Mar 7, 2018

பெரியார் மண்ணும் இந்துத்துவ அரசியலும்

எங்கள் ஊரில் ஓர் இந்துத்துவ அமைப்பின்  ஆள் ஒருவர் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இரவில் தனது வாகனத்தை யாரோ தீ வைத்துக் கொளுத்திவிட்டதாகவும் உடனே தன்னைக் காப்பாற்றும்படியும் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். மதக் கலவரமாகிவிடக் கூடும் என பயந்த காவலர்கள் பதறியடித்து ஓடினார்கள். நல்ல வேளையாக அவருக்கு எதுவும் ஆகவில்லை. 'எனக்கு இனிமேல் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு கொடுங்கள் என்று கோரினார். ஆவண செய்வதாகச் சொல்லி அடுத்தநாள் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். மறுநாள் காவலர்கள் இயல்பாக விசாரிக்கத் தொடங்கியவுடன் அவர் முன்னுக்குப் பின் முரணாக அவர் பேச சந்தேத்தினால் காவலர்கள் தமது வழிமுறையில் விசாரித்தார்கள். கடைசியில் பார்த்தால் அவன் வண்டியை அவனே தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறான். 'எதுக்குடா அப்படி செஞ்ச?' என்று கேட்ட போது 'அப்போதான் எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கிடைக்கும்' என்றானாம். கடுப்பான காவலர்கள் அங்கேயே வைத்து கும்மிய கும்மில் இப்பொழுது ஆள் சத்தமே இல்லை. 

இப்படி நிறையச் சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் பா.ஜ மத்தியில் ஆட்சியமைத்து, கருணாநிதிதியும் ஜெயலலிதாவும் இங்கே ஓய்ந்து போன பிறகு துள்ளுகிறார்கள். 'அரசியலில் ஜெயிப்பதும் தோற்பதும் இயல்பு..துள்ளாதீர்கள்' என்று ஆரம்பித்தால் 'இத்தனை நாள் பாவாடைகள் மத மாற்றம் செய்தார்களே அப்போ நீ என்ன பேசுன? துலுக்கர்கள் குண்டு வெச்சாங்களே அப்போ நீ அமைதியாத்தானே இருந்த?' என்று ஆறிப் போன டீயை ஆத்து ஆத்துவென ஆத்துவார்கள். காது சலித்துப் போகும். 'எப்படியோ போகட்டும்' என்று நாம் அடங்கிப் போகும் வரைக்கும் விடமாட்டார்கள். தலைவர்களுக்கு பயம். ரெய்ட் வரும், கைது செய்வார்கள் என பம்முகிறார்கள். அது அவர்களை இன்னமும் துள்ளச் செய்கிறது.

திரிபுராவிலும் மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள் 'தமிழகத்திலும் கேரளாவிலும் வாய்ப்பே இல்லை' என்றெல்லாம் சமாதானத்துக்குச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்துத்துவ அரசியல் இங்கே ஆழமாக ஊடுருவிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இன்றைக்கு இந்துத்துவ அரசியல் சமூக ஊடகங்களில் மட்டும் நடப்பதில்லை. பலரும் அப்படிதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 'இவனுக நோட்டாவைவிட கம்மியாத்தானே ஓட்டு வாங்கினாங்க..' என்று கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுதும் அப்படியே பார்க்க வேண்டியதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விஸ்வஹிந்து பரிஷத்தைச் சார்ந்த ஒருவர் 'கருணாநிதி தலையை வெட்டுவோம்' என்று அறிவித்தார். அப்பொழுது பா.ஜ.வுக்கு தமிழகத்தில் என்ன இடம் இருந்தது? எல்லோரும் சிரித்தார்கள். இது நடந்து பத்து வருடங்கள் கூட ஆகியிருக்காது. அப்பொழுது அது செய்தித்தாள்களில் எங்கயோ ஒரு மூலைச் செய்தி. அவ்வளவுதான். ராமகோபாலனைத் தவிர இங்கு தெரிந்த முகம் என்று இந்துத்துவ அரசியலில் யாருமில்லை. இன்றைக்கு நிலைமை அப்படியா இருக்கிறது? பா.ஜ.கவை கலாய்க்கிறோம் என்ற பெயரிலாவது அந்தக் கட்சியை மையப்படுத்திதான் தமிழக அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது அவர்களின் வளர்ச்சிதான். 

வாக்கு அரசியல் இரண்டாம்பட்சம். மைய விவாதத்தில் தம்மை இடம் பெறச் செய்வதுதான் ஓர் அரசியல் இயக்கத்துக்கு முக்கியமான செயல்பாடு. அதை பா.ஜ.க கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அடைந்திருக்கிறது. பெரியாரையும் அண்ணாவையும் கருணாநிதியையும் திட்டினால் தம்மை நாறடிப்பார்கள் என்பது ராஜாவுக்கும் தெரியும். நாறடித்தால் என்ன? ஒரு நாள் முழுக்கவும் மையச் செய்தியாக தாம்தான் இருக்கிறோம் என்பதுதான் அவருக்குத் தேவை. அதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். அவருக்கு எதிரானவர்கள் 'சமூக வலைத்தளங்களில் நாறடித்தால் போதும்' என அவருக்கு எதிரான கருத்துச் சொல்லி வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு மனச்சாந்தி அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அமைப்புகள் களத்தில் மெல்ல ஊடுருவிக் கொண்டிருக்கின்றன. 

பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் மூன்றாம் அல்லது நான்காம் கட்ட நகரங்களில் இந்துத்துவ அமைப்புகளுக்கு என எந்தச் செயல்பாடும் இருந்ததாக நினைவில் இல்லை. இன்றைக்கு அப்படியில்லை. ஒரு கிறித்துவ ஆசிரியர் 'தீ இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடுவோம்' என்று ஒரு துண்டறிக்கை அச்சிடுகிறார். கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. தீ இல்லாமல் கொண்டாடுவோம் என்றுதான் சொல்கிறார். உள்ளூரிலிருந்து நான்கைந்து சில்லறைகள் கிளம்பிவிட்டார்கள்.'நீ பாவாடைதான?' என்று வசைபாடி, வாட்ஸாப்பில் செய்தி அனுப்பி என ஒரே அக்கப்போர். இத்தனைக்கும் அந்த ஆசிரியர் நாத்திகவாதி. ஆனால் அதையெல்லாம் அவர்கள் புரிந்து கொள்ளவா போகிறார்கள்? 'நீ நாத்திகனா இருந்தா என்ன? ஆத்திகனா இருந்தா என்ன? நீ கிருத்துவன்..நீ எப்படி பேசலாம்' என்று குதித்துக் கொண்டிருந்தார்கள். இப்படி எல்லா ஊர்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள். 

எங்கிருந்து முளைத்தார்கள் என்றுதான் யோசிக்க வேண்டும். 

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் தொடங்கி நிறைய வேலைகளை இந்துத்துவ அமைப்புகள் கமுக்கமாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக 'ஆலய மீட்பு' என்ற பெயரில் தீவிரமான பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். எச்.ராஜா ஓர் அமைப்பையே நடத்துகிறார். 'ஆமாம்ல..கோவில் பூராவும் அரசியல்வாதிகள் கையில் இருக்கு...அதை மீட்கணும்' என்று பொது மக்களை பேச வைக்க முயற்சிக்கிறார்கள். 'மசூதிகளை வஃப் வாரியம் கட்டுப்படுத்துவது போல இந்து கோவில்களையும் ஒரு தனி அமைப்பு நிர்வகிக்க வேண்டும்' என்று குரல் எழுப்புகிறார்கள். அப்படியே ஆகட்டும். ஆனால் நாளைக்கு தனி அமைப்புக்கு தலைவராகப் போகும் எச்.ராஜா மாதிரியான ஆட்கள் மட்டும் அரசியல்வாதி இல்லையா? இது வெறுமனே ஆலய மீட்பு இல்லை. அரசியல்வாதிகளிடம் கோவில் சொத்துக்களை கைப்பற்றுவது மட்டுமில்லை. ஆய்வாளர் பொ.வேல்சாமியின் 'கோவில்- நிலம்- சாதி' என்ற ஒரு புத்தகத்தின் முதல் நான்கு கட்டுரைகளை வாசித்தால் இதன் பின்னால் இருக்கக் கூடிய அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

அந்தக் காலத்திலிருந்தே கோவில்கள்தான் ஊரின் முக்கிய அரசியல் மையங்கள். அரசன் என்றொருவன் இருந்திருப்பான். ஆனால் போர், வரி என்பதோடு அவனது வேலை முடிந்துவிடுகிறது. ஊரை, அதன் கட்டமைப்பை, சாதியை என தமது கட்டுக்குள் வைத்திருந்தது எல்லாம் கோவில்கள்தான். தக்கார்களும் தர்மகர்தாக்களும்தான் முக்கியமானவர்கள். இன்றைக்கும் கூட தேர்தலின் போது 'உங்க கோவிலுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு இந்த வேலையைச் செய்து கொடுத்து விடுகிறேன்' என்று சொல்லி ஓட்டுக் கேட்கும் அரசியல்வாதிகள் உண்டு. அந்தக் கோவிலைச் சார்ந்தவர்கள் கூடி முடிவெடுத்து அவர்களுக்கு வாக்களிப்பார்கள். கோவில் முடிவு இன்னமும் ஊரைக் கட்டுப்படுத்துகிறது. இந்து அறநிலையத்துறையிடமிருந்து கோவில்களை கைப்பற்றுவது என்பது தமிழகத்தின் கிராமங்களைக் கைப்பற்றுவது போலத்தான். அதற்கான முன்னெடுப்பாகத்தான் ஆலய மீட்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ராஜாவுக்கு முன்பாக சு.சாமி இப்படி பேசிக் கொண்டிருந்தார். ஆனால் சு.சாமி உளறிக் கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள் வலுவாக இருந்தார்கள். அவரால் பெரிய சலனங்களை உண்டாக்க முடியவில்லை. இன்றைக்கு எச். ராஜாவின் காலம் அப்படியில்லை. பைத்தியக்காரத்தனமாகப் பேசினாலும் ஒரு சலனத்தை உண்டாக்குவதுதான் அவரது நோக்கமெல்லாம். யாருமே சீண்டாமல் மூலையில் கிடந்த இந்துத்துவம் இன்றைக்கு விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது. உளறி சலனத்தை உண்டாக்குதல், அதே சமயம் ஆணிவேரை நிலத்தில் பாய்ச்சுதல் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்

பா.ஜ.க Vs பிற அமைப்புகள் என்ற ஒரு சூழலுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது தமிழகம். இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய அரசியல் சூழலில் தமது எதிரிகள் வெற்றுக் கூச்சலில் மட்டும்தான் தமது எதிர்ப்பினைக் காட்டுவார்கள் என்று முழுமையாக நம்புகிறார்கள். 'இவர்களால் என்ன செய்துவிட முடியும்' என்கிற மிதப்பு எதை வேண்டுமானாலும் பேசி சலனத்தை உண்டாக்க முடியும் என்கிற தைரியத்தைக் கொடுக்கிறது. 

மிரட்டுகிற தொனியில் எதிர்ப்பை பதிவு செய்வது சரிதான். அதே சமயம் இந்துத்துவ அமைப்புகளின் கள அரசியல் பற்றிய புரிதல் இல்லாமல் 'வெட்டுவோம்..குத்துவோம்' என்று முழங்கி கொண்டிருந்தால் அவர்களை எதிர்த்து நிற்க முடியாது. ஒருவேளை அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பா.ஜ.க மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்து தமிழகத்தில் வலுவில்லாத தலைவரின் தலைமையில் ஆட்சி அமையுமானால் கண்ணை மூடி விழிப்பதற்குள் ஒரு பிரமாண்ட உருவமாக பா.ஜ.க எழுந்து நிற்கும். இது பெரியார் மண்' 'அண்ணா மண்' என்பதெல்லாம் வெற்றுக் கோஷமாக முடிந்து போகும்.  

15 எதிர் சப்தங்கள்:

John said...

I don’t think the hindutva is growing as you say. I live in a town and associated with village and nobody talks or gives importance for them. The only place where they get importance is social and print media. To your point about swami and Ramagopalan, they didn’t have social media reach like this during their time. Otherwise they would have been in the same place like H.Raja... All I can say is - Hindutva, Vinayagar Chathirthi and saffron terrorism is all in social media, not in our street or town mate.

மாறன் said...

சிறுபான்மை அரசியல், சாதி அரசியல் என்று திராவிட கட்சிகள் ஜெயிச்சப்ப வராத பிரச்சினை எல்லாம் இந்துத்துவா அரசியல்ல வருமாம். என்னப்பா நியாயம் இது.

Anonymous said...

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்
போன்ற தமிழ் பெண்களை இழிவு
படுத்திய ஆபாச எழுத்தாளர்களை ஆதரிக்கும்
திராவிடிஸ்ட்டுகளும், கம்யூனிட்டுகளும்
ஒழிந்தால் சரி

Anonymous said...

ஆய்வாளர் பொ.வேல்சாமி க்கு ஞான திருஷ்டி உண்டாலே..............அப்படி ஓரமாயி போயி நின்னுலே..... சவத்தெழவு. நீயெல்லாம் அரசியலு பேசிட்டு........நாஞ்சில் ஆசான் வாக்கு பொய்க்காதுல......[நாஞ்சில் ஆசான்]

Anonymous said...

பிராமணர்கள் ஐயாயிரம் ஆண்டுகால
சமய செல்வாக்கில் அதிகாரம்
செலுத்தினர்.
ஆனா இந்த திராவிடனுக வெறும்
ஐம்பது வருஷ ஆட்சியை பயன்படுத்தி
நாட்டயே சூறையாடிருக்கறானுக.
பார்பன ஆதிக்கம் இருந்திருந்தா
தமிழ் ஓரளவுக்காவது தப்பி
பிழச்சிருக்கும்.
இவுனுக தமிழ சொல்லி ஆட்சிக்கு
வந்துட்டு, தமிழர்களிடம் அளவுக்கதிகமா
ஆங்கில மோகத்த உருவாக்கி, தாங்கள்
நடத்துகிற கல்வி நிறுவனங்களின் மூலம்
தெருவுக்கு பத்து வேலையில்லா
இஞ்சினியரை உருவாக்கியிருக்கிறார்கள்

kandhu said...

ஒருதலைப்பட்சமான பதிவாவே எனக்கு படுகிறது

Anonymous said...

UNGAL BAYAM THEVAIYATRADHU.

திரிபுராவிலும் மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்.

மேகாலயா IS NOT BJP GOVT. BJP HAS GOT ONLY TWO SEATS THERE. LIKE GOA CONGRESS FAILED HERE IN மேகாலயாALSO DESPITE BEING THE SINGLE LARGEST PARTY. RAHUL TO BLAME FOR LACK OF POLITICAL WISDOM.

THEIR மேகாலயா C.M. MR. SANGMA IS A HIGHLY EDUCATED MAN. SON OF A CONGRESS LEADER/SPEAKER.

HE WILL NEVER LISTEN TO BJP.

IN திரிபுரா CPM IS TO BE BLAMED. NOT ONLY THEY WERE ANTI-PEOPLE LOT OF VIOLENCE. LIKE MAMTA OF BENGAL THEY WANTED SOMEBODY TO CONTROL CPM. BJP CASHED IN.

IN THE PAST CPM WAS A PARTY PRINCIPLES. NOW COMPROMISES GALORE FOR A FEW SEATS.

MULLAI PERIYAR/LTTE/ALLIANCE WITH CONGRESS TO DEFEAT BJP/ ALLIANCE WITH DMK SAME TIME OPPOSING CORRUPTION ETC.

BJP WILL SURELY LOSE IN 2018. THE DECLINING TREND WAS VISIBLE IN GUJARAT. ONLY A GOOD STRATEGY IS NEEDED.

ALL PARTIES MUST UNITE AND FIGHT FOR A NATIONAL CAUSE.

THE BRAND OF MODY MUST BE DEFEATED. BJP IS ONLY MARKETING MODY.

A MAN LIKE PAWAR/MAMTA/MUST STEP IN. IN SPITE OF THEIR FAULTS THEY WILL GIVE A GOOD FIGHT TO MODY.

LET US ALL UNITE TO SAVE INDIA.

ANBUDAN,

M.NAGEWARAN.Anonymous said...

"பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்
போன்ற தமிழ் பெண்களை இழிவு
படுத்திய ஆபாச எழுத்தாளர்களை"

Are those the only one? or Those writers are only doing this?

கண்ணன் கரிகாலன் said...

கடவுள் சிலை வெறும் கல். அதை உடைத்து படிக்கட்டுகள் கட்டுவேன் என்று கூறினார் பெரியார்.
அப்போதும் எதிர்ப்பு இருந்தது. ஆயினும் திராவிட கழகங்கள் தோன்றி வளர்ந்தன.

இன்று பெரியாருக்கு கல் சிலை வைத்து வணங்குகின்றனர். கடவுளானார் பெரியார். அவர் சிந்தனைகளை கிஞ்சிற்றும் கடைப்பிடிப்பதில்லை.


Anonymous said...

திராவிட அரசியல்வாதிகளையும் தமிழ் பொராளிகளையும் இன்னுமா ணபுகிரீர்கள்

naresh said...

Miga miga sariyana pathivu.....

naresh said...

And I am so wonder and fear about the comments against this post

Anonymous said...

மன்னிக்கணும், இது ஒரு தலை பட்சமான பதிவு.

எப்படி இருந்தாலும், தமிழகத்தில் வலதுசாரி வளர்ந்துவிட்டதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

MARUTHAPPAN said...

கவலை படாதீர்கள், 2019ல்ம் பாஜக தான் மத்தியில் ஆட்சிக்கு வரும்

Anonymous said...

fINALLY THE CAT CAME OU T OF THE BAG.
YOU CAN NOT ESCAPE THE ANTI-BRAHMIN ATTITUTDE HOWEVER EDUCATED OR KNOWLEDGE LEVEL REACHED..
ANOTHER DRAVIDA IDITO WANT TO BLAME EVERYTHING FOR BRAHMINS AN D HINDUS.
-SURYA