பாட்ஷா படவிழாவில் ரஜினி பேசிய பிறகு எங்கள் ஊரிலிருந்து தலைவர் வீட்டுக்கு வேன்களில் சென்றார்கள். அப்பொழுது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். வெள்ளியங்கிரி என்ற நண்பன் தானும் நாயக்கன்காட்டிலிருந்து செல்லும் வண்டியில் செல்வதாகச் சொன்னான். எங்கள் வீட்டில் விடமாட்டார்கள். அவன் கையில் ஒரு புத்தகம் இருந்தது. ரசீது புத்தகம். அப்பாவுக்குத் தெரியாமல் ஐம்பது ரூபாயைக் கொடுத்து ரசீது வாங்கி வைத்துக் கொண்டேன். ரசிகர் மன்றத்தினர் ஊர் முழுவதும் வசூல் செய்து கொடி கட்டிக் கிளம்பினார்கள். ஏகப்பட்ட வண்டிகள் கிளம்பின. ரஜினி பாடல்கள் பின்னணியில் ஒலிக்க அவர்கள் சிதறுகாய் அடித்த போது உடல் சிலிர்த்து அடங்கியது.
சென்னை சென்ற வெள்ளியங்கிரி திரும்பி வந்து தங்களை போயஸ்கார்டன் பகுதிக்குள்ளேயே விடவில்லை என்றான். ‘எப்படியும் தலைவருக்கு செய்தி போயிருக்கும்’ என்றான். இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்பொழுது ரஜினிக்கு இவ்வளவு சொட்டை இருந்ததாக நினைவில் இல்லை. தலையில் கொஞ்சம் முடி இருந்தது. இப்பொழுது எனக்கு இருப்பது போல. வெள்ளியங்கிரியைப் பார்த்து பல வருடங்களாகிவிட்டது. அவனது அப்பாவைப் பார்த்தேன். ‘அவனுக்கு கல்யாணம் ஆகி புள்ள இருக்குது’ என்றார். ‘வயசுக்கு வர்ற வயசுல’ என்றார். அந்தப் பயணக்குழுவில் பொடியன் வெள்ளியங்கிரி. அதில் வயது முதிர்ந்த ஒருங்கிணைப்பாளரை நினைத்துப் பார்க்கிறேன். அப்பொழுதே அவருக்கு ஐம்பது வயது இருக்கும். இந்நேரம் பேரனுக்குத் திருமணம் செய்து வைத்திருக்கக் கூடும்.
கடைசியில் தலைவர் அறிவித்துவிட்டார். காலத்தின் கட்டாயத்துக்கு செவி மடுத்திருக்கிறார். ஆண்டவனின் கட்டளையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ரஜினிக்கு வயதாகிவிட்டது என்பது பிரச்சினையில்லை. எம்.ஜி.ஆர் அதிமுகவை 1972ல் தொடங்கிய போது அவருக்கு ஐம்பத்தைந்து வயது. எம்.ஜி.ஆரின் அரசியல் அனுபவத்துடன் ரஜினியை ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர் காங்கிரஸில் இருந்திருக்கிறார். திமுகவில் இருந்திருக்கிறார். உட்கட்சி பிரச்சினைகள் நெருக்கிய போது அதைச் சமாளித்திருக்கிறார். எம்.ஜி.ஆரை விட்டுவிடலாம். ஆனால் வயதுடனும், அரசியல் அனுபவத்துடனும் என்.டி.ஆருடன் ரஜினியை ஒப்பிட முடியும். திரு. ராமாராவ் தெலுகு தேசம் கட்சியை 1982ல் தொடங்கிய போது அவர் அறுபது வயதைத் தொட்டிருந்தார். ஆந்திரப்பிரதேசம் உருவானதிலிருந்தே மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிடமிருந்து மீட்டெடுப்பதாகச் சொல்லிக் கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் நாற்காலியைக் கைப்பற்றினார். ரஜினிக்கு அறுபத்தெட்டு வயதாகிறது. கடந்த நாற்பதாண்டு காலமாக ஆண்டு கொண்டிருக்கும் திராவிட அரசியலிலிருந்து தமிழகத்தை விடுவிக்கப் போவதாக நம்புகிறார்.
வயதிலும் அரசியல் அனுபவத்திலும்தான் ரஜினியை ஓரளவுக்கு என்.டி.ஆருடன் ஒப்பிட முடியுமே தவிர தேர்தல் அரசியலில் ஏகப்பட்ட சமாச்சாரங்கள் இருக்கின்றன. மக்களிடம் தமக்கு உருவாகியிருக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியமானது. ‘வந்தாலும் வருவேன்’ என்று இருபது முப்பது வருடங்களாகச் சொல்லிக் கொண்டேயிருந்து மிக இயல்பாகவே மக்களிடம் நம்பகத்தன்மையை இழக்கத் தொடங்கியதில் ஆரம்பித்து இன்றைய சூழலில் தேர்தலில் விளையாடுகிற பணம் வரைக்கும் எவ்வளவோ எதிர்நிலைகள் ரஜினிக்கு எதிராக இருக்கின்றன. எண்பதுகளில் இருந்த அரசியல், ஊடகச் சூழல் இப்பொழுது இல்லை. தொண்ணூறுகளில் ரஜினியை ஊடகங்கள் தெய்வமாகக் காடிய போது அப்படியே நம்புகிற ரசிகர்கள் லட்சக்கணக்கில் இருந்தார்கள். இன்றைக்கு ஊடகங்கள் ரஜினியை தெய்வமாகக் காட்டத் தயாராக இருக்கின்றன. ஆனால் மிக இயல்பாகக் கலாய்த்து ஒதுக்கிவிடுகிற தன்மையை மக்கள் அடைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு சாமானியனிடமும் ஒரு ஊடகம் இருக்கிறது. கொண்டலாம்பட்டியிலிருந்து ஒரு மீம்ஸை உருவாக்கி தமிழகம் முழுக்கவும் பரப்ப முடிகிற வல்லமை சாதாரணனுக்கு இருக்கிறது. மிக எளிதாக எவ்வளவு பெரிதாகக் கட்டமைக்கப்படும் ஊடக பிம்பத்தையும் சாதாரணமாக நிராகரித்துவிடுகிறார்கள்.
தொண்ணூறுகளில் தமக்கு இருந்த செல்வாக்கு இல்லை என்பது ரஜினிக்கும் தெரிந்திருக்கக் கூடும்.
அரசியல் ரீதியில் என்னதான் விமர்சனம் செய்தாலும் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வங்கி மிக உறுதியானது. அதை உடைக்கத்தான் இதுவரை மேலேழுந்து வந்த ஒவ்வொரு மூன்றாவது சக்தியும் தொடர்ந்து முயன்றிருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் வலுவான திமுக, அதிமுகக் கட்டமைப்பை உடைத்து புதியதாக ஒரு கட்சியை ஒவ்வோரு வார்டுகளிலும் வளர்த்தெடுப்பது என்பதும் அவ்வளவு எளிதான காரியமில்லை. இதையெல்லாம் செய்து மூன்றாவது சக்தியாக உருவெடுத்துவிட முடியும் என பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த் என்று நடிகர்கள் ஒரு பக்கம் முயன்று தோற்றுப் போக, மூப்பனார், ராமதாஸ், வைகோ என அரசியல்வாதிகளும் இன்னொரு பக்கம் தோற்றுக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவும், கருணாநிதியும் களத்தில் இல்லாத போது சில்வண்டுகளுக்கெல்லாம் மூக்கு வியர்க்கும் போது காலங்காலமாக போக்குக் காட்டி வந்த ரஜினிக்கு அந்த எண்ணம் வருவதில் தவறில்லை. அதிமுகவையும் திமுகவையும் ரஜினி வென்றுவிடக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான சாத்தியங்கள் ரஜினியிடம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அதீதமான மக்கள் செல்வாக்குடன் கட்சி தொடங்கி நான்கைந்து வருடங்களில் ஆட்சியைப் பிடிப்பது ஒரு வழிமுறை. ஆட்சியைப் பிடிக்கிற அளவுக்கான செல்வாக்கையும் நம்பகத்தன்மையையும் அவர் இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டன.‘நம்ம கட்சி’ என்ற உணர்வோடு ஒவ்வோர் ஊரிலும் தொண்டர்களை இணைத்து கட்சியைக் கட்டமைத்து ஆட்சியைப் பிடிப்பது இன்னொரு வழிமுறை. அதற்கான ஆற்றலும் பணமும் வயதும் ரஜினியிடம் இருக்கிறதா என்பதுதான் கேள்வி.
திமுக, அதிமுக தாண்டிய மூன்றாவதுசக்தி வலுப்பெற்றால் அதை உளப்பூர்வமாக ஆதரிக்கலாம். ரஜினி மட்டுமில்லை- காங்கிரஸோ, பிஜேபியோ கூட அப்படி வலுப்பெற்றால் சரிதான். ஆனால் நேர்மையாகக் களம் கண்டு வலுவடைய வேண்டும். மக்களின் நம்பகத்தன்மையைப் பெற்று ஆட்சிக்கு வரட்டும். அப்படியில்லாமல் சகுனி அரசியலைச் செய்து மறைமுகமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் கை வைத்தால் அதை எல்லாவிதத்திலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ரஜினி அத்தகையதொரு வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க அந்த பாபா அவருக்கு அருள் புரியட்டும்.
தனிப்பட்ட முறையில் ரஜினி நல்ல மனிதர் என்பதிலும் மக்களுக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உடையவர் என்பதிலும் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் அடிப்படையில் அவர் தைரியமற்றவர். எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அதுதான் அவரது அரசியல் நுழைவை எதிர்க்கச் செய்கிறது. காலங்காலமாக விரும்பிக் கொண்டிருந்த மனிதர் அடுத்தவர்களின் பகடைக்காயாகிவிடுவாரோ என்ற அங்கலாய்ப்பினால் எழும் எதிர்ப்பு.
ஒருவேளை ரஜினி மூன்றாவது சக்தியாக காலூன்றுவாரேயானால் அது கொள்கை சார்ந்த சக்தியாக இருக்க வேண்டும் என உளப்பூர்வமாக விரும்புகிறேன் . வெளிப்படையாகத் தனது நிலைப்பாட்டைச் சொல்லுகிறபடியாக அமைய வேண்டும். ரஜினியின் அரசியல் நுழைவு என்பது சுயமாகச் சிந்தித்து, கொள்கை சார்ந்து, நல்லவர்களை வேட்பாளராக நிறுத்துவதாக இருக்குமானால் அதனை வரவேற்க எந்தவிதமான மனத்தடையும் இல்லை. அவரால் மூன்றாவது சக்தியாக தமிழக அரசியலில் ஒரு சலனத்தை உண்டாக்க முடியுமானால் அது தமிழகத் தேர்தல் களத்துக்கும் அரசியலுக்கும் நல்லதுதான். ஆனால் அதுவே சில மறைவான நோக்கங்களுடனும் பின்னணி சக்திகளுக்குக் காவடி தூக்கவும் இயங்குவாரெனில் பூனைக்குட்டி வெளியில் வர வெகு நாளாகிவிடாது. தமது மொத்த செல்வாக்கையும் இழந்து செல்லாக்காசாக அரசியலிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். ரஜினியின் சாதாரண ரசிகனாக அதை எந்தக் காலத்திலும் விரும்ப மாட்டேன்.
19 எதிர் சப்தங்கள்:
காலம் பதில் சொல்லும்
புத்தாண்டு வாழ்த்துகள்
நீங்கள் விரும்பவில்லை என்றாலும் அதுதான் நடக்கும். எனக்கும் விருப்பமில்லை என்பதனையும் சொல்லிக்கொண்டு....
உங்கள் தரத்திற்கு ஏற்ற பதிவு ஒவ்வொரு வரியும் ஆழம் உள்ளது இதை ரஜினி சார் படித்தால் நன்றாக இருக்கும் என்று மனசு ஏங்குகிறது.ஒருபோதும் மறைமுக பின்னணி உள்ளவர்களின் பகடைக்காயாக ஆகமாட்டார் உறுதியாக நம்பலாம் அவர் முழுதாக நம்பும் எல்லாம் வல்ல "இறைவன்" ஆசீர்வாதிக்கட்டும்.
'சகுனி அரசியலைச் செய்து மறைமுகமாக ஆட்சியிலும் அதிகாரத்திலும் கை வைத்தால் அதை எல்லாவிதத்திலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது'அப்படியென்றால் நிச்சயம் எதிர்க்க வேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை பாரதிய ஜனதா மட்டும் இப்படி விழுந்தடித்து வரவேற்பதை பார்த்து மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.கடந்த சில வருடங்கள் முன்புவரை பத்திரிகைகள் தருவதுதான் செய்தி ஊடகங்கள் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் முன்னிலைப்படுத்தலாம் யாரைவேண்டுமானாலும் புறந்தள்ளலாம் ஆனால் இப்போது நிலைமை அப்படி அல்ல
நான் நிச்சயம் ரஜினி ரசிகன் அல்ல ஆனால் ரஜினி தனது மொத்த செல்வாக்கையும் இழந்து செல்லாக்காசாக அரசியலிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாவதை நானும் விரும்ப மாட்டேன் வாழ்வின் அடித்தளத்திலிருந்து மேலே வந்திருக்கிறார் இருக்கும்வரை புகழோடு வாழட்டும்
தினகரனை பணம் கொடுத்து ஜெயித்தார் என்று தோற்றவர்கள் தங்கள் தோல்விக்கு காரணம் சொன்னாலும் தினகரனின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஓன்று அவர் தன்னை நோக்கி வந்த அனைத்து பிரச்சனைகளையும் யாருக்கும் பயப்படாமல் துணிந்து எதிர்கொண்டார் என்பதும், அவரின் முடிவெடுக்கும் திறமையும்தான்.முதன்முறை நடைபெறுவதாக இருந்த RK நகர் இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் 'தினகரனுக்கு தைரியமிருந்தால் தேர்தலில் போட்டியிடட்டும்' என்று சவால் விடுத்தன சவால்விடுத்த அடுத்த நாளே தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று அறிவித்தார் (இதை எதிர்கட்சிகளே எதிர்பாக்கவில்லை) பயந்து நடுங்குவதை அல்லது நடுங்குவது போன்று நடிப்பதை நிறுவன மேலதிகாரிகள் விரும்பலாம் ஆனால் மக்கள் விரும்புவதில்லை
பாண்டே : அதிமுக விடம் இரட்டை இல்லை இருக்கிறது திரு. TTV தினகரனுக்கு தொப்பி கூட உத்தரவாதமில்லை
தினகரன்: வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
ரஜினி தேர்தலில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை போய் பத்து வருடங்களாகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் தீவிர ரசிகனான எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது.
தமிழ் ஹிந்துவில் வரும் "ரஜினி அரசியல்" தொடரில் இருந்து சில துளிகள்:-
'நடிகனுக்கு நாடாளத் தெரியுமா?' என்றார்கள். கூத்தாடிக்கு ஓட்டுப்போடலாமா என்றார்கள். அவர்தான் பத்தாண்டுகள் தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அடுத்து 'நாட்டியக்காரிக்கு ஓட்டு போடலாமா?' என்பதோடு, சொல்லவே நா கூசும் விஷயங்களை எல்லாம் மேடையேற்றி அசிங்கப்படுத்தினார்கள்.
அதே ஜெயலலிதாதான் சகலத்தையும் துச்சமாக நினைத்து மக்கள் செல்வாக்கால் அகற்றி அரியணையில் பல முறை அமர்ந்தார்.
'எனக்கு அரசியல் தெரிந்ததால்தான், அதன் ஆழும் தெரிந்ததால்தான் வருவதற்கு யோசிக்கிறேன். தெரியாவிட்டால் ஆகட்டும், ஓகேன்னு போயிட்டே இருந்திருப்பேன்!' என்கிறார். அதுதான் ரஜினி.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முசோலினியிடமும், ஹிட்லரிடமும் ஜெர்மன், இத்தாலி நாட்டவர்கள் எதிர்பார்த்தார்களா என்ன? இந்திய சுதந்திரத்திற்கு மகாத்மா காந்தி முன்னணியில் நிற்க வேண்டும், பண்டித ஜவஹர்லால் நேரு போன்றவர் பிரதமர் ஆகவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோமா என்ன? அவரவர் அவரவர் பாணியில் இயங்கினார்கள். அதை அடியொற்றி சிலர் விருப்பப்பட்டார்கள். இன்னும் சிலரோ சுபாஷ் சந்திரபோஸ் தேசத்தின் தலைவராக கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். ஆகப் பெரும்பான்மை என்ன விரும்பியதோ, அதுவே தேர்தலின் தேர்வாக மாறியது.
'ரஜினி அரசியலுக்கு வருவார்; வரமாட்டார்; வரக்கூடாது; வந்தாலும் நிற்க மாட்டார்; படுதோல்வி காண்பார்; அவர் உடல்நிலை தாங்காது; 1996 ஆம் ஆண்டுடன் அவரின் செல்வாக்கு போயே போச்சு!' என கமெண்ட் பண்ணுவதில் எல்லாமே அரசியலும் சுவாரஸ்ய வரலாறும் அடங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது.
காரணம் இன்றைக்கும் நம் தமிழ் மக்கள் கண்டு களிக்கும் ஆகப்பெரும் ஊடகமான சினிமாத்துறையில் அவர்தான் முன்னணி கதாநாயகன். இன்றைக்கும் ஒரே ஜெயிக்கிற குதிரை.
கோடானுகோடி தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகர். அவர் சினிமாவில் நடித்த படம் வெளியாகும்போது, அடித்துப்பிடித்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ரசிகனுக்கு, அவரின் அரசியல் நகர்வை கவனிப்பதிலும், அதில் ஆரவாரிப்பதிலும் தனி எதிர்பார்ப்பு.
என்னுடன் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், அழகிரி போன்றோருடன் பழகியவனாக்கும் நான் என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் அந்தப் பத்திரிகையாளர், ரஜினியை பற்றி நான் பேசும்போதெல்லாம் அடிக்கடி சலிப்பு தட்ட ஒன்றை சொல்லுவார். 'ரஜினியை எதுக்கு பேசறீங்க. அவரோட அரசியல் எல்லாம் 1996லேயே முடிஞ்சுடுச்சு. அவர் இனி அரசியலுக்கு வந்தா தேற மாட்டார். டெபாசிட் கூட கிடைக்காது!'
அவரையே அப்படி சொல்லுபவர் விஜயகாந்தை எப்படிப் பார்த்திருப்பார். ''விஜயகாந்த் கட்சி, அரசியல் எல்லாம் சும்மாங்க. அவர் கட்சி ஆரம்பிச்சு, தேர்தலில் நின்னா ஒரு சீட்டுல டெபாசிட் கூட வாங்க மாட்டார்!'' என்றே சொன்னார். அதுவே விஜயகாந்த் மதுரையில் கட்சி ஆரம்பித்து, முதல் அரசியல் கட்சி மாநாட்டையும் கொடி அறிமுகத்தையும் செய்த போது கொஞ்சம் உணர்வு பொங்கிப் போனார். அந்த மாநாட்டின் லட்சோப லட்ச ஜனக்கூட்டத்தில் இருந்த அவரை தொலைபேசியில் அழைத்து, 'கூட்டம் எப்படி?' என்று கேட்டேன்.
'பயங்கரம்' என்றார்.
'5 லட்சம் பேர் இருப்பாங்களா?' திரும்பக் கேட்டேன்.
'அதுக்கும் மேலேயே இருக்கும். சமுத்திரம் போல் இருக்கிறது!' என உணர்ச்சி பொங்க பதிலளித்தார். அத்துடன் அவரை நான் விட்டிருக்கலாம்.
'ரஜினி கட்சி ஆரம்பித்தால் எப்படியிருக்கும்?' என்றேன்.
'இது சமுத்திரம் என்றால் அது சுனாமி போல் இருக்கும்!' என்றார்.
மிகவும் நடுநிலையாக எழுதியுள்ளீர்கள். எனக்கு ஓன்று மட்டும் புரியவில்லை. உங்கள் கண்ணோடத்தில் இதற்கு பதிலை கேட்க ஆவலாக உள்ளேன்.
ரஜினி இந்தியாவிலேயே மிகவும் மதிக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய உயரத்தில் உள்ள ஒரு நடிகர் என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது ரசிகர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு பெரிய கூடடம், சமீபத்தில் வெளியான கபாலி வரை முதல் வாரத்தில் ரூ.500 முதல் சில ஆயிரங்கள் வரை கொடுத்து ஒரே படத்தை சில முறை பார்த்ததை சொல்லிக் கொள்வதை பார்த்திருக்கிறோம்.
ரஜினி படங்கள் ஒரு பெரிய ஒரு வியாபாரமாகி ஊதி (ஒன்றுமே இல்லாத படமாக இருந்தாலும் கூட) பெருக்க படத்தை பார்த்திருக்கிறோம். இதில் ரஜினிக்கு பங்கே இல்லையா? ரஜினி படங்களை வைத்து மனசாட்சியே இல்லாமல் டிக்கெட் விலையில் அடித்த கொள்ளைகள் ஏராளம்.
அவ்வளவு பெரிய நடிகர், ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகும் போது, நியாயமான ஒரு சம்பளத்தில் ஒப்பந்தம் ஆகி (ஒரு படத்தின் நியாயமானதா டிக்கட் விலையில் அவ்வளவு வியாபாரம் ஆகுமோ அதற்கேற்ற சம்பளத்தில்), தனது படம் முதல் நாளில் இருந்தே டிக்கட் விலையில் தான் கொடுக்கப்பட வேண்டும் என்று கண்டிஷன் போட்டு செய்ய முடியாதா?. குறைவான பட்ஜெட்டில் படம் எடுத்தால் இது சாத்தியம் தானே?
இதை கூட அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஒரு நடிகரால் செய்வது சாத்தியம் இல்லாத ஒன்றா?. என் வேலை படம் நடிப்பது மட்டும் தான், எவ்வளவு கொள்ளை விலை வைத்து விற்றுக்கொள் என்று கண்டு கொள்ளாதது போல இருப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
தான் நடித்த படத்தையே அவ்வளவு உயரத்தில் இருக்கும் ஒரு நடிகரால் நியாயமாக கொண்டு செல்ல சக்தி இல்லாத ஒருவர் இங்கே அரசியலில் வந்து என்ன கிழிக்க போகிறார்?.
இல்லை நான் மேலே கூறியிருப்பது நடை முறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றா? உங்கள் கண்ணோடத்தில் பதிலை கேட்க ஆவலாய் உள்ளேன்
'இது சமுத்திரம் என்றால் அது சுனாமி போல் இருக்கும்!' என்றார்.
ராஜா என்ன தெரிவிக்கிறீர்கள்..சமுத்திரம் என்றும் உள்ளது.. சுனாமி மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டு உடனே மறைவது..
உண்மை விளக்கம் அளிக்க வேண்டும்.
வாழ்க வளமுடன்
All your points are completely true. I agree that he is placing his reputation at risk. But IMHO, Nothing worse can happen even if he loses, because many have already started ridiculing him. (%of it will be more).At least there will be no speculation around him and politics.
Because the question still remains :Who else is the next eligible candidate for CM?
I am not saying Dravidian parties are completely bad. There are many good things happened to TN because of Dravidian parties. But we all would agree that we can't pin point a handful of honest leaders. Lets hope for a change. Only if leadership is good, people will be good.
With the speculations going around, after two of his films releases, and by the time Karnataka election are over, there would be a state election coming within a year or along with Parliament election.
Sir, my question to you is: In the voting booth, (setting aside all the ifs and buts), when you happen to see Rajnikanth's party symbol, as a fan (or was a fan) will you press the button or not. (Giving one chance to him)
- Somesh
ரஜினி அவர்களை இவ்வளவு தூரம்
எதிர்க வேண்டிய அவசியம்
இல்லை என்றே தோன்றுகிறது.
ரஜினி அரசியலுக்கு வந்தால்
திருடர் கழகத்துக்குதான் பாதிப்பு
அது தமிழ்நாட்டுக்கு நல்லதுதானே.
என்ன சொடல முத்தா கிறுக்கனுக
ஓட்டல்லா போச்சா
Anonymous Said - Mr.Somesh
கட்டுரையின் முக்கியமான சாரம்சம் இதுதான் என்று நினைக்கிறன்
'காலங்காலமாக விரும்பிக் கொண்டிருந்த மனிதர் அடுத்தவர்களின் பகடைக்காயாகிவிடுவாரோ என்ற அங்கலாய்ப்பினால் எழும் எதிர்ப்பு'
"தமது மொத்த செல்வாக்கையும் இழந்து செல்லாக்காசாக அரசியலிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகும். ரஜினியின் சாதாரண ரசிகனாக அதை எந்தக் காலத்திலும் விரும்ப மாட்டேன்." Very True Words.
இன்னைக்கு பிரச்சனைக்கு காரணம் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும்தான். மக்கள் நல்லவங்களா மாற தயாரா இருந்தா, நல்ல தலைவன் கிடைப்பான். அப்படி பார்த்தா,முதலில் ரஜினி ரசிகன் மாற தயாரா இருக்கானா? ரஜினி ரசிகன் முதல்ல வரிசை நின்று ரஜினி படத்துக்கு டிக்கெட் வாங்குவானா என்பது கேள்வி? இல்ல ரஜினியால அவர்களை கட்டுபடுத்த முடியுமா? ரஜினி அமோக வெற்றி பெற்றாலும், ரஜினி நல்ல ஆட்சி கொடுக்கமுடியுமா?
உண்மையை கசப்பாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 1996ல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் வெறுப்பை அன்றைய ஆளும்கட்சி சம்பாதித்து இருந்த நிலையில் அன்றைய காங்கிரஸ் தலைமை தமிழக நிலை அறியாமல் அதிமுக வுடன் கூட்டணி அறிவிப்பு செய்தது அன்றைய சூழலில் மூப்பனார் அவர்கள் தனிக்கட்சி துவங்க முடிவெடுத்தார்,திமுக வுடன் கூட்டணி என்ற 2 பழமும் கனிந்தது. அன்று ஆளும் கட்சி தலைமைக்கு எதிராக இவர் எழுப்பிய குரல் புரட்சியாக பார்க்கப்பட்டது. உடன் அண்ணாமலை யின் சைக்கிள் சேர ஓஹோ வென்றெழுந்தது யுகப்புரட்சி எனப் பாடுமளவுக்கு தோற்றம் ஏற்பட்டது. ஆனால் இன்று!
நிலைமை அப்படியேவா உள்ளது. மேலும் மக்கள் இன்று விரும்புவது 100% நேர்மையாளனை அல்ல ஆனால், அதிகாரத்தில் உள்ளவர்களை எதிர்த்து குரல் தரும் ஒரு தைரியசாலியைத்தான். எல்லோருக்கும் நல்லவராக இருந்து அரசியல் செய்ய நினைத்தால் அது அறியாமையே.
இரு திராவிட கட்சிகளின் அரசியலில் வெறுத்துப் போன மக்கள் பலர் உள்ளனர். ஏன் ரஜினி ஒரு நல்ல அரசியல்வாதியாக உருவாகக் கூடாது? ஏன் இப்படி அவர் அரசியல் பிரவேசம் கண்டு பயம் கொள்கிறார்கள் என தெரிய வில்லை. அவர் ஒரு நல்ல அரசியல் தருவார் என நம்புவோம். வாழ்த்துவோம். வரவேற்போம். சரியான அரசியல் தரவில்லை எனில், விஜய காந்த் அவர்களுக்கு செய்தது போல் செய்யலாம். ஆனால் அவர் வருவதற்கே முன்பு, தோற்று விடுவார் என்பது போல் கூறுவது, பல பல எதிர் மறை எண்ணங்களை உருவாக்குகிறது. கலைஞர் அவர்களே, நேற்று ரஜனியை வாழ்த்தி உள்ளார். அவரை விடவா நமக்கு அரசியல் தெரியும்>
Most commented article in the recent times apart from 'அடுத்த கட்டம்....'.
Rajini, his name always 'sells' whether he is right or wrong ;)
Hi Mani,
Like many people said, Rajini will not lose anything even he wont success in politics. However, In most of your articles you are mentioning all political parties should come to power in very honest way. So ADMK and DMK never played any games in the past elections and came to power very honestly? Jeya didn't give money to vaiko to break vijayakanth and DMK relation? chandrababu naidu also ditched his folks and came to power and turned out such a great CM.
Second time you are writing that some one should come to power in honest way and indirectly saying against BJP (first article was near election or jeya death) . Who is honest here? when shashi was trying to come to power, is that honest?.. even if BJP is trying games in politics, That is politics... No one will win if they are honest in today's world. Even rajini join hands with BJP, what wrong in that?
eagerly want to know your opinion... why are you keep on insisting this point in your articles?
Even rajini join hands with BJP, what wrong in that? --- Yes, I too thought this way only
Post a Comment