374)
பொள்ளாச்சி: தமிழம் மீன் வலையகம், பவர் எலெக்ட்ரிக்கல் அருகில், ஏடிஎஸ்சி திரையரங்கம் அருகில், பொள்ளாச்சி (9715405653)
தென்காசி: வேல்ஸ் வித்யாலயா, முத்துராமலிங்கம் கார்டன், தென்காசி-திருமலைக்கோயில் பிரதான சாலை, எலத்தூர், செங்கோட்டை (9486457665)
அம்பாசமுத்திரம் : வேல்ஸ் வித்யாலயா, ராஜேஸ்வரி கார்டன், தென்காசி பிரதான சாலை, மன்னர் கோயில், அம்பாசமுத்திரம் (9994031302)
நாகர்கோவில் : அண்ணாச்சி ஆர்கானிக் கடை, வெள்ளடிச்சிவிளை, கோட்டார், நாகர்கோவில் (9789433783)

நன்கொடையை பணமாக அனுப்ப விரும்புகிறவர்கள் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு அனுப்பி வைக்கலாம்.

Account Number: 05520200007042
Account Holder Name: Nisaptham Trust
Account Type: Current
Bank : Bank Of Baroda
State : Tamil Nadu
District : Erode
Branch : Nambiyur
IFSC Code : BARB0NAMBIY (5th character is zero)
SWIFT Code: BARBINBBCOI
Branch Code : NAMBIY (Last 6 Characters of the IFSC Code)
City : Nambiyur

தொடர்ச்சியான விவரங்களுக்கு:
www.nisaptham.com

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Did you accept donations via Google pay or Bhim ?

Vaa.Manikandan said...

@Frank, No, its bank to bank transfer.

Mani said...

Any Collection Centres in Bangalore ??

Arun Prasath Bakthavatchalam said...

@Mani sir,

Please reach out Siva (98940 69761) for contributions from Bangalore.

Ram said...

காரைக்குடி முகவரியில் காணப்படும் 'சேக்களை' என்பது 'செக்காலை' என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

Anandh said...

Can you verify contact number for Velachery. The one given has 11 digits.

SC said...

It is better to create a BHIM UPI id, so that users can easily transfer instead of adding bank details, waiting till banks activate and then to transfer.