Apr 4, 2018

நிசப்தம் அறக்கட்டளை (2017-18) - Bank Statement

கடந்த நிதி ஆண்டுக்கான(2017-18) நிசப்தம் அறக்கட்டளையின் வங்கி வரவு செலவு விவரம் இது. இன்றுதான் வங்கியிலிருந்து பெற்றுப் பட்டயக் கணக்கர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். அவர்கள் விவரங்களைச் சரி பார்த்துவிட்டு தேவையானவற்றுக்கு ரசீதுகளை வாங்கிக் கொண்டு வருமான அலுவலகத்தில் தாக்கல் செய்துவிடுவார்கள். 

நிசப்தத்தில் எழுதும் போது 'என் பேர் வராம பார்த்துக்குங்க' என்று சில நன்கொடையாளர்கள் சொல்வதுண்டு. ஆனால் எந்த விவரத்தையும் மறைக்க வேண்டியதில்லை  என நினைக்கிறேன். தவறுகளைச் செய்கிறவர்களே மிக தைரியமாகச் சொல்லிவிட்டுச் செய்கிறார்கள். நல்ல காரியங்களைத்தானே செய்கிறோம்? அனைத்துமே வெளிப்படையாக இருக்கட்டும். இன்னும் சிலருக்கு உந்துதலாக அமையட்டும்.

எல்லாவற்றிலும் அப்பட்டமான வெளிப்படைத்தன்மையுடன் இருந்துவிட்டால் எனக்கும் வேலைப்பளு குறையும். ஒருவேளை பெயரை மறைப்பதாக இருந்தால் நான் ஒவ்வொரு வாரியாகச் சரி பார்க்க வேண்டும். மறைக்க வேண்டிய இடங்களில் மறைக்க வேண்டும். ஆனால் இப்பொழுது வெகு எளிது. வங்கியிலிருந்து அனுப்புகிறார்கள். சிறு குறிப்பை எழுதி அப்படியே பிரசுரம் செய்தாகிவிட்டது. பத்து நிமிட வேலைதான். பனிரெண்டரை மணிக்கு ஸ்டேட்மென்ட் மின்னஞ்சலில் வந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு மணிக்கு பிரசுரம் செய்தாகிவிட்டது. அவ்வளவுதான். ஐம்பது லட்ச ரூபாய் வரவு செலவு விவரத்தை எதைப்பற்றியும் யோசிக்காமல் அப்படியே பிரசுரம் செய்வது எவ்வளவு பெரிய சுதந்திரம்? அத்தகைய சுதந்திரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு இருக்கட்டும். 

யாரிடமிருந்தும் கையில் பணம் வாங்குவதில்லை. 'எவ்வளவா இருந்தாலும் நீங்க அக்கவுண்டுக்கு அனுப்பிடுங்க' என்று சொல்லிவிடுகிறேன். அதனால் நூறு சதவீத வரவு செலவும் இந்த ஸ்டேட்மெண்ட்டில் உள்ளது.  ஆரம்பத்தில்  இருந்த தயக்கம் எதுவும் இப்பொழுது இல்லை. ஏனென்றால் இங்கு மறைக்க எதுவுமில்லை. இதுவரையிலான ஒவ்வொரு மாத வரவு செலவுக் கணக்கும் நிசப்தம் தளத்தில் இருக்கிறது. வருடாந்திர கணக்கு விவரமும் இருக்கிறது. ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.  


5 எதிர் சப்தங்கள்:

களிமண் said...

Appreciate the transparency which is rare. I feel you can redact the account and transaction number either in part or full to reduce the security vulnerability.

ராமுடு said...

Mr.mani.. tnx for being transparent.. I have a suggestion.. why can’t we reset a limit at s constant period. For ez, Nisaptham can have max of 30lacs at end of financial year. This way, you should be able to identify more people. Also at later point, people will not stop in donations. Our mentality is.. when Nisaptham has more money why should I donate now?? Just thoughts

Anonymous said...

Congrats Manikandan! Keep doing...

Mr. Ranganathan Ganesh in FB..
//௨

God Morning!

சப்தம் நிறைந்த இந்த உலகில் 36 வயதே ஆன இந்த இளைஞர் “நிசப்தமாக” ஒரு சாதனையை ஐந்தாறு ஆண்டுகளாக செய்து வருகிறார்.நிசப்தம் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி தன்னார்வ தொண்டு புரிகிறார்.இது அல்ல அதிசயம்;.31/3/2018 அன்று முடிவடைந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான கணக்கு வழக்குகளை (Bank Statement) மூன்றே நாட்களில் அதாவது நேற்று தன் வலைத்தளத்தில் வெளியிடுகிறார்..தொகை ரொம்ப அதிகம் இல்லை சுமார் அரை கோடி ரூபா தான்..!!

இதை பற்றி குறிப்பிடும்போது அவர் சொல்வது..
=========================================================
“நிசப்தத்தில் எழுதும் போது 'என் பேர் வராம பார்த்துக்குங்க' என்று சில நன்கொடையாளர்கள் சொல்வதுண்டு. ஆனால் எந்த விவரத்தையும் மறைக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். தவறுகளைச் செய்கிறவர்களே மிக தைரியமாகச் சொல்லிவிட்டுச் செய்கிறார்கள். நல்ல காரியங்களைத்தானே செய்கிறோம்? அனைத்துமே வெளிப்படையாக இருக்கட்டும். இன்னும் சிலருக்கு உந்துதலாக அமையட்டும்.

எல்லாவற்றிலும் அப்பட்டமான வெளிப்படைத்தன்மையுடன் இருந்துவிட்டால் எனக்கும் வேலைப்பளு குறையும். ஒருவேளை பெயரை மறைப்பதாக இருந்தால் நான் ஒவ்வொரு வாரியாகச் சரி பார்க்க வேண்டும். மறைக்க வேண்டிய இடங்களில் மறைக்க வேண்டும். ஆனால் இப்பொழுது வெகு எளிது. வங்கியிலிருந்து அனுப்புகிறார்கள். சிறு குறிப்பை எழுதி அப்படியே பிரசுரம் செய்தாகிவிட்டது. பத்து நிமிட வேலைதான். பனிரெண்டரை மணிக்கு ஸ்டேட்மென்ட் மின்னஞ்சலில் வந்திருப்பதைப் பார்த்தேன். ஒரு மணிக்கு பிரசுரம் செய்தாகிவிட்டது. அவ்வளவுதான். ஐம்பது லட்ச ரூபாய் வரவு செலவு விவரத்தை எதைப்பற்றியும் யோசிக்காமல் அப்படியே பிரசுரம் செய்வது எவ்வளவு பெரிய சுதந்திரம்? அத்தகைய சுதந்திரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு இருக்கட்டும்.”
==========================================================
எனக்கு ஒரு மகாபாரத கதை ஞாபகம் வருகிறது.

ஒரு முறை பண்டவர்களிடம் ஒரு தங்க மலையை கிருஷ்ணர் கொடுத்து அதை ஒரே நாளில் தர்மம் செய்ய முடியுமா என கேட்க,அந்த சகோதர்களும் காலை முதல் மாலை வரை அதை படாத பாடு பட்டு சிறிது சிறிதாக வெட்டி தானம் செய்தாலும் முடிவில் மலையின் ஒரு சிறு பகுதியைக்கூட தானம் செய்ய முடியவில்லையாம்.இதே போட்டியை அடுத்த நாள் கிருஷ்ணர் கர்ணனிடம் சொன்னபோது கர்ணன் அதை ஏற்று முதலில் தானம் பெற வந்த நபருக்கு அந்த மலையையே தானமாக வழங்கி ஒரே நிமிடத்தில் போட்டியில் ஜெயித்து விட்டானாம்.

திரு. மணிகண்டன் தன் வாழ்வின் குறிக்கோளாக சொல்வது..
==========================================================
“ஆற்றின் போக்கில் விழுந்த இலை பத்து எறும்புகளைச் சுமந்து இடம் மாற்றி விடுவது போல எந்தச் சார்புமின்றி நம் போக்கில் போய்க் கொண்டிருப்போம். தத்தளிக்கும் எறும்புகளை எல்லாம் கரையாற்றிவிடுவோம். அதற்குத்தான் இந்தப் பிறவி கிடைத்திருக்கிறது எனத் தோன்றுகிறது. அப்படி இருப்பதுதான் வாழ்க்கையின் அர்த்தமாகவும் இருக்கும். “
===========================================================
ஒரு குறுகிய காலத்தில் அவர் மற்றவர்களிடத்தில் எப்பேர்பட்ட நம்பிக்கையை பெற்றுள்ளார் என்பதற்கு இதை படியுங்கள்...
==========================================================
“இன்று கூட ஒரு மாணவியிடம் பேச வேண்டியிருந்தது அம்மா சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். சமீபத்தில் அப்பாவும் தவறிப் போனார். அவள் பொறியியல் கல்லூரியில் படிக்கிறாள். தம்பி ப்ளஸ் டூ. பொருளாதார ரீதியில் சிரமப்படுகிறார்கள்.
'என்ன செய்யறதுன்னு தெரியல' என்றாள்.

'நீ கவலைப்படாம படி. அவன் படிக்கட்டும்.. பார்த்துக்கலாம்' என்று சொல்லியிருக்கிறேன். அது என்னுடைய சொற்கள் இல்லை. பின்னால் நிற்கும் ஆயிரக்கணக்கானவர்களின் சொற்கள் அவை. யாருக்கோ கடனாகக் கொடுத்த பணம் திரும்பி வரும் போது 'அது வரவே வராதுன்னு நினைச்சேன்..வந்துடுச்சு...அதான் நிசப்தம்ல போட்டு விட்டேன்' என்று கோவில் உண்டியலில் பணம் போடுவதைப் போல நிதி கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள். பொய் சொல்லவில்லை. இதையெல்லாம் சொன்னால் யாரும் நம்பவே மாட்டார்கள். “
==========================================================

இன்று கவர் படமாக ஒரு கடவுள் படம் போடலாம் என்று ஆரம்பித்தேன்..

அமர்க்களமாக நிறைவேற்றிய இறைவனுக்கு நெஞ்சார்ந்த நன்றி.//

Thirumalai Kandasami said...

மிக்க நன்றி , மணி அண்ணா . ஒரு சிறு பரிந்துரை, நிசப்தத்தை சிறு குழுவாக மாற்றி மேலும் பலருக்கு உதவ பரிசீலிக்கலாம்.

Opening Balance - 11.21 L
Total Deposits - 40.92 L

Total Withdrawals - 12.09 L (slightly above Opening Balance).


பலருக்கு உதவுவதை விட, சரியான நபரை தேர்ந்தெடுத்து உதவுவதே நோக்கம் என்று ஏற்கனேவே எழுதி இருப்பதை ஆமோதிக்கிறேன். தனிப்பட்ட முறையில் குழு தொடங்கி குறுகிய காலத்தில் இவ்வளவு பணிகள் செய்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஆனால் நிசப்தம் பலரை சென்றடைந்து ஆலமரமாய் வளர்ந்து விட்டது. சிறு குழுவாக மாற்றுவதை பரிசீலிக்கவும். நிசப்தம் மென்மேலும் வளர வாழ்த்துகள்.

Suresh said...

Dear Mani,

In bank statement there is a minor error. Statement against my name amount deposited is wrong. kindly check.

Thanks & regards,
Suresh G
Mail: gsuresh.74@gmail.com