Mar 25, 2018

புரட்டு அரசியல்

கர்நாடகாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வென்றுவிடும் என்று சொல்கிறார்கள். அறிவியல்பூர்வமான கணிப்பு இல்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள், அதிகாரிகளிடம் பேசியதிலிருந்து இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. 'மோடி மேஜிக், அமித்ஷா தந்திரம்' என்பதெல்லாம் ஒவ்வொன்றாகப் பொய்த்துக் கொண்டிருப்பதை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் கர்நாடகாவிலும் நிகழும் என்கிறார்கள். பெங்களூரு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் பாஜகவுக்கு வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அந்தக் கட்சியினர் மீது மிகக் கடுமையான வெறுப்பும் இருக்கிறது என்பதை மக்களிடம் பேசுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றில் பெரும்பாலும் பா.ஜ.கவினரே உருவாக்கிய வெறுப்புதான் அதிகம். கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் எல்லை மீறுவதை மக்கள் எரிச்சலோடு பார்க்க அதை சித்தராமைய்யாவின் அரசு மிகச் சரியாக ஊதிப் பெருக்கிக் காட்டுகிறது. 

தேர்தல் அரசியலில் தமக்கான இடத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு சலம்புவது ஒரு முக்கியமான செயல் என்பார்கள். ஹெச்.ராஜா மாதிரியும், தமிழிசை மாதிரியும் எதையாவது உளறிக் கொண்டேயிருப்பது. அதை ஊடகங்கள் கவனப்படுத்தும். அதன் வழியாக  தமது கட்சிக்கு செல்வாக்கு பெருகுகிறது என்று நம்புவார்கள். ஆனால் சமூக ஊடகங்களின் வீச்சு பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் செல்வாக்கு பெருகுவதைக் காட்டிலும் அம்பலப்பட்டு போவதற்கான சாத்தியங்கள்தான் அதிகம்.


கர்நாடகாவில் எடியூரப்பாவின் வலதுகை ஷோபா கரந்தலாஜே. எடியூரப்பாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். பிறகு பா.ஜ.கவுடன் முரண்டு பிடித்து எடியூரப்பா தனிக்கட்சியை ஆரம்பித்த போது அதில் இணைந்தார். அதன் பிறகு அவருடன் சேர்ந்து மீண்டும் தாய் கட்சிக்கு வந்து உடுப்பி-சிக்மகளூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ஷோபா கடந்த வருடம் ஜூலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். 

கடந்த மூன்றாண்டுகளில் கர்நாடகாவில் கொல்லப்பட்ட இருபத்து மூன்று ஆர்.எஸ்.எஸ்/இந்துத்துவா அமைப்புகளைச் சார்ந்தவர்களின் கொலைகளிலும் ஜிகாதிகளின் கைவரிசை இருக்கிறது எனவும், மேலும் ஆறு பேர்கள் மீது கொலை முயற்சிகள் நடைபெற்று அவர்கள் தப்பித்ததாகவும் இந்த முயற்சிகளிலும் ஜிகாதிகளின் பங்கு இருப்பதாக  குற்றம் சுமத்தி இந்தக் குற்றச் செயல்களை தேசிய புலனாய்வு நிறுவனத்தைக் கொண்டு விசாரிக்க வேண்டும் எனக் கோரி கொல்லப்பட்டவர்கள், கொலை முயற்சி செய்யப்பட்டவர்கள் ஆகியோர்களின் பட்டியலையும் இணைத்து அனுப்பினார். இந்துத்துவ அமைப்புகள் இந்தக் கடிதத்தைத்தான் மேற்கோள் காட்டின. கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்கிறார்கள். பிப்ரவரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதே கடிதத்தை மேற்கோள் காட்டி 'கர்நாடகாவில் கொலை செய்வது எளிது' என்கிற ரீதியில் பிரதமரும் பேசிவிட்டுப் போனார். பாஜகவினர் இதைப் பிடித்துக் கொண்டார்கள். கவுரி லங்கேஷ் போன்றவர்களின் கொலைகளைப் பின்னுக்குத் தள்ளி இருபத்து மூன்று பேர்களின் கொலைகள் கவனம் பெற்றது.

கொலையாளிகள் கண்டறியப்பட்டு தண்டனையளிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருது எதுவுமில்லை. ஆனால் திசை மாற்றுதல் இருக்கக் கூடாது. யாரோ செய்த கொலையை தமது அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்துகிற சில்லரைத்தனத்தைச் செய்யக் கூடாது. இந்த விவகாரம் பேசு பொருளான சமயத்தில் ஸ்ருதிசாகர் யமுனன் என்ற நிருபர் கர்நாடகா முழுவதும் சுற்றி கொல்லப்பட்ட இருபத்து மூன்று பேர்களின் வீடுகளுக்கும் செல்கிறார். அவரது நோக்கம் கொலை குறித்தான விவரங்களை சேகரிப்பது. அவ்வளவு சீக்கிரம் சொல்லிவிடுவார்களா என்ன? பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க வேண்டும். 'இவன் தேவையில்லாமல் கிளறுகிறான்' என்ற மனநிலையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கட்டுரை வெளியாகியிருக்கிறது. 

கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கார்த்திக் ராஜ் என்பவரின் சகோதரிக்கு யாருடனோ தவறான தொடர்பு உருவாகியிருக்கிறது. அவள் ஏற்கனவே திருமணம் ஆனவள். கணவன் இந்தியாவில் இல்லை. இந்தத் தொடர்பை கார்த்திக் ராஜ் கண்டித்திருக்கிறார். எரிச்சலடைந்த சகோதரி தனது காதலருடன் சேர்ந்து கார்த்திக்கை கொல்கிறாள். இந்துத்துவ அமைப்புகள் உள்ளே நுழைந்து 'இது இசுலாமியரால் செய்யப்பட்ட கொலை' என்று போராட்டங்களை நடத்துகிறார்கள். எடியூரப்பா கூட ஆறுதல் சொல்லச் சென்றிருக்கிறார். பிறகு போலீஸ் நடத்திய விசாரணையில் சகோதரியே கொலை செய்திருக்கிறார் என்று தெரிய வருகிறது. 

ஷோபாவின் பட்டியலில் இருக்கும் மூன்று பேர்கள் எந்த அமைப்பிலும் தொடர்பில் இல்லாதவர்கள். அவர்கள் இறந்தவுடன் 'இதை இசுலாமிய அமைப்புகள்தான் செய்தன' என்று மடை மாற்றம் செய்யப்பட்டு, பந்த் நடத்தப்பட அதை ஷோபா தொடங்கி மோடி வரைக்கும் பிடித்துக் கொள்கிறார்கள். 

தனது மனைவியுடன் உறவு வைத்திருந்த காரணத்துக்காக திப்பேஷ் என்பவரை மல்லிகார்ஜூன் கொலை செய்ய திப்பேஷும் இந்துத்துவ தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து கொள்கிறார். பெங்களூருக்கு பக்கத்தில் ஆனேக்கல் என்ற ஊரில் கொலை செய்யப்பட்ட ஹரிஷின் கொலையில் கொலையாளிகள் யாரும் இசுலாமியர்கள் இல்லை. ஆனால் அவர் பெயரை பட்டியலில் சேர்த்திக்குர்க்கிறார். அசோக் பூஜாரி என்பவர் கொல்லப்பட்டதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஷோபா. ஆனால் அவர் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார். ரியல் எஸ்டேட் பிரச்சினை, சொத்துத் தகராறு என பல்வேறு காரணங்கள் கொலைக்களுக்கான பின்னணியாக இருக்கின்றன. ஆனால் பச்சை நிறத்தை மட்டும் பூசியிருந்தது அந்தக் கடிதம்.

ஸ்ருதிசாகர் எழுதியிருப்பது மிகப் பெரிய கட்டுரை. ஆனால் இது கட்டுரையின் முதல் பகுதிதான். இன்னொரு பகுதி விரைவில் வெளியாகும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.ஷோபாவின் பட்டியலில் இருக்கும் ஒவ்வொரு நபரையும் நேரில் தேடிச் சென்றிருக்கிறார் ஸ்ருதிசாகர். ஆச்சரியமாக இருக்கிறது. 'வாட்சப்பில் அனுப்புங்க சார்' என்று கூகிளையும் செல்போனையும் வைத்துக் கொண்டே செய்திக் கட்டுரைகள் எழுதுகிற நிருபர்களுக்கும், சினிமா நட்சத்திரங்களின் வால் பிடித்து திரிகிறவர்களுக்கும், ஒரு தலைப்பட்சமாகவே சிந்தித்துக் கொண்டிருக்கும் தம்மை நிருபர் என்று கூச்சப்படாமல் சொல்லிக் கொள்கிறவர்களுக்கும், இதழியல் மாணவர்களுக்கும் கூட இத்தகைய கட்டுரைகள் முன்னுதாரணமானவை. ஸ்ருதிசாகருக்கு வாழ்த்துக்கள். கட்டுரையின் இணைப்பை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்த  சவுக்கு சங்கருக்கு நன்றியும். 

ஒரு எம்.பி கடிதம் எழுதுவது இருக்கட்டும். கடிதத்தில் இருக்கும் தகவல்களை ஒற்றை தொலைபேசி அழைப்பில் பிரதமர் அலுவலகம்  சரி பார்த்திருக்க முடியும். ஒரு நிருபரால் தேடிக் கண்டுபிடிக்க முடிகிற தகவல்களை இந்திய உளவுத் துறை ஒரே நாளில் சேகரித்திருக்க முடியும். ஆனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் ஷோபாவின் கடிதத்தை மேற்கோள் காட்டி மேடையில் பேசிவிட்டு போகிறார் பிரதமர். நடுநிலையான ஒருவன் இந்த உண்மைகளைப்  புரிந்து கொள்ளும் போது என்ன நினைப்பான்?  'நம்ம பிரதமர் நிறையப் பொய் சொல்கிறார்' என எதிர்க்கட்சிகள் சொல்வது வெறும் அரசியல் குற்றச்சாட்டு மட்டுமில்லை எனத் தோன்றாதா? 

இசுலாமிய அமைப்புகளின்  செயல்பாடுகள் கர்நாடகத்தில் இல்லையென்று சொல்ல முடியாது. அதே சமயம் இந்துத்துவ அமைப்புகளின் தூண்டுதல்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாதி, மதம் என பிளவை உருவாக்கி அரசியல் ஆதாயம் சேர்ப்பதை மிகப் பெரிய ஆபத்தாகத்தான் பார்க்க வேண்டும். குறைந்தபட்ச அரசியல் நேர்மை என்பது காலத்தின் கட்டாயம். அபாண்டமான அரசியல் குற்றச்சாட்டுகள் தம்மை நோக்கி மக்களைப் பார்க்கச் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும். 

தமிழகத்திலும் கூட இந்துத்துவ அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் இறந்து போகும் போதெல்லாம் 'இசுலாமியர்கள்தான் கொன்றார்கள்' என்கிறார்கள். நான்கு நாட்கள் கழித்து பெண் விவகாரத்தில் கொலை, நிலத் தகராறில் கொலை என்று செய்தி வெளிவருகிறது. இத்தகைய ஏழாம்தரமான  அரசியலின் காரணமாகத்தான் 'ஒரு முறை பி.ஜே.பிக்கு வாய்ப்புக்கு கொடுக்கலாமா' என்று தெரியாத்தனமாக நினைப்பவர்கள் கூட மனதை மாற்றிக் கொள்கிறார்கள்.  கர்நாடகத்தில் அப்படியானதொரு மனநிலையைத்தான் உணர முடிகிறது. இத்தகைய அரசியல்வாதிகள்தான் அரசியல் சார்பற்றவர்களை எரிச்சலடையச் செய்கிறார்கள். அம்பலப்பட்டு போகும் ஒவ்வொரு முறையும் மக்களிடம் கூடுதல் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்வது நல்லது. 

25 எதிர் சப்தங்கள்:

மாறன் said...

தமிழ் மக்கள் கொத்தக்கொத்தாக இலங்கை ல கொலை செய்யப்பட்ட போது ஒன்றுமே பண்ணாத முஸ்லிம் மக்கள், இப்ப பர்மா, சிரியா, இலங்கைனு எங்க முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே எல்லா மாவட்டத்திலும் ஜமாத் போராட்டம் பண்ணுது. இதுதான் முதல் காரணம் நெறையா பேருக்கு முஸ்லிம் மேல வெறுப்பு வர்றதுக்கு.... சும்மா இந்து தீவிரவாதம்னு ஜல்லியடிக்காதீங்க. நடுநிலையா எழுதுங்கள்.....

Anonymous said...//அசோக் பூஜாரி என்பவர் கொல்லப்பட்டதாக தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் ஷோபா. ஆனால் அவர் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறார்.//

Maaran we have to kill this man now, to prove our report.

Anonymous said...

'மோடி மேஜிக் அமித்ஷா தந்திரம்' என்பதெல்லாம் ஒவ்வொன்றாகப் பொய்த்துக் கொண்டிருப்பதை நேரடியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
WE ALL SINCERELY PRAY IT MUST BECOME TRUE. THE MOMENT THEY COME TO KNOW THEY WILL, LOSE THEY WILL STOOP TO ANY LEVEL LIKE IN GUJARAT 2 ND PHASE. HAVING KNOWN THAT BJP HAS NOT DONE WELL IN 1ST PHASE THROUGH INTEELIGENCE REPORTS MODY BROUGHT IN' PAKISTAN WAR THREAT IN HIS SPEECH BEFORE 2 ND PHASE AND COMPENSATED 1ST PHASE LOSS. THE WIN IN GUJARAT WAS ONLY MARGINAL THAT TOO BECAUSE OF 2ND PHASE.
CEC MUST BE TOLD ELECTION MUST BE ONLY SINGLE PHASE OR NEW THINGS MUST NOT BE RAISED IN 2ND PHASE.
WE ALL MUST BE THANKFUL TO ஹெச்.ராஜா, தமிழிசை FOR THEIR எதையாவது THAPPAI PESI கொண்டேயிருப்பது.
BECAUSE OF THEIR STATEMENTS 'BJP' WILL NOT GET EVEN 500 VOTES. R.K. NAGAR IS A CLASSIC EXAMPLE.
H.RAJA'S REMARK CALLING VIJAY AS 'JOSEPH VIJAY' ANTAGONIZED MANY PEOPLE EVEN NON CHRISTIANS.MANY OF US IN T.N. STUDIED ONLY IN CHRISTIAN SCHOOLS/ COLLEGES LIKE ST. XAVIERS, ST. JOSEPHS, LOYOLA ETC, NOT ONLY IN MAJOR
TOWNS BUT IN REMOTE AREAS ALSO. CHRISTIAN CONTRIBUTION TO WOMEN'S EDUCATION IS SIMPLY SUPER. HOLY CROSS TRICHY/ ST.IGNATIUS CUDDALORE ARE NOTEWORTHY.

CHRISTIANS.SERVICE IN MEDICINE CANNOT BE PUT IN WORDS. NO TOWN IS THERE WITH OUT CHRISTIAN HOSPITAL.
CHRISTIAN NURSES ARE WANTED EVEN TO DAY. 'CMC' VELLORE IS A CELEBRATED MEDICAL INSTITUTION EVEN TODAY.
COMPLICATED OPERATIONS ARE DONE BY THEM.
ஹெச்.ராஜா, தமிழிசை/BJP WILL CLAIM
CHRISTIANS DO ALL THIS FOR CONVERSIONS. LAKHS OF HINDUS ARE STUDYING. TO MY KNOWLEDGE NOBODY HAS BEEN CONVERTED.
SAME IS THE CASE WITH 'HINDU' PATIENTS.
தமிழிசை IS A DOCTOR. SHE WILL NOT HAVE TIME. AT LEAST 'BJP' CAN RUN FREE CLINICS IN ALL 'BJP' OFFICES. தமிழிசை CAN SUPERVISE.
DEFEATING 'BJP' IS OUR DUTY. LET US DO IT.
ANBUDAN,
M.NAGESWARAN.

சேக்காளி said...

மாறன்
//இதுதான் முதல் காரணம் நெறையா பேருக்கு முஸ்லிம் மேல வெறுப்பு வர்றதுக்கு...//
அதுக்காக யாரோ செஞ்ச கொலைக்கு அவுங்கள காரணம் ன்னு சொல்லுறதெல்லாம் அதிகம் ய்யா.

சேக்காளி said...


Anonymous said..
//Maaran we have to kill this man now, to prove our report.//
ஒரு பேச்சுக்கு சொன்னதை வச்சு எங்க அப்பாவி சிட்டுக்குருவி மூளை "தல" யை கொலைச் சதிக்கு உடந்தையாயிருந்தார் ன்னு உள்ளே தள்ள திட்டம் தீட்டுறீங்களே
அனானிமஸ் ஐயா (அல்லது)அம்மா.

raja said...

நாகேஸ்வரன்,

பாரதிய ஜனதா கண்டிப்பாக தோற்கடிக்க வேண்டிய ஒன்று என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. மன்மோகன் சிங்கை, ரகுராம் ராஜனை குறை சொன்ன பாவத்திற்கு நாம் அடைந்த 5 வருட கடுங்காவல் தண்டனை என்று வைத்து கொள்ளலாம்.

ஆனால் அதற்காக கிறிஸ்தவர்களை தூக்கி பிடிப்பது தேவை இல்லாத செயல். பாரதிய ஜனதா பதவிக்கு வந்ததற்கு வெறும் ஊழல் மட்டும் காரணமில்லை. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் வந்தது போல்தான் இதுவும்.

அவர்களின் தீவிர மத உணர்வுதான் இந்துக்களை பாரதிய ஜனதாவுக்கு வேறு வழி இல்லாமல் போக வைக்கிறது.கல்வி என்ற பெயரில் அங்கு நடக்கும் அட்டுழியங்கள், ஊழல்கள் வார்த்தையில் சொல்ல முடியாதது.

விதி விலக்குகள் கண்டிப்பாக இருக்கலாம். கண்டிப்பாக இருக்கலாம். நாங்கள் கண்டறிந்த விஷயங்களை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.

சம்பளத்தில் ஆரம்பித்து அனைத்தையும் அரசிடம் வாங்கி கொண்டு ஒரே ஒரு இந்து ஆசிரியரை கூட நியமனம் செய்யாமல் அழிச்சாட்டியம் செய்யும் போது, அப்படியே தப்பி தவறி நடந்து விட்டால் அதற்கு அவர்கள் காட்டும் எதிர்ப்பை பாருங்கள். நீங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளை போய் பார்த்து விட்டே நான் சொல்வதை நம்பலாம்.

அதே போல் பத்தாம் வகுப்பில் மிக அதிக மதிப்பெண் வாங்கிய இந்து மாணவர்களை பதினோராம் வகுப்பு கேட்கும் குரூப் கொடுப்பதில் அவர்கள் பண்ணும் அரசியல் இருக்கிறதே!! பேசாமல், பாரதிய ஜனதா கட்சியிலேயே சேர்ந்து விடலாமா என்று யோசிக்க வைத்து விடுவார்கள்!! எந்த வெளிப்படை தன்மையும் இருக்காது. ஆனால் பெரும்பாலான இந்து பள்ளிகள் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நோட்டீஸ் போர்டில் ஒட்டி விடுகின்றன.

அங்கு படிக்கும்,படித்த அனைத்து அல்லது பெரும்பாலான மாணவர்கள் கிறிஸ்தவத்தை நோக்கி திருப்ப அவர்கள் செய்யும் அருவருக்கத்தக்க முயற்சிகளில் ஏதெனும் நியாயம் இருக்கிறதா என்று சொல்லுங்கள். இங்கும் விதி விலக்குகள் கண்டிப்பாக இருக்கலாம். கண்டிப்பாக இருக்கலாம்.

வறுமையின் கொடுமையில் வரும் பெண்ணை என்னுடன் படு, உன் வறுமையை போக்குகிறேன் என்பதற்கும், வறுமையால் படிக்க வரும் ஒன்றுமறியா மாணவர்களை மதம் மாற்றுவதற்கும் என்ன வித்தியாசம்!!

இந்து மதம் பெரிய யோக்கியம் என்று வாதாட வர வில்லை. என்னை பொறுத்தவரையில் உலகத்தின் நடக்கும், நடந்த அனைத்து அல்லது 99% கலவரங்களுக்கும் மதமே காரணம். மதம் மனிதனின் மிக மோசமான கண்டுபிடிப்பு, அணுகுண்டுக்கும் மேலே மோசமான கண்டுபிடிப்பு!!

அதனால்தான் என்னவோ பெரிய அநியாயங்களை செய்பவர்கள் தீவிர மத நம்பிக்கை உள்ளவர்களாவே இருக்கிறார்கள்.

மதம் பிடித்த யானையை மதத்தை விட்டாலொழிய யாரும் ஒன்றும் செய்ய முடியாது!!

Anonymous said...

மோடி மேல பெரிய மரியாதை இல்ல.
ஆனால் தமிழ் இன படுகொலை செய்த
இத்தாலி இரவு மதுபான விடுதி நடனமாதுவின்
மகன் பப்புராவ் கொஸ்மாஸை தெரு தெருவா
சுத்த வைச்ச திறமைக்காக பாராட்டலாம்.
பிஜேபி வந்தா காவிரி வாரியம்
வர்றதுக்கு இருபது சத வாய்பாவது உண்டு.
காங்கிரஸ்கரணுக அதுக்கும் விட மாட்டானுக
பாரக்கலாம் உங்கள் விருப்பம் போல்
பாவாடை நாடாவை அவிழ்து பார்க்க
சொன்ன முத்தமிழை விற்றவர்களின் கூட்டாளிகள்
வெல்வார்களா, சண்டாள யோகம்
கொண்ட மோடி வெல்வாரா என்று.
யார் வென்றாலும் தமிழனுக்கு நாமம்தான்.

மாறன said...

சேக்காளி, அனானி
நான் ஒன்றும் பிஜேபி நல்லவர்கள்னு சர்டிபிகேட் தர்ல. மத்த ரெண்டு மதங்களும் தீவிரமா அவங்க மதத்தை உயர்த்தி பிடிக்க எல்லாம் பண்ணும்போது அதை பற்றி ஒண்ணுமே சொல்லாம இதை இந்து தீவிரவாதம் னு சொல்லிட்டு நடுநிலைனு சொல்லாதீங்கனுதான் சொல்றேன். ராஜா சொல்ற மாதிரி காரணங்கள்தான் பிஜேபி யோட வோட்டுக்கள.
எப்டி முஸ்லிம் தீவிரவாதம் னு 9/11 க்கு அப்றம் உலகம் generalize பண்ணுச்சோ அதைத்தான் இப்ப நடுநிலைவாதிகள் இந்து தீவிரவாதம் னு generalize பண்றாங்க. என்ன கொடுமைனா இவங்கதான் அப்டி generalize பண்ணகூடாதுனு அப்ப கூவுனாங்க...இப்ப ‘இந்து’ தீவிரவாதமாம் :) :).. double standards...

மாறன் said...

Maaran we have to kill this man now, to prove our report.

What the hell? This is the problem with lot of people. If you question anything about non hindu religion, then you will be simply tagged as Hundutwa or BJP.. grow up please.

Anonymous said...

ANBUKKURIYA RAJA AVARGATKKU,
NORMALLY I DO NOT REPLY TO BLOG COMMENTS. FIRSTLY I FEEL EVERY ONE IS ENTITLED TO HIS OPINION/VIEWS.
SECONDLY IT BOILS DOWN TO AN ARGUEMENT LEAVING A BAD TASTE. I DO NOT WANT' NISAPTHAM' TO BE A PARTY TO IT.
BUT IF I KEEP QUIET NOW IT WILL BE TAKEN AS MYSELF AGREEING TO YOUR VIEWS/COMMENTS.
கிறிஸ்தவர்களை தூக்கி பிDDIPATHU தேவை இல்லாத செயல். NAAN கிறிஸ்தவர்களை தூக்கி பிடிKKA ILLAI. JUST NARRATED THEIR SERVICES IN THE FIELDS OF EDUCATION/MEDCINE.
OURS IS VERY BIG FAMILY. ALL MY SISTERS/BROTHERS STUDIED ONLY IN CHRISTIAN INSTITUTIONS NONE OF US WERE EVEN INDIRECTLY HINTED REGARDING CONVESION.
IN MY COLLEGE ST. JOSEPH'S TRICHY I USED TO ATTEND CLASSES WITH FORE HEAD FULL OF 'VIBOOTHY'. COLLEGE NEVER OBJECTED.
LOT OF BOYS WERE FROM 'SRIRANGAM' HAVING KUDUMIS WEARING 'NAMAMS'. COLLEGE NEVER OBJECTED.ALL OF THEM WERE FROM POOR/LOWER MIDDLE CLASS FAMILIES.
OTHER THAN THE PRINCIPAL WHO WAS REV.FATEHER MOST OF MY PROFERS WERE BRHMINS/CASTE HINDUS.
IN FACT HODS OF PHYSICS/ MATHS/CHMISTRY WERE CASTE HINDUS.IN MY CLASS OF 49 STUDENTS ONLY 2 WERE CHRISTIANS. IT WAS 68-71 BATCH. ANY ONE CAN VERIFY.
ONE CAN READ 'SUJATHA'/ABDUL KALAM FOR THE SECULARISM OF ST.JOSE[H'S COLLEGE,TRICHY.
I WANTED TO ATTEND 'BIBLE 'CLASS.COLLEGE WANTED MY FATHER'S WRITTEN CONSENT. EVEN AFTER MY FATHER'S WRITTEN CONSENT THE COLLEGE REFUSED TELLING PEOPLE WILL PLAY POLITICS SINCE I WAS A HINDU.

நீங்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கிறிஸ்தவ பள்ளிகளை போய் பார்த்து விட்டே நான் சொல்வதை நம்பலாம். DUE TO MY FATHER'S TRANSFERABLE JOB MYSELF ANDBROTHERS/ SISTERS STUDIED IN VARIOUS SCHOOLS IN T.N. ALL HAD SAME EXPERIENCE AS DETAILED ABOVE.
MY JOB WAS WITH AN OIL PSU SERVING FROM KASHMIR TO KANYAKUMARY ASSAM TO LANKA.DURING MY SERVICE OF 36 YEARS I HAVE VISITED MANY CHRISTIAN INSTITUTIONS BOTH MEDICAL/EDUCATIONAL. MY POSITIVE FEELINGS ABOUT
CHRISTIAN INSTITUTIONS REMAIN THE SAME.
ONLY 'NAGALAND' IS THE DIFFERENCE. ACTUALLY MANY/MAJORITY TRIBAL S ARE CONVERTED CHRISTIANS.
THE FUNNIEST THING IS THE TRIBALS FOLLOW THEIR OWN CUSTOMS/RITUALS WHICH ARE UN CHRISTIAN.
ANBUDAN,
M.NAGESWARAN.

raja said...

நாகேஸ்வரன்,

மாற்று கருத்துக்களை தயவு தாட்சணியம் இன்றி அது தன்னை பற்றிய விமர்சனமாக இருந்தாலும் மணிகண்டன் பதிவிடுகிறாரே, அதனால்தான் அவர் கொடுக்கும் கருத்து சுதந்திரந்தால் தான் அவரின் வலைப்பதிவில் நாம் கண்டறிந்ததை எழுதுகிறோம். மற்றபடி மாற்று கருத்து உள்ளவர்களுடன் சண்டை போடுவதற்காக அல்ல.

உங்கள் கருத்துக்களை ஆமோதிக்கிறேன். அதனால்தான் நான் என் பதிவில் விதி விலக்குகள் இருக்கலாம் என்பதை இரு முறை அழுத்தமாக பதிவு செய்தேன். அதே நேரம் நான் பொய்யுரைக்க வில்லை என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். காலம் மாறி கொண்டு இருக்கிறது. அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் சகிப்புத்தன்மை இன்றி தங்கள் கருத்துக்களுக்கு ஏற்றார் போல் சொல்லும் ஊடகங்களை மட்டும் படிக்கும் அளவுக்கு போய் கொண்டு இருக்கின்றனர் அல்லது எதிர் காலத்தில் தன் கருத்துக்களுக்கு வலு சேர்க்கும் செய்திகளை தரும் ஊடகங்களை (mass media) மட்டும் தேர்ந்தெடுத்து பார்ப்பார்கள் என்று ஒபாமா எச்சரித்ததாக தமிழ் ஹிந்துவில் ஒரு கட்டுரை படித்தேன். நீண்ட நாட்கள் இதைப் பற்றி யோசித்து கொண்டு இருந்தேன். மிக சிறந்த கணிப்பு!! உண்மையில் இது மிக சிறந்த கண்டுபிடிப்பு.

கிறிஸ்தவத்தின் மேல் எனக்கு அந்த ஆதங்கம்தான், நண்பரே . தமக்கு உவப்பற்ற விஷயங்களை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் அவர்களது அணுகுமுறையில் பிரச்சினை இருக்கிறது. என்ன இருக்கிறது என்பதைப் பார்க்காமல் என்ன இருக்க வேண்டும் என்பதையே யோசித்துக்கொண்டு இருப்பதன் விபரீதத்தை சுட்டி காட்ட முயன்றேன். மற்றபடி நீங்கள் உங்கள் சொந்த அனுபவத்தில் இருந்து சொல்வதை போலவே நானும் என் அனுபவத்தில் கண்டதை சொன்னேன். வேறு ஒன்றுமில்லை.

Anonymous said...

Sir you experience based 3 decades old..now everything changed I too graduated from st Joseph Trichy.. if you find time visit those places again and compare your self...

Selvaraj said...

மக்களின் மதப்பற்றை வெறியாக மாற்ற தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். சில சலனங்களை உருவாக்குகிறார்கள் என்பது உண்மை ஆனால் அந்த சலனங்கள் வெறும் நீர்குமிழிகளாக இருக்கவே மனம் விரும்புகிறது. நாட்டின் பாதுகாப்பு அமைச்சரே கூட ‘இந்து மதத்தை ராகுல் அவமதிக்கிறார்’ என்று குற்றம் சாட்டி அரசியல் செய்கிறார் என்றால் கீழ்மட்ட நிர்வாகிகளிடம் வேறு என்ன அரசியலை நாம் எதிர்பாக்க முடியும்.
தமிழகத்தில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டங்களில் புகுந்து 'நீ அந்நிய நாட்டு மதத்தை சேர்ந்தவன் வெளிநாட்டுக்கு போடா' என்று பகிரங்கமாகவே மிரட்டுகிறார்கள் (நான்கு நாட்களுக்கு முன்பு படித்த 'பாகிஸ்தான் போகும் இரயில்' நாவல் நினைவுக்கு வந்தது). தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைவர்களின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.(கொஞ்சமாவது update ஆகுறாங்களா). பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நவீன் என்பவர் ஒரு இந்து யுவ சேனா நிர்வாகி.
கன்னியாகுமரி மாவட்டம் பாரதிய ஜனதாவின் கோட்டை என்று இப்போது சொல்ல தொடங்கியிருக்கிறார்கள் அந்த கோட்டையை பற்றி சில தகவல்கள்.
பாரதிய ஜனதாவுக்கு இங்கு ஒரு எம்எல்ஏ ஸீட் கூட இல்லை. 1991 முதல் இப்போது வரை நடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டுமுறைதான் பாரதிய ஜனதாவின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். 1999 ல் திமுக வுடன் கூட்டணி இருந்ததால் வெற்றி கிடைத்தது (அந்த தேர்தலில் தாமரைக்கு வாக்களியுங்கள் என்று நேரடியாகவே கிறிஸ்தவமக்கள் அறிவுறுத்தப்பட்டார்கள்). இந்தமுறை (2014) காங்கிரஸ், திமுக, அதிமுக,சிபிஎம் என்று ஐந்துமுனை போட்டி இருந்ததால் எதிர்ப்பு ஓட்டுக்கள் சிதறியதால் ஜெயித்தார் ( இந்தமுறை கிறிஸ்தவ மக்களுக்கு எந்த அறிவுறுத்தல்களும் வழங்கப்படவில்லை). பாரதிய ஜனதாவுக்கு மற்ற மாவட்டங்களை விட இங்கே கணிசமான ஆதரவு உண்டு அவ்வளவுதான். 2014 லோக்சபா தேர்தலில் ஜெயித்து பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருக்கும்போதே 2016ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட பிஜேபி ஜெயிக்க முடியவில்லை (அதிமுகவும்) . கன்னியாகுமரியில் முஸ்லீம் மக்களின் ஓட்டுக்கள் எப்போதும் பாரதிய ஜனதாவுக்கு கிடைக்காது ஆனால் பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயித்த இரண்டுமுறையும் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பாரதியஜனதாவுக்குத்தான் ஓட்டளித்தனர். (முதல் முதலாக ஓட்டளித்த இளம்தலைமுறையினர் அதில் கணிசமானவர்கள்).

Selvaraj said...

@திரு.மாறன், இந்து தீவிரவாதமல்ல இந்துத்துவ தீவிரவாதம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது

சேக்காளி said...

இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் போது அமைதியாக உதகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி "தல" மையை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.
கொபசெ
வாம பாறைகள்

சேக்காளி said...

//இந்து தீவிரவாதமல்ல இந்துத்துவ தீவிரவாதம். இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது//
அதானே.

மாறன் said...

செல்வராஜ்
அப்டி எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியல. முடிஞ்சா விளக்குங்களேன். அப்டியே மத்த மதத்தையும் கம்பேர் பண்ணி சொன்னா ஈசியா புரிஞ்சுக்குவேன்.

Anonymous said...

நாம ஒழுங்கு ம (ரியாதையா) இருந்துருந்தா மத்த மதத்துக்காரன் எப்பிடி உள்ள வந்துருப்பான்?

Anonymous said...

Anonymous FIRST REPLY TO YOU. EVEN 2/3 THREE MONTHS BACK I VISITED ST.JOSEPH'S TRICHY.
I VISIT TRICHY QUITE OFTEN. ALMOST 6/8 TIMES A YEAR. SOME TIMES IT IS MORE.
IN SPITE OF MY ILL HEALTH I TRAVEL TO TRICHY.
MY OWN HOUSE IS THERE. TWO OF MY SISTERS ARE THERE.
LOT OF MY CLOSE RELATIVES/FRIENDS/CLASS MATES STILL LIVE AT TRICHY AFTER RETIREMENT.
EACH TIME I GO TO TRICHY I VISIT ST.JOSEPH'S. IT REMAINS THE SAME. I AM A PROUD JOSEPHITE.
MAY BE YOUR EXPERIENCE WAS DIFFERENT. I UNDERSTAND AND APPRECIATE.

ANBUKKURIYA RAJA AVARGATKKU,

மாற்று கருத்துக்களை தயவு தாட்சணியம் இன்றி அது தன்னை பற்றிய விமர்சனமாக இருந்தாலும் மணிகண்டன் பதிவிடுகிறாரே, அதனால்தான் அவர் கொடுக்கும் கருத்து சுதந்திரந்தால் தான் அவரின் வலைப்பதிவில் நாம் கண்டறிந்ததை எழுதுகிறோம். மற்றபடி மாற்று கருத்து உள்ளவர்களுடன் / போடுவதற்காக அல்ல.
FULLY AGREED. THE FREEDOM 'NISAPTHAM' GIVES NOBODY GIVES.SUCH A TRANSPARENT MAN LIKE YOU CAN
NEVER FIGHT/சண்டைWITH ANY ONE.
MY ANTY MODY STAND IS PURELY ECONOMIC/DEMOCRATIC.
DEMONETASATION,GST, HUGE NPAS OF BANKS,WITH DRAWAL OF RATION,POOR MANS SUBSIDIES ETC. ONE CAN GO ON AND ON.
A P.M. WHO RARELY COMES TO PARLIAMENT. DOES NOT CONSULT ANYONE. IGNORES RESERVE BANK,SUPREME COURT ETC.
DOES NOT MEET AGITATING PEOPLE LIKE T.N. FARMERS.
A MAN OF DOUBLE STANDARDS. ONE RULE FOR BJP RULED STATES NEGATIVE STAND FOR NON BJP STATES.
ANBUDAN,
M.NAGESWARAN.
கண்ணன் கரிகாலன் said...

லிங்கத்தை தாயத்து கட்டுபவர்கள் தனி மதம் என்று அறிவித்து ஆதாயம் தேடுபவர் ,மதசார்பற்றவர், உயர்ந்தவர், உத்தமர். வாழ்க வளர்க.

Selvaraj said...

@திரு.மாறன்.

இந்து முஸ்லீம் கிறிஸ்தவம் - இந்த பெயர்களின் பின்னால் ஒருபோதும் தீவிரவாதம் வராது. இந்துத்துவ தீவிரவாதம் முஸ்லிம்துவ தீவிரவாதம், கிறிஸ்தவத்துவ தீவிரவாதம், இப்படித்தான் வரும். இந்தியாவின் அரசியல் சாசனம் தனது நாட்டு மக்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளை ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரால் ஒரு சில சிறு குழுக்கள் பறிப்பதும், மறுப்பதும், அச்சுறுத்துவதும் அல்லது தாக்குதல் தொடுப்பது என அனைத்துமே தீவிரவாதம்தான். தீவிரவாதத்தில் நல்ல தீவிரவாதம் கெட்ட தீவிரவாதம் என்று எதுவும் இல்லை.
1. இந்துத்துவம் : முஸ்லிம்கள் அனைவரும் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என்று ஒரு மத்திய அமைச்சர் பொது மேடையில் பேசுவதும், தமிழ்நாட்டில் ஜெபக்கூட்டம் நடத்திய கிறிஸ்தவரை பார்த்து 'உன் மதம் வெளிநாட்டு மதம் அதனால் நீ வெளிநாட்டிற்கு போடா' என்று சொல்வதும் இந்துத்துவத்தின் வெளிப்பாடே. (அனைத்து மதத்திற்கும் இது பொருந்தும் இங்கு பேசு பொருள் இந்துத்துவமாக இருப்பதால் இதை குறிப்பிடுகிறேன்)
2. இந்துத்துவ தீவிரவாதம்: இந்தியாவில் தான் விரும்பும் உணவை சாப்பிடுவது ஒரு மனிதனின் அடிப்படை உரிமை ஆனால் மாட்டிறைச்சி வைத்திருப்பதாக சந்தேகித்து அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்திற்காக ஒருவரை அடித்து கொன்ற ஒரு சம்பவம் இந்துத்துவ தீவிரவாதத்தின் ஒரு எடுத்துக்காட்டு.

எழுத்தாளர் ஜெயமோகன் தனது ஒரு கட்டுரையில் கூறியது போன்று ‘இந்து மதத்தை ஒற்றைமையமும் ஒரேகட்டமைப்பும் கொண்ட நிறுவனமாக உருவகித்து, அதன் குறியீடுகளை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு, இந்துக்கள் என தங்களை உணரும் மக்களை ஒரு அரசியல் தரப்பாக ஆக்கிக்கொண்டு அதன் மூலம் தேசிய அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கும் ஓர் அரசியல் தரப்பு’ தான் இந்துத்துவம். அது இந்துமதத்தை இறுக்கமான அமைப்பாக்கி அதன் உள்விவாதங்களை அழிக்கும். அதன் மூலம் அடிப்படைவாதமே உருவாகும். அடிப்படைவாதம் எதிரிகளை முன்வைத்தே இயங்கும் தன்மை கொண்டது. வெறுப்பை தன் உள்ளாற்றலாக கொண்டது. இந்துமரபு என்பது பல்லாயிரம் வருடப் பாரம்பரியமுள்ள ஒரு மானுட ஞானத்தொகை. இந்துத்வம் என்பது அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஒரு சமகால அதிகார அரசியல் போக்கு.

raja said...

நாகேஸ்வரன்,

மோடியை பற்றிய உங்கள் கருத்துக்கள் நூற்றுக்கு நூறு அல்ல, ஆயிரத்திற்கு ஆயிரம் சரிதான். காமராஜரை தோற்கடித்து விட்டு கருணாநிதியை ஜெயிக்க வைத்தது எவ்வளவு தவறோ, அதற்கு சற்றும் குறைவில்லாதது போல் தான் மோடியின் வெற்றியை நான் கருதுகின்றேன்.

அன்பே சிவம் said...

யோவ் கொ.ப.செ.நானே மேலுக்கு முடியாம கெடக்கேன். என்ன ஏனய்யா வம்பில மாட்டி உடுறீரு.

சேக்காளி said...

//நானே மேலுக்கு முடியாம கெடக்கேன்//
மரியாதைக்குரிய அவைத்தலைவருக்கு,
வணக்கம். விரைவில் குணம் பெற்று வர ஏதோ ஒரு சாமியை கும்புட்டுகிறேன்.
நலம் பெற்ற பின் கொஞ்சம் மெதுவாக வந்தாலும் பரவாயில்லை.
நீங்கள் முழு தெம்புடன் திரும்பி வரும் வரை ஒத்தயில வாம பாறை யா சமாளித்து கொள்கிறேன்.
நன்றி
கொபசெ
வாம பாறைகள்.

Anonymous said...

படிச்சு படிச்சி சொன்னமே மோடிக்கு ஓட்டு கேட்காதன்னு..அப்புறம் குத்துது..குடையுதுன்னு....நசநசன்னு