நீட் தேர்வில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டில் கடும் முயற்சிகளைச் செய்தோம். நேற்று வந்த முடிவுகள் உவப்பானதாக இல்லை. கடந்த ஆறேழு மாதங்களாக இதற்காக செய்த வேலைகள், உழைப்பு கண் முன்னால் வந்து போகின்றன. அரசு பள்ளி ஆசிரியர்களை வார இறுதியில் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. விடுப்பு எடுத்துக் கொண்டு போயிருந்தேன். ஆசிரியர் தாமஸும், நானும் கடும் வெயிலில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குச் சென்றோம். ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு மூலையில் இருந்தன. சில பள்ளிகளில் வரவேற்பு இருந்தது. சில பள்ளிகளில் முகத்தைச் சுளித்தார்கள். அன்றைய தினம் முழுக்கவும் சுற்றியடித்து நாற்பது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை ஒரு பள்ளிக்கு வரச் சொன்னோம்.
'இதுவரை எப்படி படித்திருக்கிறார்கள்?', 'உண்மையிலேயே அவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் இருக்கிறதா?' என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு இருபத்தைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு வார இறுதிகளில் வகுப்புகள் தொடங்கின. சில மாணவர்கள் மட்டும் ஒழுங்கின்றி இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வகுப்புகளுக்கு சரியாக வந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுத்து அவர்கள் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகுதான் நிறைய சொதப்ப ஆரம்பித்தது.
'இதுவரை எப்படி படித்திருக்கிறார்கள்?', 'உண்மையிலேயே அவர்களுக்கு மருத்துவம் படிக்க ஆர்வம் இருக்கிறதா?' என்பதையெல்லாம் விசாரித்துவிட்டு இருபத்தைந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு வார இறுதிகளில் வகுப்புகள் தொடங்கின. சில மாணவர்கள் மட்டும் ஒழுங்கின்றி இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் வகுப்புகளுக்கு சரியாக வந்தார்கள். அந்தச் சமயத்தில்தான் தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு அரசாங்கம் பணம் கொடுத்து அவர்கள் வழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் பிறகுதான் நிறைய சொதப்ப ஆரம்பித்தது.
கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு அழுத்தம் வருவதாகச் சொன்னார்கள். நாங்கள் தேர்ந்தெடுத்து இருந்த மாணவர்களையே அரசு பயிற்சி நிறுவனங்களுக்கு செல்லச் சொன்னார்கள். மாணவர்களிடம் பேசினால் 'ஹெச். எம் அங்க போகச் சொல்லுறாங்க சார்' என்றார்கள். தலைமையாசிரிகளிடம் பேசினாலும் பெரிய பலனில்லை. 'எண்ணிக்கை காட்டியாகணும்' என்று சொன்னார்கள். இதனிடையில் ஈரோட்டில் மருத்துவர் சங்கம் நடத்திய நீட் தேர்வுக்கு வாடகை வண்டி பிடித்து அழைத்துச் சென்றோம். ஆந்திராவில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள் அங்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்தினார்கள். அவர்கள் பாடம் நடத்தியது நன்றாக இருந்தாலும் மொழி பிரச்சினை பிரதானமாக இருந்தது. அதன் பிறகுதான் தமிழ்வழியில் படிக்கும் இந்த மாணவர்களுக்கு நாமே வகுப்பை நடத்தலாம் என்று தீவிரமாக பணிகளைத் தொடங்கினோம்.
ஸ்ரீனிவாஸ் என்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் உழைப்பையெல்லாம் தனியாக எழுத வேண்டும். மாணவர்களைக் கண்காணிப்பது, ஆசிரியர்களுடன் பேசுவது, மாதிரித் தேர்வுகளை நடத்துவது- ஜெராக்ஸ் உட்பட அனைத்து வேலைகளையும் பார்த்துக் கொண்டார். தேர்வு தினத்தன்று கூட சொந்தச் செலவில் ஒரு வாடகை வாகனம் ஏற்பாடு செய்து மாணவர்களை அழைத்துச் சென்று தேர்வு எழுத வைத்து, மதிய உணவு வாங்கி கொடுத்து பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விட்டார். யார் செய்வார்கள்?
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடியும் வரைக்கும் ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள் இருந்தன. தேர்வுக்குப் பிறகு சில தனியார் கல்லூரிகள் 'தங்க வைத்து சாப்பாடு போட்டு பாடம் நடத்துகிறோம்' என்று சில மாணவர்களை இழுத்தார்கள். அரசாங்க பயிற்சி நிறுவனங்களிலும் பள்ளி வழியாக அழுத்தம் தரப்பட்டன. கடைசியில் ஏழு மாணவர்கள் மிஞ்சினார்கள். 'ஏழு பேருக்கு வகுப்பு நடத்துவதா? வேண்டாமா' என்று யோசனையில்லாமல் இல்லை. ஆனால் நம்மை நம்பி இவ்வளவு நாட்கள் வந்துவிட்டார்கள். நட்டாற்றில் விட முடியாது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்து, மூன்று ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள்.
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடியும் வரைக்கும் ஒவ்வொரு வார இறுதியிலும் வகுப்புகள் இருந்தன. தேர்வுக்குப் பிறகு சில தனியார் கல்லூரிகள் 'தங்க வைத்து சாப்பாடு போட்டு பாடம் நடத்துகிறோம்' என்று சில மாணவர்களை இழுத்தார்கள். அரசாங்க பயிற்சி நிறுவனங்களிலும் பள்ளி வழியாக அழுத்தம் தரப்பட்டன. கடைசியில் ஏழு மாணவர்கள் மிஞ்சினார்கள். 'ஏழு பேருக்கு வகுப்பு நடத்துவதா? வேண்டாமா' என்று யோசனையில்லாமல் இல்லை. ஆனால் நம்மை நம்பி இவ்வளவு நாட்கள் வந்துவிட்டார்கள். நட்டாற்றில் விட முடியாது. ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிர்ணயித்து, மூன்று ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள்.
மாணவர்களும் ஒழுங்காகத்தான் படித்தார்கள். அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஒரேயொரு மாணவர் வெற்றியடைந்தால் கூட போதும் என்றுதான் ஆசிரியர்களிடம் சொன்னேன். ஆசிரியர்களும் உழைத்தார்கள். ஆனால் பெரிய பலனில்லை. யாருமே தகுதி பெறவில்லை. தேர்வுக்கு முன்பாகவே தெரிந்துவிட்டது. அவ்வளவு எளிதான காரியமில்லை இது. இயற்பியல், வேதியலில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள்தான் அதிகம். ஒரு நுழைவுத் தேர்வு அவசியம் என்கிற மனநிலை உடையவனாகத்தான் இருந்தேன். ஆனால் அது நீட் மாதிரியான தேர்வாக இருக்கக் கூடாது. நீட் தேர்வு இத்தகைய சாமானிய மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய பூதம் என்பது புரிகிறது.
சிவகுமார் என்றொரு மாணவர். கொல்லிமலைக்காரர். எஸ்.டி பிரிவைச் சார்ந்தவர். தேர்ச்சியடைந்தால் போதும் என்றுதான் நினைத்திருந்தேன். தேர்ச்சியடைந்திருந்தால் மருத்துவம் சேர்த்திருக்கலாம். நீட் தேர்வில் எழுபத்து சொச்சம் மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார். தேர்ச்சியில்லை. நேற்று அழைத்து 'சார், இன்னொரு வருஷம் படிக்கறேன்' என்று கேட்ட போது என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியவில்லை.
கடந்த சில நாட்களாக இதுதான் மனதுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது- அடுத்து வரும் ஆண்டுகளில் கிராமப்புற மாணவர்கள் அவ்வளவு எளிதில் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது. உணர்ச்சிவசப்பட்டுச் சொல்லவில்லை. அனுபவத்திலிருந்து சொல்வதுதான். என்னதான் தலைகீழாக நின்றாலும் தனியார் பள்ளி மாணவர்களை மீறி, வெறித்தனமாக பயிற்சி நடத்தும் தனியார் நிறுவனங்களை மீறி அரசுப்பள்ளி / கிராமப்புற மாணவர்களை மருத்துவத்துக்கு அனுப்புவது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். 'அதென்ன பெரிய காரியம்' என்று பந்தாவாக கேட்கலாம். ஆனால் சாத்தியமில்லை. நீட் தேர்வின் கேள்விகளை புரிந்து கொள்ளுகிற அளவுக்கு கூட நம் மாணவர்களுக்கு பயிற்சியில்லை. இதைத்தான் தனியார் நிறுவனங்கள் குறி வைக்கின்றன. லட்சக்கணக்கில் வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், தொடர்ந்த கண்காணிப்பு, போஷாக்கான உணவு என சகலமும் படைத்த மாணவர்களுக்கான தேர்வாகத்தான் நீட் தெரிகிறது. வீட்டு வேலைகளைச் செய்து, பள்ளி ஆசிரியர்களின் பாடத்தை மட்டும் நம்பி, இயல்பாக இருக்கும் மாணவர்கள் இதில் தொடர்ந்து தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்.
தமிழகத்திலிருந்து தகுதி மதிப்பெண் பெற்றிருக்கும் நாற்பத்தைந்தாயிரம் மாணவர்களின் விவரங்களை கொஞ்சம் ஆய்வு செய்துவிட்டு இது பற்றி மேலும் விரிவாகப் பேசலாம்.
அடுத்த ஆண்டுக்கான நீட் பயிற்சிக்கு தனியார் நிறுவனங்கள் வகுப்புகளைத் தொடங்கிவிட்டார்கள். நல்ல வருமானமுள்ள தொழில். பல கோடிகளைச் சம்பாதிப்பார்கள். அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் இது ஒத்து வரும். இனி நாம் வகுப்பு எதையும் நடத்த வேண்டியதில்லை எனத் தோன்றுகிறது. மாணவர்களின் பயத்தை மீறி, பள்ளிகளின் ஒத்துழைப்பின்மையைத் தாண்டி, கல்வித் துறை கொடுக்கும் அழுத்தத்தைக் கடந்து நம்மைப் போன்றவர்கள் வகுப்புகள் நடத்துவெதெல்லாம் வீண் முயற்சியாகப் படுகிறது. அப்படியே நடத்தினாலும் இப்படித்தான் ரிசல்ட் இருக்கும் என உள்மனம் சொல்கிறது.
மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை சுமந்து வந்து கொடுத்த அரசு அதிகாரி, புத்தகங்களைத் தேடிய நண்பர்கள், 'எவ்வளவு பணம் வேணும்' என்று கேட்ட கொடையாளர்கள் என எவ்வளவோ பேர் பின்னால் இருந்தார்கள். பலரது உழைப்பு இந்த வகுப்புகளில் இருந்தது. அனைவருக்கும் நன்றி. கல்வி சார்ந்து நம்மால் துரும்பை எடுத்து போட முடிந்தாலும் அதைச் செய்ய வேண்டும் என்றுதான் தொடங்கினோம். இதுவொரு சோதனை முயற்சிதான். ஆனால் இவ்வளவு கசப்பான முடிவைத் தரும் என எதிர்பார்க்கவில்லை.
மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை சுமந்து வந்து கொடுத்த அரசு அதிகாரி, புத்தகங்களைத் தேடிய நண்பர்கள், 'எவ்வளவு பணம் வேணும்' என்று கேட்ட கொடையாளர்கள் என எவ்வளவோ பேர் பின்னால் இருந்தார்கள். பலரது உழைப்பு இந்த வகுப்புகளில் இருந்தது. அனைவருக்கும் நன்றி. கல்வி சார்ந்து நம்மால் துரும்பை எடுத்து போட முடிந்தாலும் அதைச் செய்ய வேண்டும் என்றுதான் தொடங்கினோம். இதுவொரு சோதனை முயற்சிதான். ஆனால் இவ்வளவு கசப்பான முடிவைத் தரும் என எதிர்பார்க்கவில்லை.
23 எதிர் சப்தங்கள்:
Mani,
I wouldn't term this one as a bitter experience. By doing this one more time, or continue to do this in the future, you guys will do better. For all these exams, like the way you have mentioned about cracking the State/Board exams, there would be some time-tested methods and knacks. You and your partners would definitely be able to crack it, and get few of the students cleared next time. This 'NEET' stuff is totally alien to me. However, do let me know if I could be of any help. Even if we fail next time, it is okay. As you keep saying, one can't expect to succeed all the time. Let us keep trying :) Regards.
Radha Bala, Cochin
ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோமே என்று நினைக்காதீர்கள் சின்னையா.
ஒண்ணுமே செய்யாம ஆழத்தை தெரிந்து கொள்வது தான் எப்படி?
நீட் டை ஓரமாக வைத்து விட்டு IAS க்கு கவனம் செலுத்துங்கள்.
அதில் பயிற்சி பெறுபவர்கள் தேர்ச்சி பெறுவார்களேயானால் சமுதாய மாற்றங்களை உருவாக்கலாம்.
Any way "hats off" சின்னையா.
உண்மையிலேயே மிகுந்த வருத்தமாக இருக்கிறது. நீட் இவ்வளவு பெரிய பூதம் என்பது எனக்கு இப்போதுதான் விளங்குகிறது. நான் அங்கே இருந்திருப்பின் கட்டாயம் உங்களோடு கைகோர்த்து நான் பெற்ற வேதியியலறிவை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டிருப்பேன். இனிவரும் காலங்களில் வேதியியல் சார்ந்த பாடங்கள், வழிகாட்டல் போன்றவற்றிற்கு என்னைத் தயங்காமல் அணுகவேண்டுகிறேன்.
Education should be under State government. That's the only solution to all the education related issues.
மனம் தளரவேண்டாம் மணிகண்டன்.. அரசு நடத்தும் பயிற்சி மையங்களில் நம்மால் செய்வதற்கு ஏதேனும் உள்ளதா?
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி...
Very sad. :(
இயற்பியல், வேதியலில் நெகட்டிவ் மதிப்பெண்கள் வாங்கியவர்கள்தான் அதிகம்.
EVEN ' CBSE' MATRIC AND REPUTED COACHING CENTER STUDENTS INDULGED IN THIS GUESSWORK/GAMBLING.
'PATTA BAGYAM' 20/20 CONCEPT. IF A STUDENT HITS/GUESSES CORRECTLY '4' MARKS ARE GAINED. SO PARENTS/ TEACHERS/OTHER STUDENTS ADVISE GUESSWORK .THEY QUOTE SO MANY SUCCESS STORIES. NOTHING IS TRUE.
WHEN NAMES/REGN. NOS. ARE ASKED THEY MOVE AWAY.
REPEATED COUNSELLING ABOUT NEGATIVE MARKING IS NO USE.
OUR STUDENTS LEARN BY EXPERIENCE ONLY. IT IS VERY COSTLY 1 YEAR/1 ATTEMPT.
QUESTION SETTERS ARE NO FOOLS TO SEE THEIR QUESTIONS ANSWERED BY GUESSWORK. THEN HARD WORK WILL HAVE NO PLACE.
MANY GOOD STUDENTS HAVE FAILED BECAUSE OF NEGATIVE MARKING. NEGATIVE MARKS HAS DRAGGED DOWN THEIR MARKS.
நேற்று அழைத்து 'சார், இன்னொரு வருஷம் படிக்கறேன்' என்று கேட்ட போது என்ன பதிலைச் சொல்வது எனத் தெரியவில்லை. NALLA MUDIVU. PADIKKATUM. INDHA MURAI HE WILL WIN.
MY SISTERS DAUGHTER GOT THRU 'NEET' ONLY IN 3RD /FINAL ATTEMPT.
MY SON AN ALL INDIA RANK HOLDER GOT HIS MS IN 2ND ATTEMPT ONLY.
THE EFFORTS YOU HAVE TAKEN FOR SC/ST STUDENTS IS REMARKABLE.
NO BODY WILL DO THAT.
DALIT LEADERS WERE RELUCTANT. EDUCATED/DOCTOR DALITS ARE WORSE.
“ புண்ணியம் கோடி ஆங்கோர் SC/ST YAI 'NEET KKU THAYAR SEITHAL.
வயிர முடையநெஞ்JODU WE ALL WILL STAND BEHIND YOU.
WE WILL WIN.
ANBUDAN,
M.NAGESWARN.
கவலைபட வேண்டாம்.
When are the assholes in education department understand the meaning of "Slow and steady wins the race". Aptitude alone is not going to solve all the problems in the world. Aptitude is only 25% for solving anything at all!
India should ban all these tests or reduce the weightage of NEET to very small amount. What they are doing is unethical and criminal in a society which needs to be balanced more aggressively. I have lived in the USA for about 20 years and I think SAT and ACT scores here are just a baseline and do not torture kids like in India.
மணி, மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் வேறு எந்த வகையில் சமுதாயத்திற்கு பெரும் பயன் உடையதை செய்ய முடியும் என்பதை உங்கள் பரந்து பட்ட அனுபவம் தெளிவாக சொல்லுமே.அதன் படி செயலாற்ற எல்லாம் வல்ல இறையருளும், குருவருளும் துணை நிற்கட்டுமாக.வாழ்க வளமுடன்
இதை தான் நான் சொன்னேன். நீங்கள் நான் கிண்டல் செய்வதாக தவறாக புரிந்து கொண்டீர்கள்
ஆண் செய்வது அனைத்தையும் பெண் செய்ய முடியும் என்று வாதம் வரும் போது சுஜாதா கதைகளில் ,பட வசனத்தில் என்னை போல சுவத்தில் சீராக ஒண்ணுக்கு அடிக்க முடியுமா என்று கேட்பார் .அது தான் நீட்
பிளஸ் டூ இறுதி தேர்வு போல குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி என்று நுழைவு தேர்வுகளில் கிடையாது. எளிமையான தேர்வு தாள் அமைந்து விட்டால் ,தேர்ச்சி மதிப்பெண் மிகவும் அதிகரித்து விடும்.எல்லா பிரிவுக்கும் கட் ஆப் மிகவும் அதிகரிக்கும்.
கடுமையான தாளாக இருந்து விட்டால் கோச்சிங் செல்லாத,நுழைவு தேர்வுக்காக ஆண்டுக்கணக்கில் படிக்காத ஒருவர் கூட தேர்ச்சி பெற முடியாது.ஐ ஐ டி நுழைவு தேர்வில் நடப்பது இது தான். இங்கும் அதே தான் நடக்கும்
நீட் புத்தகங்கள் ,நீட் கோச்சிங் மையங்கள் ,ஒன்பதாம் வகுப்பு முதல் கோச்சிங் சேர்ந்த படிப்பு என்று இந்த ஆண்டே பல நூறு கோடி வர்த்தகம் நீட் காரணமாக நடக்கிறது.அரசு பேருந்தின் பின் எல்லாம் விளம்பரம் கண்ணில் படுகிறது .IITJEE காரணமாக நாடு முழுவதும் குறிப்பாக ஆந்திரம்,ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த பல ஆயிரம் கோடி வர்த்தகத்தின் அடுத்த கிளை தான் NEET .இப்போது தான் அதிர வைக்கும் பள்ளி மாணவ மாணவியர் தற்கொலைகள் காரணமாக அங்கு எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கி உள்ளன
பல்வேறு படிப்புகளை படித்து கொண்டிருந்த மருத்துவர்களின்,நீதிபதிகளின்,பொறியாளர்களின்,பேராசிரியர்களின் , அரசு அதிகாரிகளின் வாரிசுகள் அதனை விட்டு விட்டு நீட் கோச்சிங் மைய்யங்களில் ஆயிரக்கணக்கில் சேர்ந்திருக்கிறார்கள்.இந்த ஆண்டு இடம் கிடைக்காத இவர்களின் வாரிசுகளும் பெருமளவு சேர்ந்திருக்கிறார்கள்.எந்த பிரிவாக இருந்தாலும் இவர்களுக்கு மட்டும் தான் நீட் மூலம் இடம் கிடைக்கும்
https://www.facebook.com/poovannan.ganapathy/posts/1710910855587367
My neighbours son seem to have got 286 studying of his own, after +2 Tamil medium from a govt school at Ariyalur... There are bright stars at many places., but we draw borders to a task, it disappoints. We could revisit our choices and selection "control system" with the ultimate objective of liberating the downtrodden from the clutches of financial poverty .
உங்கள் வேதனையும் ஆதங்கமும் புரிகிறது.நீட் தேர்வில் நமது மாநிலத்திற்கு கிடைத்த இடம் கடும் ஏமாற்றத்தை தருகிறது.இப்போதும்கூட ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தங்கள் ஊதிய உயர்விற்காக போராடினார்கள். அதை நினைத்தால் கோபம் வருகிறது. தேர்தல் நேரத்தில் உதவுவார்கள் என்று எல்லா அரசாங்கங்களும் இவர்களுக்கு நல்ல ஊதிய உயர்வை அளிக்கின்றன. (ஆசிரியர் திரு.அரசு தாமஸ் போன்றவர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு அளித்தாலும் தகும்.)
I remember you also supported the neet exam in the beginning
Makes sad reading. Nevertheless, is it not true that they have gained some knowledge? If not they, their offsprings may be successful one day.
What you have done is a noble work. but would still request you to continue NEET related enabler work this year too sir ( may be a different approach, focusing on small part of the coaching or eye-opener kind of sessions -I know it is easier said than done) . When every one is just spreading negative energy across, I have seen only you taking steps in right direction. If people like you leave now, it would be very difficult to enter this arena later.
-- Somesh
Mr.Mani...pls don't stop this Noble work. Than selecting students from twelveth, select after their tenth. 2 yrs of systematic preparation will help. Even if they fail, give them hope about the exposure they got via preparing for this exam. If they pass they achieve academically else they learn an important life skill, perseverance.....pls don't stop the good work
இந்த பதிவை மிக ஆவலாக எதிர்பார்த்திருந்தேன்...
மிகவும் வருத்தமாக உள்ளது....உங்களை போன்றவர் வருந்தும் சூழல் உண்டானதால்.
ஆனால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம்... தவறு, துளி கூட உங்கள் மேல் இல்லை...
என்னைப் போல Keyboard இல் மட்டுமே நல்லது செய்து கொண்டிருக்கும் அல்லது அவ்வாறு நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், (களத்தில் இருக்கும்) நீங்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும்..
உங்களையும், உங்கள் சார்ந்தவர்களுடைய தூய்மையான உழைப்புக்கு நன்றி..மற்றும் வாழ்த்துக்கள்!
எல்லா முயற்சிகளுக்கும் உடனே பலன் கிடைத்துவிடுவதில்லை. இதில் கற்ற படிப்பினையை வைத்து அடுத்த முயற்சியில் வெல்க.
கொடுக்கப் பட்ட கோச்சிங் நிச்சயம் வீண் போகாது. வேறு எங்காவது பயன்படும்.
I must write this again, after seeing article in "the Hindu" Tamil. It did not surprise that people confronted with initial phases of popularity, fame and unable to think out of box moving within the bitter experiences of poverty, desist change. You are no exceptional. Rationality demands common sense, I am not to paint you black, but trying my best from the carbon dust that might turn you dark. Instead of demanding or suggesting a move like that of JALLIKATTU for equal education system for govt schools. Instead demand for removal of NEET. What happens again is as usual , Pvt schools will advertise now, that they have got 1190 out of 2000. Please enlighten that, education system is in the clutches of business people, whom systematically destroy public institutions with their might on one side and siphon off the govt funds in the name of service. Unless education is purely preorigative of STATE there is no solution for downtrodden.
http://tamil.thehindu.com/opinion/columns/article24127283.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers
Post a Comment