Sep 6, 2017

கேள்வியும் பதிலும்

அனிதாவின் தற்கொலை குறித்து ஏன் எதுவும் எழுதவில்லை?
எளிதில் உடைந்துவிடக் கூடியவன் நான். அனிதாவின் மரணம் மனம் வருந்தச் செய்தது. ஆனால் எந்தவொரு நிகழ்வுக்கும் உடனடியாகக் கருத்துச் சொல்ல வேண்டியதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எதைச் சொன்னாலும் திட்டுவதற்கும் முத்திரை குத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. நம்மை திட்டுகிறவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் பதில் சொல்வதற்கும் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.  

தற்போது வசைகளை குறைத்துக்கொண்டு ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டுமே ஈடுபடுகிறீர்கள். மேலும் என்னைப் போன்ற சாதாரணன்களுக்கு பெரும் ஊக்கியாக செயல்படுகிறீர்கள். வாழ்த்துகள்! இவ்வளவு நேர்மறையான எண்ணங்கள் கொண்ட உங்களுக்கு எழுத்தாளர் சாருநிவேதிதா அவர்களின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? முன்பு அவரை தொடர்ந்து சாடிக்கொண்டிருந்ததாக நினைவு.
நம்முடைய முன்னுரிமைகள்தான் நாம் என்ன பேச வேண்டும் என்று தீர்மானிக்கிறது. இன்று என்னுடைய முன்னுரிமைகள் மாறியிருக்கின்றன. 

I sent an email to suggest siddha doctors for rheumatoid arthritis but I didn't receive any responses. May I know the reason?
வேண்டுமென்றே எந்த மின்னஞ்சலுக்கும் பதில் எழுதாமல் விடுவதில்லை. சில மின்னஞ்சல்களுக்கு நேரமின்மையால் பதில் எழுதாமல் விட்டுவிடுகிறேன். நினைவூட்டல் அனுப்பினால் பெரும்பாலும் பதில் அளித்துவிடுவதுதான் வழக்கம். 

தனி மனித ஒழுக்கம் எனில் என்ன?
தாம் அடங்கியிருக்கும் சமூகத்தில் எந்தக் காரியங்கள் எல்லாம் சக மனிதனை எரிச்சலும் வெறுப்பும் அடையச் செய்யுமோ இருக்குமோ அவற்றையெல்லாம் செய்யாமல் இருப்பது. தனிமனித ஒழுக்கம் என்பதே சமூகம் சார்ந்த விஷயம்தான்.

Did you feel any heat for criticizing politicians?
ஆம் என்று சொன்னால் வெட்டி பந்தாவுக்காகத்தான் இருக்கும். இணையத்தில் எழுதப்படுகிற அரசியல் விமர்சனங்கள் பெரும்பாலும் செல்லாக்காசுகள்தான். இங்கே ஊதிப்பெருக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் பொதுமக்களிடத்தில் பெரிய தாக்கத்தை உண்டாக்குவதில்லை.‘அப்படி இப்படி பிரச்சினை வரும்’ என்று யாராவது பயப்படுத்துவார்கள். ஆனால் அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் கொசுக்கடிப்பது மாதிரி கூட இல்லை- தமது எருமைத் தோலின் மீது அமர்ந்து எழுவது போலத்தான்.

விஷ்ணுபுரம் படித்ததுண்டா?
ஜெயமோகனின் பெரும்பாலான நாவல்களை வாசித்திருக்கிறேன். விஷ்ணுபுரம் அதில் அடக்கம்.

Who is ur CM candidate in the upcoming election?
என் சிட்டுக்குருவி மூளைக்கு யாரையும் சுட்டிக்காட்டத் தோன்றவில்லை. 

Sarahah வில் கேட்கப்பட்டவை.

3 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

I tried to close the box...It was not closing easily...Tried many times..very irritated...may be the issue of compatibility...

அன்பே சிவம் said...

தங்க. மனது என்ன பாடு பட்டிருக்கும் என அறியாதவனல்ல.இருப்பினும் இழப்பில் உம் போன்ற
நேர்மையரின் ஆறுதல் எதிர்பார்க்கிறது. பாழாய் போன மனம். நியாயமாய் தங்களுக்கு தான் தர வேண்டும் ஆறுதலும்., தேறுதலும். நம்பிக்கை பிறந்தது., அவரால் அல்ல உம்மாலும் உம் போன்ற (அறம் புரியும்) இளையோராலும் நேர்மையரின் தேசம் தலை தி(நி)மிரும்.

Unknown said...

/////////அனிதாவின் தற்கொலை குறித்து ஏன் எதுவும் எழுதவில்லை?
எளிதில் உடைந்துவிடக் கூடியவன் நான். அனிதாவின் மரணம் மனம் வருந்தச் செய்தது. ஆனால் எந்தவொரு நிகழ்வுக்கும் உடனடியாகக் கருத்துச் சொல்ல வேண்டியதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். எதைச் சொன்னாலும் திட்டுவதற்கும் முத்திரை குத்துவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. நம்மை திட்டுகிறவர்களையே நினைத்துக் கொண்டிருப்பதற்கும் பதில் சொல்வதற்கும் நேரத்தை விரயமாக்க வேண்டியதில்லை.
/////////

நிசப்தம் வாசிக்கிற எல்லாருக்கும் இருக்கிற கேள்விதான். நீட்ட நியாயப்படுத்தி இவ்வளவு நீட்டமா எழுதீட்டு இப்ப கள்ள மௌனம் காக்கிறமாதிரிதான் இருக்கு. :(