நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு பக்கம். சில நண்பர்கள் 'ஏதாவது செய்வோம்' என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். எல்லோருமே ஏதாவது ஒருவகையில் இதில் 'சீரியஸாக' இருந்தார்கள். அனைவரையும் இணைத்து ஒரு குழுவாக்கிவிட்டோம். வாட்ஸாப்பில் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் குழுவின் முதல் செயல்பாடு என்பது நீட் தேர்வுக்குரிய பாடங்களையும், வினாத்தாள்களையும் தமிழாக்கம் செய்வதுதான்.
கடந்த வருடமும் இதனை ஆரம்பித்தோம். ஆனால் ஒழுங்கமைவு எதுவுமில்லாததால் சரிவர பணியை முடிக்க முடியவில்லை. இந்த முறை சற்று மெனக்கெட்டால் சாத்தியமாக்கிவிடலாம். மேற்சொன்ன பணிக்காக இந்தக் குழுவில் இணைந்து செயல்பட விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.
தினசரி ஒரு மணி நேரமாவது ஒதுக்க வேண்டியிருக்கும்.
ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை பாடப் புத்தகங்களில் தேடி மொழி பெயர்க்கும் பொறுமை அவசியம்.
ஆர்வத்தில் 'நானும் வர்றேன்' என்று சொல்லிவிட்டு இடையில் விலகிவிடலாம் என்ற எண்ணம் இருந்தால் தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம். தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மிக முக்கியம்.
மொழிபெயர்ப்பு மட்டுமே வேலை இல்லை- ஆங்கிலத்தில் கிடைக்கும் நீட் தேர்வுக்கான பாடங்களை தேடிக் கண்டுபிடித்து குழுவினருக்கு தருவது கூட பெரிய வேலை.
வாட்ஸாப், ஜிமெயில் குழுமங்களை ஒழுங்கு படுத்துகிற பணி, பாடத் திட்டங்களை பகுத்து மொழி பெயர்ப்பாளர்களிடம் கொடுக்கும் பணி, அவற்றை மீண்டும் வரிசைப்படி தொகுப்பது என நிறைய வேலை இருக்கிறது.
மொழி பெயர்க்கும் பாடங்களை இணையத்தில் தொடர்ச்சியாக பதிவேற்றுகின்ற வேலையையும் செய்ய வேண்டும். அதற்கான தொழில்நுட்ப ஆட்களும் அவசியம்.
அதிகபட்சமாக இருபத்தைந்து பேர்கள் மட்டும் இந்தக் குழுவில் இருந்தால் போதும் என நினைக்கிறேன். விருப்பம் இருக்கிறவர்கள் தொடர்பு கொள்ளவும். தங்களை பற்றிய சிறு விவரத்தை அனுப்பி, எப்படி பங்களிக்க இயலும் என்று தெரியப்படுத்துங்கள்.
குழுவில் இணைத்துக் கொள்ள இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம். பிறிதொரு பணியில் இணைந்து செயல்படுவோம்.
இந்த மாதிரியான பணிகளை செய்யும் போது நமக்குள்ளாக குறைந்தபட்ச ஒழுங்கும், ஈகோ இல்லாத தன்மையும் அவசியம். இல்லையென்றால் மொத்தமும் சொதப்பிவிடும். மனதில் நிறுத்திக் கொண்டுதான் இணைய வேண்டும்.
பேசுவதை விட செயல்தான் முக்கியம்.
பேசுவதை விட செயல்தான் முக்கியம்.
ஆகஸ்ட் மாதத்துக்குள் குறிப்பிடத்தக்க அளவுக்கு மொழியாக்கம் செய்துவிட வேண்டும் என நினைக்கிறேன். இந்தப் பணியை சிறப்பாக செய்து முடித்துவிட்டால், நீட் தேர்வில் இருக்கும் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்வதற்கான பணிகளைச் செய்யலாம்.
vaamanikandan@gmail.com
5 எதிர் சப்தங்கள்:
Have you seen www.brilliant.org ? Lots of practice questions with conceptual learning. That's the only way we can attack these problems in English and Tamil.
WHY NOT 'NCERT' TEXT BOOKS FOR 'NEET' 2019
MOST OF THE QUESTIONS IN 'NEET' 2017 IN BIOLOGY/CHMISTRY WERE FROM NCERT TEXT BOOKS.
IN FACT 3/4 QUESTIONS IN BIOLOGY WERE VERBATIM REPRODUCTIONS OF EXERCISES IN 'NCERT' BOOKS.
YOU CAN VERIFY THIS FACT. ABOUT 2018 I DON'T KNOW .
HIGH RANKING STUDENTS HAVE SCORED 691/720 1ST RANK 665/720 50 TH RANK INCLUDING OUR 'KEERTHANA' IN THEIR MEDIA INTERVIEWS REPEATEDLY SAY THEY STUDIED 'NCERT' BOOKS .
'NEET' SYLLABUS ALSO MATCHES 'NCERT' 11TH/12TH BOOKS .
NCERT BOOKS ARE IN SIMPLE ENGLISH AND DIRECTLY COME TO THE SUBJECT. NOT MUCH OF LANGUAGE. MAXIMUM SUBJECT.
ANY GOOD TEACHER CAN TRANSLATE IN A FEW DAYS.
ONLY 10 BOOKS .
I WILL HELP IN THIS GOOD TASK. NO' WHATSAPP' IN MY PHONE. SIMPLE 'NOKIA'.
MY MAIL ID IS nagooo2002@yahoo.co.uk
ANBUDAN,
M.NAGESWARAN.
வெல்டன் மணி, இந்த ஆக்கபூர்வமான பணியைத்தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்,உரலில் மாட்டியபின் உலக்கைக்கு பயந்தால் முடியுமா?என்ன செய்வது?
//அனைவரையும் இணைத்து ஒரு குழுவாக்கிவிட்டோம். வாட்ஸாப்பில் பணிகளை ஆரம்பித்துவிட்டார்கள்.//
√
I would like to get in touch with the editor....I’m Dr.Srinivas running a NEET coaching institute. Iam done with Physics’s and Part of Biology and Chemistry. Need assistance. Can join hands and come out with a product useful for the genuine Tamil medium NEET aspirants.
9500143334
Dr.Srini
Post a Comment