Aug 2, 2017

மாசிலன் ஆதல்

நிழற்படக்கலைஞர் நாதன் தனது அடுத்த குறும்படத்தின் இணைப்பை அனுப்பியிருந்தார். அவர் இயக்கிய படம். மாசிலன் ஆதல். ஒருவன் தனது குற்றத்திலிருந்து விடுபட முயற்சிக்கிறான். குற்றவுணர்ச்சியிலிருந்து விடுபட முயற்சிக்கிறான் என்பது சரியான சொற்றொடராக இருக்கும்.


இருபத்தொரு நிமிட படம். சிறு சம்பவம்தான். அதைத் தொடர்ந்து நாயகனின் குற்றவுணர்ச்சியும் அவன் பின்னால் நகரும் திரைக்கதையும்தான் மாசிலன் ஆதல்.

காட்சியமைப்பு, இசை, நடிப்பு என எல்லாமே சரியாக வந்திருக்கிறது. படத்தின் நீளம்தான் சற்று அதிகம். நாதனிடம் ‘கத்தரி போட்டிருக்கலாம் சார்’ என்றேன். அதற்கு அவர் ஒரு விளக்கத்தைச் சொன்னார். அந்த விளக்கத்தை இங்கே எழுத வேண்டியதில்லை என நினைக்கிறேன். படத்தின் நீளத்தைக் குறைத்திருந்தால் இன்னமும் நறுக்கென்று இருந்திருக்கும். 

திரைக்கதையின் வேகத்தை அதிகப்படுத்தாமல் நாயகனின் உணர்ச்சியை பார்வையாளனுக்குக் கடத்துவதுதான் இயக்குநரின் முக்கியமான நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அது படைப்பாளியின் படைப்புச் சுதந்திரம். ஆனால் ஒரு பார்வையாளனாக நம்முடைய கருத்துக்களை தயக்கமில்லாமல் சொல்வதில் தவறேதுமில்லை. சொல்லியாகிவிட்டது.

படத்தை இரு முறை பார்க்க வேண்டியிருந்தது.  (Youtube)


இறுதிக்கட்டத்தில் நாயகன் ஏன் அந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்குள் செல்கிறான்? மாமியார், குழந்தைகள் என எல்லோரும் இருக்கும் தருணத்தை ஏன் தேர்ந்தெடுக்கிறான்? வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்ற குழப்பம் இன்னமும் தீர்ந்தபாடில்லை. ‘இதுதான்’ என்று நானாக ஒன்றை யூகித்திருக்கிறேன். பார்வையாளனுக்கான வெளியை (space) கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் கூட இப்படி காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். தெரியவில்லை. ‘இதற்காகத்தான் உள்ளே நுழைகிறான்’ என்கிற யூகம் சரியாகவும் இருக்கலாம் அல்லது தவறாகவும் இருக்கலாம். ஒவ்வொரு படைப்புமே தமது பார்வையாளனுக்கும்/வாசகனுக்குமான ஒரு வெளியை உருவாக்கவே முயற்சிக்கின்றன. அதில் அவரவர் கற்பனை முக்கியத்துவம் பெறுகின்றன. இலக்கியத்தில் இது சரி. ஆனால் காட்சி ஊடகத்தில் அப்படியான குழப்பமான இடம் அளிக்கப்பட வேண்டுமா என்ன?

இந்தக் குழப்பத்தை முன்வைத்து ‘ஏன் இப்படி?’ என்று இயக்குநரிடமே கேட்டிருக்கலாம்தான். அது சரியாக இருக்காது. கவிதை எழுதியவரிடம் ‘அருஞ்சொற்பொருள் சொல்லுங்க’ என்று கேட்பது மாதிரி ஆகிவிடும். அது அவரைக் கொடுமைப்படுத்துவது மாதிரி.

இருபத்தோரு நிமிடங்களை ஒதுக்க முடிகிறவர்கள் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எவ்வளவு விதமான யூகங்கள் என்று தெரிந்து கொள்வோமே என்றுதான் கேட்கிறேன்.

7 எதிர் சப்தங்கள்:

Thiru said...

In our room we have seen this with friends, They have also asked the same question, why he enter the room what he discussed. then everyone gave their opinion on that movie.

They have asked why he is walking & walking. ....

nathan said...

Thanks Thiru for your views...So whatz all of your opinion on the movie other than walking and walking and..!!!

YesPlus said...

He gets slapped there by one of the member inside the home and gets relieved. Adding to that they give him water, making him feel that he has been forgiven.

Nice music and camera work. Good acting and well directed / conveyed. Nice Title - 'maasilan Aathal"

He should have gone home..instead he chose to Die...Is that what becoming "Clean" means ? If death clears ones sin - then I feel the director has to think about that message once again. I differ in the Climax.

nathan said...

Thanks YesPlus for understanding both inside the home part and water exactly :) :)

he get his forgiveness from the victim's wife and mother..once he gets water, realises the victim's son whoz going to get more affected because of his father's absence..!!

i'm not saying death will cleanse you here and its just that what i will do if i'm in that situation..:)

Thanks a lot for your views and appreciate your feedback!!

Paramasivam said...

நன்றாக எடுக்கப் பட்டுள்ள படம், கிளைமாக்ஸை தவிர. தவறுக்கு பிராயசித்தம் தற்கொலை என்னும் பாதையை விட்டு என்று தான் நாம் வெளியானது வருவோமோ. இறந்தவரின் குடும்பம் அவரை மன்னித்த பின் (தண்ணீர் கொடுக்கிறார்கள்) அவர், அந்த தலைவனை இழந்த குடும்பத்திற்கு, அச் சிறுவனுக்கு/சிறுமிக்கு, ஒரு அண்ணனாக/மாமனாக உதவக் கூடாதா?

nathan said...

திரு.Paramasivam, உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..!! தற்கொலை முடிவு இல்லை, அதே சமயத்தில் பாதிக்கப்பட்டவனின் வலி பார்க்கும் மனிதர்களுக்கும் கடத்த வேண்டும்..அதனால் தான் அவன் தற்கொலைக்கு முயல, brake சத்தத்தோடு முடிக்கிறேன்..!! அவனை குருரமாக அடிபட்டு கிடப்பதை எல்லாம் காட்டவில்லை...!! அங்கே என்ன நடந்து இருக்கும் என்பது பார்க்கும் மனிதர்களின் மனதிற்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம்.. அதனை உணர்ந்தாலே மகிழ்ச்சி!!

சேக்காளி said...

ஒளி மற்றும் இசை நன்றாக இருக்கிறது