Apr 26, 2018

கேள்வி பதில்கள்

நம்ம பசங்க ஸ்கூல்ல, விளையாட போற இடத்துல வேற கிளாஸ் பசங்க, வேற ஸ்கூல், ஏரியா பசங்க வேண்டும் என்றே பிரச்சனை செய்து அடிக்கறப்போ நம்ம என்ன செய்யலாம்?
விட்டுவிடுவதுதான் நல்லது  குழந்தைகளாகவே தமது எதிர்ப்புணர்வை வளர்த்து சமாளித்துப் பழக்கட்டும். எல்லாவற்றுக்கும் தடுப்பரண் அமைத்துக் கொடுக்க வேண்டியதில்லை. எல்லை மீறும் போது மட்டும் நாம் தலையிடலாம். 

மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வாசிப்பீர்களா?
முன்பு வாசித்திருக்கிறேன்.

நீங்கள் செய்த சாதனை என்றால் எதைச் சொல்வீர்கள்?
ஒன்றுமில்லை. 'இதுதான் சாதனை' என்று நினைக்கும் போது தேங்கிவிட்டோம் என்று அர்த்தமாகிவிடும். இப்போது எதற்கு அந்த சிந்தனை? காலமிருக்கிறது. 

பெங்களூரில் என்ன பிடிக்கும்?
கண்கள் குளிர்ச்சியாகவே இருக்கும். சீதோஷ்ணத்தைச் சொல்கிறேன்.

இப்படி அலைவதால் உடம்பு கெட்டுப் போய்விடாதா?
இதுவரை கெடவில்லை என்று சந்தோஷமாக இருக்கிறது. 

சிறந்த கேள்வி கேட்டால் பரிசு கிடைக்குமா?
இது நல்ல கேள்வி. உங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்று நினைத்தால் நீங்கள் யார் என்று கூடத் தெரியாது.  அதனால் பரிசெல்லாம் கிடையாது.

சில்க்கூர் எங்கே இருக்கிறது? 
இது மொக்கையான கேள்வி. கூகிள் கூடச் சொல்லிவிடும். 

கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருப்பீர்கள்?
எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள்! அடசாமீ..

உங்கள் மீது விமர்சனங்கள் இருக்கின்றன. உங்களுக்கு அவை பற்றித் தெரியுமா?
ஒன்றிரண்டு தெரியும். நேற்று கார்த்தி சந்திக்க வந்திருந்தார். காபி குடித்துக் கொண்டிருக்கும் போது 'நீங்க இந்துத்துவ ஆதரவாளர்தானே' என்றார். இத்தனைக்கும் அவர் நிசப்தம் தொடர்ந்து வாசிக்கிறவர். ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பார்வை. அடுத்தவர்களின் பார்வைக்காக நாம் செயல்பட வேண்டியதில்லை. பிம்பங்கள் அழிந்து புதிதாக உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். நமக்கு நாம் நேர்மையாக இருந்தால் போதும். நேர்மை என்றால் நமக்கு சரி என்று படுவதைச் செய்வது. உள்ளொன்று வைத்து புறமொன்று நடிக்காதது. விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் அதைத் தாண்டி நம்மால் எதையும் செய்ய முடியாது. 
                                                                    ***

Sarahah வில் கேட்கப்பட்டவை 

3 எதிர் சப்தங்கள்:

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

"ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு பார்வை. அடுத்தவர்களின் பார்வைக்காக நாம் செயல்பட வேண்டியதில்லை. பிம்பங்கள் அழிந்து புதிதாக உருவாக்கிக் கொண்டேதான் இருக்கும். நமக்கு நாம் நேர்மையாக இருந்தால் போதும். நேர்மை என்றால் நமக்கு சரி என்று படுவதைச் செய்வது. உள்ளொன்று வைத்து புறமொன்று நடிக்காதது. விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தால் அதைத் தாண்டி நம்மால் எதையும் செய்ய முடியாது"
நல்ல பதிலுக்கு பரிசு தருவதாக இருந்தால் இது அதற்கு தகுதி ஆனதாக இருக்கும். வாழ்க வளமுடன்

Anonymous said...

Any relation between these two questions?
Hee hee hee:-):-):-)

பெங்களூரில் என்ன பிடிக்கும்?
கண்கள் குளிர்ச்சியாகவே இருக்கும். சீதோஷ்ணத்தைச் சொல்கிறேன்.

இப்படி அலைவதால் உடம்பு கெட்டுப் போய்விடாதா?
இதுவரை கெடவில்லை என்று சந்தோஷமாக இருக்கிறது

அன்பே சிவம் said...

அந்த கொ.ப.செ. வுக்கு எரநூறு ஓவாவை நேர்மையுடன் கொடுத்துத் தொலைக்கவும்.