டெல்டா பகுதிகளில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. சிங்.ஜெயக்குமார் என்றொரு நண்பர் புஷ்பவனத்திலிருந்து நேற்று அழைத்தார். ‘நாங்க நாலாயிரம் பேர் இருக்கோம்...அரிசி கூட கிடைச்சுடுது..ஆனா பருப்பு, காய்கறியெல்லாம் ஒண்ணுமே இல்லைங்க..ஏதாச்சும் செய்யுங்க’ என்றார். ஒரு முகாமில் தங்கி சமைத்து உண்கிறார்கள். அவரிடம் செல்ஃபோன் இல்லை. பிஎஸ்என்எல் மட்டுமே வேலை செய்கிறது. நண்பர் ஒருவரிடமிருந்து அழைத்துப் பேசினார். திரும்ப அழைத்தால் இணைப்பு கிடைப்பதில்லை. இன்று மாலையில் ஓரளவு பொருட்கள் சென்றிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் போதாது என்றுதான் நினைக்கிறேன்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நிறைய நிவாரணப் பொருட்கள் செல்கின்றன. ஆனால் யானைப்பசிக்கு சோளப்பொரி என்கிற கதையாகத்தான் இருக்கும். ஏகப்பட்ட கிராமங்கள் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கிடக்கின்றன. மின்சாரமில்லை. உணவுப்பொருட்கள் இல்லை. செல்போன் வசதியில்லை என்று திண்டாடுகிறார்கள். பல கடைகள் புயலில் சேதமடைந்துவிட்டதால் எந்தப் பொருட்களும் உள்ளூரில் கிடைப்பதில்லை. அதனால்தான் நமக்கு பாதிப்பின் முழுமையான பரிமாணம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இன்னமும் ஏகப்பட்ட கிராமங்கள் பற்றி மெல்ல மெல்லச் செய்திகள் வரக்கூடும். இப்பொழுதுதான் சில சாலைகள் சரி செய்யப்பட்டிருக்கின்றன. இன்னமும் இயல்பு நிலைமை திரும்ப பல நாட்கள் ஆகக் கூடும் என்றார் ஜெயக்குமார்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் தன்னார்வலர் குழுக்களில் இணையுங்கள். களப்பணிக்கும், பொருட்களை எடுத்துச் செல்வதற்குமான நிறையத் தேவையிருக்கிறது. எந்த ஊர்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து அங்கே எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
நிசப்தம் அறக்கட்டளைக்கு கடந்த இரண்டு நாட்களில் டெல்டா நிவாரண உதவிகளுக்கு என ரூ 6,17,027.00 (ஆறு லட்சத்து பதினேழாயிரத்து இருபத்தேழு ரூபாய் வந்திருக்கிறது). அதில் முப்பதொன்பதாயிரம் ரூபாய் தார்பாலின் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (வரிசை எண் : 95). முழுமையான வங்கி அறிக்கை (Bank Statement) கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
Opening Balance: Rs. 15,76,639.18
Donations:Rs. 6,17,027.00
Material Purchase: Rs.39,000
Remaining Amount: Rs. 5,78,027.00
ஏதேனும் சந்தேகமிருப்பின் vaamanikandan@gmail.com
3 எதிர் சப்தங்கள்:
ஈரோட்டில் நிவாரணப் பொருட்கள் திரட்ட ஏதேனும் மையம் அமைக்கப்பட்டுள்ளதா?
Is their a UPI handle to do the transfer?
உங்களுடைய பதிவுகள் மிகவும் அருமை.
நானும் பதிவுகள் வெளியிடுகிறேன் எனது பக்கத்தில்.
படித்து பார்த்து உங்களது கருத்துக்களை கூறுங்கள்.
https://thiraviyakazhani.blogspot.com/2018/11/night-time.html
திரவியகழனி
Post a Comment