Dec 4, 2017

ஆஸ்திரேலியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும்..

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் திரு.பாஸ்கர் பின்வரும் மின்னஞ்சலை அனுப்பியிருந்தார்.

சிறிது மாதங்களுக்கு முன்பாக சிட்னிவிலிருந்து மெல்போர்ன் வரை இரயில் பயணம் செய்தேன். சில கிராமப் பெயர்கள் கிட்டத்தட்ட தமிழ் பெயர்களை ஒத்திருந்தன. ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமல்ல, நான் ஸிட்னிக்கு அருகில் ப்ளூ மவுண்ட்ஸ் என்ற இடத்திற்கு சென்றேன். அங்கு மூன்று தூண்கள் உள்ளன. அவற்றின் பெயர்கள் விமலா, மீனா மற்றும் gani.

இங்கே தென்னிந்தியாவைப் போல தோற்றமளிக்கும் வம்சாவளியை (Aboriginal) பார்த்திருக்கிறேன். உண்மையில் இது போன்ற விவரங்களை அறிந்து கொள்வது மிக சுவாரசியமாக இருக்கிறது.


அன்புடன்,
பாஸ்கர்

இந்தச் செய்தி எனக்கு ஆச்சரியமில்லை. தமிழ் மண்ணுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் விட்டகுறை தொட்டகுறையுண்டு என்பதற்கான சில தரவுகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘அட்ச்சு வுடு..’ என்று வாட்ஸப்பில் பரப்புவது போல இல்லை. ஆராய்ச்சி முடிவுகள். முனைவர் ராம.ஜெயராஜ் பற்றி வெகு காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன். நாமக்கல் அருகில் உள்ள சேந்தமங்கலத்துக்காரர். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துவிட்டு ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர் தற்பொழுது அங்கேயே சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

Pride of Australia என்ற ஆஸ்திரேலிய அரசின் விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவர்.


கால்நடைத்துறை தாண்டிய அவரது ஆராய்ச்சிகளில் மிக முக்கியமானது ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் குறித்தானது. ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களுக்கும் நம் மண்ணுக்கும் இடையிலான தொடர்புக் கண்ணிகள் பற்றிய பேராசிரியரின் நேர்காணல்கள் சுவாரசியமானவை. முக்கியமானவையும் கூட. 


முனைவர். ராமமூர்த்தி ஜெயராஜ் குறித்து எழுத வேண்டும் என முன்பே நினைத்ததுண்டு. இணையத்தில் வெளியாவதைவிடவும் அச்சு ஊடகங்களில் அவர் குறித்தான கட்டுரை வெளியாவது தமிழகத்தில்  கூடுதல் கவனத்தை அவருக்குப் பெற்றுத் தரும் எனக் கருதி சில ஊடக நண்பர்களுக்கு பேராசிரியர் குறித்தான விவரங்களை அனுப்பி வைத்தேன். ஏனோ அவை அவர்களுக்கு முக்கியத்துவமான செய்திகளாகத் தெரியவில்லை. 

பாஸ்கரின் மின்னஞ்சல் கிடைத்தவுடன் பேராசிரியர் ராம.ஜெயராஜின் நினைவு வந்தது.  

நம் நிலம் குறித்தும், மக்கள் குறித்தும் எங்கேயோ இருந்தபடி தகவல்பூர்வமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கும் இத்தகைய ஆராய்ச்சியாளர்களுக்குத் தமிழகத்தில் ஓரளவுக்கேனும் கவனம் கிடைக்க வேண்டியது அவசியம். என்னதான் அந்தந்த ஊர்களில் கெளரவப்படுத்தப்பட்டாலும் ‘நம்ம ஊர்ல ஒருத்தரும் கண்டுக்கல’ என்கிற மனநிலை பெரும்பாலானவர்களை சலிப்படையச் செய்துவிடக் கூடும். ஊடகங்கள் இத்தகைய மனிதர்களைப் பற்றியும் அவர்களது ஆராய்ச்சிப் பணி குறித்தும் சிறு அளவிலாவது பதிவு செய்வதுதான் அவர்களுக்குத் தரப்படும் மரியாதையாக இருக்கும்.

4 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

சில ஊடக நண்பர்களுக்கு பேராசிரியர் குறித்தான விவரங்களை அனுப்பி வைத்தேன். ஏனோ அவை அவர்களுக்கு முக்கியத்துவமான செய்திகளாகத் தெரியவில்லை.
THEY WILL NOT DO. FOR PRINT AND ELECTRONIC MEDIA THEY ARE BOUND BY CIRCULATION/TRP RATINGS ONLY.
ONLY KAMAL,RAJANI. AJITH,VIJAYNEWS THEY WILL PUBLISH. TO DAY IT WILL BE VIVEK.
ALL PRINT MEDIA WILL CARRY ONLY ACTORS IN THEIR COVERS.
BHARATHIYAR WAS BORN ON 11TH DEC. NOT A SINGLE PRINT/ELECTRONIC MEDIA CARRIED HIS PICTURE.
ALL MEDIA WENT OVER BOARD THE NEXT DAY 12 TH DEC. RAJANI'S BIRTH DAY
EVEN THERE WAS A DEBATE IN TV STATING THAT HE WILL ENTER POLITICS THAT DAY AND ANNOUNCE HIS PARTY'S NAME.
THIS IS THE PITIABLE STATE OF OUR MEDIA.
YOU CAN TRY 'PODHIGAI.
AT LEAST THEY WILL DO.
ANBUDAN,
M.NAGESWARAN.

NAGARATHAN said...

ஆஸ்திரேலிய பழங்குடியினர் தமிழகம் மற்றும் இலங்கையிலிருந்து வெகு காலத்துக்கு முன் - சுமார் 50,000 லிருந்து 75,000 ஆண்டுகளுக்கு முன் குடி பெயர்ந்தவர்கள் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. மேலும் ஆஸ்திரேலியா கண்டம் பழங்காலத்தில் இந்தியாவுடன் இணைந்து இருந்திருக்க ஒரு வாய்ப்பு உள்ளதாகவும் ஒரு கருத்து உள்ளது. இந்த பழங்குடியினரிடம் பல்வேறு மொழிகள் வழக்கத்தில் உள்ளன. அவற்றில் பல்வேறு தமிழ் சார்ந்த வார்த்தைகள் புழங்குகின்றன. ஒரு பல்கலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றிய ஒரு பழங்குடி நபர், அவர்கள் மொழியில் mind- என்ற பதத்துக்கு மனா என்ற வார்த்தையை பயன்படுத்துவதாக கூறியதை கேட்டிருக்கிறேன். மேலும் அவர்களின் பழக்க வழக்கங்கள் நிறைய நமது பண்பாட்டை ஒட்டி இருப்பதையும் கண்டிருக்கிறேன். நாம் விபூதி அணிவதை போல் அவர்கள் உடலெங்கும் சாம்பல் பூசிக் கொள்வதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எனவே, இது குறித்த ஆராய்ச்சிகள் ஏற்கனவே பலராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே போல் இடங்களின் பெயர்கள் பிரிஸ்பேன் நகரில் மட்டும் நான் பார்த்தவரை nundah, moorookaa என்று பலவும் தமிழ் உச்சரிப்பை ஒட்டி உள்ளதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

Unknown said...

Interesting topic. Thanks

Arul said...

Mani,
Dr.Ramamoorthi Jayaraj is my younger brother.
He currently live in Darwin Australia.
Feel free to contact him

Regards
Arulraj Jayaraj.