இன்றைக்கு அத்தனை சேனல்களிலும் சென்னை போராட்டத்தைக் காட்டினார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. 'சென்னையில் காவிரி பிரச்சினை' என்று நாடு முழுவதும் பேச வைத்திருக்கிறார்கள். இத்தகைய போராட்டங்களை நடத்தினால் தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்பார்கள். சொல்லிவிட்டுப் போகட்டும். இப்பொழுது மட்டும் மணக்கிறதா என்ன? இன்னமும் சாலா மதராஸிதானே? 'நீ மட்டும் இந்தி படிக்க மாட்டாயா?' என்னும் இளக்காரம்தானே?
எந்தவிதமான அறப்போராட்டத்தையும் திரும்பிக் கூட பார்க்காத அரசுகளையும் ஊடகங்களையும் வைத்துக் கொண்டு என்னதான் வழி? இளைஞர்களின் உணர்ச்சியைக் கிளறிக் குளிர்காய்கிறார்கள் என்பார்கள். அப்படிதான். இல்லையென்று மறுக்கவில்லை. 'சுரணையற்ற இனம்' என்று திட்டு வாங்கிய இனம்தான் இது. சினிமாக்காரன் பின்னால் அலைகிறவர்கள் என்று அசிங்கப்படுத்தப்பட்டவர்கள்தான். ஆனால் இன்றைக்கு இளந்தலைமுறையின் ஒரு பிரிவு அரசியல் பேசுகிறது.தாமும் தமது இனமும் பாதிக்கப்படுவதாக அழுத்தமாக நம்புகிறது துணிந்து தெருவில் இறங்குகிறது. இதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இல்லையா?
எந்தவிதமான அறப்போராட்டத்தையும் திரும்பிக் கூட பார்க்காத அரசுகளையும் ஊடகங்களையும் வைத்துக் கொண்டு என்னதான் வழி? இளைஞர்களின் உணர்ச்சியைக் கிளறிக் குளிர்காய்கிறார்கள் என்பார்கள். அப்படிதான். இல்லையென்று மறுக்கவில்லை. 'சுரணையற்ற இனம்' என்று திட்டு வாங்கிய இனம்தான் இது. சினிமாக்காரன் பின்னால் அலைகிறவர்கள் என்று அசிங்கப்படுத்தப்பட்டவர்கள்தான். ஆனால் இன்றைக்கு இளந்தலைமுறையின் ஒரு பிரிவு அரசியல் பேசுகிறது.தாமும் தமது இனமும் பாதிக்கப்படுவதாக அழுத்தமாக நம்புகிறது துணிந்து தெருவில் இறங்குகிறது. இதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இல்லையா?
எதிர்தரப்பினர் உணர்ச்சியைக் கிளறிவிடுவதாகச் சொல்லிக் கதறுகிறவர்கள் 'நீங்கள் வஞ்சிக்கப்படவில்லை' என்று தரவுகளோடு பேசுங்கள். அப்படி நிரூபிப்பது சாத்தியமே இல்லாத தருணத்தை அடைந்துவிட்டோம். தமிழகம் வஞ்சிக்கப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தில் மிக மோசமான இழுத்தடிப்பைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் நெற்களஞ்சியம் காய்ந்து கொண்டிருக்கிறது என்பதும் விவசாயம் பாதிக்கப்படுவது என்பதும் மட்டுமே இந்தப் போராட்டத்தின் பின்னணிக் காரணம் என்றால் அது பொருத்தமாக இருக்காது. மத்தியில் ஆளும் மோடியின் அரசுக்கும், தமிழகத்தில் இருக்கும் கையாலாகாத அரசுக்கும் எதிரான ஒட்டு மொத்த எதிர்ப்பு மனநிலை இது. அது தமிழகத்தில் நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது.அதனை ஐ.பி.எல் பற்ற வைத்திருக்கிறது.
தமது கொந்தளிப்பையும் கோபத்தையும் இதைவிடவும் சிறப்பாக வேறு எப்படிக் காட்டியிருக்க முடியும்?
இந்தப் போராட்டங்களை யாரும் புரிதல் இல்லாமல் செய்யவில்லை. நமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற நினைப்பில் 'இப்படியெல்லாம் போராடலாமா?' 'அவனை அடிக்கலாமா?' என்று தமது அறவுணர்ச்சியை பாவனையாக்கிக் காட்டிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மோடி அரசுக்கும், ஒத்து ஓதுகின்ற மாநில அரசுக்கும் தமது கடுமையான எதிர்ப்பினைக் காட்டியிருக்கிறார்கள். நிச்சயமாக அரசுகள் கலங்கிப் போயிருக்கும். ஓர் இனம் எதிர்ப்பைக் காட்டத் துவங்கும் போது வல்லரசுகள் அதை நசுக்க முயற்சிப்பார்கள். நசுக்க முயற்சிக்கட்டும். எவ்வளவுக்கு எவ்வளவு அழுத்தம் கூடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு இந்த இனத்தின் கோபமும் வெறியும் கூடும். சூழல் அப்படிதான் உணர்த்துகிறது. வஞ்சகமும் லஞ்சமும் தலை விரித்தாடுகிறது.
இன்றைக்கு சிலர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். மிச்சமிருப்பவர்கள் களத்தில் இறங்காமல் இருக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.
போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள் பக்கம்தான் மனம் நிற்கிறது. இத்தகைய எழுச்சியைக் கண்டு வாக்கு பொறுக்கும் அரசியல் காட்சிகள் பதறக் கூடும். நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளைச் செய்வார்கள்.'எவனோ ஸ்கொர் செய்யுறான்' என்று பதற்றம் வரத்தானே செய்யும். இளைஞர்கள் அரசியல் புரிதல் இல்லாமல் மழுங்கிக் கிடப்பதுதான் அரசியல்வாதிகளுக்குத் தேவை. அவன் சினிமாவிலும் விளையாட்டிலும் சொக்கிக் கிடக்க வேண்டும். தாம் சொல்வதை மட்டுமே நம்ப வேண்டும். அப்படிதான் அரசியல் கட்சிகள் விரும்பும். இன்றைக்கு இளைஞர்கள் மேலெழுவது அவர்களை பதறச் செய்வதில் வியப்பேதுமில்லை. நம்முடைய புரிதல் சரியோ தவறோ- ஒவ்வோர் இளைஞனுக்கும் அரசியல் நிலைப்பாடு வேண்டும். பிறகு அது மெல்ல வடிவம் பெறும். தம் இனம், மொழி, தேசியம் குறித்தான புரிதலை நோக்கி நம் இளைஞர் பட்டாளத்தை இந்தப் போராட்டங்கள் இழுத்துச் செல்ல வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
ஓர் இனம் தனக்கான குரலை தொடர்ந்து எழுப்புகிறது. குறைந்தபட்சமான செவி சாய்ப்பு கூட இல்லாமல் தம் போக்கில் வல்லரசுகள் செயல்படும் போது இப்படித்தான் கோபம் வெளிப்படும். தனக்கான உரிமை பாதிக்கப்படும் போது, தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் தமது வாக்கு பொறுக்கி அரசியலுக்கும், லஞ்ச லாவண்யக் கொள்ளை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும் பாரபட்சமாகச் செயல்படும் போது கிளர்ந்தெழுவது அவசியம். அதைத்தான் இன்று சென்னையில் செய்திருக்கிறார்கள்.
வாழ்த்துக்கள்.
வன்முறை தீர்வாகாது, விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும் போன்ற ஜல்லியடித்தல்களை ஏற்றுக் கொண்டாலும் இன்றைய கவன ஈர்ப்பை மனப்பூர்வமாக ஆதரிக்கலாம். உண்மையில் தமிழர்களுக்கு வேறு வழியொன்றுமில்லை.
5 எதிர் சப்தங்கள்:
அற வழியில் போராட்டம் நடைபெறுவதை ஆதரித்தே ஆக வேண்டும். ஆனால் அதைப் பயன் படுத்தி ஆதாயம் அடையத் துணிபவரை அடையாளங்கண் டொதிக்கி வைத்தலே 'அற" சசெயல்...
இன்னும் ஒரு கூட்டம் ஐபிஎல்-அ அரசியலாக்காதீங்கனு ஸ்டேடஸ் போட்டுட்டுதான் இருக்கு. அதே பக்கிகள்தான் NFL kneel down protest அ ஆதரிச்சு எழுதுச்சுகள். அமெரிக்கால பண்ணா நியாயம், அண்ணா சாலையில் பண்ணா மட்டும் விளையாட்டும் அரசியலும் வேறயாம்!!!!
போராட்டத்தில் எவன் ஆதாயம் அடஞ்சாலும் பரவால்ல.. நமக்கு தேவை காவிரி தண்ணி..
"தம் இனம், மொழி, தேசியம் குறித்தான புரிதலை நோக்கி நம் இளைஞர் பட்டாளத்தை இந்தப் போராட்டங்கள் இழுத்துச் செல்ல வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன்"
என்னைப்போல நேரடியாக களத்தில் இறங்க முடியாதவர்கள் சார்பில் மனம் நிறைவோடு வாழ்த்துகிறேன்
வாழ்க வளமுடன்
//.'எவனோ ஸ்கொர் செய்யுறான்' //
அவன் வீட்டுக்கு வருமானவரி துறையை அனுப்பி வழிக்கு கொண்டு வரலாம் ன்னா அந்த எவனோ ஒருவன் யாருன்னு தெரியலையே பரட்டையக்கா.
Post a Comment