நிசப்தம் தளத்துக்கு இரண்டு App உண்டு. முதலாவது செயலியை சிவசுப்பிரமணியன் உருவாக்கிக் கொடுத்தார். இரண்டாவது சிவராஜ் உருவாக்கியது. ஒன்றை ஆயிரம் பேர் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள். சிவராஜ் உருவாக்கியதை எழுநூறு பேர் தரவிறக்கம் செய்து அதன் வழியாக தளத்தைப் படிக்கிறார்கள்.
மேலே இருக்கும் பத்தியை வாசிக்கும் போது 'பந்தா பண்ணுறான்' என்று தோன்றுகிறதா? கண்டுகொள்ளாமல் தொடர்ந்து வாசிக்கவும்.
நமக்கெல்லாம் ஒருவர் மெனக்கெட்டு வேலை செய்கிறார் என்றால் பந்தாவாக இருக்காதா? அதிலும் சிவராஜ் இருக்கிறாரே- இதுவரை மட்டும் செயலியை பதினெட்டு முறை அப்டேட் செய்திருக்கிறார். புதிது புதிதாக எதையாவது இணைத்துக் கொண்டேயிருக்கிறார்.
உண்மையிலேயே எனக்கு சந்தோசம். நெகிழ்ச்சியும் கூட.
இதையே அவர் வணிகரீதியாக யாருக்காவது செய்து கொடுத்திருந்தால் பத்தாயிரம் ரூபாயாவது கொடுத்திருப்பார்கள். என்னைப் பற்றி தெரியாதா? எச்சில் கையில் காக்கா ஓட்டாத கஞ்சப்பிசினாரி. பைசா பலனில்லை அவருக்கு. ஆனாலும் தொடர்ந்து மெருகேற்றுகிறார்.
செயலியில் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிறத்தை மாற்றியமைக்கலாம். பிற தளங்களின் இணைப்பை உள்ளீடு செய்வதன் மூலமாக பிற வலைத்தளங்களையும் வாசிக்க முடியும். இது புதிய வசதி. இதைச் சொல்லி பரிசோதித்துப் பார்க்கச் சொன்னார். தொடர்ச்சியாக நான் வாசிக்கும் தளமென்றால் அது ஜெமோவின் தளம். உள்ளீடு செய்து பார்த்தேன். அது வேலை செய்யவில்லை. 'ஜெமோவின் தளம் வேர்ட்பிரஸ்..இப்போதைக்கு பிளாக்கர் அடிப்படையில் இயங்கும் தளங்களுக்கு மட்டுமே இந்த வசதி வேலை செய்யும்' என்றார். விரைவில் எல்லா தளங்களையும் வாசிப்பதற்கான வசதியைச் செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
செயலியில் மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நிறத்தை மாற்றியமைக்கலாம். பிற தளங்களின் இணைப்பை உள்ளீடு செய்வதன் மூலமாக பிற வலைத்தளங்களையும் வாசிக்க முடியும். இது புதிய வசதி. இதைச் சொல்லி பரிசோதித்துப் பார்க்கச் சொன்னார். தொடர்ச்சியாக நான் வாசிக்கும் தளமென்றால் அது ஜெமோவின் தளம். உள்ளீடு செய்து பார்த்தேன். அது வேலை செய்யவில்லை. 'ஜெமோவின் தளம் வேர்ட்பிரஸ்..இப்போதைக்கு பிளாக்கர் அடிப்படையில் இயங்கும் தளங்களுக்கு மட்டுமே இந்த வசதி வேலை செய்யும்' என்றார். விரைவில் எல்லா தளங்களையும் வாசிப்பதற்கான வசதியைச் செய்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.
அவர் செய்கிற உதவிக்கு நான் செய்யக் கூடிய ஒரே பிரதியுபகாரம் என்றால் இணைப்பை நிசப்தம் தளத்தில் கொடுப்பதுதான். தயவு செய்து டவுன்லோடு செய்து மானத்தைக் காப்பாற்றுங்கள். அவர் என்னைப் பற்றி என்னவோ ஏதோவென்று நினைத்திருப்பார் போலிருக்கிறது. டவுன்லோடு செய்தவர்களுக்கு கமுக்கமாக இருநூறு ரூபாய் அனுப்பி வைக்கிறேன் சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்? அதனால் வதந்திகளை நம்பாமல் தரவிறக்கம் செய்யவும்.
'நீங்க எழுதுவீங்கன்னு சொன்னாங்க..நான் படிச்சதே இல்ல' என்று யாராவது சொன்னால் 'ஆமாங்க..ஆப் கூட இருக்கு' என்று ஸீன் போட்டுவிடுகிறேன். அதுவும் மாமனார் வீட்டு சொந்தமாக இருந்தால் செம பந்தா. தமிழில் வலைப்பதிவுக்கென செயலி வைத்துக் கொண்டு பந்தா செய்கிற ஒரே ஆள் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா தான்.
விடமுடியுமா?
நிறயப் பேர் வாசிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.
நன்றி சிவராஜ்.
நிசப்தம் செயலியை ஏற்கனவே தரவிறக்கம் செய்து வைத்திருப்பவர்கள் பிளேஸ்டோரில் திறந்து 'அப்டேட்' என்று க்ளிக் செய்வதன் வழியாக புதிய செயலியாக மாற்றிக் கொள்ளலாம். இதுவரை தரவிறக்கம் செய்யாதவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளவும். தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்கு நிச்சயம் உதவும்.
கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். செயலியை தொடர்ந்து மெருகேற்ற சிவாவுக்கு உதவும். அல்டாப்பு செய்வதற்கு எனக்கும் உதவும்.
sivarajng@gmail.com
sivarajng@gmail.com
செயலிக்கான இணைப்பு:
1) ஆன்ட்ராய்ட்
2) ஆப்பிள்
9 எதிர் சப்தங்கள்:
Done Manikandan..send me 200...hahaha
//டவுன்லோடு செய்தவர்களுக்கு கமுக்கமாக இருநூறு ரூபாய் அனுப்பி வைக்கிறேன் சொன்னால் மட்டும் நம்பவா போகிறீர்கள்?//
தூர்தர்சன் ல இந்த ஆளோட நிகழ்ச்சியை பாத்த கூலி எரநூறு ஓவா வே இன்னும் வரல.
இதுல திரும்பவும் மொதல்லே ருந்தா!!!!.
//எச்சில் கையில் காக்கா ஓட்டாத கஞ்சப்பிசினாரி. பைசா பலனில்லை அவருக்கு. ஆனாலும் தொடர்ந்து மெருகேற்றுகிறார்.//
வௌவா(ல்) வீட்டுக்கு விருந்தாடி போனா சோபா ல உக்காந்து ஜூஸா குடிக்க முடியும்.
நீ ஒரு பக்கம் தொங்கு. நான் ஒரு பக்கம் தொங்குறேன் ன்னு தொங்கிட்டு வர வேண்டியது தான்.
This update is awesome. One suggestion though. When i receive a new post notification and i click on it, it goes to home screen, i click enter and then it goes to posts list and i have to click the post. Two extra clicks. Why can't it go directly to the post?
தரவிரக்கம் செய்ய நாங்கள் ரெடி ஆனால் அதற்கு ஸ்மார் போன் வேணுமாம். வாங்கி தர நீங்கள் ரெடியா?
Good job.. this really helps.
Comment section is going to website.. it is better to make it as part of the app page..
I am using the app by Sivista on iPhone and it is an amazing app. Tidy design and clean user interface.
The only gripe is, the pictures in the blogs do not dock in position and float above the text, hiding the text. I need to open such blogs in the Desktop mode within the app.
~Selva
அண்ணா, மில்லியன் டவுன்லோடு ஆக வாழ்த்துக்கள்.. இந்த வாழ்த்துக்கும் சேர்த்து ஒரு 1000 ரூவாவா அனுப்புங்க
1. smart vijay said...
Done Manikandan..send me 200
2.Avargal Unmaigal said...
தரவிரக்கம் செய்ய நாங்கள் ரெடி ஆனால் அதற்கு ஸ்மார் போன் வேணுமாம். வாங்கி தர நீங்கள் ரெடியா?
3.Rajeshkumar P said...
அண்ணா, மில்லியன் டவுன்லோடு ஆக வாழ்த்துக்கள்.. இந்த வாழ்த்துக்கும் சேர்த்து ஒரு 1000 ரூவாவா அனுப்புங்க.
ஆகா!!!."எரநூறு ஓவா கிடைக்காதவர்கள் இயக்கம்" ன்னு ஒண்ணு ஆரம்பிக்கலாம் போலருக்கே.
Post a Comment