Codemojo என்ற நிறுவனத்தினரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. இளைஞர்கள் ஆரம்பித்திருக்கும் தளம். ‘உங்கள் தளத்தை வாசிக்கிறவர்களுக்கு ஏதேனும் அன்பளிப்பு வழங்க விரும்புகிறீர்களா?’ என்று கேட்டிருந்தார்கள். ‘எழுதறதெல்லாமே அன்பளிப்புதானே?’ என்று கேட்டு பதில் அனுப்பினால் வீட்டுக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பிவிடுவார்கள் என்று பயமில்லாமல் இல்லை. கடந்த ஒரு வாரமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமக்கும் புரிய வேண்டுமல்லவா?
யாரோ கேட்கிறார்கள் என்று அனுமதிப்பது நம் வீட்டுக்குள் கண்டவர்களையும் குடி வைப்பது மாதிரி ஆகிவிடும். அதனால் இணையத்தில் தேடி விவரங்களைச் சேகரித்து அந்தக் கேள்விகளை அவர்களிடம் கேட்டிருந்தேன்.
இது ஓர் ஆன்லைன் வர்த்தக நிறுவனம். நிறைய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார்கள். அந்நிறுவனங்களின் விளம்பரங்களை ஆன்லைன் வாசகர்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமல்லவா? அதற்காக சில இணையத்தளங்களைத் தேடுகிறார்கள். அப்படித்தான் நிசப்தம் சிக்கியிருக்கிறது. கேட்டிருந்தார்கள். தளத்துக்குள் நுழைந்தாலே அன்பளிப்பு வழங்கலாமா, கட்டுரையை வாசித்தால்தான் அன்பளிப்பா என சகல கட்டுப்பாடுகளையும் நம் கைகளில் கொடுத்துவிடுகிறார்கள். எப்படி வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். இப்போதைக்கு எனக்குத் தெரிந்தமட்டுக்கு அமைத்திருக்கிறேன். தேவைப்பட்டால் மாற்றிக் கொள்ளலாம்.
இணைய உலகில் இப்படியெல்லாம் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடக் கூடாது. சரி என்று சொல்லிவிட்டேன். அதனால்தான் கடந்த சில நாட்களாக ‘இது என்ன புதுசா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை- சிறு அன்பளிப்பு.
விருப்பம் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். Swiggy, Oyo, Fashion and you மாதிரியான தளங்களிடமிருந்து தள்ளுபடிகளும், சில சலுகைகளும் கிடைக்கின்றன. யாருக்காவது பயன்படும் அல்லவா?
விருப்பமில்லையென்றாலும் பிரச்சினையில்லை ‘x' பட்டனை அழுத்தினால் மறைந்துவிடும். ஏதேனும் தொந்தரவாகத் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள். நீக்கிவிடலாம்.
கட்டுரையைத் சில நிமிடங்கள் வாசித்தால் அன்பளிப்புக்கான பக்கம் திறக்கும்.
‘நான் காசு கொடுக்கணுமா?’ என்றேன். இது முக்கியமான கேள்வியல்லவா? மாதாந்திரச் சேவைத் தொகை என்று எதையாவது கறக்க நினைத்தால் கைகலப்பாகிவிடும்.
‘இப்போதைக்கு இல்லை’ என்றார்கள். அப்படியென்றால் பிற்காலத்தில் கட்டணச் சேவையாக மாற்றிவிடுவார்கள் போலிருக்கிறது. எப்பொழுது கட்டணச் சேவையாக மாற்றுகிறார்களோ அப்பொழுது நீக்கிவிடலாம். அதுவரைக்கும் இருக்கட்டும். கறக்க முடிகிறவர்கள் அவர்களிடம் கறந்து கொள்வோம்.
7 எதிர் சப்தங்கள்:
Thala, X button work aga villai, the popup is annoying and they are using Nisaptham site for their advertisement.
Please remove.
Thanks,
Dina
// கைகலப்பாகிவிடும்//
"ரவுடி" ன்னு தான் ஒத்துகிட்டோமோ. பின்பும் ஏன் அடிக்கடி பயம் காட்டுறீங்க.
Why should you pay money to them? In fact, they should pay money to you... otherwise they are using all your net traffic for free... Your site is more valuable to them, not the other way...
I checked Swiggy alone and the coupon code is MOJO75 and it's valid for new customers alone.(checked thrice and got the same code again). It's a pure ad to get more customers for Swiggy.
My suggestion is, if "Codemojo" is paying(or plan to play) money like Adsense then keep it.
If no money, please throw this away because it's annoying and no use to the readers.
This is annoying especially while reading via mobile
விட்டால் அடித்துவிடுவார்கள் போலிருக்கிறது :)
நீக்கியாகிவிட்டது!
//நீக்கியாகிவிட்டது!//
இதென்ன டா ரவுடி க்கு வந்த சோதனை!!!!!!!!!!
Post a Comment