Dec 7, 2017

நிசப்தம் செயலி (App)

நிசப்தம் தளத்துக்கு ஐபோன் செயலியும் தயார்.

ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு செயலியை உருவாக்கித் தந்த சிவராஜ்தான் இதையும் செய்திருக்கிறார். நிசப்தம் தளத்துக்கான ஆண்ட்ராய்ட் செயலி குறித்து எழுதிய போது ‘ஆப்பிளுக்கு இல்லையா?’என்றார்கள். சிவராஜிடம் அப்பொழுது சொன்னதோடு சரி. ஐபோனுக்கான செயலியை உருவாக்கினால் பணம் கட்டி கணக்குத் தொடங்கித்தான் அதைப் பயனாளிகளுக்குக் கொடுக்க முடியுமாம். சிவராஜ் அதைச் சொன்னார். ‘இதுக்கெல்லாம் செலவு பண்ண வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு அதை மறந்தும் விட்டேன். இப்பொழுது எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

‘ஏகப்பட்ட தப்பு வந்துச்சுண்ணா..அதான் லேட்’ என்றார். தவறுகளையெல்லாம் சரி செய்து பிரசுரம் செய்த போது ஆப்பிள் நிறுவனம் நிராகரித்திருக்கிறது. இப்படி நிராகரிக்கப்படும் செயலிகளை உருவாக்குகிறவர்கள் மறு பரிசீலனை மனுவை அனுப்பி வைத்தால் அவர்கள் பரிசீலிப்பார்கள். தேர்தல் ஆணையத்தைவிடவும் பரவாயில்லை போலிருக்கிறது. முதலில் நிராகரித்து கடைசியில் ஏற்றுக் கொண்டார்களாம். 

‘அப்படி என்ன சொன்னீங்க?’ என்றேன்.

‘உண்மையைச் சொன்னேன்’ என்றார். அநேகமாக ‘இது யாருக்காக செஞ்சுட்டு இருக்கோம்ன்னு தெரியும்ல?’ என்று கேட்டிருப்பார். அந்த ஒரு கேள்வி போதாதா? ஆப்பிள் அலறியிருக்கும்.

‘இப்படியே பில்ட்-அப் கொடுத்துக் கொடுத்தே காலத்தை ஓட்டிட்டு இரு’ என்று சத்தமாகச் சொல்லிவிட்டீர்கள். தயவு செய்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழாமல் கேட்காமல் கலாய்க்கவும்.

தொழில்நுட்பத்தின் வேகத்தோடு ஓட முடியவில்லையென்றாலும் துரத்துவதை நிறுத்திவிடக் கூடாது. ‘எனக்கு இதெல்லாம் தெரியாது’ என்று ஒதுங்கிவிடாமல் நெட்டையோ குட்டையோ துரத்திக் கொண்டேயிருக்க வேண்டும். நானாக இதையெல்லாம் செய்திருக்கப் போவதில்லை. சிவசுப்பிரமணியன், சிவராஜ் மாதிரியானவர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். நிசப்தமும் தொழில்நுட்பத்தைத் துரத்திக் கொண்டேயிருக்கிறது.

ஆண்ட்ராய்டுக்கான செயலியை இந்த இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம். 

ஆப்பிளுக்கான செயலியை பின் வரும் இணைப்பில் தரவிறக்கிக் கொள்ளலாம்.

‘நிசப்தம்’ என்று தேடிப்பார்த்தாலும் கிடைக்கும். எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். 

எந்த விதமான எதிர்பார்ப்புமில்லாமல் செயலியை உருவாக்கிக் கொடுத்த சிவராஜூக்கு மனப்பூர்வமான நன்றி!

15 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

Commenting from Iphone app! Great move mani! All the best

Aadhavan

Vaa.Manikandan said...

யப்பா...என்ன ஸ்பீடு! :) நன்றி!

சேக்காளி said...

அண்ணாதுரை said...

நன்றாக இருக்கிறது

Akm said...

From iphone... sema Manikandan 👌👏💐

Unknown said...

App downloaded na,
App looking very good.
App logo like pen nip is very nice.

Good Job Shivaraj and Thank u very much for this App.

Kind Regards
Boopathi.V
Coimbatore

Selva vellore said...

இந்த செயலியை உருவாக்க உழைத்த அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

Very cool App.

Anonymous said...

தல. .. கலக்குங்க.. ஆப்பிள் கம்பெனியே ஆடிப்போய்ருக்கும் ரெகம்மண்டேசன பார்த்து.

Anonymous said...

வாழ்க வளமுடன் மணிகண்டன்
ஐபோன் செயலியை தரவிறக்கம் செய்துள்ளேன்.தொடர்புக்கு பகுதியில் +91 சேர்த்தால் நல்லது என நினைக்கிறேன்

David D C said...

Great work Sivaraj & Mani!

Good things may happen slowly but surly.

Regards
David D C

Selvaraj said...

நிசப்தம் தளத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு வாழ்த்துக்கள். (அப்டியே பின்னூட்டம் போடும் வாசகர்களுக்கு ஒரு
ஐபோனும் வாங்கி கொடுத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்)

உஷா said...

மணி
உங்களின் வளர்ச்சி மகிழ்ச்சி யானது.நேர்மையாகா உழைப்பவர்கள், வாழ்பவர்கள் எதர்கும் கலங்க வேண்டியதில்லை.
மனிதம் மாறாமல் இருக்க மனமாரப் பிரார்த்திக்கிறேன்.

Ram said...

Thank. App Semaya 👍

Anonymous said...

Hi, Super, I like it.