அரசின் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென நடத்தப்படும் சிறப்பு மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கான நிகழ்வில் கதை சொல்லி சதீஷும், அகிலாவும், ஜீவ கரிகாலனும் கலந்து கொள்கிறார்கள். இந்த முறை மூன்று மையங்களிலிருந்து குழந்தைகளை அழைத்திருக்கிறோம்.
சதீஷ் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அறுபது குழந்தைகளுக்குமான அன்பளிப்புடன் வந்து சேர்வதாக அகிலா சொல்லியிருக்கிறார். குழந்தைகளுக்கான உணவு, போக்குவரத்து உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறோம். இளங்கோ, அரசு தாமஸ், ஸ்ரீநிவாசன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்வுக்கு வருவதாக ஏற்கனவே சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் அனைவரும் வருக. வாய்பில்லையெனில் அடுத்த முறை கலந்து கொள்ளத் தயாராக இருங்கள். இந்த முறை தொடக்கம்தான். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொடர்ச்சியாக இத்தகைய நிகழ்வுகளைச் செய்யலாம்.
நிகழ்வில் மேடை உள்ளிட்ட எந்த அலங்காரமும் இருக்காது. அது அவசியமில்லை. மொத்த கவனமும் குழந்தைகள் மீது இருக்க வேண்டும்.
2 எதிர் சப்தங்கள்:
சிறார்களின் உளவிருத்தியே
இன்றைய தேவை
சிறந்த பணி
பாராட்டுகள்
விழா வெகுசிறப்பாக நடைபெறவும்
குழந்தைகளுக்குள் இருக்கும் வருத்தம் சோகம் அவநம்பிக்கை நீங்கி
தன்னம்பிக்கையும் மனஉறுதியும் மகிழ்ச்சியும் அவர்களுக்கு ஏற்படவும்
வாழ்த்துக்கள்,,, ஜாலிக்கதை எவ்வளவு அவசியமோ அதே அளவிற்கு நீதிக்கதையும் ஜாலியாக கலந்து சொல்லவும்,,,
நண்பர்களின் ஒத்துழைப்பு முயற்சிகள் ஒருங்கிணைப்புகள் தொடர்ந்து கிடைத்திடவும் வாழ்த்துக்கள்,,,
Post a Comment