Mar 8, 2018

கி.ரா. குழம்பு

பெங்களூரில் 'பஞ்சுமிட்டாய்' என்ற பெயரில் ஒரு குழுமம் இயங்கி வருகிறது. அதே பெயரில் சிறார் புத்தகம் ஒன்றையும் வெளியிடுகிறார்கள். குழந்தைகள் சம்பந்தமாக எதையாவது செய்து கொண்டேயிருக்கிறார்கள். அடுத்த வேலையாக இவர்கள் சென்னையில் உள்ள நாடகக் குழுவை அழைத்து குழந்தைகளுக்கான நாடகம் ஒன்றை நடத்துகிறார்கள். 

கி.ராஜநாராயணன் கதையை குழந்தைகளுக்கு ஏற்ற நாடகமாக மாற்றி 'பேர்ச்' என்ற நாடகக் குழு அரங்கேற்றம் செய்கிறது. இதே நாடகத்தை அந்தக் குழு சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பிற ஊர்களிலும் அரங்கேற்றியிருக்கிறார்கள். 

நாடகம் குறித்தான பத்திரிக்கைச் செய்திகள்:
பெங்களூர் வந்து நாடகம் நடத்துவதற்காகக் பேர்ச் குழுவுக்கு ஒரு தொகையைக் கொடுத்திருக்கிறார்கள். கைக்காசுதான். அதனால் நாடகம் பார்க்க வருகிறவர்களுக்கு அனுமதிக்க கட்டணம் நூறு ரூபாய். அதுவொன்றும் பெரிய தொகை இல்லை. 

பெங்களூரில் இத்தகைய நிகழ்வுகள் எப்பொழுதாவதுதான் நடைபெறுகின்றன. நடத்துகிறவர்களை மனமார வாழ்த்தலாம். பெங்களூர்வாசிகள் சனிக்கிழமையன்று ஊரில் இருந்தால் குழந்தைகளை அழைத்துச் செல்லலாம். நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளவும். 

இடம்: துபாரஹள்ளி,பெங்களூரு
நாள்: மார்ச் - 10 (சனிக்கிழமை) , மாலை 3 மணிக்கு

பிரபு : 9731736363
அருண் கார்த்திக் : 9902769373
ஜெயக்குமார் : 9008111762 

0 எதிர் சப்தங்கள்: