நிசப்தம் அறக்கட்டளையின் நவம்பர் மாதக் கணக்கு விவரங்கள்-
- நீட் தேர்வுப் பயிற்சி வகுப்புக்காக மாணவர்களுக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அழைத்துச் சென்றோம். அதற்காக ரூ.2500 செலவு செய்யப்பட்டது.
- பிரபுவின் இருதய அறுவை சிகிச்சைக்காக ரூ 50000 வழங்கப்பட்டது. பிரபு மருத்துவமனையிலிருந்து நேற்று வீட்டுக்கு வந்துவிட்டார். நலமாக இருப்பதாக அவரது தம்பி அழைத்துத் தகவல் சொன்னார். பிரபு குறித்து முன்பு எழுதியிருக்கிறேன். கூலித்தொழிலாளி. நாடோடிக் குடும்பம். அவருக்கு இருதயத்தில் பிரச்சினை. அவரது குழந்தைக்கு தாலஸீமியா. ஒவ்வொரு முறையும் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் உடலில் ரத்தம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் வாழ்க்கைக்காக அவரது அப்பாவுக்கு உதவப்பட்டிருக்கிறது. அப்பாவின் அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. இனி குழந்தைக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
- வழக்கம் போல லண்டனில் வசிக்கும் சார்லஸ் பெருந்தொகையை அனுப்பி வைத்திருக்கிறார்.
- கடந்த முறை யாவரும் பதிப்பகத்திலிருந்து ராயல்டி வரவில்லை என்று எழுதியிருந்தேன். அதை அனுப்பிவிட்டார்கள். ரூ.17,800 கடந்த வருடம் எழுத்து வழியாகக் கிடைத்த வருவாய். அந்தத் தொகையை நிசப்தம் அறக்கட்டளையில் செலுத்தப்பட்டிருக்கிறது.
நன்கொடையாளர்களுக்கு நன்றி.
ஏதேனும் கேள்விகள் இருப்பின் தெரியப்படுத்தவும்.
0 எதிர் சப்தங்கள்:
Post a Comment