அடர்வனத்துக்கு செடிகளை நட்ட போது நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காங்கேயத்திலிருந்து வந்திருந்த கிரியின் நண்பர் சித்தார்த் ஒரு சலனப்படத்தை உருவாக்கியிருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் குளத்தில் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஒரு தொகுப்பாகக் காட்டுகிறது.
நிசப்தம் சார்பில் செய்த பல காரியங்களின் நிழற்படங்கள் கூட என்னிடமில்லை. சமீபத்தில் மருத்துவப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் தனது மகனுக்காக காசோலையை வாங்கி கொள்ள அரூரிலிருந்து அவனுடைய அப்பா வந்திருந்தார். நான் பெங்களூரிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். தர்ம்மபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் நடுவில் ஓரிடத்தில் இறங்கி அவரிடம் காசோலையைக் கொடுத்துவிட்டு இருவரும் தேநீர் குடித்துவிட்டு அவர் அரூர் திரும்பினார் நான் ஊருக்குச் சென்றேன். இரவு பத்து மணிக்கு கூட சாலையில் வைத்து காசோலையை வழங்கியிருக்கிறேன். அப்புறம் எப்படி நிழற்படம் இருக்கும்?
நிசப்தம் சார்பில் செய்த பல காரியங்களின் நிழற்படங்கள் கூட என்னிடமில்லை. சமீபத்தில் மருத்துவப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும் தனது மகனுக்காக காசோலையை வாங்கி கொள்ள அரூரிலிருந்து அவனுடைய அப்பா வந்திருந்தார். நான் பெங்களூரிலிருந்து பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். தர்ம்மபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் நடுவில் ஓரிடத்தில் இறங்கி அவரிடம் காசோலையைக் கொடுத்துவிட்டு இருவரும் தேநீர் குடித்துவிட்டு அவர் அரூர் திரும்பினார் நான் ஊருக்குச் சென்றேன். இரவு பத்து மணிக்கு கூட சாலையில் வைத்து காசோலையை வழங்கியிருக்கிறேன். அப்புறம் எப்படி நிழற்படம் இருக்கும்?
இப்பொழுது நிறைய வேலைகளைச் செய்வதால் எல்லாவற்றையும் ஆவணப்படுத்துவது அவசியம் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஆவணப்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். சித்தார்த் மாதிரியானவர்கள் உதவினால் எதிர்காலத்தில் எல்லாவற்றையும் ஒழுங்கமைவுடன் ஆவணப்படுத்திவிடலாம்.
கிரிக்கும் சித்தார்த்துக்கு நன்றி. தொகுப்பை பார்த்தால் 'இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்' என்று ஓர் ஐடியா கிடைக்கும்.
8 எதிர் சப்தங்கள்:
That awesome moment @ 5:32 to 5:38
மணி அண்ணா செம்ம. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ரெண்டாயிரம் மரம் நட்ட அடர்வனத்த நெனச்சாலே சிலிர்க்குதே
அப்ப
ஆதியோகி ஈஷா ஜக்கி 10 லட்ச மரங்களை நட்டு உண்டாக்குன காடு எப்படி இருக்கும் ன்னு நெனைச்சேன்
தல அப்டியே கிர்ருனு சுத்திடுச்சு.
அந்த வீடியோ இருந்தா யாராவது அப்லோட் பண்ணுங்க.
ரெண்டாயிரம் மரம் நட்ட அடர்வனத்த நெனச்சாலே சிலிர்க்குதே அப்ப ஆதியோகி ஈஷா ஜக்கி 10 லட்ச மரங்களை நட்டு உண்டாக்குன காடு எப்படி இருக்கும் ன்னு நெனைச்சேன்
தல அப்டியே கிர்ருனு சுத்திடுச்சு. அந்த வீடியோ இருந்தா யாராவது அப்லோட் பண்ணுங்க./////////////////////////////
ஹாஹாஹாஹ வடிவேலுவின் சிக்கன் 65 காமடி மாதிரி தான் அவர் நட்ட ஒவ்வொரு செடிக்குள்ளயும் 1 லட்சம் மரம் இருந்திருக்கும்,, அதில் இப்ப பத்து மரம் வளர்ந்திருந்தாலும் பத்து லட்சம் மரமாச்சே,,,, அப்படியே ஜக்கி விவேக் போன்று மரம் நடுவது போல பிலிம் காட்டிய இன்னபிற தொண்டு நிறுவனங்கள் கட்சிகள் (ஜெ,பிறந்தநாளுக்கு கோமாளிகள் கோயிலுக்குள்ள வந்தெல்லாம் நட்டு வைத்தார்கள்) நட்டு வைத்த மரங்களின் எண்ணிக்கையையும் கூட்டினால் அடர்ந்த அமேசான் காடுகளை விடவும் தமிழ்நாடு இருந்திருக்கும்,,,, அங்கு கிடைக்கும் அரியவகை மூலிகைகளை கொண்டு ரஜினியின் வழுக்கை தலையில் முடிவளர வைத்து எளமையா காட்டி இன்னும் பத்து படம் எடுத்துவிடலாம்,,,
Weldone Mani & Team.
I would like to remind Swamy Vivekananda's quote here:
give 100 youth so that I will make a strong India.
I could see few of them here.
Questions to Mani:
Is it possible to create "Densed Jungles" on Waste Lands, where the possibility of rain is very low ? (consider districts like Tuticorin, Virudhunagar, Ramanathapuram ).
Question to Sekkali:
I too want to know, what has happen to the phone numbers Esha has collected as part of "Joining the River" compaign. The rivers are not yet joined (at least on a Jug of water!!). I get lot of advertisements on my mobile after giving the number to Esha. Did the sold it ??
//what has happen to the phone numbers Esha has collected as part of "Joining the River" compaign.//
ஒண்ணும் தெரியாது சுந்தர் கண்ணன்.
இந்த கட்டுரையை வாசிக்கும் போது ஈஷா பத்தி தோணுச்சு. எழுதிட்டேன். மத்தபடி ஈஷாவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.
வாழ்த்துக்கள் மணி.வாழ்க வளமுடன்.
அருமையான முயற்சி
வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக.
Post a Comment