குழந்தைகளுக்கு என புத்தகக் கண்காட்சி என்பதெல்லாம் தமிழகத்தில் பெரிய விஷயம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நாளை தொடங்குகிறது. இரண்டு நாட்கள் மட்டும்தான். அநேகமாக பரிசோதனை முயற்சியாக இதனைச் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.
விதைகள் வாசகர் வட்ட நண்பர்களை கடந்த சில வருடங்களாக அறிவேன். இத்தகைய செயல்பாட்டினால் நஷ்டம்தான் என்று தெரிந்தாலும் அசராமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வலுவான இளைஞர் குழு அது. வாசிப்பு பழக்கத்தை மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எது குறித்தும் கவலைப்படாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய குழுக்கள் மூன்று, நான்காம் நிலை நகர்ப்புறங்களில் உருவாகும் போது வாசிப்பு பழக்கம் இன்னமும் விரிவடையும். இவர்களுக்கான தேவை தமிழகம் முழுக்கவும் இருக்கிறது. வாசிப்பு தாண்டிய விவாதங்களை உருவாக்க வேண்டிய பொறுப்பும் இவர்களுக்கு இருக்கிறது. நாளை வாய்ப்பு கிடைத்தால் இவர்களிடம் இது பற்றி விரிவாக பேச வேண்டும் என விரும்புகிறேன்.
சத்தியமங்கலத்தில் நடைபெற்ற கடந்த புத்தகக் கண்காட்சியின் போது (அது அனைவருக்கும் பொதுவான கண்காட்சி) பேச அழைத்திருந்தார்கள். இந்த முறை குழந்தைகளுக்கான புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க அழைத்திருக்கிறார்கள். பெரிய மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள். தகுதியான பிரமுகர்களும் இருக்கிறார்கள். ஆயினும் விதைகள் வாசகர் வட்ட நண்பர்கள் என்னுடைய செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக அங்கீகரிப்பதாகவே இதனை புரிந்து கொள்கிறேன். இத்தகைய அங்கீகாரங்கள் ஆத்மார்தமானவை மனதுக்கு இதமானவையும் கூட. அவர்களுக்கு நன்றி.
புத்தகக் கண்காட்சி முழுமையான வெற்றியடைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒரு முறை சென்று வாருங்கள்.
4 எதிர் சப்தங்கள்:
நல்ல விஷயம் பாராட்டுக்கள்.
Nice initiative. it will reform our society right from children by promoting reading habit
my name is radhakrishnan and i am 67 years old and i reside in hyderabad
i happen to see your post about the children book fair today
i want to request the organisers whether it will be possible to send some books of their choice worth about Rs 5000
i shall remit the money if the details of bank account etc as to whom i should remit
will you please let me know as to whom to contact for the books to sent to a govt tribal residential school near jamuna marathur which i had visited recently
there are about 270 children who really need support
thanks and best regards
r radhakrishnan
hyderabad
Sir, Please email your contact details to vaamanikandan@gmail
Post a Comment