நம்ம ஊர் சொலவடைகள் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. உருப்படியான குழுமங்களில் ஒன்று. கொங்குப்புறத்துச் சொலவடைகளை நினைவுக்கு வரும் போதெல்லாம் பதிவிடுகிறார்கள். முன்பொரு முறை குழுமத்தை விட்டுத் தெரியாத்தனமாக வெளியேறி ஏகப்பட்ட சொலவடைகளை இழந்துவிட்டேன். அதே போலத்தான் குழுமத்தை நிர்வகிக்கும் முரளியும் ஏமாந்து போனார். அவ்வப்பொழுது தொகுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் ஒரு பதிவாகச் சேகரித்து வைக்கிறேன்.
அம்மா அமத்தாவிடமெல்லாம் நினைவில் இருப்பதையெல்லாம் சொல்லுங்கள் என்று கேட்டாலும் அவர்களிடமிருந்து எதுவும் வருவதில்லை. ஆனால் இயல்பாகப் பேசிக் கொண்டிருக்கும் போது நிறையச் சொல்கிறார்கள். இந்தத் தலைமுறை ஆட்களில் சொலவடைகளுடன் பேசுகிறவர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கிறது. அடுத்த தலைமுறையில் சொலவடைகள் என்பதே இல்லாமல் போய்விடக் கூடும்.
1) காச்சுறவ காச்சுனா, கழுதமல்லக்கூட ரசம்பானாங் கொமரன் (கழுதமல்லு- கழுதையின் சிறுநீர்)
2) பேண்டவன விட்டுப் போட்டு பீய வெட்டுற தறுதல!
3) கரிவித்த காசு கருத்துப் போகுமா? நாய்வித்த காசு கொலைக்குமா?? இல்ல, வேப்பெண்ண வித்த காசு கசந்துதான் போகுமா?
4) கணக்கன் பொண்டாட்டி காதுல கடுக்கன் போட்ருக்கான்னு சொல்லி, காரியக்காரன் பொண்டாட்டி காத வெடுக்குன்னு அத்துகிட்டாளம்...
5) ஆனமேல போறவங்கிட்ட சுண்ணாம்பு கேக்குறாமாரி (ஆன- யானை)
6) கடல் வத்தி மீன் புடிக்கிறதுக்குள்ளார கொடல் வத்தி மீன் செத்திருமாட்ருக்கூ?
7) சுக்குக்கு மிஞ்சுன மருந்துமில்ல... சுப்ரமணியனுக்கு மிஞ்சுன கடவுளுமில்ல.
8) பாடிப்பாடி குத்துனாலும் பதரு அரிசியாயிருமா?
9) பாம்பு திங்கற ஊருக்குப்போனாலும் நடுத்துண்டு நம்புளுக்குங்கோணும் (நம்புளுக்கு - நமக்கு)
10) செக்குக்கும் நாய்த்தலைக்கும் செரியாப்பொருந்துன மாதிரி...
11) நரிக்கு நாட்டாமை குடுத்தா, கெடைக்கு ஒரு ஆடு கேக்குமாம்..
12) கறையானுக்கு றக்க மொளச்சா, பறந்து பறந்தேதான் சாவும்
13) ஒரு மொழ நாய்க்கு ஒன்ற மொழ வாலு என்னத்துக்கு
14) ஒலைக்கிற நாயும் வேட்டைக்காகாது. அனத்துற ஆம்பளையும் பண்ணையத்துக்காவாது. (அனத்துற - அனர்த்திக் கொண்டிருக்கும்)
15) நாலு வீட்டு கண்ணாலம். நாய்க்கு அங்கிட்டு ஓட்டம் இங்கிட்டு ஓட்டம்.
16) மொசப் புடிக்கிற நாய, மூஞ்சியப் பார்த்தா தெரியாதா? (மொச- முயல்)
17) நக்குற நாயிக்கு செக்குன்னு தெரியுமா? செவலிங்கம்னு தெரியுமா?
18) நாட்டாம ஊட்டு நாயி சந்தனக்கட்டிலு ஏறுதேன்னு வண்ணான் ஊட்டு நாய் வெள்ளாவில ஏறுச்சாம்!
19) சாமத்துல கத்துதாம் நாயி... அத என்னான்னு கேட்டுச்சாம் பேயி...
20) குருட்டுப் பூனை விட்டத்தில் பாஞ்ச மாதிரி
21) கடப்பாரையே காத்துல பறக்குது, எச்ச எல எந்த மூல?
22) குத்துக்கல்ல்லுக்கு என்ன வெயிலா மழயா?
23) போரோட திங்கற மாட்டுக்கு பொறுக்கிப்போட்டா பத்துமா?
24) சொப்பனத்துல கண்ட அரிசி, சோத்துக்கு ஆகுமா?
25) வெங்கலப்பூட்ட ஒடச்சு வெளக்கமாத்த திருடுன கதயா..
26) கல்லோட எடருனாலும் கணக்கனோட எடறக்கூடாது...
27) புண்ணுக்கு மருந்து கட்டலாம்.. புடிவாதத்துக்கு மருந்து கட்ட முடியுமா??
28) விஷங்கொடுத்தும் கொல்லலாம்...வெல்லங் கொடுத்தும் கொல்லலாம்
29) பண்ணாடி படியில ஏய்ச்சா,ஆளு நடையில ஏய்க்குற காலமிதாமா!!
30) வெறும் புருக்கு வெளக்கெண்ணய்க்கு கேடு
31) சுந்தரி புருஷன் எதுல போனாண்டி? சோளத்தரிசில ஓட்டை போட்டு அதுல போனாண்டி...
32) கொடுக்கிறதையும் கொடுத்துட்டு குருட்டுத் தேவுடியாகிட்ட போன கணக்கா...

Adults only தொகுப்பு ஒன்றும் தயார் செய்யலாம். அதைத் தனியாகப் பதிகிறேன்.
‘நம்ம ஊர் சொலவடைகள்’ குழும உறுப்பினர்களுக்கு நன்றி உரித்தாகுக. குறிப்பாக பழமைபேசிக்கும், முரளிக்கும். அவர்கள்தான் பெரும்பாலான சொலவடைகளைப் பதிவு செய்தவர்கள். இணைப்பில் இதே குழுமத்தில் பதிவிடப்பட்ட சொலவடைகளின் முந்தைய தொகுப்பு இருக்கிறது.
7 எதிர் சப்தங்கள்:
சொல வடைகள் பேச்சு வழக்கில் உபயோகப்படுத்துவது கூட ஒரு கலைதான். கவுண்டர் அவர்களின் அருமையான வசனங்கள்.
"மொடங்க பாய் இல்லனு சடங்க நிறுத்திரவா முடியும்" வியாபாரம் இருக்கோ இல்லயோ கடையை திறந்திட வேண்டியதுதான்.
“வெளையும் போதே சோறா வெளஞ்சிட்டா அப்புறம் வெறகு எதுக்கு வரட்டி எதுக்கு” கஷ்டம் எல்லாத்துக்கும் வரத்தான் செய்யும்.
அறிவு கெட்டவன்கிட்ட வேலைய கொடுத்தா எப்படி இருக்கும்? "குருடன ஆடு மேக்க உட்டுட்டு எட்டு ஆள உட்டு தேடுன கதையா இருக்கும்"
"வெளசளுக்கும் வெள்ளாட்டுக்கும் ஜென்மபகைங்கற கதையா" இவன் கூட போராடுறதுக்கே நேரம் சரியா இருக்கே.
தூங்கற மணியாரனெ எழுப்பினா பழய கந்தாயங் கேப்பானாங்கற கதையா நினைவுகள் குழந்தை பருவத்தை நோக்கி ஓடுகின்றன வாழ்க வளமுடன்.
Nostalgic.Superb
’சேடனுக்கு எதுக்கு ஓந்திப் பில்லக்கா. செட்டுக்காரனுக்கு....’ அப்படினு ஆத்தா சொல்லும். இது முழுத் தமிழாவும் தெரியல, அடல்ட்ஸ் ஒன்லியாவும் தெரியல. ஏதாவது புரியுதா?
அரக்காசு கழுத அஞ்சுகாசு புல்லு தின்னுச்சான்
ஊருக்கெல்லாம் குறிசொல்லுமாம் பல்லி, கலனிப்பானைல உழுவுமாம் துள்ளி
"Philip Shannon"
ரசித்தேன்
நெனச்சுதான் கழுத புடிச்சுதான் ஓட்டம் - திடீரென எடுக்கப்படும் முடிவுகளை குறிக்கும் சொலவடை
வெள்ளாள பிள்ள வெளயாட போனாலும் வெறகோடத்தான் ஊட்டுக்கு வருமாம் - காரியத்தில் கருத்தா இருக்க வலியுறுத்தும் சொலவடை
Post a Comment