Mar 8, 2018

அப்ரைசல்

'அப்ரைசலுக்கு வந்துடுங்க' மேலாளர் காலையிலேயே சொல்லிவிட்டார்.

'எத்தனை மணிக்கு?'

'இன்வைட் அனுப்பறேன்'

இடைப்பட்ட நேரத்தில் எனக்குத் தெரிந்த நண்பர்- அண்ணனை அழைத்து 'அண்ணா இன்னைக்கு எனக்கு நேரம் எப்படி இருக்கு?'

'உனக்கு எப்பவுமே நல்ல நேரம்தாண்டா'

'ம்க்கும். அப்ரைசலுக்கு மேனேஜர் கூப்பிட்டு இருக்காருங்கண்ணா'

'அதெல்லாம் ஒன்னும் பிரச்சினை இருக்காது.. அநேகமா உனக்கு ப்ரோமோஷன் கிடைக்கும்...போய்ட்டு வா'

மலையாள பகவதியே! 

மதியம் உள்ளே அழைத்தார். 

'உட்காருங்க'

ஈஈஈ...பல்லைக் கெஞ்சியபடி அமர்ந்தேன்.

'முதல்லயே சொல்லிடுறேன்...இந்த டிஸ்கஷன் அப்படியொண்ணும் நல்லா இருக்காது....'

'அந்த அண்ணன் ப்ரோமோஷன் கிடைக்கும்ன்னு சொன்னாரே' என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை முதலில் கசப்பு பிறகு இனிப்பாக இருக்கக் கூடும். 

முதல் பவுன்சர் அவரிடமிருந்து . 'உனக்கு ஒரு மெயில் கூட சரியா அனுப்ப தெரியறதில்லை'. இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும்.

'தினமும் ஒரு பிளாக் எழுதறேன். ஒன்றரை வரியில் மெயில் அனுப்ப முடியாதா?'  கேட்கலாம்தான் ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது. அப்ரைசல் உரையாடலில் எதைச் சொன்னாலும் பதிவு செய்து கொள்வார்கள். எதுவும் பேசவில்லை.

'மேலே சொல்லுங்க'

சொல்லிக் கொண்டேயிருந்தார். 'சப்ஜெக்ட் தெரியல; ஒருங்கிணைப்பு சரியில்ல'

அவரைப் பேச விடுவதைவிட நாமே எடுத்துக் கொடுத்துவிடலாம். யோசித்து யோசித்து எடுத்து வீசுகிறார். 'ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட்?'

'ஆ..அதுவும் நிறைய மாறனும்' 

அதுவும் போச்சா? கசப்பாகவே ஊட்டிக் கொண்டிருக்கிறார். இனிப்பே இல்லை போலிருக்கிறது. முக்கால் மணி நேரம் இதுதான். தலைக்கு மேலே போகிறது. ஜாண் போகிறதா  முழம் போகிறதா என்றெல்லாம் தெரியவில்லை. 

காது அடைத்து,  கண்கள் இருண்டன. இந்த லட்சணத்தில் பதவி உயர்வுதான் குறைச்சல். ராஜினாமா செய்துவிடச் சொல்லிவிடுவாரோ என்று கூட யோசனை ஓடியது.

ஐந்தாயிரம் இருந்தால் பெட்டிக்கடை. ஐம்பதாயிரம் இருந்தால் மளிகைக்கடை. ஐந்து லட்சம் இருந்தால் சூப்பர் மார்க்கெட் என்ற வசனம் எல்லாம் மனதுக்குள் வந்து போனது. என்னை நம்பி ஐந்து லட்ச ரூபாயை வீட்டில் இருப்பவர்கள் தர மாட்டார்கள். ஆனால் எப்படியும் ஐம்பதாயிரம் ஆட்டையை போட்டுவிடலாம். 

'ஆனது ஆச்சு...கடைசியா என்ன சொல்ல வரீங்க?' -கேட்கிற மனநிலைக்கு வந்துவிட்டேன்.

'அடுத்த வருஷம் இப்படியே இருந்த நல்லா ரேட்டிங் கொடுக்க மாட்டேன்'

'அப்படின்னா இந்த வருஷம்?'

'ஆவரேஜ்'. 

'ஆக, வேலையை விட்டு தூக்க மாட்டீங்களா?'.

கலாய்க்கிறேன் என்று நினைத்திருக்கக் கூடும். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு 'கண்டினியூ யுவர் வொர்க்' என்றார். 

வெளியில் வந்தவுடன் சில நண்பர்களிடம் பேசினேன். 'நீ எவ்வளவோ பரவால்லடா' என்றார்கள். அவர்களுக்கு தர்ம அடி போலிருக்கிறது. 

'என்னடா சொன்னாங்க?' என்றேன். 

'ரேட்டிங் பத்தியெல்லாம் நீ யோசிக்கக் கூடாது..வேலை இருக்கேனு சந்தோசப்படு' என்று அவனது மேலாளர் சொன்னாராம். குரல்வளையிலேயே கடி வாங்கி இருக்கிறான். நம்மை விடவும் அடுத்தவனுக்கு அடி அதிகம் என்றால் சந்தோஷம்தான்.

'சரிடா பார்த்துக்க' என்று சொற்களில் சோகம் கொப்பளிக்க பேசி முடித்தேன். 

'இந்த வருஷம் தப்பிச்சுட்ட இல்ல...அடுத்தவருஷம் கவனமா இருந்துக்க' என்றான்.

ஒரு ஜென் கதை இருக்கிறது. 

ஒரு சாமியார் சாகிற தருவாயில் கிடந்தாராம். எல்லோரும் பதறியபடி சுற்றிலும் நிற்கிறார்கள். ஒரு சிஷ்யன் மட்டும் ஓடிப்  போய் நெல்லிக்கனி வாங்கி வந்தானாம். சாமியாருக்கு நெல்லி என்றால் வெகு விருப்பம். அவன் வந்து சேரும் வரைக்கும் அவருக்கு உயிர் இருந்தது. நடுக்கம் இல்லாமல் நெல்லிக்கனியைச் சுவைத்தவரிடம் 'உங்களுக்கு பயமே இல்லையா?' என்று கேட்டிருக்கிறார்கள். 'நெல்லிக்கனி அருமையான சுவை' என்று சொல்லிவிட்டு இறந்துவிட்டாராம். யாருக்குமே புரியவில்லை. நெல்லிக்கனி வாங்கி வந்த சிஷ்யன் சொன்னானாம் 'எதிர்காலம் பத்தியும் பயப்படக் கூடாது; கடந்த காலம் குறித்தும் அழக் கூடாது. நிகழ்காலம் முக்கியம். சாமியார் அதைத்தான் உணர்த்தியிருக்கிறார்' என்று. 'சாவு பதியே அவருக்கு பயமில்லை. நெல்லிக்காய் நல்லா இருந்துச்சுங்கிறதுதான் அவருக்கு முக்கியம்' என்றானாம்.

அப்ரைசல் கூட அப்படிதான். 

'சரிடா..இப்போ போய் ஒரு போஸ்ட் எழுதிடுறேன்'  எனச் சொல்லிவிட்டு வந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு எப்படி? அடி பலமா? ஆமாம் என்று சொன்னால் சந்தோஷப்படுவேன். 

7 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

என்ன ஜி... இப்போ தான் செல்ப்‌ ஏவால்யுவேஷன் முடித்தேன்.. இப்படி சொல்லி பயமுறு த்துரீங்களே...

Dineshkumar Ponnusamy said...

எனக்கு ஒரு மேலாளர் இருந்தார். அப்ரைசல் நேரத்துல என்ன வேலையெல்லாம் வாங்க முடியுமோ வாங்கிக்குவாங்க. மீட்டிங்குல ஏதாவது கேட்டா கண்டிப்பா.. செஞ்சுடலாம்.. உணக்கிலாமலா என கதை சொல்லுவார். ரேட்டிங் வரும்போது அவருக்கு ஜால்ரா போடுற ரெண்டு பேருக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துடுவாரு. அதனால, உங்க மேலாளர் உண்மைய சென்னா ஏத்துக்குங்க; ஏன்னா வேற வழி இல்லை. :( why blood, same blood!

Jegadeesh said...

என்னல்லாம் இதுவரைக்கும் ஒருதடவ கூட மதிச்சு மீட்டிங் கூப்புட்டு
ரேட்டிங் சொன்னதில்ல நானும் கேட்டதில்ல..

vinu said...

//மதியம் உள்ளே அழைத்தார்.

'உட்காருங்க'

ஈஈஈ...பல்லைக் கெஞ்சியபடி அமர்ந்தேன்.

'முதல்லயே சொல்லிடுறேன்...இந்த டிஸ்கஷன் அப்படியொண்ணும் நல்லா இருக்காது....'

'அந்த அண்ணன் ப்ரோமோஷன் கிடைக்கும்ன்னு சொன்னாரே' என்று நினைத்துக் கொண்டேன். ஒருவேளை முதலில் கசப்பு பிறகு இனிப்பாக இருக்கக் கூடும்.

முதல் பவுன்சர் அவரிடமிருந்து . 'உனக்கு ஒரு மெயில் கூட சரியா அனுப்ப தெரியறதில்லை'. இதற்கு என்னால் பதில் சொல்ல முடியும்.

'தினமும் ஒரு பிளாக் எழுதறேன். ஒன்றரை வரியில் மெயில் அனுப்ப முடியாதா?' கேட்கலாம்தான் ஆனாலும் கொஞ்சம் பயமாக இருந்தது. அப்ரைசல் உரையாடலில் எதைச் சொன்னாலும் பதிவு செய்து கொள்வார்கள். எதுவும் பேசவில்லை.

'மேலே சொல்லுங்க'

சொல்லிக் கொண்டேயிருந்தார். 'சப்ஜெக்ட் தெரியல; ஒருங்கிணைப்பு சரியில்ல'

அவரைப் பேச விடுவதைவிட நாமே எடுத்துக் கொடுத்துவிடலாம். யோசித்து யோசித்து எடுத்து வீசுகிறார். 'ப்ராஜக்ட் மேனேஜ்மேண்ட்?'

'ஆ..அதுவும் நிறைய மாறனும்' //

Fixed template in 15 out of 10 appraisal meeting yep not mistake 15 out of 10 appraisals all the managers uses this template terms about writing mail, and they will recommend to attend session on "how to write mail" - communication training. all scumbags do the same damn thing....

ivanunga ellaam oxford university la padichuttu vantha maathiriyum, ethuvo ivanunga appavan vootu sotthai eluthi vaikkura maathirium. nallaa varuthu vaayula.....

sombadikkiravanungalaukku mattum thooki kuduruvaanunga rattingai.... usuraik kuduthu velai seyyuravanellaam intha average ratinggu kaaranungathaan.... nammalai thorathavum maattaanunga namakku kudukkavaum maattaanunga....

saaavugiraakinga.....facing simlar statements in my past 7 appraisal meetings...in which last three appraisal meetings still ended with average rating only....and none of the occasions i was sent off from the company.

post any appraisal i used to set 6-8 month time frame for myself to search a new job and in the past 13 years of my IT carrier successfully switched 13+ companies same. the current company is my longest steak with 2years 0 months 9 days. none other of my past company i worked post one ratting.... if some one says i'm average rating i through my paper on their face and leave the company in 6 months with least 30% and best of 52% hike with new one.

never failed in this approach once. so, don't so your dependence on the job or company at any time be ready for anytime for anything.. just be prepared that's all..

-Full stop.

Unknown said...

"You are almost there[for top rating].But being in a competitive world you have to work more to get over others" - Same words for the past 6 years.

சேக்காளி said...

//'கண்டினியூ யுவர் வொர்க்' என்றார்.//
அந்த பயம் இருக்கணும் தல. சும்மா ஒரு வேலைக்காரன் தானே ன்னு வெளில அனுப்பிட்டு அப்புறமா ஒரு போட்டியாளனை Sorry போட்டியாளரை உருவாக்கிட்டோமே ன்னு தெனம் தெனம் வருத்தப் படணுமா என்ன.

Anonymous said...

Boss- The Appappraisal process should be changed.The Number of roles needs to be reduced. why should IT the company need a manager, assistant manager, senior manager, assistant director, and director? All are doing the same task. If people want a promotion, they need attend an interview and go to a next role. They need to give proper rating evalution via committee and HR for final rating. This is not judged by one manager, he sits ideal for a full year.

Long run service companies can't make money with the current HR process. This is my opinion.