அண்ணா வணக்கம்,
என்னோட பெயர் ராஜாராம், மின்மினி இதழின் பொறுப்பாசிரியர்.
அண்ணா, உங்க வலைபக்கத்தில் மின்மினி சந்தா செலுத்தி வரவில்லை என்றும் இதழ் நின்று விட்டது என்றால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை புரிந்துகொண்டேன். நீங்கள் பரிந்துரை செய்ததன் மூலமாக உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களை உணர்ந்துகொண்டேன். அண்ணா, தயவு செய்து மன்னித்துக்கொள்ளவும். சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் எங்கள் பழைய அலுவலகத்தில் உள்ள பெரும்பாலான கோப்புக்கள் தொலைந்து போய்விட்டன. இதில் சந்தா தொடர்பான விவரங்கள் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. அதைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் ஏற்பட்ட சில சிக்கல்களால் மின்மினி வருவது சிறிது கால தாமதம் ஆகியது. ஆனால் பின்பு ஓரளவுக்கு பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு மின்மினி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு தயவு செய்து மன்னித்துக்கொள்ளவும். சந்தா தொடர்பான விவரங்களை எனக்கு தெரியப்படுத்தினால் முகவரிகளை update செய்துவிட்டு ஏற்கனவே அனுப்பப்படாத இதழ்களையும் அனுப்பி வைக்கிறேன்.
இது என்னுடைய தொலைபேசி எண் - 9894310997. தயவு செய்து அழைக்கவும். உங்கள் எண் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் வாங்கி நான் அழைக்கிறேன் அண்ணா..
அன்பும் நன்றியும்
ராஜாராம்.
rajaramg123@gmail.com
அன்புள்ள ராஜாராம்,
வணக்கம்.
தங்களின் பதிலுக்கு நன்றி.
நூல்கள், திரைப்படங்களைப் போலவே சில சஞ்சிகைகளையும் பரிந்துரை செய்வதுண்டு. நூல்கள், திரைப்படங்கள் பற்றி பிரச்சினையில்லை. சஞ்சிகைகளைப் பரிந்துரை செய்து அவை ஒன்றிரண்டு இதழ்களுக்குப் பிறகு நின்று போனால் ‘நீங்க சொல்லி சந்தா செலுத்தினேனே’ என்று சொல்ல வைத்துவிடுகிறது. அதனால் இப்பொழுது நல்ல சஞ்சிகைகள் என்றாலும் கூட அமைதியாக இருந்து கொள்கிறேன். டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் அயல் சினிமா என்றொரு இதழ் வெளிவருகிறது. என்னையும் கூட ஆசிரியர் குழுவில் சேர்த்திருக்கிறார்கள். கை பரபரக்கிறது. இருந்தபோதிலும் ஒன்றிரண்டு இதழ்கள் வெளி வந்த பிறகு அதைப் பற்றி எழுதிக் கொள்ளலாம் என்று நினைப்பது கூட இந்த வகையிலான சங்கடங்களினால்தான்.
ஒன்றும் பிரச்சினையில்லை. சிறுபத்திரிக்கைகள் சந்திக்கும் பிரச்சினைகளை நானறிவேன். நிசப்தம் வாசிக்கிறவர்கள் அத்தனை பேரும் அந்தப் பிரச்சினைகளைப் புரிந்து வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை அல்லவா?
தங்களின் நிலைமை புரிகிறது. சந்தாதாரர்களின் விவரம் என்னிடம் கைவசம் இல்லை. நமது இந்த மின்னஞ்சல் உரையாடலை பிரசுரம் செய்கிறேன். சந்தாதாரர்கள் தங்களைத் தொடர்பு கொள்ளக் கூடும். தரவுகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
அன்புடன்,
வா.மணிகண்டன்.
1 எதிர் சப்தங்கள்:
//அதனால் இப்பொழுது நல்ல சஞ்சிகைகள் என்றாலும் கூட அமைதியாக இருந்து கொள்கிறேன்.//
எதற்காக மணிக்கு வக்காலத்து வாங்குகிறான்? என்பதற்கான விடை மேற்கூறப்பட்டுள்ள இந்த வாக்கியங்களில் புதைந்து கிடக்கிறது.
Post a Comment