Jan 12, 2018

பேசாப் பொருளைப் பேசத் துணிதல்

புனிதப்படுத்தப்பட்ட ஒன்றைப் பற்றி யாராவது பேசும் போது வெறியெடுத்தவர்களைப் போலக் கிளம்புவது சமீபமாக அதிகரித்திருக்கிறது. தீபாபவளிக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என்றால் ‘நீ யாருடா?’ என்பார்கள். விநாயகர் சதுர்த்திக்காக நீர் நிலைகளைக் கெடுக்க வேண்டாம் என்றால் ‘எங்களுக்குத் தெரியும்..நீ கிளம்பு’ என்பார்கள். கிறித்துவத்தைப் பற்றி உன்னால் பேச முடியுமா? இஸ்லாம் பற்றி நீ விமர்சனம் செய்ய முடியுமா? என்று அடுக்குவது வழக்கம். 

இதைச் சமீபமாக என்று கூடச் சொல்ல முடியாது. காலங்காலமாக வல்லான் சொல்வதுதானே நியாயம்? வரலாற்றில் ஏகப்பட்ட தகவல்கள் முற்றாக அழிக்கப்பெற்று தமக்குப் பிடித்த வகையில் வரலாறு எழுதப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் காலத்தில் விவாதங்களுக்கும், கருத்துப் பரிமாற்றங்களுக்கும் இடமில்லாமல் வெர்ச்சுவல் ரெளடிகளின் அட்டகாசம் அதிகரித்திருக்கிறது. அலைபேசியில் அழைத்துப் பேசி பதிவு செய்து ‘அவனை ஒரு வழியாக்கிட்டேன்’ என புளகாங்கிதம் அடைகிற மனநிலைதான் பெருகி வளர்ந்திருக்கிறது. 

சமீபகாலத்தில் அறிவு சார்ந்து நிகழ்ந்த ஆழமான விவாதம் என்று எதைச் சொல்ல முடியும்? தொலைக்காட்சிகளுக்கு அன்றைக்கு எது சூடோ அதுதான் விவாதப் பொருள். நான்கைந்து பேர்களை அழைத்து வைத்துக் கத்தவிட்டு டி.ஆர்.பியை ஏற்றிக் கொண்டு சமோசா கொடுத்து அனுப்பிவிடுகிறார்கள். இங்கே எல்லாவற்றுக்கும் இரண்டு நாட்கள்தான் ஆயுள் என்பது துரதிர்ஷ்டம். ஒற்றை வரியைப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு மட்டையைச்  சுழற்றுகிறவர்கள்தான் சுற்றிலும் இருக்கிறார்கள்.

இப்படியே எதைப் பற்றியும் அறிவார்ந்த விமர்சனங்களும் விவாதங்களுமில்லாமல் ஒரு தசாப்தத்தைக் கடத்தினால் எந்தச் சலனமுமற்ற மொன்னையான சமூகமாக தமிழ் சமூகம் மாறிவிடும் அல்லது எதைப் பற்றியும் புரிதலில்லாத ரவுடிக் குழுக்களாக மாறியிருப்போம். ஆண்டாளையும் தீபாவளிவையை மட்டுமில்லை. பெரியாரைப் பற்றிப் பேசினாலும் ஒரு குழு கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும். அம்பேத்கரைப் பற்றிய கேள்விகளை எழுப்பினாலும் அடி விழும். தமிழ் தேசியத்தைப் பற்றிய குரல் எழுப்பினால் கழுத்தை நெரிப்பார்கள். இந்திய தேசியம் பற்றி விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருவார்கள். தகவல் தொடர்பு எளிமையாக்கப்பட்டு அவை நம் விரல்களுக்கிடையில் வந்த பிறகு எல்லாவற்றையும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘அதைப் பத்தி நீ பேசக் கூடாது’ என்று தடுத்து எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்கும் சிறு சிறு குழுக்கள் நிறைய உருவாகியிருக்கின்றன. 

நாகரிகம் என்பதே உருமாறி, அழிந்து, புதுப்புது வடிவங்களை நோக்கி நகர்ந்து கொண்டேயிருப்பதுதான். நிரந்தரம், சாஸ்வதம் என்றெல்லாம் எதுவுமில்லை. உரையாடல்கள் வழியாக ஒவ்வொன்றும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வதும் அழிந்து போவதும்தான் அந்தச் சமூகத்தை பக்குவப்பட்ட சமூகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. அதற்கு அனுமதிக்காமல் வெற்றுப் பெருமையைக் கத்தியபடியே தடியைத் தூக்கிக் கொண்டு நின்றால் எதைப்பற்றியுமே துணிந்து ஒரு கருத்தைச் சொல்ல இயலாத சூழல்தான் உருவாகும். பிறகு விவாதமாவது வெங்காயமாவது. இன்றைக்கு நாம் வரலாறு என்று படித்துக் கொண்டும் நம்பிக் கொண்டும் இருப்பது முழுமையான வரலாறுதானா என்ற கேள்வி எழ வேண்டியதில்லையா? கடவுள்களின் வரலாறுகளும் கதைகளும் புனிதமாக்கப்பட்ட சம்பவங்களும் அப்படியே நிகழ்ந்தவைதானா? இன்றைக்கு நாம் தலைவர்களாகக் கருதிக் கொண்டிருப்பவர்களை மறுவிவாதங்களுக்கு உட்படுத்த வேண்டியதில்லையா? நன்மைகளையும் தீமைகளையும் தொடர்ந்து விவாதத்துக்குட்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டியது சமூகத்தில் முக்கியமான செயல்பாடு.

நாம் நம்பிக் கொண்டிருப்பனவற்றில் பெரும்பாலானவை ஊதிப் பெருக்கட்டவை. கட்டமைக்கப்பட்டவை. மறைத்துத் திரிக்கப்பட்டவை. சரியோ, தவறோ- இவற்றையெல்லாம் யாராவது எங்கேயிருந்தாவது பேச ஆரம்பிக்கட்டும். எல்லாவற்றைப் பற்றியும் முழுமையான அலசல்களும் ஆராய்ச்சிகளும் தேவையாக இருக்கின்றன. எழுப்படும் சர்ச்சைகளுக்கு பொருள் பொதிந்த தர்க்கப் பூர்வமான பதில்களும் பதில் விவாதங்களும் அவசியமாக இருக்கின்றன. ஆனால் அப்படியானதொரு காலகட்டத்தில் நாம் இல்லை என்றுதான் ஒவ்வொரு சம்பவங்களும் உணர்த்துகின்றன. 

எதைப் பற்றியும் உடைத்துப் பேசாமல் எல்லாவற்றையும் பூசி மொழுகி கல் தோன்றி முன் தோன்றாக் காலத்திலேயே என்று இழுத்துக் கொண்டிருந்தால் காட்டுமிராண்டித்தனம்தான் வளரும். வைரமுத்து ஆண்டாள் பற்றிப் பேசிய முழுக்கட்டுரையும் இணையத்தில் இருக்கிறது. முழுமையாக வாசித்து முடிக்க இருபது நிமிடங்கள் ஆகக் கூடும். ஆனால் அதற்குக் கூட பொறுமையில்லை. ‘என்னதான் சொல்ல வருகிறார்’ என்று கூட கவனிக்காமல் அவரை அழைத்து ‘உங்கம்மா கதவைத் திறந்து வெச்சிருந்தாங்களா’ என்று ஒருவர் கேட்கும் ஒலிக்கோப்பைக் கேட்க நேர்ந்தது. அபத்தம். வைரமுத்து பேசியது தவறு என்றால் அதற்கு பதில் சொல்ல தரவுகளைத் தயாரிக்க முடியாதா?

எல்லாவற்றிலும் சூடாகவே இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? ஆண்டாளைப் பற்றிய விவாதம் ஒரு பக்கமெனில் இயேசுவைப் பற்றிய விவாதமும் நடக்க வேண்டும். நபிகளைப் பற்றிய உரையாடலும் உருவாக வேண்டும். முத்தலாக், மதமாற்றத்தில் ஆரம்பித்து சாதியம், தமிழ் தேசியம் வரைக்கும் எல்லாவற்றைப் பற்றியும் திறந்த மனநிலையுடன் எதிர் தரப்பை அணுகுகிற மனநிலை எல்லாம் எந்தக் காலத்திலும் வராதா? 

ஒட்டிப் பேசுவதற்கு சில குழுக்கள் இருப்பின் அதை வெட்டியும் மறுத்தும் விவாதத்தை வளர்த்தெடுக்க இன்னொரு குழு இருக்க வேண்டும். அதுதானே அறிவார்ந்த சமூகமாக இருக்க முடியும்? ‘உங்கம்மா யோக்கியமா?’ என்று ஒருவன் கிளம்பி வந்தால் ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று நினைக்கிறவர்களின் எண்ணிக்கைதான் அதிகரிக்கும். எழுதப்பட்ட, நமக்குச் சொல்லப்பட்ட கதைகளையும் புனைவுகளையும் அப்படியே உருவேற்றிக் கொண்டு அடுத்தடுத்த தலைமுறைக்கு எந்தவிதமான வரலாற்று ஆய்வுகளும் விவாதங்களுமில்லாமல் கடத்துவது நாகரிகமடைந்த சமூகத்திற்கு பொருத்தமானதில்லை. அது நம்மைப் பழைய பெருங்காய டப்பாவாகவேதான் வைத்திருக்கும். உள்ளுக்குள் சில சொட்டு ரத்தங்களுடன் கூடிய டப்பாவாக.

38 எதிர் சப்தங்கள்:

Uma said...

இப்படி எடுத்துச் சொல்ல நீங்களாவது இருக்கிறீர்களே மணி..
அயற்சியாக இருக்கிறது, இணையத்தில் நடக்கும் வெட்டுக்குத்துக்களைப் பார்த்து...

அன்பே சிவம் said...

நச்.

Anonymous said...

தல. நெசமாலுமே கமலோட ட்வீட் படிச்ச மாதிரி இருக்கு. முழுசா புரியல இந்த கட்டுரை!!! கடைசியா என்ன சொல்றீங்கனு வெளங்கல.. இதான் இலக்கியமோ :)

Anonymous said...

அகந்தையின் ஊடாக சதிராடும் எழுத்துக்களுக்கு ஒரு வசீகரம் இருக்கும். அது வா மணிகண்டனிடம் இருக்கிறது. மாயையில் வா மணிகண்டன் எவ்வளவு தூரம் வரை பயணம் செய்ய முடியும்?. பார்ப்போம்.

Soundar said...

To that Anonymous, Is it really that confusing? Krrr... Mani anna is famous for the simplicity in writing, but still u compare it with Kamal.. OMG!

Selvaraj said...

@Anonymous Said,

கட்டுரையாளர் சொல்வது இதுதான் என்று நினைக்கின்றன். 'எந்த ஒரு கருத்தையும் ஆதாரங்களுடன் கூடிய மாற்று கருத்தால் எதிர்கொள்ள வேண்டும், பொதுவாகவே நம்மை போன்ற சராசரி வாசகர்களுக்கு ஒரு தலைவர் அல்லது ஆளுமை பற்றி ஒரு பக்கம்தான் தெரியும் அவர்களின் இன்னொரு பக்கமும் (மதம், கலாச்சாரத்திற்கும் இது பொருந்தும்) விவாதிக்க படவேண்டுமென்கிறார். முக்கியமாக வைரமுத்து எழுதியதில் ஒரு வரியை மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு கருத்து சொல்லாமல் கட்டுரையை முழுமையாக வாசித்தபின் மாற்றுக்கருத்தை ஆக்கபூர்வமான விவாதமாக முன்வையுங்கள் என்கிறார்'.

அன்பே சிவம் said...

அதாகப்பட்டது.. நுனிப்புல் மேயாதீங்கோன்றார். அதான தல.

Lakshmana Perumal said...

மணிகண்டன், உங்கள் பார்வையைக் குறைத்து சொல்லவில்லை. ஆனால் உங்களுக்கு தேவையற்ற ஒலிப்பேழை காதில் விழுந்ததைப் பதிவு செய்கிறீர்கள். ஆனால் வைரமுத்துவின் கட்டுரைக்கு அறிவார்ந்த தளத்திலிருந்து அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு மற்றும் இன்ன பிற நண்பர்கள் பலரும் எழுதியதை வேண்டுமென்றே மேற்கோள் காட்ட மறுப்பது தான் முறையற்ற செயல். நிச்சயமாக உங்களுக்கு இவர்களைப் போன்றவர்கள் தரவுகளோடு மறுத்திருப்பார்கள் என்று தெரியும். ஆனாலும் திட்டமிட்டே வேண்டாதமாதிரி பேசியதை முன்வைப்பதே இக்கட்டுரைக்குப் பொருத்தம் என்று நினைத்து தவிர்த்துள்ளீர்கள். நீங்கள் அறிவார்ந்த தளத்தில் எதிர்த்து எழுதியவர்களை அடையாளப் படுத்துவதே உங்களைப் போன்றவர்கள் செய்ய வேண்டியது. அதை விட்டு எதிர்த் தரப்பிலிருந்து வரும் மொன்னைத் தனத்தை மட்டும் முன்னிறுத்துவதில் எந்த அறமும் இல்லை.

சேக்காளி said...

இது ரெத்த பூமி ய்யா. ரெத்த பூமி.
இதுக்கு ஊடா வந்து எழுதி வசீகரிக்க ஆசப்பட பிடாது.அப்பிடி ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாக்கணும். சரியா.
பின்னே
என்னோட ஒரு பதிவுக்கு வந்த கமெண்டும் நான் அளித்த பதிலும்

Anonymous27 August 2015 at 05:55
ஏண்டா முண்டம்==ஓம்பொண்ணு சங்கானபோது நீ அப்படிதான் சண்ட போட்டியா===ஏழங்கன்னா எளப்பமா உனக்கு000தேவ்ட்யா===மவனே
Replies
சேக்காளி29 August 2015 at 04:56
//உனக்கு000தேவ்ட்யா===மவனே//
எங்கம்மாவுக்கு புரோக்கர் வேல பாத்தவரு.சொன்னா சரியாத்தான் இருக்கும்.

Anonymous said...

lakshmana perumal அண்ணா அவரு அப்படித்தான் அவர் அறிவும் அவ்வளவு தான்.அவர்கண்ணுக்கு நீங்கள் சொன்னது எல்லாம் தெரியாது.புரியாது.புரிந்து கொள்ளவும் முடியாது.புரிந்து கொள்ளவும் முயற்சிக்க மாட்டார்.

Vinoth Subramanian said...

Keep analyzing.

viswa said...

வைர முத்து கட்டுரைக்கான லிங்க் கிடைக்குமா?

விஸ்வநாதன்

Anonymous said...


You may please read these before appreciating Vairamuthu:


https://othisaivu.wordpress.com/2018/01/12/post-802/

https://swarajyamag.com/ideas/aandal-attacked-again-and-again

Anonymous said...

Very true.....

A.SESHAGIRI said...

வைரமுத்து கட்டுரையை முழுக்க முழுக்க ஒரு முறைக்கு பல முறை படித்தேன்!தமிழில் வார்த்தைகளை வைத்து என்னதான் சிலம்பமாடினாலும் அவரைப் போன்றவர்களால் ஆண்டாள் போன்ற கவிஞர்களின் உன்னத ஆக்கங்களை சரியான வகையில் புரிந்த கொள்ள இயலாது.போகட்டும் அது அவர் போன்றவர்களின் இயலாமை பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் உரையின் இறுதிப்பகுதியில் முழு அறுசுவை உணவை இலையில் படைத்து விட்டு ஓரத்தில் நரகலையும் சேர்த்து வைத்தது போல் எந்தவித சரியான தரவுகளும் இல்லாமல் இதில் சம்பந்தப்படாத பல்கலைக்கழகத்தையும் (இந்தியானா -அமேரிக்கா),அரைவேக்காடு ஆராய்ச்சியாளரையும் மேற்கோள் காட்டி தேவையற்ற நஞ்சை கக்கியிருக்கிறார்.இது உங்கள் போன்றவர்களின் கண்களில் படாததுதான் வேடிக்கை!

அன்பே சிவம் said...

கொ.ப.செ ன்னா பெரிய அப்பாடக்கரா?. கொஞ்சம் பொறுப்பும் வேனும். நம்ம உள்ளாடைங்கள காய வைக்க இந்த ப(டி)ச்ச மண்ணுதான் கிடைச்சதா? பாவம்யா Mani's சன் பொங்கலை குடும்பத்தோட அனுபவிக்கட்டும். 🙏

Anonymous said...

ஆமாம் எத்தனை பேருக்கு ஆண்டாள் சாமி. சத்தியமா எங்க ஊர்ல இல்ல. அப்ப நாங்க ஹிந்து இல்லையா? எனக்கு தெரிஞ்சதெல்லாம் முருகனும், மாரியாத்தாளும், முனியாண்டியும்தான். என் காலேஜ்ல கூட ஒருத்தன் படிச்சான். எங்க கோயிலை பறகோயில்னு சொல்லுவான்.

Yarlpavanan said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

நாச்சியப்பன் said...

நான் கவனித்த மட்டில் வைரமுத்து ஒரு தேர்ந்த தமிழறிஞர் இல்லை. அவரது பக்தி இலக்கிய அறிவு மிகவும் குறைவுள்ளது. விடலை பயல்களின் ரசனை தொடும் அளவுக்கு அவர் சினிமா பாடல் எழுதும் திறமை உள்ளவர் எனபதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. அவருடைய கம்ப ராமாயணம், திருமூலர் பற்றிய உரைகள் you tube-ல் கிடைக்கிறது - முடிந்தால் கேட்கவும். மற்றபடி ஆண்டாள் பற்றிய ஆபத்தாகி கட்டுரைக்கு எதிர் வினை அவரவர் மனோ நிலையை பொறுத்தது. ஆண்டாள் பற்றி பொது மேடையில் உரையாற்ற ஒரு சினிமாக்காரர்தான் தினமணிக்கு தேவை பட்டதென்றால் பேரா. கு. ஞானசம்பந்தம் அவர்களை அழைத்திருக்க வேண்டும், அவர் ஒரு ஆண்டாள் Expert.

சேக்காளி said...

மாண்புமிகு அவைத் தலைவருக்கு,
பணிவுடன் சேக்காளி பதிவன் தெரியப்படுத்திக் கொள்வது,
நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை. ஆனால் கொபசெ இருக்கும் வரை பரப்பிக் கொண்டே இருக்க வேண்டும் கொள்கையை என்ற கொள்கையுடையவன்.கொள்கை என்னவென்றே தெரியாத காலங்களில் (கொள்கை பரப்பு) செயலாளர் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை தெரிவிப்பதற்காகவாவது எதையாவது சொல்லி தொலைக்க வேண்டியதாக இருக்கிறது.
நான் Mr.Anonymous எனக்கு எழுதிய பின்னூட்டத்தை மேற்கோள் காட்டியது இப்படியெல்லாம் நடந்தது, நடக்கிறது, நடக்கும் என்பதை தெரியப்படுத்தவே.
அதே வேளை நான் பச்ச மண்ணு, செவப்பு மண்ணு நீல மண்ணு மஞ்ச மண்ணு என்று வண்ண வண்ண மண்ணுகளை தேடி தேடி தேடி தேடி உள்ளாடைகளை காய வைப்பவனில்லை. காரணம் எனக்கு உள்ளாடை அணியும் பழக்கமோ வழக்கமோ கிடையாது.
எனவே இதனை பொறுப்பான பதிலாக ஏற்று என்மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்குமாறு உத்தரவிடுகிறேன்.
இப்படிக்கு தங்களுக்கு உண்மையும் ,கீழ்ப்படிதலுமுள்ள சேக்காளி பதிவன்.குறிப்பு : நடவடிக்கை ஏதும் எடுக்காவிட்டால் Anonymous உடன் கல்லூரியில் படிச்ச ஒருவன் சொன்ன பறகோயிலுக்கு வருவதாய் வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

Anonymous said...

ஆண்டாள் பிரச்சனையில் சில கருத்துக்களைப் பார்த்தேன். ஆண்டாளை தாசி இல்லை என்கிறீர்களே ? தாசி என்றால் கேவலமா என்று பல திராவிட ஃபேஸ்புக் சிந்தனையாளர்கள் , கொதித்து எழுந்து இருந்தார்கள். பல ஃபேஸ்புக் பயனாளர்களும் பேஸ்தடித்துப்போய் , என்ன செய்வது என தெரியாமல் வாய் பொத்தி கிடந்தனர்.

எப்போதையும் விட இப்போதுதான் பொலிட்டிக்கல் கரக்டன்ஸ் உச்சத்தில் இருக்கிறது. அதற்கு ஃபேஸ்புக்தான் முக்கிய காரணம் . இது நல்லதுதான் என்றாலும் ஒரு சில நேரங்களில் கெதக் என்று இருக்கிறது.

தாசி கேவலம் இல்லைதான். தாசியாக இருப்பதுதான் மிகச் சிறப்பு என்று கூட வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் என்ன செய்வது ? ஆண்டாள் துர்பாக்கிய சாலி , அதனால் அவள் தாசியாக இருந்திருக்க வில்லை. அதனால் ஆண்டாள் தாசி இல்லை என்று பொலிட்டிக்கலி கரக்டாக சொல்ல வேண்டி உள்ளது கொஞ்சம் டயர்டாகத்தான் இருக்கிறது இல்லையா ?

நாளை பின்னே , யாரேனும் உங்க அம்மா தேவடியா என்றால் ,

தேவடியா கேவலம் இல்லை. தேவடியாக்களையே நாம் தான் உருவாக்கினோம். இப்போது உலகில் தலை சிறந்து விளங்குபவர்கள் தேவடியாக்களே. அன்பும் பண்பும் ஒருங்கே பெற்று உன்னத மனிதராக விளங்குபவரும் தேவடியாக்களே. ஆனால் அன்ஃபார்சுனேட்டிலி என் அம்மா தேவடியா இல்லை. தேவடியாவாக இருக்கும் அதிர்ஷ்டம் என் அன்னைக்கு வாய்க்க வில்லை. வருந்துகிறேன் , என் அம்மா தேவடியா இல்லை என்று கூற வேண்டி இருக்கும் போல …….

இப்படி நாம் சொல்வதை நம் அன்னை கேட்க நேர்ந்தால் , நம் தாயே கடுப்பாகி , போடா தேவடியா மவனே என திட்டி விட்டு நகரக்கூடும்.”

Anonymous said...

சமீபகாலத்தில் அறிவு சார்ந்து நிகழ்ந்த ஆழமான விவாதம் என்று எதைச் சொல்ல முடியும்?
Correct. Kavi Perarasu started it genuinely. We all should debate whether Andal was a prostitute or not. This will be the starting point for healthy discussion. I hope I am also in line with Thir Manikandan.

Anonymous said...

ANDAL'S NACHIYAR TIRU MOLIUM, TIRUPAVAIYUM 'SARANAGATHY' THATHUVATHAI BOTHIPANA.
THIS IS NOTHING BUT SURRENDERING TO 'GOD' IN SPITE OF ALL FAULTS. AN INDIRECT FORM SEEKING APOLOGY.
VAIRAMUTHU HAS APOLOGIZED. 'DHINAMANY' HAS NOT ONLY APOLOGIZED BUT HAS ALSO REMOVED 'VAIRAMUTHU'S ARTICLE FROM ITS WEB EDITION.
LET US BE TRUE TRUE DEVOTEES OF 'ANDAL' AND'LORD KRISHNA'AND FORGET/FORGIVE
VAIRAMUTHU'S STATEMENT.
ANBUDAN,
M.NAGESWARAN

Selvaraj said...

இன்று (15.01.2018) அதிகாலை மறைந்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு ஞானி அவர்கள் தனது முகநூலில் இட்ட பதிவு இது (ஜனவரி 10).

‘நான் வைரமுத்து அபிமானி அல்ல. எனினும் ஆண்டாள் பற்றிய வேறொருவர் ஆய்வை அவர் சுட்டிக் காட்டியதில் எந்த தவறும் இல்லை என்பதே என் கருத்து. இதனால் ஆண்டாளுக்கு இழிவு என்பதெல்லாம் பம்மாத்து. வைரமுத்து வருத்தம் தெரிக்க அவசியமே இல்லை. தினமணி கட்டுரையை நீக்கியது தவறு. அற்பத்தனமாக நடந்து கொள்ளும் ஹெச். ராஜா வகையறாக்களுக்கு பயந்து நடுங்குவது அர்த்தமற்றது’

திரு ஞானி அவர்களுக்கு அஞ்சலி

Selvaraj said...

இன்று வாட்ஸாப்பில் பாரதிய ஜனதாவின் ஊடக அல்லது சர்ச்சை முகமாக பார்க்கப்படும் தேசிய செயலாளர் ஒருவர் பொது மேடையில் பேசிய ஒரு காணொளி பார்த்தேன், உண்மையாகவே அநாகரிகமாக வைரமுத்து மீது வசைமாரி பொழிகிறார். நிச்சயமாக இதை அந்த ஆண்டாள் கூட மன்னிக்க மாட்டார்.

Anonymous said...

//நம் தாயே கடுப்பாகி , போடா தேவடியா மவனே என திட்டி விட்டு நகரக்கூடும்.”//

என் அன்னையேன்னு சொல்லிக்கோ, என்ன முடிக்கு எல்லாரையும் இழுக்கிற? ஓஹோ ஹிந்துவா?

Anonymous said...

Kavi perarasu Vairamuthu never asked apolgy. he told, that if his statement hurts anybody, he feels sorry. THis is is with if and but. It is not a honest approach. Thiru Manikandan, if you want you can clarify about the research done in Indiana University, USA. It appears you are supporting Kavi perarasu Vairamuthu in this matter. we also want to know about the research.

நிரஞ்சன் said...

இந்து கடவுள்களை சினிமா கையாண்டதை விட வைரமுத்து கேவலப்படுத்தவில்லைதான்.

ஆனா இத்தனை நாள் யார் என்ன செஞ்சாலும் பேசாம இருந்த இந்து சமூகம் இப்ப ஒருத்தர் ரெண்டு பேர் குரல் கொடுக்கிறார்கள்னுதான் இணையத்தில் பல பேர் பி.ஜே.பி க்கு சப்போர்ட் பண்றாங்க. அது ஏன்னா, உங்களை மாதிரி நடுநிலைவாதிகள் இந்துக்கள் பண்றத கண்டிச்சு எழுதும்போது காட்டுமிராண்டித்தனம்னு ஓப்பனா எழுதுவீங்க. மத்த மதத்தை பற்றி எழுதினாலும் ரொம்ப லைட்டா எழுதுவீங்க.

எப்பவுமே எல்லா நடுநிலைவாதிகளுக்கும், திருமாவுக்கும், வீரமணிக்கும் இந்துக்கள் தானே காட்டுமிராண்டிகள். மத்தவங்க எல்லாம் அகிம்சாவாதிகள். Too tired of you guys..

தாமரை said...

எல்லாரையும் ஏன் இழுக்குறனு கேட்குறது நியாயம்.. ‘ஓஹோ ஹிந்துவா’ - அப்ப நீங்க எத்தன பேர இழுக்கறீங்ஙக :)

Anonymous said...

http://www.dinamalar.com/news_detail.asp?id=1939322

Anonymous said...

தாமரை, என்னா ஹிந்துவான்னா, தேவைன்னா மட்டும் நாங்களும் ஹிந்து, இல்லைன்னா ப ற கோயில் காரனுங்களான்னு அர்த்தம். அசடு. அசடு.

Selvaraj said...

பின்னூட்டமிடும் நண்பர்களே இந்த கட்டுரை வைரமுத்துவை ஆதரித்து எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். கட்டுரையின் இந்த பத்தியை ஒருமுறைகூட படியுங்கள்

'பெரியாரைப் பற்றிப் பேசினாலும் ஒரு குழு கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும். அம்பேத்கரைப் பற்றிய கேள்விகளை எழுப்பினாலும் அடி விழும். தமிழ் தேசியத்தைப் பற்றிய குரல் எழுப்பினால் கழுத்தை நெரிப்பார்கள். இந்திய தேசியம் பற்றி விமர்சனம் செய்தால் சண்டைக்கு வருவார்கள். தகவல் தொடர்பு எளிமையாக்கப்பட்டு அவை நம் விரல்களுக்கிடையில் வந்த பிறகு எல்லாவற்றையும் புனிதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். ‘அதைப் பத்தி நீ பேசக் கூடாது’ என்று தடுத்து எல்லாவற்றையும் முரட்டுத்தனமாக ஆதரிக்கும் சிறு சிறு குழுக்கள் நிறைய உருவாகியிருக்கின்றன'.

'எல்லாவற்றிலும் சூடாகவே இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம்? ஆண்டாளைப் பற்றிய விவாதம் ஒரு பக்கமெனில் இயேசுவைப் பற்றிய விவாதமும் நடக்க வேண்டும். நபிகளைப் பற்றிய உரையாடலும் உருவாக வேண்டும். முத்தலாக், மதமாற்றத்தில் ஆரம்பித்து சாதியம், தமிழ் தேசியம் வரைக்கும் எல்லாவற்றைப் பற்றியும் திறந்த மனநிலையுடன் எதிர் தரப்பை அணுகுகிற மனநிலை எல்லாம் எந்தக் காலத்திலும் வராதா'?

Thirumalai Kandasami said...

அடேங்கப்பா , பல நாட்களுக்குப்பிறகு இப்பத்தான் மணி அண்ணன் எழுதுன கட்டுரைக்கு கருத்துகள் குவியுது

சேக்காளி said...

//எல்லாவற்றைப் பற்றியும் திறந்த மனநிலையுடன் எதிர் தரப்பை அணுகுகிற மனநிலை எல்லாம் எந்தக் காலத்திலும் வராதா'?//
செல்வராஜ் சார்,
சுனாமி வரும், புயல் வரும் ரயிலும் ,பஸ்ஸும் கூட சரியான நேரத்திற்கு வரும்.
ஆனா நீங்க எதிர்பார்க்குற மனநிலை வரும் ஆனா வராது தான்.
இந்த கட்டுரையின் நோக்கத்தை மனதில் வாங்கி அதைப் பற்றி விவாதிக்காமல் இ(ஹி)ந்துவா வேற யா அளவிற்கு மாறி நிற்கிறது.
பேஸ்புக் பதிவிற்கு லைக் போடவே சோம்பேறி படும் இந்த காலத்தில்,
திருமலை கந்தசாமி சொல்லியிருப்பது போல் இதுவரைக்கும் 34 எதிர்சத்தங்கள்(என்னுடைய பின்னூட்டங்களையும் சேத்து) எழுதப் பட்டிருக்கு என்பதை யோசித்தால் சந்தோசப் படவா கவலைப் படவா ன்னு தெரியல.

senthilkumar said...

சென்னை: ''ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தவர்'' என்று அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை பொதுமேடையில் வைத்த வைரமுத்துவின் கருத்துக்கு, ஆதாரப்பூர்வமான மறுப்பு கிடைத்துள்ளது. அவர் கூறியது மாபெரும் பொய் என்பதும் அம்பலமாகி உள்ளது.
ஜன.,7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்துாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தமிழை ஆண்டாள்' என்ற தலைப்பில் வைரமுத்து பேசும் போது, அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகம், சுபாஷ் சந்திர மாலிக்கை ஆசிரியராக கொண்டு வெளியிட்ட, indian movement: some aspects of dissent, protest and reform என்ற ஆய்வு நுாலில், ஆண்டாள் பற்றி இப்படி ஒரு குறிப்பு எழுதப்பட்டு இருக்கிறது. Andal was herself a devadasi who lived and died in srirangam temple என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது என்று கூறினார்.

ஆய்வே இல்லை:

ஆனால், அவர் குறிப்பிட்ட எஸ்.சி.மாலிக் புத்தகத்தை தேடும்போது இண்டியானா பல்லைக்கழகம் அப்படி ஒரு ஆய்வை நடத்தவேயில்லை என்பது தெரிய வந்தது. 1975ம் ஆண்டு சிம்லாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ட்ஸ் ஸ்டடீஸ் என்ற அமைப்பு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதில், 45 இந்திய வரலாற்று அறிஞர்கள் பங்கேற்று, 26 கட்டுரைகளை வெளியிட்டனர். அந்த கட்டுரைகளின் தொகுப்பு பின்னர் Indian movements: Some Aspects of dissent protest and reform என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.
அந்த கட்டுரைகளை தொகுத்தவர் தான் எஸ்.சி.மாலிக்; எழுதியவர் அல்ல. அவரோ, இண்டியானா பல்கலையோ ஆண்டாள் பற்றிய ஆய்வை நடத்தவில்லை. அந்த புத்தகத்தில் ஆண்டாள் பற்றி, bhakti movements in south india என்ற கட்டுரையில் தான் ஆண்டாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை எழுதியவர்கள் இந்தியாவை சேர்ந்த பேராசிரியர்கள் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். அதில் தான், Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple என்ற வரி இடம் பெற்றுள்ளது. இதற்கு, History of sri vaisnavas என்ற பெயரிலான டி.ஏ. கோபிநாத் ராவ் என்பவரின் புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் இதற்கான ஆதாரம் இருப்பதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழு கதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள் தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் தனியே ஸ்ரீவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தில் தேவதாசி என்ற வார்த்தையே இல்லை. பிறகு எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் அளித்த பேட்டி:
கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒரு தேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?
நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.
கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?
நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.
கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?
நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்து தான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.
கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒரு புரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?
நாராயணன்: இது ஒரு அனுமானம் தான்.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.


வைரமுத்துவின் பதில் என்ன:


ஆண்டாள் தேவதாசி என்று சொல்லப்படுவதற்கு நேரடி ஆதாரம் இல்லை. அது அனுமானத்தின் பேரில் தான் என்பது தான் வைரமுத்து குறிப்பிட்ட கட்டுரையின் ஆசிரியர் தரும் விளக்கம்.

Reference dinamalar news 1941251.

Anonymous said...

//Everyone should have some social responsibility, no one has the right to degrade others belief.//

Yes. We should follow our beliefs, untouchability, devadasi, sathi, twin glass etc.

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

உன் பொண்டாட்டியே உன்னை செருப்பாலேயே அடிச்சாச்சு...

#வைரமுத்து வைப் பிரிந்து வாழும்
#கவிஞர்_பொன்மணி_வைரமுத்து வின்
பதிவு ....

" வைரமுத்துவும் நானும் கல்லூரி நாட்களிலிருந்தே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள். அவ்வப்போது சந்திப்பதும், நலம் விசாரிப்பதும் இருவர்க்கும் இயல்பு. சில நல்ல மேடைகளிலும் சேர்ந்திருந்திருக்கிறோம்.

அவருடைய பாடல்களில், நான் ரசித்தவை நிறையவே உண்டு. “வைகறை மேகங்கள்” காலத்திலிருந்தே அவருடைய கவிதைகளையும் நான் படித்து வருவதுண்டு. அவருடைய ஒரு கவிதை நூலில் நான் ஆழ்ந்து ரசித்தவற்றை மனமாரக் கட்டுரையாக்கியதும் உண்டு. உடனே, அவர் தொலைபேசியில் தன் அன்பையும், நன்றியையும் தெரிவித்தார்.

அவருக்கு என்னால் ஆக வேண்டிய நன்மையோ, நேரக் கூடிய தீமையோ எதுவும் இல்லை. எனக்கும் அவரிடம் அப்படியே!

அவருடைய நாத்திகம் அவருடைய பிரச்சினை, அவருடைய உரிமை. அதை நான் விமர்சிப்பதில்லை.

ஆனால், ஆண்டாள் விஷயத்தில் அவர் எல்லை மீறிவிட்டார். மற்றவர்களுடைய நம்பிக்கையில் குறுக்கிடுவது அடிப்படையில் அநாகரிகம். அதைத் திட்டமிட்டுச் செய்வது குற்றம்.

கட்டுரையில் அவர் ஆராய்ச்சி என்று குறிப்பிட்டிருப்பதே பல கேள்விகளுக்குரியது. அவர் அந்தக் கருத்தை ஆதரிக்கிறார் என்பதை மறைக்க முடியாது.

ஆன்மிகத்துக்கும் ஆண்டாளுக்கும் மிகவும் உகந்த மார்கழி மாதத்தில், கோதையின் எல்லையில் நின்று இப்படிப் பேசுவது என்பது பெரிய பிழை என்பது என் கருத்து.

அது கண்டிக்கத் தக்கது. நேரடியாக மன்னிப்புக் கேட்பதே உரிய பரிகாரமாகும்.

அதை அச்சிட்ட தினமணி கண்டனத்துக்குரியது. பொய் சொல்வதைக் காட்டிலும், பொய்க்குத் துணைபோதல் இன்னும் அநியாயமானது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஒரு கவிதை மூலம் என் கருத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்....

மாண்டாரைத் தொட்டெழுப்பும் மாண்பான பாட்டுரைத்த
ஆண்டாளின் மீதா அவதூறு?! வேண்டாமே!
நேராகத் தப்புணர்ந்து நேர்மையுடன் மன்னிப்பு
கோரும்வரை நீளும் வழக்கு

இந்தநாட்டின் அடிநாதம் ஆன்மீகம்தான்
இதைமறைத்தல் இதைமறுத்தல் அறிவீனம்தான்
சொந்தமண்ணின் மேன்மையினை உணர்ந்திடாமல்
சொந்தமாகக் கதைசொல்லல் ஆணவம்தான்
எந்தநாளும் அனுபவங்கள் மொழியிலிcல்லை
எம்மொழிக்கும் அனுபவங்கள் இருப்பதில்லை
அந்தரங்க நம்பிக்கை அனுபவம்தான்
அதற்குமேலோர் அத்தாட்சி யாதுமில்லை!

மனிதரென நமையுலகம் மதிப்பதெல்லாம்
மாண்புதரும் கவிதையெனும் சக்தியன்றோ?
தனியான மரியாதை தமிழாலன்றோ?
தமிழுக்கு மற்றோர்பேர் தரமேயன்றோ?
இனியென்ன சொன்னாலும் சாக்கே அன்றோ?
இழிவுக்கு மன்னிப்பே ஈடாம் அன்றோ?
மனமறியச் செய்தபிழை மறுக்காதீர்கள்!
மல்லுக்குத் திரைபோட்டு மறைக்காதீர்கள்!

ஆராய்ச்சிக் கட்டுரைக்கோ ஆதாரம் போதவில்லை
அயலார்கள் சொல்வதெல்லாம் ஆராய்ச்சி ஆவதில்லை
ஆண்டாளுக் கெவரிடத்தும் அத்தாட்சி தேவையில்லை
அனலில்கை வைக்காதீர்! அதுபேதம் பார்ப்பதில்லை!

ஆராய்ச்சிக் கருத்துத்தான் உம்கருத்தா?
அதையேனும் சொல்கின்ற நேர்மையுண்டா?
அநியாயம் செய்துவிட்டு மழுப்பாதீர்கள்
அறமில்லை! அதுதமிழன் மரபுமில்லை!

இறைவனைநீர் நம்பவில்லை, குறையே இல்லை
இறைவனையாம் நம்புகிறோம் பெருமை இல்லை
எம்முயிரை, எம்தாயை, எமதாண்டாளை
ஏதுபயன் கருதிமன்றில் இழிவு செய்தீர்?
குறையேதான்! வக்கிரம்தான்! கோளாறேதான்!
குற்றத்தை உணர்ந்துகைகள் கூப்பி நிற்பீர்!
கும்பிடுவோர் பாதையிலே குறுக்கிடாதீர்
கொண்டபுகழ் கோதையினால் இழந்திடாதீர்!

Anonymous said...

Hi all:

I am trying to understand Who are Devadasis? I got the below content...(I understand from this HINDUISM and HINDU Temple Developed/Encouraged Devadasi system, but then why "Devadasi" is looked down)

The first reference to dancing girls in temples is found in Kalidasa's "Meghadhoot". It is said that dancing girls were present at the time of worship in the Mahakal Temple of Ujjain. Some scholars are of the opinion that probably the custom of dedicating girls to temples became quite common in the 6th century CE, as most of the Puranas containing reference to it have been written during this period. Several Puranas recommended that arrangements should be made to enlist the services of singing girls for worship at temples.

By the end of the 10th century, the total number of devadasis in many temples was in direct proportion to the wealth and prestige of the temple. During the medieval period, they were regarded as a part of the normal establishment of temples; they occupied a rank next only to priests and their number often reached high proportions. For example, there were 400 devadasis attached to the temples at Tanjore and Travancore.