Nov 23, 2017

ஐரோப்பாவில் வேலை..

ஐரோப்பாவில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எழுதப்பட்ட நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது. இத்தகைய பதிவுகளின் நோக்கம் நூறு சதவீதம் துல்லியமான தகவல்களைக் கொடுக்க வேண்டும் என்பதைவிடவும் இப்படியெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற திறப்புகளைக் காட்டுவதற்காக மட்டும்தான். பாதைகளைக் காட்டினால் தேடுகிறவர்கள் தேடிக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையுண்டு.
                                                                       ****

1) எந்தத் தளங்களில் ஐரோப்பாவில் உள்ள வேலைகளைத் தேடலாம் என்பதை தெளிவுபடுத்த முடியுமா?

ஏஜெண்டுகளை நம்புவதை விட தன் கையே தனக்கு உதவி என்று களத்தில் குதித்து விடலாம். பின்வரும் தளங்களில் விசா கொடுத்து வேலைக்கு எடுக்கும் வேலைகள் இருக்கின்றன. இங்கு சென்று பார்த்து எந்தெந்த மாதிரியான தொழில்நுட்பங்களுக்கு வேலை கிடைக்கின்றன எனப்பார்த்து அதற்கேற்ப நம்மை தயார் செய்து கொள்ளலாம்

https://stackoverflow.com/jobs
https://landing.jobs/jobs
https://www.honeypot.io/
https://hired.com
https://angel.co/
https://www.indeed.com/prime

இதுவும் ஒரு துளி தான். இதே போல பல தளங்கள் இருக்கின்றன.

2) எப்படி நம்மை தயார்படுத்திக் கொள்வது?

அ) முதலில் எந்தெந்த தொழில்நுட்பங்களுக்கு தேவை அதிகம் இருக்கிறது என மேலே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று அறிந்து கொள்ளுங்கள். உதாரணமாக  JavaScript, Python, Go Lang, Java போன்ற மொழிகளுக்கு தேவை அதிகம். 

ஆ) மேலே குறிப்பிட்டுள்ள நுட்பங்களில் உங்களுக்கு அனுபவம் இல்லை என்றாலும், மனம் தளர வேண்டியதில்லை. தற்போது நீங்கள் இருக்கும் தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமான தேவை இருக்கக்கூடிய மொழி ஒன்றை நீங்களாகவே கற்றுக்கொள்ளலாம். டெவெலப்பராக இருக்கும்பட்சத்தில் Github தளத்தில் உங்களுக்கான பயனர் பக்கம் (profile) இருப்பது அவசியம். Github என்பது ஓப்பன் சோர்ஸ் டெவெலப்பர்கள் தாங்கள் உருவாக்கும் செயலிகளை பொது பார்வைக்கும் பயன்பாட்டுக்கும் வைக்கும் ஒரு தளம். Github தளத்தில் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கும் ப்ரோகிராமில் சிறு சிறு ப்ராஜெக்டுகள் செய்து அதை பார்வைக்கு வைக்கவும். விசா கொடுக்கக் கூடிய நிறுவனங்கள் நிச்சயமாக இவற்றை எதிர்பார்ப்பார்கள்.

இ) Github தளத்தில் உங்கள் ப்ராஜெக்டுகள் மட்டும் அல்லாமல், மற்ற ஓப்பன் சோர்ஸ் டெவெலப்பர்கள் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்டுகளில் நீங்கள் கலந்து அவர்களுக்கு உதவி செய்யலாம். இதற்கும் நிறுவனங்கள் மத்தியில் மிகுந்த மரியாதை உண்டு.

ஈ) நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அதற்கு https://medium.com/ போன்ற தளங்கள் உதவி செய்யும்

உ) தொடர்ச்சியாக நீங்கள் கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். தோல்விகளை கண்டு துவளக்கூடாது. சுய முன்னேற்ற புத்தகங்கள் போல பேசுகிறேன் என எண்ண வேண்டாம். வேலை தேட ஆரம்பித்து, நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என கண்டு பிடித்து அதற்கேற்ப என்னை தயார் செய்து வேலை கிடைக்க எனக்கு கிட்டதட்ட 6 மாதங்கள் ஆயிற்று. (அது வரைக்கும் முழு நேர வேலையில் தான் இருந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தயார் செய்து கொண்டிருந்தேன்) கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் நிராகரித்தன. ஆனால் ஒவ்வொரு நிறுவனம் நிராகரிக்கும் போது ஏன் என்று யோசித்து அதற்கேற்ப அடுத்த நிறுவனத்தின் வேலை விண்ணப்பத்தில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தது.

எ) அதே போல ஒரே ரெஸ்யூமை எல்லா நிறுவனங்களுக்கும் அனுப்பி விட்டு காக்க வேண்டாம். பயனில்லை. ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அவர்களுடைய வியாபாரம் அல்லது செயலி எதைப் பற்றியது என தெரிந்து கொண்டு அதற்கேற்ப உங்கள் ரெஸ்யூமை மாற்றம் செய்து அனுப்ப வேண்டும். மேலும் பல நிறுவனங்கள் வேலைக்கான விண்ணப்பத்தோடு Cover letter யும் எதிர்பார்ப்பார்கள். இதுவும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஏற்றது போல Tailor-made ஆக இருக்க வேண்டும். இதெல்லாம் ரொம்ப கடினம் என்று யோசிப்பவர்கள் வேலை தேடும் படலத்தை விட்டு விடலாம். மெய் வருத்த தான் கூலி கிடைக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ளவை ஒரு Guideline மட்டுமே. நீங்களே களத்தில் இறங்கும் போது நிறைய கற்றுக்கொள்வீர்கள்.

3) IELTS தேர்வு எழுத வேண்டுமா?

பெரும்பாலான நிறுவனங்கள் இதை எதிர்பார்ப்பதில்லை. நீங்கள் ஆங்கில வழியில் பொறியியல் படித்திருந்து ஆங்கிலம் சரளமாக பேச எழுத தெரிந்திருந்தால் போதும். பொறியியல் இல்லை என்றால் பட்ட மேற்படிப்பு படித்திருந்தால் நல்லது. 

4) UK இல் வேலை கிடைப்பது கடினமா?

Brexit க்குப் பிறகு அங்கு மிகுந்த குழப்பமான சூழல் நிலவுகிறது. ஆனால் Brexit ஆல் இந்தியர்களுக்கு வருங்காலத்தில் ஆதாயம் கிடைக்கும். அது வரை நீங்கள் ஐரோப்பாவின் மற்ற நாடுகளில் முயற்சி செய்யுங்கள். மற்ற ஐரோப்பிய நாடுகளில் வேலை கிடைத்த பிறகு அங்கிருந்து UK செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இப்போது தான் வேலை தேட ஆரம்பிக்கிறீர்கள் என்றால் என்னுடைய பரிந்துரை ஜெர்மனி, நெதர்லாந்து, போர்த்துகலாக இருக்கும்.

5) சாதகங்கள் மட்டுமே சொல்கிறீர்களே, பாதகங்களே இல்லையா?

அமெரிக்காவை விட ஐரோப்பாவில் இந்தியர்களும் தமிழர்களும் குறைவு. எனவே நீங்கள் தனிமையை உணர வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழி. அனைவரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள். மருத்துவமனைக்கோ பல்பொருள் அங்காடிக்கோ சென்றால் நீங்கள் அங்குள்ள மொழியில் தான் பேச வேண்டும். அங்கு உங்களுக்கு ஆங்கிலம் உதவாது.

ஐரோப்பாவில் உங்கள் துணை வேலை செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் வீட்டில் ஒருவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்றால் நிரந்தரக் குடியுரிமை பெறும் வரை பெரிய சேமிப்பு இருக்காது. பெரும்பாலான நாடுகளில் நீங்கள் சம்பாதிப்பதில் 30-40 சதவீதம் வரை நீங்கள் வரி கட்ட வேண்டும்.

நன்றி,
சிவா
vengaishiva@gmail.com

9 எதிர் சப்தங்கள்:

Jaypon , Canada said...

கனடா இப்பொழுது விரைவில் Permanent Resident (US Green card போல) தருகிறது. They welcome immigrants. Go to cic.gc.ca site and explore. FSc
Category will expedite your application. I know my colleagues who got PR within 6 months who have landed in Canada . If anyone needs more info. I am happy to provide.

சேக்காளி said...

https://medium.com/

அருண் பிரசாத் ஜெ said...

@Jaypon , Canada.

I have 10 years of experience in Software Testing, IELTS score is 6.5.
Is there any way to come there with job and get PR after that .. ?

Thanks
Arun

My Email ID is : prasathj@gmail.com

balu said...

Developers Searching job in Ireland, check companies in smaller cities like Cork, Galway,Limerick and Letterkenny. Everybody prefers to work in Dublin. Companies in smaller cities will be ready to do visa process for potential candidates.

Unknown said...

@Jaypon , Canada
I have 10+ years of experience in IT Production Support, Linux, AWS Certified. Could you please shed more light on the opportunities @ Canada, PR, immigration procedures, whom to approach, financial and other legalities involved. Please email to subhash07@gmail.com. Thank You! - Subhash

Jaypon , Canada said...

நான் ஏற்கனவே கொடுத்திருக்கும் சைட்டில் வேண்டிய எல்லா தகவல்களும் இருக்கு. இங்கே ஸ்பூன் ஃபீடிங் யாருமே தரமாட்டார்கள்.

ஆங்கில புலமை 8 வேண்டும்.

Jaypon , Canada said...

Saskechtwan மாநிலம் அவ்வப்போது Provincial nominee open செய்வார்கள். திறந்த 3 மணி நேரத்தில் நிரம்பிவிடும். அத்தனை போட்டி. ஒரு வழி என்னவென்றால் நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தயாராய் வைத்திருந்து nomination program திறந்ததும் அப்ளை செய்து விடலாம். New Foundland போன்ற provinceம் immigrants ஐ வரவேற்கிறார்கள். ஆனால் விண்ணப்பத்தை ஏற்கனவே நிரப்பி வைக்க அனுமதி இல்லை. CRS ஸ்கோர் 350 அல்லது 450 மேல் இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அதை அடைவது எளிதல்ல. அதனால் Provincial Nominiee Program ல் எளிதாக 600 பாயிண்ட் ஸ்கோர் பண்ணலாம். நிறைய தகவல் சேகரிக்கவேண்டும். Whatsup group கூட இருப்பதாக அறிந்தேன். Work permit ல் இங்கே வந்து PR அப்ளை செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு வருடம் வேலை செய்தால் விண்ணப்பிக்களாம். இன்னும் 3 வருடங்கள் கனடா நிச்சயம் நிறைய immigrants வரவழைக்கும் என செய்தியில் கேட்டேன்.

Jaypon , Canada said...

மிக தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள். தகவல்கள் வேண்டினால் நண்பர்களிடம் விசாரித்து தெரிய ப்படுத்துகிறேன். தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும் என்பதனையும் அறியுங்கள். அவை உடனுக்குடன் site ல் தெரியப்படுத்திவிடுவார்கள்

Jaypon , Canada said...

நம்மூரில் இருந்து பார்க்கையில் இங்கே பச்சை புள் வெளி தெரியும். ஆனால் கடும் குளிர், நம்மூரில் நடக்கும் நல்லது கெட்டதில் பங்கெடுக்க முடியாத சூழல்,திடீர் திடீரென பறிபோகும் வேலை இதெல்லாம் வந்து 5 வருடம் கழித்து மனதின் நிம்மதியை துலைக்கப்பார்க்கும். குழந்தைகள் இங்கே பழகிவிட்டால் நம்மூர் திரும்புவது கடினம்.பயமுறுத்தவில்லை. இக்கரையின் உண்மைத்தன்மையை எழுதினேன்.