Nov 13, 2017

வழியை விடுங்கய்யா..

‘இந்த நாளை உங்க காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க....டாக்டர் ஆக்கியே காட்றோம்’ என்று சவால் எல்லாம் விடவில்லை. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வினை எழுத ஆசைப்படுகிறார்கள். முயற்சி செய்வதற்கான களத்தை உருவாக்கித் தருகிறோம். அவ்வளவுதான் திட்டம். வெல்ல முடியுமா முடியாதா என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லை. இரண்டு வருடங்களாக தேர்வுக்குப் பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள், லட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சி நிலையங்களுக்குச் செல்கிறவர்கள், பள்ளிகளிலேயே கடும் பயிற்சி பெறுகிறவர்கள் என்று மிகப்பெரிய போட்டி இருக்கிறது எனத் தெரியும்.

பட்டிமணியகாரன்பாளையத்திலிருந்தும், கள்ளிப்பட்டியிலிருந்தும் அவர்களோடு போட்டி போடுவதற்கான முயற்சிதான் செய்து பார்க்கிறோம். அதைக் கொஞ்சம் சீரிய அளவில் செய்கிறோம். அவ்வளவுதான்.

ஒளிரும் ஈரோடு என்ற அமைப்பு இந்திய மருத்துவச் சங்கத்துடன் சேர்ந்து நீட் தேர்வுக்கான பயிற்சி மையத்தை இலவசமாக நடத்துகிறார்கள். மாணவர்கள் இருபத்தைந்து பேர்களுக்கு ஒரு வாகனம் ஏற்பாடு செய்து அதே வாகனத்தில் ஆசிரியர் ஸ்ரீனிவாசன் ஏறிக் கொள்ள பின்னாலேயே நாங்கள் நான்கைந்து பேர் பயிற்சி மையத்துக்குச் சென்றிருந்தோம். இந்தியன் பப்ளிக் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள் வகுப்பினை நடத்தினார்கள். ஆசிரியர்கள் ஆந்திராக்காரர்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது. மாணவர்கள் தமிழ்வழிக் கல்வி. ‘எங்களுக்கு நிறைய புரியல சார்’என்று மாணவர்கள் சொன்னார்கள். நியூக்ளியஸ் என்பது அணு உட்கரு என்று தமிழில் இருக்கிறது. ஆசிரியர் ‘நியூக்ளியஸின் வேலை என்ன என்று’ கேள்வி கேட்கிறார். மாணவர்களுக்கு நியூக்ளியஸ் என்றால் என்னவென்று முதலில் தெரிய வேண்டுமல்லவா? வருத்தமாகத்தான் இருந்தது.

மாணவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து அழைத்து வந்து வீட்டில் விட்டோம். மண்டை காய்கிறது. ஈரோட்டில் அளிக்கப்படும் பயிற்சி எவ்வளவு தூரம் பலனளிக்கும் என்று தெரியவில்லை. ஒரு கதவு மூடப்பட்டிருக்கிறது. விட்டுவிட முடியுமா என்ன?. எதையாவது புரட்டிப் போட்டுக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

நேற்று மதியம் பயிற்சி வகுப்பு முடிந்த பிறகு மாணவர்களிடம் 'வேற வேற வழிகளை முயற்சி செய்து பார்ப்போம்' என்று பேசியிருக்கிறோம். அவர்களை உற்சாகமூட்டுகிற செயல்பாடுதான் இது. வெவ்வேறு வழிமுறைகளை ஆராய்வோம். ஏதாவதொன்று சிக்கும். அப்படியே இந்த வருடம் பலன் இல்லையென்றாலும் அடுத்த வருடமாவது ஏதாவது செய்யலாம் இல்லையா? நம்மால் முடியாது. வாய்ப்பே இல்லை என்று விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா என்ன?

சமூக வலைத்தளங்களில் எழுதும் போது தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருப்பவர்களின் தொடர்பு கிடைக்கிறது. இன்னுமொரு படி முன்னேறுகிறோம். ட்ரீம் பிக் என்ற நிறுவனம் நீட்டுக்கான தமிழ் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. ஜெகா பிடித்துக் கொடுத்திருக்கிறார். பேசவே இல்லையென்றால் எப்படிச் சிக்கும்?

நீட் தேர்வு கடினமானது; நம் மாணவர்கள் வெற்றி பெறுவது சிரமம் என்பது எங்களுக்கும் தெரியும். ‘தயவு செஞ்சு ப்ளஸ் டூ பாடத்தை விட்டுடாதீங்க’ என்றுதான் திரும்பத் திரும்ப மாணவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீட்டில் வெற்றி பெற முடியாவிட்டால் ஒன்றும் பெரிய பிரச்சினையில்லை. ஆனால் ப்ளஸ் டூ மதிப்பெண்களில் ஏமாந்துவிட்டால் ‘உள்ளதும் போச்சுடா நொள்ளை’ என்றாகிவிடும். வாரத்தில் நான்கைந்து மணி நேரம் நீட் தேர்வுக்கான தயாரிப்புகள், வினாக்களைப் புரட்டிப் பார்த்தல் என்றிருந்துவிட்டு ப்ளஸ் டூ தேர்வுக்குப் பிறகு முப்பத்தைந்து நாட்கள் பயிற்சி. இதைத்தான் செய்யப் போகிறோம்.

எங்களிடம் வந்து ‘அடிப்படையே புரியாமல் வெட்டி வேலை ஏன் செய்யறீங்க?’ என்று கேட்டால் கடுப்பாகிறது. நாங்கள் என்ன செய்யலாம் என்று அடிப்படை புரிந்தவர்கள் சொல்லுங்களேன். நீட் தேர்வு வராமல் நிறுத்திவிடுவீர்களா என்ன? கடந்த வருடம்தான் பார்த்தோமே! கடைசி வரைக்கும் புலி வராது கதையாக கூவிக் கொண்டேயிருந்து நீட் தேர்வில் கொண்டு போய் நிறுத்துவார்கள். அனிதாவோ புனிதாவோ இறந்து போனால் ஃபேஸ்புக்கிலும் அரசியல்களத்திலும் ஸ்கோர் செய்ய ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதற்கு மேல் என்ன செய்யப் போகிறோம்?  தேர்வினை நடத்துவது நிறுத்துவது என்பதெல்லாம் ஆட்சியாளர்களின் வேலை. அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நான்கைந்து மாணவர்களுடன் உருப்படியான காரியத்தைச் செய்யலாம்.

முயற்சி செய்து பார்த்தோம் கிடைக்கவில்லை என்கிற மனநிலையையாவது குழந்தைகளுக்கு உருவாக்குகிறோம். தேர்வுகள் பற்றிய பயங்களைக் களைவதற்கான சிறு முயற்சி இது. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு இடையில் இருபது அல்லது முப்பது பேர்களுக்குத்தான் எங்களால் இதைச் செய்ய முடிகிறது. திருநெல்வேலியிலும் தேனியிலும் திண்டுக்கல்லிலும் யாராவது சிலர் இதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டுதான் இருப்பார்கள்.

தோற்பது வேறு. முயற்சியே செய்யாமல் முடியாது என்பது வேறு. எதிர்மறை சிந்தனைகளை விடுங்கள். நீட் தேர்வு தேவையில்லையென்றால் ஏதாவது செய்து தேர்வினை நிறுத்துங்கள். ஆட்சியாளர்களின் சட்டையைப் பிடித்துக் கேளுங்கள். அதையெல்லாம் எதுவும் செய்யாமல் புட்டச் சூடு கிளம்ப ஃபேஸ்புக்கில் புரட்சிப் போராட்டத்தைச் செய்துவிட்டு எங்களிடம் வந்து ‘அவங்க நாசமாத்தான் போவாங்க..நீங்க எதுக்கு வேலை செய்யறீங்க?’ என்று கேட்டால் என்ன பதிலைச் சொல்ல முடியும்? இதற்கு மேல் விளக்கம் எதுவும் கொடுக்கப் போவதில்லை. இன்றைக்கு நீட் தேர்வு, நாளைக்கு போட்டித் தேர்வுகள் என்று கிராமப்புற மாணவர்களுக்கான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

ஜெயிக்கிறோமோ இல்லையோ- செய்வோம். தயவு செய்து எங்கள் வழியில் சென்று கொண்டிருக்கிறோம். குறுக்கே வந்து குப்புறப்படுக்காதீர்கள்.

10 எதிர் சப்தங்கள்:

vijay said...

வரவேற்கிறோம். வாழ்த்துகிறோம்

Bala said...

Don't give up Manikandan. All the best to the students

premkumar said...

Hats off your effort sir

Amanullah said...

பத்தாம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் தமிழ் வழி படித்தேன். முந்நூறு சொச்ச மதிப்பெண் தான். மேல்நிலை கல்விக்கு அரசு உதவி பெறும் பள்ளிக்கு விண்ணப்பித்த போது தலைமை ஆசிரியர் குறைந்த மதிப்பெண், எனவே சேர்த்து கொள்ள முடியாது என்று சொன்னார்,விடப்பிடியாக அவரிடம் வாதாடி இடம் வாங்கினேன்.பணிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூறு, அன்று மட்டும் தலைமை ஆசியரிடம் போராடாமல் விட்டிருந்தால்? எப்போதும் முயற்சி யை கை விடாதீர்கள். இன்று சொந்த தொழில் செய்யும் பிசினஸ் மேன். இதே போன்று என்னை பார்த்து போரடின என் நண்பன் இன்று TNAUல் HOD.

சேக்காளி said...

//குறுக்கே வந்து குப்புறப்படுக்காதீர்கள்.//
பொதுச் சேவையில இதெல்லாம் சாதா ரணமப்பா.

அன்பே சிவம் said...

மணி... உம் வழி தனி வழி யல்ல...

தெளிந்த, (சுயநல நோக்கற்ற) நேர் வழி.

பாதை யோரம் நின்று புறம் பேசுபவர் உடன்

நின்று உதவ ஓர் நாளும் உடன் வரமாட்டார்.

துணிந்து செல்வீர்.

முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.

Anonymous said...

ஜெயிக்கிறோமோ இல்லையோ- செய்வோம்.
KATTAYAM JEYPPOM.
UNGAL/மாணவர்கL முயற்சி IS REALLY GREAT.
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். ENNNUM 'KURAL' PADY NAMMAKKU PALAN KITTUM.
NAMAKKU தெய்வMUM THUNAI PURIYUM.
NAMMகருமமே கண்ணாயி IRUUPOM.
I HAVE AN IDEA.
BIOLOGY HAS ONLY 10 CHAPTER 11TH AND 12TH PUT TOGETHER .
CHEMISTRY HAS 30 CHAPTERS (14/16).PHYSICS HAS 19 CHAPTERS.(10/9)
BIOLOGY THE CHAPTERS ARE HUMAN PHYSIOLOGY/ECOLOGY/REPRODUCTION ETC.
NOT ONLY EASY/PRACTICAL AND WHAT STUDENTS EXPERIENCE.
90 QUESTIONS WITH 360 MARKS..EVEN IF OUR STUDENTS CORRECTLY ANSWER 50 QUESTIONS THEY WILL GET 200 MARPHYKS. ADDITIONAL MARKS ARE BONUS.
IN PHYSICS THEY CAN FIRST ATTEMPT QUESTIONS IN 'LAWS OF MOTION,GRAVITATION,ELECTRONIC DEVICES ETC.
IN CHEMISTRY IT CAN BE 'BASIC CONCEPTS OF CHEMISTRY',STATES OF MATTER.HYDROCARBONS,ENVIRONMENTAL CHEMISTRY ETC.
HERE ALSO 50 CORRECT ANSWERS WILL GET ANOTHER 200 MARKS. TOTALLY 400 MARKS.
WITH THIS OUR DALIT STUDENTS CAN AIM EVEN ALL INDIA QUOTA. I AM NOT JOKING.
ONE CAN VERIFY FROM 'AIQ' MERIT LIST'
STUDENTS SHOULD ATTEMPT PROBLEMS AT THE END ONLY.
ATOMIC/PHYSICS/CHEMISTRY WILL BE DIFFICULT EVEN FOR COLLEGE STUDENTS. THE ANDHRA TEACHERS STYLE IS UNDERSTANDABLE.
THEY ALWAYS START WITH TOUGH/HARD SUBJECTS.IN ALL COACHING PLACES.
CBSE STUDENTS ARE NO BETTER. VERY VERY FEW CLEAR IN THE FIRST ATTEMPT.
FOR EXAMPLE THE 'NEET' 2017 STATE TOPPER IS AN ENGG. DROP OUT AND CLEARED 'NEET' 2017 ONLY IN THE 2ND ATTEMPT.

வெற்றி கிடைக்கும் என முழுமையாக நம்புவதே, வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி.
NAMUM NAMADHU MANAVARGALUM நம்பு VOM

I WOULD PREFER STUDENTS STUDYING 'NCERT' TEXT BOOKS FOR 'NEET' 2018

NCERT BOOKS ARE IN SIMPLE ENGLISH AND DIRECTLY COME TO THE SUBJECT. NOT MUCH OF LANGUAGE. MAXIMUM SUBJECT.
ANY GOOD TEACHER CAN TRANSLATE IN A FEW DAYS.
TILL THE STUDENT'S GET TRANSLATED VERSIONS THEY CAN STUDY ENGLISH VERSION.
IT IS SO SIMPLE.
FIRST 11 TH BOOKS. EVEN A CURSORY READING WILL DO FOR AN ACTIVE/ENTHUSIASTIC STUDENT.
ANBUDAN,
M.NAGESWARAN


Asok said...

I could not speak in English even after came to USA. Language is not a barrier at all anywhere.

This is just my thought. The students have to share the English wordings and find the Tamil meaning. Then the have to meet and discuss, group study is fast and quickest way to move forward in this situation. Really, they would get surprised they would be better than English medium people.

வெட்டி ஆபீசர் said...

The world is full of cynical people Mani, If we are afraid of the failures before attempting anything then the battle is already lost. Ignore the detractors and carry on. All the very best.

Unknown said...

https://www.vikatan.com/news/miscellaneous/107911-government-school-teacher-training-iit-entrance-exam.html