Jul 18, 2017

தி இந்து - வாழ்த்து

காலையிலிருந்து நண்பர்கள் அழைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காரணமில்லாமல் இல்லை. இன்றைய தி இந்து (18 ஜூலை 2017) நாளிதழில் நிசப்தம் அறக்கட்டளை குறித்தான கட்டுரை வெளியாகிருக்கிறது. வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.

பெங்களூரில் அனைத்துக் கடைகளிலும் தி இந்து கிடைப்பதில்லை. நண்பர்கள் வாட்ஸப்பில் அனுப்பி வைத்திருந்த கத்தரிப்பு இது. செய்தித்தாளைத் தேடிப்பிடித்து வாங்கி வீட்டில் இருப்பவர்களிடம் வாசிக்கக் கொடுத்துவிட வேண்டும்.

மகிழ்ச்சி. 

இரண்டு திருத்தங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். கடலூரில் முந்நூறு குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பயன்படுத்திய தொகை நாற்பத்தைந்து லட்சம். கட்டுரையில் அறுபது லட்சம் என்று வெளியாகியிருக்கிறது.

இது எதுவுமே தனிநபராக சாத்தியமில்லை. எப்பொழுதும் சொல்வது போல நிசப்தம் அறக்கட்டளையின் முகமாக மட்டுமே முன்னால் நிற்கிறேன். அனைத்துப் புகழும் பின்னணியில் உள்ள அத்தனை பேருக்கும் உரித்தாகட்டும். 

பொதுக்காரியங்களைச் செய்யும் போது பழிப்புரைகளாயினும் பாராட்டுரைகளாயினும் இதயத்துக்கு எடுத்துச் செல்லாத மனம் வாய்க்க வேண்டும். இறைவன் அதனை எனக்கும்  அருளட்டும்.

இத்தகைய கட்டுரைகளின் வீச்சு எப்படியிருக்கும் என என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. மனதாரப் பாராட்டி எழுதிய டி.எல்.சஞ்சீவிகுமாருக்கும், தி இந்துவுக்கும் நன்றி.

18 எதிர் சப்தங்கள்:

வள்ளி நாயகம் said...

அன்பின் மணி, கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்கட்டும். மென்மேலும் பல உயரங்களை தொட வாழ்த்துக்கள்.

Jaypon , Canada said...

வாழ்த்துக்கள் மென்மேலும் வளர.

GANESAN said...

வணங்க வயதில்லை . அதனால் வாழ்த்துகிறேன் திரு . மணி. கடவுள்ளோ அல்லது அறமோ உங்கள் குடும்பத்தை நன்றாக வைத்திருப்பார்கள்

த முத்துகிருஷ்ணன் said...

நிசப்தம் அறக்கட்டளையின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

அன்பே சிவம் said...

வாழ்த்துகள்
பெறுவது
தாங்களென்றாலும்
ஆனந்தத்தில்
திளைப்பது
நாங்களே.
வாழ்க மணி த சேவை.

👍Great!

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

அன்பின் மணி,
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இதன் மூலம் இன்னும் பல பேருக்கு உங்கள் சேவை தெரிய வரட்டும்.
வாழ்க வளமுடன்

ஓஜஸ் said...

//பெங்களூரில் அனைத்துக் கடைகளிலும் தி இந்து கிடைப்பதில்லை. //
பெங்களூருல எங்கேயுமே தமிழ் தி ஹிந்து கிடைக்கிறது இல்ல :(

Anonymous said...

KEEP UP THE GOOD WORK BRO!!!!!! ALL THE BEST AND GOOD WISHES!!

தமிழ்ப்பூ said...

You serve so you deserve. Hearty congratulations.

சேக்காளி said...

//Blogger அன்பே சிவம் said...
வாழ்த்துகள்
பெறுவது
தாங்களென்றாலும்
ஆனந்தத்தில்
திளைப்பது
நாங்களே.
வாழ்க மணி த சேவை.

👍Great
ரிப்பீட்டேய்

Unknown said...

தங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.

Bala's Blog said...

Congrats Mani. Thanks to Tamil Hindu for publishing this article.

Yarlpavanan said...

தங்கள் நற்பணி தொடர வாழ்த்துகள்
http://www.ypvnpubs.com/2017/07/blog-post_18.html
என்ற இணைப்பில் தங்களைப் பற்றிய பத்திரிகைச் செய்தியைப் பகிர்ந்துள்ளேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள் ஐயா

அன்புடன் அருண் said...

வழக்கம் போல் வாழ்த்துக்களும்...பெருமையும்...உங்களின் வாசகனாக இருப்பதால்...

Malar said...

Congratulations :) ..

Anonymous said...

Congratulations Sir!!

Selvaraj said...

வாழ்த்துகள்