எங்கள் ஊரில் ஒரு வணிகர் இருந்தார். வீட்டில் மனைவி முறுக்கு சுட்டுக் கொடுத்தால் கொண்டு போய் விற்று வருவதுதான் அவரது வேலை. ருசி நன்றாக இல்லை என்றோ அல்லது நன்றாக இருக்கிறது என்றோ யாராவது சொன்னால் அப்படியே வந்து மனைவியிடம் சொல்லிவிடுவார். அவர் சரி செய்து கொள்ள வேண்டும். முறுக்கு பற்றிய டெக்னிக்கல் அறிவு எதுவும் வணிகருக்கு இல்லை. ஆனால் புதிய கடைகளைக் கண்டறிவது, விலை நிர்ணயம் செய்வது என சகலத்திலும் வணிகர் கில்லாடி. மனைவிக்கு வீட்டை விட்டு வெளியில் போகத் தெரியாது. ஆனால் இப்படியே கணவனும் மனைவியுமாக கோடிகளைச் சம்பாதித்து விட்டார்கள்.
இந்தக் கதை இருக்கட்டும்.
எட்டு வருடங்களுக்கு முன்பாக கூகிள் நிறுவனமானது சுற்றுலா மற்றும் பயணம் சார்ந்த மென்பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்திக் கொண்டிருந்த ITA Matrix என்ற நிறுவனத்தை வாங்கியது. எதற்கு கூகிள் சம்பந்தமில்லாமல் இதை வாங்குகிறது என்று பலரும் கேள்வியெழுப்பினார்கள். ஆனால் அதன் பிறகு கூகிள் பல புதிய சேவைகளை வழங்கத் தொடங்கியது. உதாரணமாக விமானத் தாமதங்களை முன் கூட்டியே கணிப்பது, பயணத் திட்டமிடல்களுக்கு உதவுவது- இப்படி வரிசையாக அடுக்கலாம். எல்லாமே பயணம் சம்பந்தப்பட்டது.
இன்றைக்கு சில்லறை வணிகத்தில் அமேசானை அடித்துக் கொள்ள ஆள் இல்லையோ- இந்திய அண்ணாச்சி கடைகள் வரைக்கும் அது விட்டு வைக்கவில்லை. அதே போல கூகிள் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. பயணத்துறையில் கூகிள் முழு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் சில ஆண்டுகளில் இதன் வீச்சை புரிந்து கொள்ள முடியும்.
அமேசான், கூகிள் போன்ற நிறுவனங்களின் வல்லாதிக்கம் என்பது அரசியல்/வணிகம் சம்பந்தப்பட்டது. அப்படி வல்லாதிக்கத்தைச் செலுத்த தொழில்நுட்பம் அவசியமல்லவா? முறுக்குக்கடைக்காரரின் மனைவி பலமாக இருந்து, முறுக்கும் சுவையாக இருந்தால்தான் வணிகர் சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும். அதே போலத்தான் அமேசானாக இருந்தாலும் சரி; கூகிளாக இருந்தாலும் சரி தமது தொழில்நுட்பம் வலுவாக இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்துக்கு நகர முடியும்.
அமேசான் சில்லறை வணிகத்தில் எவ்வாறு வெற்றி பெற்றது?
முதலில் மக்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு தேவையானவற்றை தமது வலைத்தளம் மூலம் செய்தது. பின்னர் அதன் வாடிக்கையாளர்களை மீண்டும் மீண்டும் வரக் கூடிய விசுவாசமான வாடிக்கையாளர்களாக மாற்றி அதன் மூலம் மேலும் வளர்ச்சி அடைந்தது. மூன்றாவதாகத் தகவல், தகவல், மேலும் தகவல். ஒவ்வொரு வாடிக்கையாளரின் அத்தனை தகவலையும் சேகரித்தது. அடுத்த கட்டம்தான் முக்கியமானது. சேகரித்த தவலை எப்படி தொழில் விருத்திக்குப் பயன்படுத்துவது? வாடிக்கையாளர் எந்தப் பொருளைத் தேடுகிறார். எப்படி இருந்தால் வாங்குகிறார். எந்த வகையான பொருட்களை தவிர்க்கிறார் என அத்தனை தகவல்களையும் பகுத்துத் தொகுத்தது. அதுதான் டேட்டா அனலிடிக்ஸ். ஒரே தடவையில் இந்த வேலை முடிந்துவிடுவதில்லை. தொடர்ந்து உருவேற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். (continuous measurement, innovate/improvize). அதைத்தான் இந்த ஜெகஜாலக் கில்லாடி நிறுவனங்கள் செய்கின்றன.
இந்த நுட்பத்தைத்தான் கூகிளும் செய்கிறது. அமேசானும் செய்கிறது.
கூகிள் நிறுவனத்திடம் ஏற்கனவே மிகுதியான தகவல் இருக்கிறது - மக்கள் கூகிள் மூளும் தேடும் தகவல்கள், ஜிமெயில் மூலம் பயணம் குறித்த விவரங்கள் என என்னைப் பற்றியும் உங்களைப்பற்றியும் நமக்கே தெரியாத பல விஷயங்கள் கூகிளுக்குத் தெரியும் . இந்தத் தகவல்களையெல்லாம் தன்னுடைய தொழில் விருத்திக்குப் பயன்படுத்துகிறது. ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால் எப்பொழுதாவது கோவா போகலாம் என்று ஒரு முறை கூகிளில் தேடி பிறகு விட்டுவிடுங்கள். அதன் பிறகு அது நம்மை வலை வீசிக் கொண்டேயிருக்கும். கோவா செல்வதற்கான சலுகையுடன் கூடிய விமான டிக்கெட், தங்கும் விடுதி வரைக்கும் எல்லாவற்றையும் கவர்ச்சியாகக் காட்டும். ஒருவனைக் கவிழ்க்க வேண்டுமானால் முதலில் அவனது ஆசையைத் தூண்ட வேண்டும். அதில் இந்த நிறுவனங்கள் கில்லாடிகள்.
இதையெல்லாம் பார்த்துத்தான் பல ஹோட்டல் மற்றும் விமான நிறுவனங்கள் ஏற்கனவே பெருந்தகவல் (பிக் டேட்டா) மற்றும் செயற்கை அறிவுத்திறம் (Artificial Intelligence) சார்ந்த முதலீடுகளை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். காலங்காலமாக இந்தத் துறையில் இருப்பவர்கள் பயணியர் குறித்து பெருமளவிலான தகவல் இருக்கும். அதை தொழில்நுட்பத்தின் உதவி கொண்டு எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று தெரியாமல் ஒரு பலனுமிருக்காது. இன்னும் பத்தாண்டுகளில் ‘இங்கு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் செய்து தரப்படும்’ என அமர்ந்திருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைகிறது என்று மட்டும் கவனியுங்கள். காலி செய்துவிடுவார்கள்.
எல்லாமே தகவல்தான். அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
எல்லாமே தகவல்தான். அதை எப்படிச் செய்கிறோம் என்பதில்தான் இருக்கிறது.
அமேசான், ஹோல் புட்ஸ் (Whole foods), மோர் சூப்பர் மார்கெட் முதலிய நிறுவனங்களை வாங்கியது போல கூகிளும் பயணத் துறையில் உள்ள மற்ற நிறுவனங்களைக் கபளீகரம் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு ஸ்டார்ட்-அப் ஆரம்பிக்கலாம் என்று நினைப்பவர்கள் இதை மனதில் வைத்துக் கொண்டு கொஞ்சம் வளர்ந்தால் போதும். விற்றுவிட்டு பெருந்தொகையைக் கண்ணில் பார்த்துவிடலாம்.
தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் இரண்டும் செய்த பின்னர் தான் தகவல் பகுப்பாய்வு செய்து அதில் இருந்து பயனுள்ள தகவல்களை எடுக்க முடியும். பெருந் தகவல்களை சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்து ஏற்கனவே நிசப்தம் தளத்தில் உள்ள சில கட்டுரைகளை வாசிக்கலாம்.
கட்டுரை ஆக்கம்: கீதா சுரேஷ்.
தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்த கேள்விகளை கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: geethashdp@gmail.com
கட்டுரை ஆக்கம்: கீதா சுரேஷ்.
தகவல்களைச் சேகரிப்பது மற்றும் தகவல் செயலாக்கம் குறித்த கேள்விகளை கீதாவுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்: geethashdp@gmail.com
2 எதிர் சப்தங்கள்:
I would like to add some info on this. When we book a ticket from your PC, the flight/hotel tickets will keep changing based on your browsing, the cookies storing your browsing history and it will increase the price. We would think like the prices are going up, but it is just going up only for you. If you browse something in your machine, it will come in your TV Ad if you use Amazon prime or any streaming box. Amazon is not cheap anymore in USA, all giving competitive prices nowadays.
நீங்க கடைபோட்டா சொல்லுங்க, நானும் சேர்ந்துக்கறேன். ஆளுங்கள அப்படியே சேருங்க.. வாட்சப் குழுமம் ஒன்னு ஆரம்பிம்ங்க, தட்றோம் தூக்றோம்.
Post a Comment