Sep 9, 2017

கேள்விகளும் பதில்களும்

கிராமப்புற மாணவர்களுக்கு நீட் பயிற்சி மையம் ஆரம்பிக்க ஏதேனும் திட்டம் உள்ளதா?
நீட் என்றில்லாமல் பொதுவான திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கிறது. எந்த ஊரில் ஆரம்பிப்பது? எப்படி நடத்துவது என்கிற கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஒன்றிரண்டு வருடங்கள் ஆகட்டும்.

ஏதேனும் வியாபாரம் செய்யணும்ன்னு நினைச்சதுண்டா? முயற்சி செய்ததுண்டா?
திருபாய் அம்பானி மாதிரி ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அமிதாப் மாதிரி ஆக வேண்டும் என்று கூடத்தான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் இரண்டுக்குமே முயற்சி எதையும் செய்ததில்லை.

சிட்டு குருவி மூளையின் எடை எவ்வளவு? அதன் செயல்திறன் என்ன?
எனக்கு சிட்டுக்குருவி மூளைதான். ஆனால் என் மூளையின் எடை எனக்கு எப்படித் தெரியும்?

வீட்டு வேலையில் உங்கள் மனைவிக்கு உதவுவதுண்டா?
சத்தமாகக் கேட்டு சிக்க வைத்துவிடாதீர்கள். துரும்பைக் கூடக் கிள்ளிப் போடுவதில்லை.

அதிகமாக சேட்டை செய்யும் அண்டை வீட்டு சிறுவர் சிறுமியர்களை சமாளித்துண்டா? சமயத்தில் மிக பயமாக உள்ளது. வெறுக்கக்கூட தோன்றுகிறது. குறையாகச் சொன்னால் அவர்களின் பெற்றோர் தவறாக எண்ணுவரோ? வீட்டுக்கு வரவே பயமா இருக்கு. தண்ணியை திறந்து விட்றான், கேஸைத் திறக்கிறான். கரண்ட் வயரை இழுக்குறான். வண்டி வயரை இழுக்குறான். கஷ்டம் சாமி.
நல்லவேளை ஆண்டவன் என்னை இவ்வளவு சோதித்ததில்லை. உங்களை நினைக்கவே பாவமாக இருக்கிறது. சீக்கிரமாக வீடு மாற்றிக் கொள்ள வாழ்த்துக்கள்.

You have mentioned about people asking about caste. How often you face this? I am 30 years old and hail from a village near Salem. I ve faced this question only about a couple of times in last ten years.
சாதியை நேரடியாகக் கேட்பவர்கள் குறைவு. ஆனால் ‘இவன் இந்தச் சாதி’ என்று நம்மை நெருங்கி வருகிறவர்களில் தொண்ணூறு சதவீதம் பேருக்குத் தெரியும். நாம் எதைச் சொன்னாலும் பேசினாலும் சாதியின் வழியாகவே பார்க்கிறவர்கள்தான் அதிகம். ‘நம்ம பையன்தான்’ ‘அந்தப் புள்ள வளவுல இருந்துதானுங்க வர்றா?’ என்பதெல்லாம் மிகச் சாதாரணமாக எதிர்கொள்கிற வாக்கியங்கள். ‘இப்பவெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறா?’ என்பதுதான் மிக அதிர்ச்சியளிக்கும் வாக்கியம்.

தனிமனித ஒழுக்கம் பற்றிய உங்கள் நிலை சரியா எனத் தெரியவில்லை. சகமனிதனை எரிச்சல் அடைய செய்யக் கூடாதுன்னா, என் தெரு வழியே நீ போனா, என் கோயிலுக்குள்ள வந்தா, எனக்கு எரிச்சல் வருதுன்னு இன்னும் சொல்ற சமூகம் தானே இது?
மிகச் சரி. நம்முடைய ஒவ்வொரு செயலுமே ஏதாவதொரு மனிதனை எரிச்சல் அடையச் செய்கிறது. தன்பாட்டுக்கு ஒருவன் இருந்தாலும் கூட வன்மத்தைக் கக்குகிறவர்கள்தான் அதிகம். ஆக, எதைக் கொண்டுதான் தனிமனித ஒழுக்கம் என்பதை வரையறுப்பது?

சூப்பர் 16 பயிற்சி வகுப்புகள் நடப்பதை வீடியோ எடுத்து YOUTUBE ல் பதிவேற்றினால் என்ன?
மூன்று மணி நேர பயிற்சி வகுப்பு அது. இடையில் கொஞ்சம் இடைவேளை இருக்கும். வகுப்பறைக்கு வெளியில் சில பயிற்சிகள் இருக்கும். எல்லாவற்றையும் பதிவு செய்து அதை கத்தரித்து பதிவேற்றுவது என்பது நம் சுமையைக் கூடுதலாக்கிக் கொள்வது போலத்தான். அதற்கெனத் தனியாக ஒருவர் தேவை. எதிர்காலத்தில் யோசிக்கலாம்.

Sarahahவில் கேட்கப்பட்டவை..

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

மனக்குரல்: டேய் சேக்காளி! தூக்கம் வராட்டாலும் பரவால்லடா. தூங்குற மாதிரி நடி.புதுவை ல இருந்து ரெண்டு காரு வந்துருக்காம்.

AIBS said...

http://www.newindianexpress.com/states/tamil-nadu/2017/feb/18/not-even-2-percent-of-tamil-nadu-government-school-kids-study-medicine-1571885.html