Sep 14, 2017

கேள்வி பதில்கள்


1. CHARTERED ACCOUNTANCY (C.A.) தேர்விலுள்ள கஷ்டங்களையும் அத்தேர்வை CRACK செய்வதற்குண்டான வழி முறைகளையும் குறித்து எழுதும் எண்ணமுண்டா?


ஓரளவுக்கேனும் தெரிந்ததை மட்டுமே செய்து கொண்டிருக்கும் வரைக்கும்தான் நமக்கான மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். சி.ஏ என்பதை விரித்து எழுதச் சொன்னால் கூட நான் தவறு செய்துவிட வாய்ப்பு அதிகம்.

2. I am from Tirunelveli. I was in Bangalore for more than a year. I was also in Chennai for the exact period. But I felt more comfortable in Bangalore than Chennai. I've never felt that I was away from my state but in Chennai I had that missing feeling. My friends also felt like same. What's your opinion on this?


சென்னைதான். பெங்களூரில் காலநிலை நன்றாக இருக்கும். நிறைய மரங்களும் பூங்காக்களும் உண்டு. சொகுசாகத் தெரியும். ஆனால் சென்னைக்கு இருக்கும் ஜீவன் பெங்களூருவுக்கு இல்லை. பெங்களூரு சோம்பேறித்தனமாக இயங்கும் எந்திரம். 

3. வழுக்கைத் தலையில் தங்கம் இருப்பதாக கருதி ஆப்ரிக்க நாட்டில் ஒரு கும்பல் வழுக்கையன்களை கொலை செய்கிறார்களாமே?அந்த செய்தி உங்கள் பார்வைக்கு வந்ததா?

தலையில் இன்னமும் முடி இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதால் அந்தச் செய்தியை நான் கண்டுகொள்ளவில்லை.

4. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. அப்படிக் கடவுளே இருந்தாலும் சத்தியமாக மனிதர்களை அவர் உருவாக்கி இருக்க மாட்டார். பூமியின் மேல் ஒட்டுண்ணிகள் போல வாழும் மனிதர்கள் கடவுளின் படைப்பாக இருக்க முடியாது என்பதுதான் எனது நம்பிக்கை. நிற்க. நம்மில் பலரும் வாய்ப்புக் கிடைத்தால் கோடி கோடியாய் சம்பாதிக்க முடியுமா என்றுதான் பார்க்கிறோம். அப்படிச் செய்யாதவன் முன்னேறத் தெரியாதவன் என ஆகிறான். ஆனால் எளிமையான வாழ்வுதான் இந்தப் பூமியில் 700 கோடிப் பேரும் நிம்மதியாய் வாழக்கூடிய சரியான வழிமுறையாகிறது. எல்லாரும் டாம்பீக வாழ்க்கை வாழ ஒரு பூமி பற்றாது எனக் காந்தி அன்றே சொன்னார்! ஆனால் அப்படி வாழ்வதுதான் பல முன்னேறங்களுக்குக் காரணமாகிறது என்பது முதலாளித்துவ வாதம். முதலாளித்துவம் இயற்கைக்கு எதிரானதா?

நிச்சயமாக. ஆசை, ஆசை, பேராசை என்று நம்மையெல்லாம் விரட்டிக் கொண்டிருப்பதுதானே அது? ஒவ்வொரு மனிதனையும் கிடைப்பதையெல்லாம் சுரண்ட வைக்கிறது. சொகுசைக் காட்டி மயக்குகிறது. அது எப்படி இயற்கைக்குச் சாதகமானதாக இருக்க முடியும்? எதிரானதுதான். ஆனால் அதுதான் எனக்கு சோறு போடுகிறது.

5. Sarahah மாதிரி விஷப் பரீட்சை எல்லாம் உங்கள் சேவை நோக்கத்தை திருப்பி விடும் என அச்சம் இல்லையா?

வேண்டுமானால் கடவுச்சொல்லைத் தருகிறேன். நீங்களே பாருங்கள். இதுவரையிலும் வந்திருக்கும் 188 செய்திகளில் ஒருவர் கூட வசைபாடி  செய்தி அனுப்பவில்லை. எதுவும் திசை திருப்பாது. உரையாடல்களும் நம்மை நோக்கி கேட்கப்படும் கேள்விகளும் அவசியமானவை. பேசலாம் விடுங்கள்.

Sarahah வில் கேட்கப்பட்டவை.

2 எதிர் சப்தங்கள்:

Malar said...

188 செய்திகளில் ஒருவர் கூட வசைபாடி செய்தி அனுப்பவில்லை //மனிதம் மிச்சம் இருப்பதற்கு உதாரணம் நீங்கள், உங்களை யாராவது வசை பாட முடியுமா?

வெட்டி ஆபீசர் said...

நீங்க ஏரியால பெரிய ரவுடிங்கிற பயமா கூட இருக்கலாம்...